அந்நியன், சந்திரமுகி படப்புகழ் வியாதியான மல்டிபிள் பர்சனாலிடி டிஸ் ஆர்டர் மற்றும் கஜினி பட புகழ் வியாதி ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ், இவை இரண்டும் ஒருவனுக்கு இருந்தால் அவன் என்ன பாடுபடுவான். தன் மறக்கப்பட்ட பத்தாவது நிமிடத்தில் அவன் எந்த கேரக்டரில் இருந்தான் என்பதை கண்டறிவது எவ்வளவு சிரமம்.
நான் அபி அப்பாவின் வீட்டிற்குள் புகுந்த போது இந்த நிலைமையில் தான் இருந்தேன்.
ஏற்கனவே கலகலப்பை குத்தகைக்கு எடுத்தவர்களாக அங்கும் தெரிந்த முகமான முத்துலட்சுமி அக்கா அமர்ந்திருக்க, அங்குமிங்கும் ஓடியாடிக்கொண்டு அனைவரிலும் தான் இளமையானவன் என்று (அபி தம்பி பாப்பாவ விட சின்னவராம்) அபி அப்பா அதகளம் செய்து கொண்டிருந்தார்.
ஜி, காயத்ரி, அவர்களின் தாயார், கோபி மற்றும் இம்சை அரசி இவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைப்பதில் என்னை விட குழப்பமான மனநிலையில் இருந்த அபி அப்பா எல்லோரையும் மாற்றி காட்டி அறிமுகப்படுத்த (ஆனாலும் பாலைத்திணை காயத்ரின்னு சொல்லி அவங்க அம்மாவ காட்டினது ரொம்ம்ப்ப ஓவரு) ,
அதிகம் சாட் செய்திருந்த கோபியை கூட சற்று நேரம் சந்தேகத்துக்குப்பின் தான் கோபி என்றே ஒத்துக்கொண்டேன். (அவ்ளோ அலற வச்சிட்டாங்கப்பா)..
மற்றொரு முக்கிய விருந்தினரை அறிமுகப்படுத்துகின்றேன் என்று கூறி பல நிமிட மணித்துளிகள் ஆகியும் யாரும் வராமல் போக யாரது என ஜியின் காதில் மெல்லத்தான் கேட்டேன். அது வாஸ்து பிரகாரம் அனைவரின் காதிலும் கேட்டது போல.. ஒட்டு மொத்த குரலில் எங்கள் தலைவர் என்றனர்.
தல என்று வருணிக்கப்பட்ட ராயல் ராமை பொறுமையின்றி நானே மாடியேறி சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். இல்லாட்டி அதிலயும் விளையாடிட்டா என்ன பண்றது.
அனைவரும் பேசப்பேச என்னால் அவர்களின் பேச்சில் ஒன்றி போக முடியாத காரணம் தமிழ்மணத்தில் ஒரு மாத விடுப்பு எடுத்ததாக இருக்கலாம்.
என்னைப்போலவே அமைதியாக(!) அமர்ந்திருந்த என் அருமை சகோதரன் கோபியிடம் என் வருத்தத்தை பகிர்ந்து கொண்டேன். (என்னை வச்சி இப்படில்லாமா காமீடி பண்றது)
நடுவே அவந்திகா அக்கா போனில் தொடர்பு கொண்டு சந்திப்பு வெற்றிபெற அனைவரையும் வாழ்த்தினார்கள்.
காலை உணவிற்கு பின் பேச்சு எதைப்பற்றி திரும்புவது என்று தெரியாததால் அனைவரும் திரும்பாமல் அனைவரின் முகமும் தெரிவது போல அமர்ந்து கொண்டோம்.
நிமிடத்திற்கு ஒரு முறை அவர்கள் வருவார்களா என்று அபி அப்பாவிடம் நிலவரம் விசாரித்தது கண்மனி அக்காவை பற்றி,
ஆனால் என் கவனம் இந்த சந்திப்பில் மங்கை அக்கா இருந்திருந்தால் இன்னும் களை கட்டியிருக்குமே என்று தோணியதை முத்து லட்சுமி அக்காவிடம் பகிர்ந்து கொண்டேன். டெலிபதி மூலம் அதை அவர்களும் உணர்ந்ததாக கூறி மங்கை அக்காவிடம் பேச மொபைல் மூலம் பேச அழைப்பு விடுத்தார்கள்.
ஒரு வழியாய் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் கண்மனி அக்காவும் (டீச்சர்) வந்து சேர சந்திப்பு களை கட்டியது. ஆனால் நாங்கள் சந்திக்க காரணமாய் இருந்த அபி அப்பா எங்களுடன் சேர முடியாமல் பிஸியாய் போனும் காதுமாக சுற்றிக்கொண்டிருந்தார்.
இழுத்து பிடித்து அமர வைத்த போதும் இதோ வந்திட்டேன்னு என்று சொல்லி டகால்டி கொடுத்தபடி இருந்தார்.
கோழிக்கால் புகழ் காயத்ரியைப்பற்றி முதல் நாள் பதிவில் படித்திருந்தபடியால் தைரியமாய் கலாய்க்க முடிந்தது.
ஆனாலும் எனக்கு உன்னைப்பத்தின எல்லா உண்மையும் தெரியும் என்று சொன்ன டீச்சரின் ஒற்றைச்சொல்லில் கோழிக்கால் அம்பேல்.
மிக அமைதியாய் இம்சை அரசி தனக்கும் இந்த சந்திப்புக்கும் சம்பந்தமில்லை என்று அமர்ந்திருக்க, அவரிடமிருந்து எந்த பிரயோசனமான தகவலும் பெற முடியாமல் போய் விடுமென நினைத்திருந்த வேளையில் நல்ல வேளையாக ராம் ப.பா.ச. பற்றி பேச்சு எடுத்ததும் ஆக்ரோஷ பாவையானார்.
நல்ல வேளை! நான் இம்சை அரசியிடம் பெரியதாய் ஏதும் கலாய்த்தல் செய்யாதது எனக்கு சந்தோஷமே..
கண்மனி அக்கா பெரிதும் கும்மி பதிவுகளைப்பற்றி கவலைப்படுவது போல் காட்டிக்கொண்டாலும், கும்மிக்கென்று தனிப்பதிவு ஒன்று வைத்துவிட்டேன். இனி கும்மி பின்னூட்டங்கள் அனைத்தும் அதில் விளையாடுங்கள் என்றார்.
தன் பதிவை கும்மி பதிவு என்று நினைத்து பதிவர்கள் விலகுகிறார்கள்(!?) என்று கூறி எங்களை ஆச்சரியப்பட வைத்தார். (என்ன கொடும சார் இது!)
எனினும் பின் தன் சொல்லில் சமாதானமாகாதவராய் சற்று பொறுத்து, தான் சீரியஸாகவும் பதிவு எழுதப்போவதாக சொல்லி எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
வ.வா.ச. புகழ் ராயல் ராம் மூத்த பதிவராகிப்போன காரணத்தால் அவரிடம் ஆலோசனைகள் கேட்கப்படவில்லை. பின்ன புது ஆளுங்களும் கலக்கியெடுக்கறாங்கள்ல...
ஜியின் பழய்ய பதிவுகளை பற்றி ஞாபகம் வைத்திருந்து கண்மணி அக்கா கேள்வி கேட்டது அழகு.
இம்சையரசி தான் பதிவுலகில் சற்று ஓய்வில் இருப்பதாகவும் விரைவில் தன் இம்சையை ஆரம்பிப்பேன் என்றும் கூறி கிலியேற்படுத்தினார். ஆனாலும் ப.பா.ச. என்ற பெயரை கேட்டால் மட்டுமே பேசுவேன் என்று அமர்ந்திருந்தது சந்தோஷமாக இருந்தது. சங்கத்தில் மூணு பேரு இருந்தும் அதை சங்க மீட்டிங்க் ஆக்காம விட்டாங்க.
கடைசி வரை நான்ஸ்டாப் ரன்னர் போல பேசிக்க்க்க்க்க்க்க்க்கொண்டேயிருந்த முத்து லட்சுமியிடமிருந்து வார்த்தைகளை நிறுத்தி வேறு யாரையும் பேச வைக்க நினைக்கும் சமயத்தில் மீண்டும் அக்கா பேச ஆரம்பித்து விட, இது அனைவருக்கும் பேசாமல் எஸ்கேப் ஆவதற்கு ஒரு சாதகமாய் போயிற்று.ஆனாலும் சுழற்சி முறையில் அவங்களையும் ஏதாவது பேச விடுங்க என்று வேண்டி கேட்டுக்கொண்டதால் மனமிரங்கி சரி என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இம்சையரசி எல்லோரும் போன பிறகு பேசிய வார்த்தைகளை சந்திப்பிலும் பேசியிருக்கலாம்.
கண்மணி அக்கா, அபி அப்பா பதிவை பற்றி ஆரம்பத்தில் கொண்ட அபிப்ராயம் மாறிய விதத்தை கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.
சர்வ சாதாரணமாக நான் ராமிடம் "றஞ்சனியின் கவிதை" பிடிக்குமா என்று கேட்டதற்கு அவர் முகத்தில் ஈயாடவில்லை. அவர் அதற்கு விளக்கம் கொடுப்பதற்குள், ஜி அது ரஞ்சனியில்ல, ஆனந்த விகடன் றஞ்சனி என்று கூறி ஈயுடன் மீண்டும் கொசுவும் சேர்ந்து பறக்க வழி செய்து கொடுத்தார். கடைசி வரை யார் அது ரஞ்சனி என்று நான் ராமிடம் கேட்க நினைத்து கேக்கவில்லை.
அடிக்கடி குடும்பத்தார்களுக்குள் அவ்வை சண்முகி படத்தில் மணிவண்ணன் பேசும் வசனம் இடம் பெற்றது. (ஓட்ட வாய்டா முதலி உனக்கு) இது உள்குத்து இல்லை.
மதிய சாப்பாட்டிற்கு பின் முத்து லட்சுமி அக்கா கிளம்புவதாக கூற அவரை இன்னும் அதிக நேரம் பேச வைக்க வேண்டும் என்ற சிறப்பு வேண்டுகோளின் படி சாப்பாடு நேரம் நகர்ந்து கொண்டே சென்று மதியம் 3 மணிக்கு அனைவரும் சாப்பிட அமர்ந்தோம்.
அசத்தலான விருந்தை ஏற்பாடு செய்த அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு முதலில் கண்மனி அக்கா ஜூட் விட, பின்னாலேயே முத்துலட்சுமி அக்காவும், பின் காயத்ரியும், இம்சையரசியும் பஸ் ஏற, ஆண் உறுப்பினர்கள் தனியரானோம்.
இதைப்பற்றிய பதிவெழுதும் போது கோழிக்காலைப்பற்றி எழுதவேண்டாம் என்று கூறிய காயத்ரியின் மனம் புண்படக்கூடாதென்பதால் சாப்பிடும்போது காயத்ரி கேட்ட கோழி காலைப்பற்றி எழுதவில்லை.
அனைவரும் கிளம்பி சென்ற மறுநாள் துக்கம் தாங்காமல் கோபி போன் செய்து எனக்கு கெளம்பி வரவே மனசு இல்ல என்று கூறி அழுததை நான் இங்கு நினைத்து பார்க்கவில்லை. எல்லோரும் கூடி கொட்டமடித்து கிளம்பிவிட, அபி அப்பாவும் தலையணை நனையும் வரை துக்கம் மறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டாராம். (அட ரூமை சாத்திட்டு அழுதாராம்ப்பா!) மறுநாள் என்னை காணும் வரை துக்கம் குறையாமலேயே காத்திருந்து குமுறினார்...
எனக்கும் ரொம்ம்ப்ப்ப ஃபீலிங்ஸாயிடுச்சு. அதான் பதிவு எழுத இத்தன நாளாயிடுச்சு.
பாசக்கார குடும்பத்துல ஒரு பாகசக்காரன் அப்படின்னு தலைப்பு வைக்கலாம்ன்னு இருந்தேன். நானும் குடும்பத்துல ஒருத்தன் ஆயிட்டதால(!?) வேற தலைப்புதான் கெடைக்கலை. அப்படியே விட்டுடறேன்.
பாசமுடன்
சென்ஷி
ஒரு முக்கிய பின் குறிப்பு:
//* நண்டை எடுத்துக் கொண்டு இந்த கோழிக்கு நாலு காலுதான் இருக்குன்னு காயத்ரி தரையில உருண்டு அழ, அது நொண்டி கோழி அதான் இன்னொரு கால் இல்லைனு அபிஅப்பா சமாளிச்சதுக்கப்புறம்தான் காயத்ரி தன் அழுகையையே நிறுத்தினார். அடுத்த முறை எட்டுக்கால் பூச்சி பிரியானி ஆர்டர் செய்வதாக அபிஅப்பா கூறியதும், 'பூரான் பிரியானி செஞ்சிடுங்க. அதுலதான் எக்கச்சக்க கால் இருக்கும்'னு காயத்ரி அறிவுறை கூறினார். //
இது காயத்ரியின் பதிவில் ஜி போட்ட பின்னூட்டம்.. இன்னும் அடங்கலையா..
மீண்டும் கலாய்த்தல்களுடன் உங்களை சந்திக்கும் வரை
உங்கள் சென்ஷி
Wednesday, June 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)




28 comments:
patichcathum எனக்கும் ரொம்ம்ப்ப்ப ஃபீலிங்ஸாயிடுச்சு
லேட்டா வந்து சந்திப்பைப் பற்றி எழுதினாலும் நன்றாக உள்ளது.ஆமாம் தலை நகர் திரும்பியாச்சா
என்னையே குறிவைத்து எழுதி இருக்கீங்க அத்தனை பேரும்..இது சரியில்லை..உருப்படியா பேசினா புடிக்காதே..நல்லதே ஆகாதே உங்களுக்கு எல்லாம்..நாயகன் ஸ்டைல் அப்படின்னு காயத்ரி ,இப்ப சென்ஷி..இருக்கட்டும் இருக்கட்டும் ...
சென்ஷி! நல்ல பதிவு போட்ட்ய்யா! நான் தான் எப்ப பொடுவேன்ன்னு தெரியல! என்ன வழக்கம் போல ஃபிளைட் மிஸ்ஸிங். வெள்ளி கிழமை கிளம்பரேன். நமக்கௌ அங்க போனாத்தான் ஃப்ரீ! இங்க "என்ன கொடுமை சரவணா"தான்!
ஆஹா அபிஅப்பா பேசவேல்லியா!
சும்மானாச்சுக்கும் ஒரு க்ளாஸ்ல பச்ச தண்ணிய ஊத்திட்டு அபி அப்பா இது உங்க ரவுண்டு பேசுங்கன்னு சொல்லியிருந்திங்கன்னா எல்லா வேலையும் விட்டுபோட்டு ஓடோடி வந்திருப்பாரே!
ரஞ்சனி யாருன்னு தெரியாதா சென்ஷி?
ஹய்யோ ஹய்யோ
:) :) :)
ராம் கிட்ட ரஞ்சனி பத்தி நீங்களும் கேட்டாச்சா? அப்பாடா.. இப்பத் தான் திருப்தியா இருக்கு..
நல்லாத்தான் கும்மி அடிச்சிருக்கீங்க.. நான் கூட வந்திருக்கலாம் போல இருக்கு..
//patichcathum எனக்கும் ரொம்ம்ப்ப்ப ஃபீலிங்ஸாயிடுச்சு//
மின்னல் நமக்கெல்லாம் பீலிங் வரக்கூடாதுப்பா!
கடமையை செய்
பீலிங்கை எதிர்பார்க்காதே!
சென்ஷி! என்னப்பா உனக்கு என்ன வேனும்!
வாங்க மின்னல்..
ரொம்ப நாள் கழிச்சு வந்தும் நம்மளை ஞாபகம் வச்சிருக்கறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு..
நாளைக்கு தலைநகருக்கு ராத்திரி கெளம்புறேன். வருகைக்கு நன்றி..
பதிவ வேகமா எழுதனதுக்கு தேங்க்ஸ்
அன்னிக்கு பேர்தான் அபி பாப்பாவ பாக்க போறதா பேச்சு.
ஆனா அன்னிய ஸ்டார் ஆஃப் த அட்ராக்ஷன் நீங்கதான். மீட்டிங்க்ல
நீங்க பேசுன பேச்சால, காயத்ரியோட கனவுல கூட பேச விடலைன்னு புகார் சொல்றாங்கன்னா பாத்துக்கங்களேன்.
ஆனா எனக்கு நீங்க டெல்லியில பேசுனத விட கம்மியா பேசுனதாத்தான் தோணுது.
தலைவா...
நீ முன்னாடி போ..
நானும் பின்னாடி வாரேன்..
தம்பி,
அந்த மேட்டர் எனக்கு ரொம்ப லேட்டாத்தான் தெரிஞ்சது.
ஆனாலும் அந்த கவலைய முத்துலட்சுமி அக்கா போக்கிட்டாங்க.
எல்லார் பேச்சுலயும் அவங்க பங்கு எடுத்துக்கிட்டாங்க.
ரஞ்சனி மேட்டர் இவ்ளோ தூரம் போயிருக்கா?!
ஸ்மைலிக்கு ரொம்ப தேங்க்ஸ் வினையூக்கி
என்னது நீங்களும் வந்திருக்கலாமா..
மொதோ நாள் உங்ககிட்ட பேசுனத பதிவுல எழுதல. எத சொன்னாலும் சிரிச்சுக்கிட்டே இருந்தா அன்னிக்கு கும்மி கலை கட்டுனாப்புல தான்.
தம்பி,
ஃபீலிங்ஸ் மேட்டர்ல எனக்கு அவ்ளோ உடன்பாடு இல்லன்னு சொல்ல முடியல. ஏன்னா அன்னிக்கு நடந்த மீட்டிங்க் முடிஞ்சப்புறம் தான் தெரிஞ்சது நாம் எந்த அளவுக்கு தமிழ்மணத்துல கட்டுண்டு கிடக்குறோம்ன்னு!
// அபி அப்பா said...
சென்ஷி! என்னப்பா உனக்கு என்ன வேனும்!//
நான் வேற என்ன கேக்கப்போறேன். காயத்ரி அக்கா கேட்ட 5 கால் கோழிதான்.
சென்ஷி,
ஹிஹி.... நாமே பேசி வைச்சமாதிரி ஆல் இந்தியா ரேடியோ வீட்டிலே நடந்த சந்திப்பை நல்லா சவுண்டா முத்து முத்தா சொல்லிட்டிங்க...
:)))
/ரஞ்சனி யாருன்னு தெரியாதா சென்ஷி?///
எனக்கே தெரியாது மக்கா?? :((
/ராம் கிட்ட ரஞ்சனி பத்தி நீங்களும் கேட்டாச்சா? அப்பாடா.. இப்பத் தான் திருப்தியா இருக்கு..//
யக்கோவ்,
ஏனிந்த கொலைவெறி???
\\அபி அப்பா said...
சென்ஷி! நல்ல பதிவு போட்ட்ய்யா! நான் தான் எப்ப பொடுவேன்ன்னு தெரியல! என்ன வழக்கம் போல ஃபிளைட் மிஸ்ஸிங். வெள்ளி கிழமை கிளம்பரேன். நமக்கௌ அங்க போனாத்தான் ஃப்ரீ! இங்க "என்ன கொடுமை சரவணா"தான்! \\
அங்கையுமா?? என்ன கொடுமை அபி அப்பா இது ?
\\சென்ஷி said...
தம்பி,
ஃபீலிங்ஸ் மேட்டர்ல எனக்கு அவ்ளோ உடன்பாடு இல்லன்னு சொல்ல முடியல. ஏன்னா அன்னிக்கு நடந்த மீட்டிங்க் முடிஞ்சப்புறம் தான் தெரிஞ்சது நாம் எந்த அளவுக்கு தமிழ்மணத்துல கட்டுண்டு கிடக்குறோம்ன்னு! \\\
ம்ஹும்...இப்ப சொல்லு....;))
சென்ஷி
உன்ன வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்ததா சொன்னாங்களே அதெல்லாம் எங்கய்யா?
//
அய்யனார் said...
சென்ஷி
உன்ன வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்ததா சொன்னாங்களே அதெல்லாம் எங்கய்யா? //
இதுவரைக்கும் யாரும் பப்ளிஷ் பண்ணல :(
நீங்க லேட்டா போட்டதால நானும் கொஞ்சம் லேட்டா பாக்குறேன் :))
காயத்ரி பத்தின என்னோட கமெண்ட்ட மட்டும் போட்டிருக்கீங்களே... உங்கள பத்தின கமெண்ட்ட போடவே இல்ல?? ;))
பதிவு சூப்பர் :))
http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html
runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money
runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money
Post a Comment