1. உனக்கு சாமி பிடிக்காதுங்கறதுக்காக வீட்டு காலண்டர்ல விநாயகர் சதுர்த்தி வராம இருக்காது.
2. படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டாலும், போர்த்திக்க்கிட்டு படுத்துக்கிட்டாலும் தூக்கம் வந்தாதான் தூங்க முடியும்.
3. முழுக்க நனைஞ்சிட்டாலும் முக்காடு போட்டுக்க. நனைஞ்சது யாருன்னு தெரியாம இருக்கும்.
4. உடம்பு சரியில்லைன்னா மாத்திரை எடுத்துக்க நியாயம். மனசு சரியில்லைன்னு மருந்து தேடுறது அநியாயம்.
5. நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் பெருசா ஒண்ணும் வித்தியாசம் இல்ல. ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்.
6.கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு ஷாலினி மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்குறது தப்பில்ல. அதுக்கு நீ அஜீத் மாதிரி இருக்கியான்னு கண்ணாடியில பாத்துக்க.
7. எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது.
8. நியாயமா யோசிக்கறவன் சிந்தனாவாதி.... அநியாயமாய் யோசிக்கிறவன் அரசியல்வாதி.
9. காதலுக்கு பரிசா பூ கொடுக்கணும்னு வாழைப்பூ கொடுக்கறது தப்பூ..
10. நேத்து நீ என்னத்த கிழிச்சேன்னு யாரும் கேக்குறதுக்கு முன்னாடி காலண்டர்ல தேதிய கிழிச்சிடு.
11. குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டலன்னு சொன்னா அவன் க்ளீன் ஷேவ் பார்ட்டியாத்தான் இருக்கணும்.
12. நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...
சென்ஷி

80 comments:
கடைசி இது ஆனாலும் அநியாயம்.
:-)
வாய்யா வா! என் சர்வர், பிளாக்கர் சொதப்புதுன்ரதால என்னய கடுப்பேத்த பதிவா போட்டு தாக்குவதை கண்டிக்கிறேன்:-))
யோசிப்பவர் சங்கத்துல சேர்ந்துட்டீங்களா? ;)
//எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது.//
இது உங்களுக்கேச் சொல்லிகிட்டது தானே? ;)
//முத்துலெட்சுமி said...
கடைசி இது ஆனாலும் அநியாயம்.
:-)//
நல்லவேளை ஸ்மைலி போட்டுட்டீங்க :) இல்லைன்னா உண்மையிலேயே அது அநியாயம் போலிருக்குன்னு நினைச்சுருப்பேன் :)
//அபி அப்பா said...
வாய்யா வா! என் சர்வர், பிளாக்கர் சொதப்புதுன்ரதால என்னய கடுப்பேத்த பதிவா போட்டு தாக்குவதை கண்டிக்கிறேன்:-)) //
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புல உங்க பேர்தான் முதல்ல எழுதி வச்சேன்.. பாத்துட்டு வந்தீங்களா :)
//பொன்ஸ் said...
யோசிப்பவர் சங்கத்துல சேர்ந்துட்டீங்களா? ;)
//எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது.//
இது உங்களுக்கேச் சொல்லிகிட்டது தானே? ;) //
அக்கா... நமக்கெல்லாம் கல்யாண ராசி... தெரிஞ்சுக்குங்க :)
கடைசியில சொன்னீங்களே அது ஆனாலும் ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு. ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க போல! ஒவ்வொண்ணும் படம் காமிக்குது
எல்லாம் சரி.. ஆனா அந்தக் கடைசி தத்துவம் மட்டும் கொஞ்சம் சம்பந்தமில்லாம இடிக்குதேண்ணேன்.. யாருக்காச்சும் அட்வைஸா?
அட அட.. என்ன கவிதை .. என்ன கவிதை...
எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க ;-)))
\\Fast Bowler said...
அட அட.. என்ன கவிதை .. என்ன கவிதை...\\
தல....இருந்தாலும் உங்களுக்கு ஒவர் நக்கலு ;-)))
//Nandha said...
கடைசியில சொன்னீங்களே அது ஆனாலும் ரொம்ம்ம்ம்ம்ப ஓவரு. ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க போல! ஒவ்வொண்ணும் படம் காமிக்குது //
என்ன கொடுமய்யா இது..
எல்லோருமே கடைசியத்தான் குத்தம் சொல்றாங்க. வருத்தப்படாலும் குத்தம்.. அலட்சியப்படுத்துனாலும் தப்பா.. :))
வருத்தப்பட்டாலும் தப்பா அலட்சியப்படுத்துனாலும் தப்பான்னா
ஆமாம் ..ஊரு அப்படிங்கறது
நாலும் பேசும். நீங்க இப்படின்னா
நாங்க அப்படி நீங்க அப்படின்னா
நாங்க இப்படி... :-)
runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money
//நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...//
கடைசியா என்ன அண்ணே இப்படி சொல்லிப்பூட்டீங்க!
super
//படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டாலும், போர்த்திக்க்கிட்டு படுத்துக்கிட்டாலும் தூக்கம் வந்தாதான் தூங்க முடியும்.///
பட் ஒரு தடவை போத்திக்கிட்டே படுத்து பெட்லேர்ந்து கீழ விழுந்து செம அடி :((
1. //நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்... //
2. //எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது.//
இது இரண்டுத்துக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா.. உங்களோடு சொந்த தொடர்பு....
//முழுக்க நனைஞ்சிட்டாலும் முக்காடு போட்டுக்க. நனைஞ்சது யாருன்னு தெரியாம இருக்கும்.//
சில சமயம் நனைச்சதும் யாருன்னு தெரியாம இருக்கும்! :))))
//கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு ஷாலினி மாதிரி இருக்கணும்னு எதிர்பார்க்குறது தப்பில்ல. அதுக்கு நீ அஜீத் மாதிரி இருக்கியான்னு கண்ணாடியில பாத்துக்க.///
:((( நொம்ப கலவரப்படுத்துற விசயம் இதுவாகத்தான் இருக்கு ரொம்ப காலமா ?????
/எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது.///
சரிண்ணே!
இனி அப்படியே பாலோ பண்றேன்!!!!
ஆஹா வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டிங்க சென்ஷி. எல்லா தத்துவத்தையும் சேர்த்து வைங்க. புத்தமா போட்டுடலாம் :)
:)
\
உனக்கு சாமி பிடிக்காதுங்கறதுக்காக வீட்டு காலண்டர்ல விநாயகர் சதுர்த்தி வராம இருக்காது.
\
வரும்...
\
முழுக்க நனைஞ்சிட்டாலும் முக்காடு போட்டுக்க. நனைஞ்சது யாருன்னு தெரியாம இருக்கும்.
\
முக்காடு போட முடியலைன்னா...
\
நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் பெருசா ஒண்ணும் வித்தியாசம் இல்ல. ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்.
\
ஆனா நியாயம் பண்ணா வாழ்த்துறாய்ங்க அநியாயம் பண்ணா கூட்டமா வந்துல்ல உதைக்கிறாய்ங்க...:)
\
எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது.
\
இது சென்ஷிக்கு அவரோட மனச்சாட்சி சொன்னது...
\
காதலுக்கு பரிசா பூ கொடுக்கணும்னு வாழைப்பூ கொடுக்கறது தப்பூ..
\
ஆமா தப்பூ!!!
யுத் பட காமெடி நினைவுக்கு வந்திச்சுப்பா...:)
\
நேத்து நீ என்னத்த கிழிச்சேன்னு யாரும் கேக்குறதுக்கு முன்னாடி காலண்டர்ல தேதிய கிழிச்சிடு
\
ஆமா ஏதாவது செய்யணும்ல...:)
\
நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...
\
என்னத்தை எழுதினாலும் இந்த விசயம் மட்டும் நம்மளை விட்டு போக மாட்டேங்குதுப்பா...:(
haiiiiiiii welcome back anna..!! :))))))))))))Romba late-ah vandhuttanoooooo...?? ;)))))
:-D
//உனக்கு சாமி பிடிக்காதுங்கறதுக்காக வீட்டு காலண்டர்ல விநாயகர் சதுர்த்தி வராம இருக்காது.//
உண்மை.. :))
//முழுக்க நனைஞ்சிட்டாலும் முக்காடு போட்டுக்க. நனைஞ்சது யாருன்னு தெரியாம இருக்கும்.//
நல்ல ஐடியா.. :))))))
//நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...//
இது அல்டிமேட் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிச்சிருக்கு.. :)))))))
கொஞ்சம் நன்றாகத் துலக்கினால் வெற்றிச் சிந்தனைகள் (அ) பொன் மொழியாகி விடும் என்று சொல்கிறீர்களா?
அந்தக் கடைசிதான் சூப்பர்.:))
ஏதாவது ஈமெயிலில் வந்ததா இல்லை சொந்தச் சரக்கா??
நல்லா இருந்துச்சு சென்ஷி!
ரீமிக்ஸ்'க்கும் பின்னூட்டம் குவியுது போல!!! ;)
ஆனா இதை எல்லாம் இப்போ யாருக்காக நீ கூவிக்கிட்டு இருக்க!!!! ;))
@ ஆயில்யன்...
நன்றிகள் பல :))
////நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...//
கடைசியா என்ன அண்ணே இப்படி சொல்லிப்பூட்டீங்க!//
முடிவைப்பார்த்து என்னிக்கும் பயப்படக்கூடாதுன்னு தான் :)
//முரளிகண்ணன் said...
super
//
நன்றி முரளி கண்ணன் :)
//கவிதா | Kavitha said...
1. //நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்... //
2. //எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது.//
இது இரண்டுத்துக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா.. உங்களோடு சொந்த தொடர்பு....
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//தாரணி பிரியா said...
ஆஹா வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டிங்க சென்ஷி. எல்லா தத்துவத்தையும் சேர்த்து வைங்க. புத்தமா போட்டுடலாம் :)
//
அப்படியா..!! அப்ப மொதோ புக்கு உங்களுக்குத்தான் :))
//தமிழன்...(கறுப்பி...) said...
\
நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...
\
என்னத்தை எழுதினாலும் இந்த விசயம் மட்டும் நம்மளை விட்டு போக மாட்டேங்குதுப்பா...:(
//
என்னங்க பண்றது.. எதாச்சும் ஒரு விஷயத்துல எல்லோரையும் சேர்க்கணுமுல :))
//ஸ்ரீமதி said...
haiiiiiiii welcome back anna..!! :))))))))))))Romba late-ah vandhuttanoooooo...?? ;)))))
//
ஆமா.. இந்த பதிவு ஒரு வருசத்துக்கு முன்னாடி போட்டது.. இப்ப மீள்பதிவாகிடுச்சு :))
//ஸ்ரீமதி said...
//நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...//
இது அல்டிமேட் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிச்சிருக்கு.. :)))))))
//
ரொம்ப தேங்க்ஸ்ங்க தங்கச்சி :))
// யோசிப்பவர் said...
:-D
//
மீள்பதிவுல கரெக்டா வந்துட்டீங்க :))
//சுல்தான் said...
கொஞ்சம் நன்றாகத் துலக்கினால் வெற்றிச் சிந்தனைகள் (அ) பொன் மொழியாகி விடும் என்று சொல்கிறீர்களா?
அந்தக் கடைசிதான் சூப்பர்.:))
//
:))
தேங்க்ஸ் சுல்தான்ஜி :))
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஏதாவது ஈமெயிலில் வந்ததா இல்லை சொந்தச் சரக்கா??
நல்லா இருந்துச்சு சென்ஷி!
//
ஒரு வருசத்துக்கு முன்னாடி எழுதினதுன்னா. போரடிக்குதுன்னு மீள்பதிவாக்கிட்டேன்.. :))
சத்தியமா சொந்த சரக்குதான்..
//கோபிநாத் said...
ரீமிக்ஸ்'க்கும் பின்னூட்டம் குவியுது போல!!! ;)
ஆனா இதை எல்லாம் இப்போ யாருக்காக நீ கூவிக்கிட்டு இருக்க!!!! ;))
//
:))))
//நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...//
காதலரே,
நீரும் ப்ளாக் விடு தூது ஆரம்பிச்சிட்டீரா? என்ன பதில் வந்ததுன்னு மட்டும் சொல்ல மாட்டிங்க :-)
ஆல் த பெஸ்ட் தல.
me the 50th:):):)
அண்ணே, அவங்க உங்களுக்கு அப்பப்ப சொன்ன அறிவுரைகளையே பதிவா தொகுத்துட்டீங்களா?:):):)
//குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டலன்னு சொன்னா அவன் க்ளீன் ஷேவ் பார்ட்டியாத்தான் இருக்கணும்.//
இல்லைன்னா, மீசை முளைக்காதவனாவும் இருக்கலாம்:):):)
//எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது//
ஆமாம் சென்ஷியிசம்னு சொல்லணும்:):):)
//காதலுக்கு பரிசா பூ கொடுக்கணும்னு வாழைப்பூ கொடுக்கறது தப்பூ//
ஆமாம், முருங்கைப்பூ கொடுத்த சென்ஷி அண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்:):):)
//நேத்து நீ என்னத்த கிழிச்சேன்னு யாரும் கேக்குறதுக்கு முன்னாடி காலண்டர்ல தேதிய கிழிச்சிடு//
ஆமாம், சென்ஷி அண்ணன் மாதிரி துணியக் கிழிக்க எல்லாருக்கும் வசதி பத்தாது:):):)
//நீரும் ப்ளாக் விடு தூது ஆரம்பிச்சிட்டீரா? என்ன பதில் வந்ததுன்னு மட்டும் சொல்ல மாட்டிங்க//
வந்த பதிலைத்தான் பதிவாக்கியிருக்காருங்க:):):)
முத்து மறுபடியும் பேரை சுறுக்கிட்டாங்களா:):):) இதுக்கு மறுபடி ஒரு பதிவு போடுங்க சென்ஷி அண்ணே:):):)
//உனக்கு சாமி பிடிக்காதுங்கறதுக்காக வீட்டு காலண்டர்ல விநாயகர் சதுர்த்தி வராம இருக்காது.
//
விநாயகர் சதுர்த்தின்னு சொல்லாம சிறப்பு விடுமுறைன்னு சொல்லிக்கோ
என்னா தத்துவம் என்னா தத்துவம்
என்னா தலீவா, இவ்ளோ சோக்கா
தத்துவத்த சொல்லிக்கீற.
ஆனா தலிப்பு “பித்தள மொழிகள்”
ந்னு வச்சீகிற...
ஒவ்வொன்னும் சும்மா நச்சின்னு
இருக்கு!
நல்லாயிருக்கு சென்ஷி.
//Sridhar Narayanan said...
//நரம்பறுந்த வீணை..... காற்றில்லா உலகம்...... உன் நினைவுகளுடன் நான்..... ஒண்ணுக்கும் உதவாதுன்னு சொல்ல வந்தேன்...//
காதலரே,
நீரும் ப்ளாக் விடு தூது ஆரம்பிச்சிட்டீரா? என்ன பதில் வந்ததுன்னு மட்டும் சொல்ல மாட்டிங்க :-)
ஆல் த பெஸ்ட் தல.
//
சொந்த அனுபவத்தைத்தான் நொந்து பதிவாக்கியிருக்கேனே தல :))
//rapp said...
me the 50th:):):)
//
50 க்கு வாழ்த்துக்கள் தங்கச்சிக்கா :))
//rapp said...
அண்ணே, அவங்க உங்களுக்கு அப்பப்ப சொன்ன அறிவுரைகளையே பதிவா தொகுத்துட்டீங்களா?:):):)
//
ஹி..ஹி.. நாங்க அறிவுரைய எங்க அனுபவத்துலேந்துதான் பிழிஞ்சு எடுப்போம் :))
//rapp said...
//குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டலன்னு சொன்னா அவன் க்ளீன் ஷேவ் பார்ட்டியாத்தான் இருக்கணும்.//
இல்லைன்னா, மீசை முளைக்காதவனாவும் இருக்கலாம்:):):)
//
ஆஹா.. வெட்டிச்சிந்தனைகள் அடுத்த பார்ட் ரெடி ஆகிடும் போலருக்குதே :)
// rapp said...
//எந்த பொண்ணும் உன்னை காதலிக்கலங்கறத காதல் தோல்வின்னு சொல்லக்கூடாது//
ஆமாம் சென்ஷியிசம்னு சொல்லணும்:):):)
//
இதுக்கு என்னோட பதில்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///rapp said...
//நேத்து நீ என்னத்த கிழிச்சேன்னு யாரும் கேக்குறதுக்கு முன்னாடி காலண்டர்ல தேதிய கிழிச்சிடு//
ஆமாம், சென்ஷி அண்ணன் மாதிரி துணியக் கிழிக்க எல்லாருக்கும் வசதி பத்தாது:):):)
//
என்ன கொடும சார் இது.. நல்ல வேளை கிழிச்சுக்கன்னு சொல்லாம கிழிக்கன்னு சொன்ன வரைக்கும் சந்தோஷம். யாராச்சும் பக்கத்துல வருவாங்க.. நோ சான்ஸ்! :))
//rapp said...
//நீரும் ப்ளாக் விடு தூது ஆரம்பிச்சிட்டீரா? என்ன பதில் வந்ததுன்னு மட்டும் சொல்ல மாட்டிங்க//
வந்த பதிலைத்தான் பதிவாக்கியிருக்காருங்க:):):)
//
ஹி..ஹி.. ஆனாலும் நீங்க ரொம்ப புத்திசாலிங்கோ :)
//rapp said...
முத்து மறுபடியும் பேரை சுறுக்கிட்டாங்களா:):):) இதுக்கு மறுபடி ஒரு பதிவு போடுங்க சென்ஷி அண்ணே:):):)
//
இது பழைய்ய பேருங்க.. இது மீள்பதிவாகிட்டதால பேரும் அப்படியே வந்துடுச்சு.. பாவம் பொழச்சு போகட்டும் விட்டுடுங்க :))
//வடகரை வேலன் said...
//உனக்கு சாமி பிடிக்காதுங்கறதுக்காக வீட்டு காலண்டர்ல விநாயகர் சதுர்த்தி வராம இருக்காது.
//
விநாயகர் சதுர்த்தின்னு சொல்லாம சிறப்பு விடுமுறைன்னு சொல்லிக்கோ
//
அப்படியும் சொல்லிக்கலாமே :)
//கார்த்திக் said...
என்னா தத்துவம் என்னா தத்துவம்
//
நன்னி.. நன்னி :))
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
என்னா தலீவா, இவ்ளோ சோக்கா
தத்துவத்த சொல்லிக்கீற.
ஆனா தலிப்பு “பித்தள மொழிகள்”
ந்னு வச்சீகிற...
ஒவ்வொன்னும் சும்மா நச்சின்னு
இருக்கு!
//
ரொம்ப நன்றி தலைவா... :))
//பரிசல்காரன் said...
நல்லாயிருக்கு சென்ஷி.
//
ரொம்ப நன்றிங்க பரிசல் சார் :))
எல்லாமே கலக்கல்.
பித்தளை மொழிகள்-வார்த்தை புதுசாவும், நல்லாவும் இருக்குது.
//ச.முத்துவேல் said...
எல்லாமே கலக்கல்.
பித்தளை மொழிகள்-வார்த்தை புதுசாவும், நல்லாவும் இருக்குது.//
ரொம்ப நன்றிங்க.
பித்தளை மொழிகள் பெயர் ஸ்பான்சர் பொன்ஸ் அக்கா..
76
77
78
79
100.... :))
Post a Comment