Sunday, July 29, 2007

கும்மி பசங்க நாங்க‌


அபி அப்பா என்னை அழைத்துக்கொண்டு முதன் முதலில் வெளியே செல்கிறார். தல, செந்தழல் ரவியின் பதிவு காரணமாக ஒரு அதீத பயம் அபி அப்பாவிடம் ஒட்டிக்கொண்டது. எதற்கும் இருக்கட்டுமென்று அவர் ஒரு பேப்பர் வெயிட்டை லேப்டாப் பேக்கில் போட்டு என் தோளில் மாட்டி விட்டு, மேலும் மனம் தாங்காமல் தலையணைக்கு வசதியாய் இருந்த ஒரு புத்தகத்தையும் அதில் திணிக்க முயற்சித்தார். நான் பாரம் தாங்க முடியாமல் தவிப்பதை பார்த்துவிட்டு அதை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டு சிம்ரன் ஆப்பக்கடை வாசலுக்கு வந்தோம். ஆனால் அதற்கு எதிரில் பூங்கா இருந்தது அப்போது எனக்கு தெரியாது.

சென்ஷி பாத்துக்க இதுதான் கராமா பூங்கா என்று காட்டி விட்டு, (என்ன கொடுமைங்க அது... அடிக்கற வெயில்ல ஏண்டா பூங்காவுக்குள்ள எல்லாம் வந்தோம்ன்னு எனக்கு இருந்தது) அருகில் இருந்த பெஞ்சில் அமரவைத்து என் தோளில் இருந்த பையை கழட்டி வசதியாக என் மடியில் வைத்து என்னை பாதுகாத்தார். அவ்வளவு பாதுகாத்தும் தம்பி வந்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. பூங்காவில் என்னை காப்பாற்ற ஒருவர் இருக்கின்றார் என்று...

தம்பியுடன் அய்யனார், தனியே குசும்பன், பினாத்தலாருடன் கோபி, பிறகு குடும்பத்துடன் லொடுக்கும், ஜெஸிலாவும் வந்தனர். சூடான் புலி கலக்கலாக வந்தமர்ந்தார்.

அனைவராலும் சென்ஷியை எளிதாய் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டத்ற்கு என் கண்ணாடி மட்டும் காரணம் அல்ல என்று நினைக்கின்றேன்.

தியாகு என்ற பெயரில் வந்த அனானி அசப்பில் ராஜாவனஜ் போலவே இருக்க, சற்று அதிகமாகவே அந்த அனானியை சந்தேகப்பட்டேன்.

வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்து வராத இருவர் கிழுமாத்தூராரும், லியோ சாரும்..
மின்னலும், லியோ சாரும் செல்லிடபேசியில் வராத காரணம் கூறி சந்திப்பை வாழ்த்தினர்.

டெல்லியிலிருந்து முத்து லட்சுமி அக்காவும் செல்பேசியில் அவர் இதுவரை பேசாத மற்றவர்களிடம் பேசினார்.

அபி அப்பா ஏற்பாடு செய்த கூட்டமாயிற்றே என்று ஆசையுடன் சென்றால் அங்கு எனக்கு வருத்தமே மிஞ்சியது. அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லி அசத்திய அய்யனார், அய்யனாரை கலாய்ப்பதே கடமை என்று அமர்ந்திருந்த சித்த ஆப்பு குசும்பன் (இவர் சொன்ன‌ ஒரு மேட்டர் கலக்கல்.. அய்யனார் பதிவுக்கு போனா முழங்கை நீளத்துக்கு தலைப்பை வச்சுருக்காரு. இந்த தலைப்ப வச்சு அபி அப்பா ஒரு பதிவே போட்டிருப்பாரு... ரசித்து மகிழ்ந்தனர் பதிவர்கள்), ஆளுக்கொரு கேள்வியை அள்ளி வீசிய நாகை சிவா, இவரா இப்படி என்ற வகையில் அமைதி காத்த தம்பி, எப்போதும் போல என்னைப்போலவே அனைத்தையும் ரசித்தபடி எந்த வம்பு தும்புக்கும் போகாத கோபி, எதிர்பாராத அதிர்ச்சியாய் சுல்தான் சார், பேர கேட்டவுடன் எனக்கு அதிர வைத்த பினாத்தல், ஏதாவதொரு மேட்டருக்கு கலக்கலாய் பதில் கொடுத்த லொடுக்கு, இதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என்ற வகையில் அமர்ந்திருந்த ஜெஸிலா அக்கா, இவர்கள் அனைவரையும் விட வெயில் தெரியாமல் விளையாடித்திரிந்த அந்த மழலைகள் என்னை கவர்ந்தனர்.

என்ன நடக்கிறதென்றே தெரிய தேவையில்லாமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்டம் போட வைத்த பெற்றோர்களுக்கு நன்றிகள்.

சென்ஷிக்கு பெய‌ர் கார‌ண‌ம் 201வ‌து முறையாக‌ ஜெஸிலா அக்காவால் மீண்டும் ஒருமுறை கேட்க‌ப்ப‌ட்ட‌து. ஜாதி, மதம் தெரியாம‌ல் இருக்க‌ நான் குசும்ப‌ன், லொடுக்கு ம‌ற்றும் விடாது க‌ருப்பு, விட்ட‌து சிக‌ப்பு என்ற‌ பெய‌ரில் எழுதியிருக்கலாம் போல.. (எல்லோரும் என்னை ம‌ன்னிச்சுடுங்க‌ப்பா). என் ந‌ண்ப‌ன் பெய‌ரை இணைத்த‌து அவ‌னுக்கு நான் செய்த‌ க‌ய‌மை என்று லேட்டாக‌ புரிந்த‌து. (பின்ன‌ என்னை திட்ட‌ற‌வ‌ங்க‌ அவ‌ன் பேர்ல‌ பாதியையும் தானே திட்டுறாங்க‌.. அவ‌ன் பெய‌ர் செந்தில்)

என‌க்கு டெல்லியில் தெரிந்த‌ சிற‌ந்த‌ ப‌திவராக‌ நான் க‌ருதிய‌ ம‌ங்கை அக்கா, முத்து ல‌ட்சுமி அக்காவை ப‌ற்றி பேசிய‌து த‌வ‌றென்ப‌து மிக‌வும் லேட்ட்ட்டாக‌ புரிந்த‌து. (நாம‌ சொல்லி தெரிய‌வைக்க‌ அவ‌ங்க‌ என்ன‌ யாருக்கும் தெரியாத‌வ‌ங்க‌ளா.. என்ன‌..)

மாலனை சந்திக்க முடியாத காரணத்திற்கு காரணம் சத்தியமாய் நானில்லை என்பதை சொன்னபோது எத்தனை பேர் நம்பினார்கள் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை.
ஆனாலும் தொண்டையில் சிக்கிய முள்ளாக‌ (டெய்லி மீன் சாப்ட்டா இப்ப‌டித்தான்) ஜெஸிலா அக்காவிடம் உங்க‌ள் ப‌திவுக‌ள் ர‌சிக்கும் ப‌டி ஏன் இல்லை என்று உண்மையை கேட்டுத் தொலைத்து விட்டேன். அத‌ற்கு அவ‌ர்க‌ள் நான் உங்க‌ள் ப‌திவு ப‌க்க‌மே வ‌ந்த‌து இல்லை என்று கூறி ப‌ழி வாங்கி விட்டார்க‌ள்.

உண்மைத்தமிழன் இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை என்ற யாரோவின் கேள்விக்கு (அது சத்தியமா நானில்லப்பா..) ஆமாம் ஏன் என்று குரூப் கோரஸாவும் தனியாகவும் கேட்டு அவருக்கு மரியாதை செய்தனர். விரைவில் உண்மைத்தமிழனை வைத்து துபாயில் ஒரு சந்திப்பு அபி அப்பா செலவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்று இங்கு ஏதாவதொரு அனானி குரல் கொடுக்கும் முன்பே நான் கொடுத்து விடுகிறேன். அவருக்கு இங்கு அத்தனை ரசிகர்கள்.

பாலபாரதி போலியா என்ற கேள்வி யார் எழுப்பியது என்று யோசித்தும் ஞாபகம் வரவில்லை. நானே வழக்கம் போல தலைக்கு ஆதரவாக பாகச உறுப்பினர் குசும்பனை கூட வைத்துக்கொண்டு அந்த குரலுக்கு பெரிய குரலாக எதிர்ப்பு தெரிவித்தேன்.

நான் வழக்கத்தை விட குறைவாக பேசியதற்கே எல்லோரும் டெல்லியில எல்லோருமே இப்படித்தான் நான்ஸ்டாப்பா பேசுவீங்களா என்று அலுத்துக்கொண்டார்கள் (அக்கா இல்லாத குறை..! நானே அதிகம்ன்னா.. அப்புறம் முத்துக்கா பேசுனா என்ன சொல்லுவீங்க..!)

பினாத்தலாருக்கு நான் எப்போதோ போட்ட பின்னூட்டத்திற்கு பதில் ஏன் போடவில்லை என்று அங்கு கேட்டு தெரிந்து கொண்டேன் (அவருக்கு எவ்வளவோ ஞாபகப்படுத்தியும் அந்த பின்னூட்டத்தை அவருக்கு ஞாபகம் கொண்டு வர முடியவில்லை. அவரைப்பற்றி நான் படித்த அத்தனை கிசுகிசுக்களையும் ஞாபகம் வைத்திருந்ததை எல்லோரும் ரசித்தார்களா என்று தெரியவில்லை. (ரொம்ப படுத்திட்டேனோ...)

அபி அப்பா பதிவை படிக்காமல் பின்னூட்டம் மட்டும் போடுவதை எல்லோரும் குறையாக பார்க்க, எனக்கு சில பதிவ விட பின்னூட்டமே தேவலாம் போல இருந்த காமெடிய நான் சொல்லல.

அன்புடன் பாலா, வரவணையான், சுகுணா திவாகர், இம்சை ரவி, இட்லி வடை அனைவரும் ஒரு சில சதுரங்களில் (கட்டம் பழசாயிடுச்சுப்பா) நினைவில் கொண்டு வரப்பட்டனர்.
லொடுக்கு என்னிடமே நாந்தான் சென்ஷி என்று கூறி அதிர வைத்தார். அதனாலேயே அவரையும் குசும்பன் அருகில் அமர வைத்துவிட்டு நான் தனியே அமர்ந்து கொண்டேன்.

தமிழ்மண நட்சத்திர தேர்வு பற்றி நான் கேட்டதற்கு சிலர் ஏகோபித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்ததில் நான் மறந்து போனது அவர்கள் அனைவரும் நட்சத்திரமாகயிருந்தவர்கள் என்ப‌தை.


கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது அபி அப்பா என்பதால் அவருக்கு அவசியமே இல்லாமல் அவருக்கு வலது கை என தம்பியால் புகழப்பட்ட குசும்பனே அவருடைய அத்தனை வேலைகளையும் சுயமாக செய்து கொண்டிருந்தார் (அடேங்கப்பா... என்ன பணிவுடா உன் முகத்துல..).

சூடான் புலியுடன் என் முதல் சந்திப்பு என்பதால் தனியே இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசக் கிடைத்தன. (போயிட்டு வர்றேன்.)

ஜெஸிலா அக்காவின் கணவருடன் நான் பேசி விட்டு வந்தபிறகு வலுக்கட்டாயமாக என்னுடன் கால் மணி நேரம் செலவழித்தற்கு அவருக்கு நன்றி சொல்ல சொன்ன கோபி, தம்பி, லொடுக்கு, குசும்பன் பண்பாட்டை காப்பாற்றினர். (அதில் உள்குத்து எனக்கு தெரியவில்லை. காரணம் கண்ணாடியை சுத்தப்படுத்த கழட்டியிருந்தேன்)


கூட்டத்தில் அதிகம் ரசித்து பேசியவர்கள் அய்யனாரும், பினாத்தலாரும் தான்..அதிகமாய் கொசுவர்த்தி புகை வந்ததால் எனக்கு லேசாக தலைவலித்ததை நான் யாரிடமும் சொல்லவில்லை.

ஆசிப் மீரானின் கவிதையை சிலாகித்து நான் கூற ஆரம்பிக்க, சரியாய் தப்பாக சொல்லி முடித்தார் பினாத்தலார். விகடன் ஆசிரியர் சீனிவாசனால் தலையங்கத்தில் யார் எழுதியது என்று கூறாமல் காதலர் தினத்தன்று போடப்பட்ட அந்த கவிதை...

நீ..
வா..
தா..
சீ..
போ..!

ஆனாலும் பினாத்தலார் விடாமல் நானும் கவிமடத்துல இருக்கேன் என்று கூற, அவருடைய புகை பற்றி எழுதிய வெண்பாவையும் பாராட்டியாச்சு. எனக்கு பிடிச்ச வெண்பா அது..

கும்மிக்கு ஆதரவாகவும் பேச முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மென்று முழுங்கி பிடிச்சிருந்தா செஞ்சிட்டு போங்கடான்னு சொல்லி அடுத்த கவிதை சொல்ல ஆரம்பிக்கும் முன் அய்யனாரிடம் அடுத்த கேள்வியை தூக்கி அடித்தோம். தமிழச்சி கூறியது சரியா.. தவறா.. விடாமல் அத்தனை கேள்விக்கும் பதிலை எனக்கு புரியாத அவரது அடுத்த கவிதையில் சொல்வார் என்று நம்புகிறேன்.


கும்மி அடிக்க கூடிய கூட்டத்தில் கருத்தை தேடுவது சரியில்லாத காரணத்தினால் நான் யாரிடமும் கருத்து கேட்கவில்லை.

சரவணபவனில் ஆளாளுக்கு சாப்பிட ஆர்டர் செய்து விட்டு அபி அப்பாவை பாதுகாத்து வைத்திருந்தனர். அவரும் பணம் கொடுத்துவிட்டு போட்டோக்களுக்கு சிரித்துவிட்டு வந்தார்.

எல்லோரும் கிளம்பும் முன்பு ஜெஸிலா அக்காவிடம் நான் ரொம்ப நல்லவங்க என்று சொன்னதை எந்தளவுக்கு நம்பினார் என்பதில் எனக்கு எந்த அக்கறையுமில்லை.

சுல்தான் வருவதை அறிந்திருந்தால் தனியாக அவரிடம் பேச நேரம் ஒதுக்கியிருப்பேன். இந்த கும்மி கூட்டத்தில் அவர் மட்டும் பாவமாக அமர்ந்திருந்தார்.

குழந்தைகள் யாரையும் நினைவில் கொள்ளாமல் அபி அப்பாவின் போட்டோவை சரியாக காட்டி அபி அப்பா என்று மகிசழ்ச்சி பொங்க சிரித்தது அவரை பற்றி நல்லவிதமாக சொல்லி அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் மீது மரியாதை வந்தது. (அப்படித்தானே...!)

பொழுது போகும் என்று வந்தால் என் மீதமிருந்த எல்லா நேரத்தையும் அவர்களுடன் செலவழிக்க வைத்த பெருமை அபி அப்பாவியையே சாரட்டும். (அவர் அந்தளவுக்கு நல்லவருங்க...)

எல்லோரும் கலாய்க்க வேண்டும், கலாய்க்கப்பட வேண்டும் இது கும்மி கூட்டத்தினரின் எழுதா சட்டம். இதில் வந்து செல்வோர் மட்டும் விதி விலக்கா என்ன..

அடுத்த கும்மி ஆசிப் அண்ணாச்சி வந்தப்புறம் என்று சொன்ன அபி அப்பாவை எதிர்த்து ஏன் தினமும் பிரியாணி சாப்பிடும் போராட்டம் ஆரம்பிக்க கூடாது என்று இப்போது யோசிக்கின்றேன். (டீயிலேந்து தாவியாச்சு..) அவ்வளவு ஜாலியாக போனது எனக்கு..மத்தவங்களுக்கு..

அத்தப்பத்தி எனக்கென்ன தாவூ தீருது..

எப்போதும் போல...

என்றும் அன்புடன்...

ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

(ரிப்பீட்டே.... இது சும்மா சைடு எஃபெக்ட்)

7 comments:

சென்ஷி on Sunday, July 29, 2007 11:41:00 PM said...

பின்னூட்ட கும்மித்தனம்

நாமக்கல் சிபி on Sunday, July 29, 2007 11:53:00 PM said...

:))

பா.க.ச பதிவு ஒண்ணு போட்டிருக்கோம்!

குமுகவுல!

http://kumukazhagam.blogspot.com/2007/07/blog-post_29.html

சும்மா அதிருதுல on Monday, July 30, 2007 2:44:00 AM said...

பினாத்தலாருக்கு நான் எப்போதோ போட்ட பின்னூட்டத்திற்கு பதில் ஏன் போடவில்லை என்று அங்கு கேட்டு தெரிந்து கொண்டேன் (அவருக்கு எவ்வளவோ ஞாபகப்படுத்தியும் அந்த பின்னூட்டத்தை அவருக்கு ஞாபகம் கொண்டு வர முடியவில்லை
//

யோவ் போன பதிவுக்கு மருவாதையா பதில் போடு....

சும்மா அதிருதுல on Monday, July 30, 2007 2:57:00 AM said...

சென்ஷி said...
பின்னூட்ட கும்மித்தனம்

jaseela said...

nice feedback senshe

லொடுக்கு on Monday, July 30, 2007 10:06:00 AM said...

//அனைவராலும் சென்ஷியை எளிதாய் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டத்ற்கு என் கண்ணாடி மட்டும் காரணம் அல்ல என்று நினைக்கின்றேன்.//

குசும்பனால் அலைக்கழிக்கப்பட்ட பரிதாபம் உங்கள் முகத்தில் வழிந்தது. அத வச்சுத்தான் நாங்க கண்டுபுடிச்சோம்.

//ஜெஸிலா அக்காவிடம் உங்க‌ள் ப‌திவுக‌ள் ர‌சிக்கும் ப‌டி ஏன் இல்லை என்று உண்மையை கேட்டுத் தொலைத்து விட்டேன்//

இருந்தாலும் நீங்க ரொம்ப கள்ளம் கபடமற்றவர் :)

முத்துலெட்சுமி on Monday, July 30, 2007 11:41:00 AM said...

கள்ளம் கபடமற்ற சென்ஷீ...
பேசிக்கிட்டே இருந்தா கேட்கிறவங்களுக்கு அலுப்பா இருக்குமா
அடப்பாவமே...அப்ப சும்மா ஒருத்தரை ஒருத்தர் பாத்து கிட்டு இருக்கவா சந்திப்பு பேசத்தானே ப்பா...
நீங்க யாரு என்ன பண்னரீங்க..
என்ன மாதிரி பதிவு படிப்பீங்க..யாரையெல்லாம் படிப்பீங்க..
பேசாம அப்பறம் எப்படி தெரிஞ்சிக்கறதாம் மத்தவங்களைப்பத்தி.

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com