Tuesday, July 31, 2007

நிறந்தரும் நரகம்


மறதிகள் என்னும்
மாத்திரையில்
நம் ஞாபகங்கள்
பத்திரமாயுள்ளது.
ஒரு காதல் சிலந்தியின்
வலையில் நான்
சிக்கிக்கொண்டேன்
அறுத்தெறியும் ஆசையைவிட
‌அதன் உணவுக்கு
இரையாவ‌து எத்தனை ச‌ந்தோஷ‌ம்..


சில நினைவுகள்
தடுமாறும்போது
என்னை ப‌த்திர‌ப்ப‌டுத்தும்
ஒரு சொல்
காத‌ல்.
ம‌ற‌தியை விட‌ கொடிது
உன்னை
நினைத்திருத்த‌ல்...


என் மன காடுகளில் மட்டும்
எந்நாளும் இலையுதிர்காலம்..
நினைவு பூக்கள் உதிர்ந்தும் கூட
காம்புகள் ஈரம் விட மறுக்கிறது.
காதல் சோகம் ஆற்ற
இன்னொருத்தியை
காதலித்தால் - அவள்..!
நீ - ஆகிவிடுவாளா?


சில உண்மைகள்
நிலைக்கும் நரகமாகும்...
கலைந்த காதலும்
சேர்ந்து..!
என் தவத்தின் எல்லை
வானம் தாண்டி நீளட்டும்.
அவள் மீண்டும் வருவாளானால்..

கருப்பு வெள்ளை
கனவுகள்
எனக்கு
வண்ணமாகிப்
போனது
காதலாலே.. காதலியாலே..!

சென்ஷி


4 comments:

முத்துலெட்சுமி on Tuesday, July 31, 2007 10:39:00 PM said...

நான் தான்முதல்.(அப்பாடா நானும் ஒருநாள் போட்டாச்சு முதல் பின்னூட்டம்)

முத்துலெட்சுமி on Tuesday, July 31, 2007 10:43:00 PM said...

நிலைக்கும் நரகம் ..//

இரையாவது சந்தோஷம்//

ஆகா ஒரே உருக்கமா ஆரம்பிச்சு
சோகக்கவிதை கடைசியில்
வண்ணமாகிப்போனதுன்னு சந்தோஷ
மா முடிச்சிருக்கீங்க..

சும்மா அதிருதுல on Wednesday, August 01, 2007 1:41:00 AM said...

பழைய பதிவுக்கு பின்னுட்டத்துக்கு பதில் போடவும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும்

தூங்க முடியாது

கோபிநாத் on Wednesday, August 01, 2007 5:56:00 PM said...

\\என் மன காடுகளில் மட்டும்
எந்நாளும் இலையுதிர்காலம்..
நினைவு பூக்கள் உதிர்ந்தும் கூட
காம்புகள் ஈரம் விட மறுக்கிறது.
காதல் சோகம் ஆற்ற
இன்னொருத்தியை
காதலித்தால் - அவள்..!
நீ - ஆகிவிடுவாளா? \\


எல என்ன ஆச்சு? பழைய டைரியை எடுத்து பார்த்தியாக்கும்.

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com