Saturday, July 28, 2007

எனக்காகவே நான்


தொடும் எல்லைகள்
தாண்டியும்
சில புள்ளிகள்
செல்கின்றன.


சில‌ கோல‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும்
புள்ளிக‌ள் சொல்கின்ற‌ன‌..
நான் ரொம்ப சௌக்கியம்.
நீ?..


புரித‌லுக்கான‌ தேட‌ல்க‌ளில்தான்
இந்த‌ தேச‌ம்
தொலைந்து போகின்ற‌து.


வரப்போகும் நாட்களுடன்
நான் வாழ‌
என‌க்கான‌ வாழ்க்கை
கிடைப்ப‌தில்லை.

ஆனாலும்,

என‌க்கான‌
என் வாழ்க்கை
இனிமேல்
எந்த‌ தேதியில் வ‌ரும்....!



சென்ஷி

11 comments:

சென்ஷி on Saturday, July 28, 2007 11:58:00 PM said...

சும்மா பொழுது போகல... அதான்

இராம் on Sunday, July 29, 2007 12:15:00 AM said...

//சும்மா பொழுது போகல... அதான்//

ஓ அப்பிடியா??

சும்மா அதிருதுல on Sunday, July 29, 2007 1:29:00 AM said...

சென்ஷி said...
சும்மா பொழுது போகல... அதான்
//

நான் வேணுனா போன் பண்ணவா தல

ரிங் அடிக்குது பாருங்க

ஆஹா மிஸ் கால்..?

நம்பரை நோட் பண்ணிக்கங்க என்னது நோ நம்பரா அதுக்கு போன் பண்ணி திட்டுங்க இது மாதிரி இனி வரபிடாது வந்தது மிஸ் கால் குடுத்து கொண்னுடுவேன்....:)


அன்புடன்

கண்மணி on Sunday, July 29, 2007 6:37:00 AM said...

//என‌க்கான‌
என் வாழ்க்கை
இனிமேல்
எந்த‌ தேதியில் வ‌ரும்....!//

இனி எந்தத் தேதியிலும்
வரலாம்
எனக் காத்திருக்கிறேன்

அப்படின்னு முடிச்சிருந்தா அதுதான் வாழ்வின் மீதான நம்பிக்கை.

கிரேட் சென்ஷி.ரொம்ப நல்ல கருத்து ஆனா அசால்ட்டா சொல்லிட்டீங்க.[சும்மா காதல் பிரிவுன்னு கதைவிடாம]

முத்துலெட்சுமி on Sunday, July 29, 2007 11:09:00 AM said...

பின்னூட்டம் போடற கடமை இருக்க..என்ன இது பதிவெல்லாம் போட்டுகிட்டு..பொழுதுபோகலன்னா இதே புள்ளியை வச்சு நான் எழுதின கவிதைக்கு பின்னூட்டம் போட வேண்டியது தானே :)

கோபிநாத் on Sunday, July 29, 2007 12:58:00 PM said...

\\ஆனாலும்,

என‌க்கான‌
என் வாழ்க்கை
இனிமேல்
எந்த‌ தேதியில் வ‌ரும்....!\\

எல...வண்டியைவிட்டு கீழா இறங்கு...உனக்கான தேதியை
சித்தஆப்பு குசும்பன் சொல்லுவாறு ;)

அபி அப்பா on Sunday, July 29, 2007 4:53:00 PM said...

இப்பதான சென்ஷி தம்பி என்கிட்ட நல்லா பேசிகிட்டு இருந்த!

ஜெஸிலா on Sunday, July 29, 2007 5:03:00 PM said...

என்ன சென்ஷி பதிவெல்லாம் போட்டு கலக்குறாப்புல இருக்கு. தொடருங்க..

முத்துலெட்சுமி on Sunday, July 29, 2007 9:46:00 PM said...

உங்களுக்கான நேரம் காலம் எல்லாம் வந்து தானே துபாய் போயிருக்கீங்க..
எல்லாம் நல்ல காலம்தான்
ஜமாய்ங்க.

Anonymous said...

runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money

Anonymous said...

runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com