Wednesday, March 21, 2007

சில நேரங்களில்...


காலம்
காயத்தை ஆற்றும்;
காதலை..?
-----------------------------
நீ
என் வீட்டில்
விளக்கேற்றவில்லை;
இருட்டில்
வாழ்கிறேன் நான்.!
-----------------------------
கைசேராத
காதலிக்காக
காத்திருக்கும்
ஒற்றைக்கை;
உடைந்த மனசுடன்..
-----------------------------
என் காதல்செய்தி
ஊரெல்லாம் அலைகிறதே,
உன்னை வந்து சேர்ந்ததா.!
-----------------------------
ஸ்நேகிதியே!
உன்னிடம் சொல்லாத
ரகசியம் ஒன்று
என்னிடம்...!
நான் உன்னை காதலிக்கிறேன்.
-----------------------------
உன்
திருமணபரிசாக
நம் காதல்
என்னிடம்
பத்திரமாய்..!
-----------------------------
உறக்கத்திற்கு
காரணம் தெரியவில்லை..
நான்
உறங்காததன்
காரணம் நீ!
-----------------------------
உன்னிடம்
பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன..
நீ இல்லாமல்..!
-----------------------------
காதலுடன்..
காதலன் - சென்ஷி

19 comments:

சேதுக்கரசி on Thursday, March 22, 2007 12:17:00 AM said...

அட.. நீங்களும் கவிதை எழுதுவீங்களா? :)

சென்ஷி on Thursday, March 22, 2007 1:50:00 PM said...

//சேதுக்கரசி said...
அட.. நீங்களும் கவிதை எழுதுவீங்களா? :)//

இதுல ஏதும் உள்குத்து இல்லியே :)

கோபிநாத் on Thursday, March 22, 2007 4:01:00 PM said...

அட !!! சென்ஷி கவிதை எல்லாம் கலக்கலா இருக்கு ;-))

அப்ப போட்டிக்கு ரெடியா???

\\என் காதல்செய்தி
ஊரெல்லாம் அலைகிறதே,
உன்னை வந்து சேர்ந்ததா.!\\

அருமை..

\\உன்னிடம்
பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன..
நீ இல்லாமல்..!\\

அருமை....அருமை....எளிமையாக வார்த்தைகள் ;-))
வாழ்த்துக்கள் சென்ஷி

(கொஞ்சம் படங்களும் போட்ட இன்னும் கலக்கலா இருக்கும்)

அபி அப்பா on Thursday, March 22, 2007 4:25:00 PM said...

//அட.. நீங்களும் கவிதை எழுதுவீங்களா? :)//

சென்ஷி! என்ன சேதுக்கரசி இப்டி கேட்டுட்டாங்க! டபார்ன்னு ஒரு கவிதை அவங்க போட்டிக்கு அனுப்பிடுங்க:-))

முத்துலெட்சுமி on Friday, March 23, 2007 11:49:00 AM said...

காதலன்னு தலைப்பு வச்சுட்டு கவிதை எழுதாமலா ...சரி...சந்தோஷமா
சிரிச்சுட்டு போங்கன்னு எழுதிட்டு...
இப்படி சோகக்கவிதயான்னு கேக்கலாம்ன்னு பார்த்தா கவிதைக்கு
தலைப்பு சில நேரங்களில் அப்படினு
போட்டு தப்பிச்சிட்டீங்க..நல்லாருக்கு கவிதைகள்.
என்னோ வலைபக்கத்துக்கு வந்துட்டு போங்க.. வயர்டு விளையாட்டு க்கு
உங்க பேர போட்டிருக்கேன்.

சென்ஷி on Friday, March 23, 2007 12:44:00 PM said...

நன்றி கோபிநாத்... சரியான புகைப்படங்கள் கிடைக்கவில்லை.
அதான் அப்படியே :(

சென்ஷி on Friday, March 23, 2007 12:45:00 PM said...

//அபி அப்பா said...
//அட.. நீங்களும் கவிதை எழுதுவீங்களா? :)//

சென்ஷி! என்ன சேதுக்கரசி இப்டி கேட்டுட்டாங்க! டபார்ன்னு ஒரு கவிதை அவங்க போட்டிக்கு அனுப்பிடுங்க:-))//

கண்டிப்பாக... நீங்க சொன்னப்புறம் அப்பீல் ஏது :))

சென்ஷி on Friday, March 23, 2007 12:46:00 PM said...

//முத்துலெட்சுமி said...
காதலன்னு தலைப்பு வச்சுட்டு கவிதை எழுதாமலா ...சரி...சந்தோஷமா
சிரிச்சுட்டு போங்கன்னு எழுதிட்டு...
இப்படி சோகக்கவிதயான்னு கேக்கலாம்ன்னு பார்த்தா கவிதைக்கு
தலைப்பு சில நேரங்களில் அப்படினு
போட்டு தப்பிச்சிட்டீங்க..நல்லாருக்கு கவிதைகள்.//

தேங்க்ஸ் முத்துலக்ஷ்மி

//என்னோ வலைபக்கத்துக்கு வந்துட்டு போங்க.. வயர்டு விளையாட்டு க்கு
உங்க பேர போட்டிருக்கேன். //

தோ வர்றேன்..

அபி அப்பா on Saturday, March 24, 2007 1:16:00 PM said...

நான் கவிதை எழுதாம கைய கட்டி போட்டுட்டீங்களே மக்கா:-))

அபி அப்பா on Tuesday, March 27, 2007 10:49:00 AM said...

எங்க தம்பி ஆள கானும். தலைமறைவு வாழ்க்கையா?:-))

சென்ஷி on Tuesday, March 27, 2007 11:11:00 AM said...

//அபி அப்பா said...
எங்க தம்பி ஆள கானும். தலைமறைவு வாழ்க்கையா?:-)) //

நண்பர் ஒருவர் வெகு நாட்களுக்கு பின் டெல்லி வந்திருந்தார். எனக்கும் 3 நாள் ஆணி புடுங்கற வேல இல்ல. அவரை சந்தித்து பேசி 3 நாட்கள் ஓடிவிட்டன. தமிழ்மணத்தில் புதுசா ஏதாச்சும் இருக்கான்னு இன்னும் தேடிக்கிட்டிருக்கேன்.

இதோ வேலய ஆரம்பிச்சிடுறேன். :))

சென்ஷி

சேதுக்கரசி on Monday, April 09, 2007 9:40:00 AM said...

//கண்டிப்பாக... நீங்க சொன்னப்புறம் அப்பீல் ஏது :))//

அன்புடன் கவிதைப் போட்டிக்கு உங்க கவிதை இன்னும் வரலியே? கடைசித் தேதி ஏப்ரல் 14 :-)

உண்மைத் தமிழன் on Monday, April 09, 2007 11:48:00 AM said...

//காலம்
காயத்தை ஆற்றும்;
காதலை..?//
-----------------------------
சென்ஷி அண்ணனின் காதலையும்
கண்டிப்பாக காலம் ஆற்றிவிடும்..
சற்றுப் பொறுத்திருங்கள்..

//நீ
என் வீட்டில்
விளக்கேற்றவில்லை;
இருட்டில்
வாழ்கிறேன் நான்.!//

இன்னும் 'அதை'யே நினைச்சிட்டிருந்தா
எப்படிண்ணேன்?
டெல்லில விளக்கேத்த ஆளா கிடைக்கலை..
தேடுங்க.. கிடைக்கும்..
-----------------------------
//கைசேராத
காதலிக்காக
காத்திருக்கும்
ஒற்றைக்கை;
உடைந்த மனசுடன்..//

மனசு உடையறது
காதல்ல சகஜம்தான்..
அதுக்காக அதையே
நினைச்சு கவிதை எழுதிட்டிருந்தா
படிக்கிறவங்க என்ன நினைப்பாங்க?
தப்புண்ணேன்.. விட்ருங்க..
போயிட்டு போறாங்க..
நமக்கு வேற ஆளா
கிடைக்காது..

-----------------------------
//என் காதல்செய்தி
ஊரெல்லாம் அலைகிறதே,
உன்னை வந்து சேர்ந்ததா.!//

இதை இப்பச் சொல்லி
என்ன புண்ணியம்?
அப்பவே நேருக்கு நேரா
கேட்டுத் தொலைஞ்சிருக்கலாம்ல..
கேட்டிருந்தா இப்படி
கை வலிக்க டைப் பண்ண வேண்டி வந்திருக்குமா?

-----------------------------
//ஸ்நேகிதியே!
உன்னிடம் சொல்லாத
ரகசியம் ஒன்று
என்னிடம்...!
நான் உன்னை காதலிக்கிறேன்.//

கிழிஞ்சது.. மனசுக்குள்ள என்ன
பெரிய முரளின்னு நினைப்பா?
தொண்டைவரைக்கும் காதலிக்கிறேன்னு
வைச்சுக்கிட்டே கடைசி ரீல்ல சொல்லி
நம்ம உயிரை வாங்குவாரு..
நிறைய முரளி படம் பாத்துட்டீங்களாண்ணா..
சரி.. சரி.. மனசைத் தேத்திக்கீங்க..
அவர்கூட கடைசிப் படத்துல
முன்னாடியே சொல்லிட்டாரு..

-----------------------------
//உன்
திருமணபரிசாக
நம் காதல்
என்னிடம்
பத்திரமாய்..!//

போச்சுடா.. கல்யாணமா ஆயிருச்சா?
அப்புறம் எதுக்கு இப்பவும் அதையே
நினைச்சுட்டு புலம்பல்?
விட்டுத் தள்ளுங்க ராசா..
உங்களுக்கான மும்தாஜ்
அங்கதான் டெல்லில எங்கனயோ இருக்காங்களாம்..
என் மனசு சொல்லிச் சொல்லி அடிச்சுக்குது..

-----------------------------
//உறக்கத்திற்கு
காரணம் தெரியவில்லை..
நான்
உறங்காததன்
காரணம் நீ!//

இப்படி தத்துப்பித்துன்னு உளறாம
நாலு தூக்க மாத்திரையைப் போட்டுத் தூங்க
ஆரம்பிங்க.. தானா தூக்கம் வரும்..

-----------------------------
//உன்னிடம்
பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன..
நீ இல்லாமல்..!//

இது வேறய்யா? பேசாமலேயே லவ்வா?
அட கர்மமே..
உங்களையெல்லாம் என்ன செஞ்சா தேவலை?
இதுக்கு மேல திட்ட முடியல..
ஏன்னா இது 'நம்ம' கேஸ¤..

-----------------------------
//காதலுடன்..
காதலன் - சென்ஷி//

அப்பாடி.. முடிச்சிட்டாருய்யா சோகத்தை..
ஏதோ நாலு பக்கம் படிச்சு நம்ம சோகத்தை
மறந்து நாலு வூடு சேக்குறாப்புல சிரிக்கலாம்னு பார்த்தா..

இப்படியா? இப்படியா? இப்படியா?

susen on Wednesday, May 09, 2007 10:24:00 PM said...

ஸ்நேகிதியே!உன்னிடம் சொல்லாதரகசியம் ஒன்றுஎன்னிடம்...!நான் உன்னை காதலிக்கிறேன்.-----------------------------

நிறைய காதல் சொல்லாத அர்த்தமில்லாத காதலாகத்தான்
முடிவடைகிறது.

"உன்னிடம்பேச நினைத்தவார்த்தைகள் எல்லாம் மௌனத்தில் அழுகின்றன..நீ இல்லாமல்..!"

நல்ல வரிகள்

சென்ஷி on Thursday, May 10, 2007 10:40:00 AM said...

வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி சூசன் :)

surya on Thursday, May 10, 2007 10:51:00 PM said...

nice kavithaikal


"காதல்செய்திஊரெல்லாம் அலைகிறதே,உன்னை வந்து சேர்ந்ததா.!"

kathal seithiyai neengal allava kathali yidam serkavendum

"உன்னிடம்பேச நினைத்தவார்த்தைகள் எல்லாம்மௌனத்தில் அழுகின்றன..நீ இல்லாமல்"

super lines

சென்ஷி on Friday, May 11, 2007 10:23:00 AM said...

//surya said...
nice kavithaikal


"காதல்செய்திஊரெல்லாம் அலைகிறதே,உன்னை வந்து சேர்ந்ததா.!"

kathal seithiyai neengal allava kathali yidam serkavendum//

தப்புதான். இப்பதானே அது தெரியுது
:(

வருகைக்கு நன்றி சூர்யா :))

Anonymous said...

runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money

Anonymous said...

runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com