
நான் மறக்க நினைக்குற விஷயங்களை எல்லாம் இப்படி பட்டவர்த்தனம் பண்ணனுமான்னு ரொம்ப யோசிச்சதுண்டு. ஆனா சமயம் தெரியாம பெனாத்தலார் நேரா வைஃபாலஜி ஆரம்பிப்பார்ன்னு நான் யோசிக்கவே இல்லை. என்னதான் ரங்கமணிகளுக்கு தேவைப்படுற விஷயமா இருந்தாலும், எல்லாத்துக்கும் ஆரம்பம்ன்னு ஒண்ணு இருக்கணும் இல்லியா!
யாருமே பொறந்ததும் நேரா காலேஜுக்கு போயிடறதில்லையே. படிப்படியா பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி முடிச்சப்புறம்தானே காலேஜையே எட்டிப்பாக்குறாங்க. அதே மாதிரிதான் எதுக்கும் ஒரு அடித்தளம் இருக்கணும். காதல்ல பசங்க ஏமாற்றது, ஏமாத்தறது எத்தனை பேருக்கு தெரியும்?
மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காதவன் கூட காதல் நிழல்ல ஒதுங்கி கதகதப்பாவான்.பள்ளியையே தாண்டாதவன் கூட காதல தாண்டி போக பயப்படுவான். காலேஜை கட் பண்ணி சினிமா போறவன் கூட காதலிய நினைக்காம படம் பார்க்க மாட்டான்.
காதல்ங்கறது எல்லா உயிர்லயும் இருக்குன்னு சொல்ற அத்தன பேருமே தன்னோட உயிரை விட பெருசா காதல பார்த்திருப்பாங்க.
காதல் இந்த சின்ன வார்த்தைக்குள்ள சிக்கி சின்னாபின்னமாகி செத்துப்போனவனும் இருக்கான். அலட்சியமா சிரிச்சுட்டு ஒதுங்கிபோனவனும் இருக்கான். ஆனா, யார் வாழ்க்கையிலுமே காதல் குறுக்க வராம இருந்ததில்லை.
குருவணக்கம்
காதலுக்கு கடவுள் யாருன்னு கேட்டா எல்லோருமே மன்மதனை சொல்வாங்க. காதலுக்கு குரு யாருன்னு கேட்டா நான் கண்டிப்பா நம்ம பிரண்ட்ஸைத்தான் சொல்வேன்.
என்னைப் பொறுத்த வரைக்கும் உலகத்துலேயே கஷ்டமான விஷயம் எதுன்னு கேட்டா காதலிக்கறதுன்னு சொல்வேன். ஆனா, அதைவிட ரொம்ப கஷ்டம் காதலிக்கறவனுக்கு பிரண்டாயிருக்கறதுதான்.
தமிழ் சினிமாவுல காதல்ல தோத்தவனுங்க, தோத்துப்போய் செத்துப்போனவங்க, ஜெயிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க இப்படி எல்லோரோட கதையும் எடுக்கறாங்க. ஆனா ரெண்டு வீட்டு பகையையும் சம்பாதிச்சுக்கிட்டு லவ் பண்றவங்களோட இம்சை + தொல்லையையும் தாங்கிகிட்டு அவங்களுக்கு ஹெல்ப் பண்றவங்களை யாராச்சும் நினைச்சுப்பார்த்திருக்கீங்களா.. என்னைக் கேட்டா அவங்கதான் ரியல் ஹீரோஸ்ன்னு சொல்வேன். இந்த விஷயம் தெரிஞ்சோ தெரியாமலோ விஜயகாந்தோட பழைய படத்துல லவ்வர்ஸை சேர்த்து வைக்கிறதுதான் முக்கியமான வேலையா இருக்கும். இப்ப இருக்கற விஜய்ல ஆரம்பிச்சு எல்லோருமே அவங்க குரூப்ல யாராச்சும் லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சா அவங்களை சேத்துவச்சிட்டுத்தான் வில்லனை அடிக்கறது, ஹீரோயின லவ்வுறதுன்னு அடுத்த கட்ட வேலைகளை செய்வாங்க.
எதுக்கு இவனுங்க இப்படி காட்டுத்தனமா ஹெல்ப் பண்றாங்கன்னு பார்த்தா அதுக்குள்ள அடங்கியிருக்கற விஷயமே வேற.. பிரண்டு லவ் பண்ற பொண்ணு இவனுக்கு தங்கச்சி ஆயிடுறதால அவளோட மத்த எல்லா பிரண்டுஸும் இவனுக்கு கடலை போட உதவுவாங்க அப்படிங்கற நல்லெண்ணம்தான்.
சாதாரணமா எவனுமே ஒருத்தியை லவ் பண்ணித்தொலைக்கிறான்னா அதை அவளைத்தவிர மீதி உலகத்துல எல்லோருக்கும் சொல்லிட்டு அலைவானுங்க. பொண்ணோட அண்ணன்னு தெரியாம அவங்கிட்ட போய் நான் இந்த பொண்ணத்தான் லவ் பண்றேன்னு சொல்லி அடிபட்டவனை கூட நான் பார்த்திருக்கேன். இப்படி உழைக்குற எறும்பு, பறக்கற தூசி, ஓடுற தண்ணின்னு எல்லாத்துக்கிட்டயும் நான் அவளை லவ் பண்றேன்னு சொல்லி சொல்லி அலும்பு பண்ணுவானுங்க.
ஆனா டேய் அவகிட்ட போய் சொல்லிட்டு வாடான்னு தைரியம் சொல்லி அனுப்பி வச்சாக்கூட அங்க போய் "தூங்கறதுக்கு எவ்வளவு நேரம் முன்னாடி வரைக்கும் கண்விழிக்கணும்"ன்னு வழிஞ்சிட்டு திரும்பி வருவானுங்க. அட அது கூட பரவாயில்ல போல இருக்கும்; நாம ஏண்டா லவ்வ சொல்லலன்னு அவன்கிட்ட கேக்குறப்போ! அவன் சொல்ற பதில கேட்டா நாம செத்துடணும்னு தோணும். "முடியாதுன்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுடா"ன்னு ஒரு ஃபீலிங்க் உடுவானுங்க பாருங்க. 'இதயம்' படத்துல வாங்குன காசுக்கு முரளி கூட அப்படி ஃபீல் ஆயிருக்க மாட்டாரு. இவனுங்க அப்படியே உருகி ஊத்தி நெஞ்ச ஈரம் பண்ணிடுவானுங்க. அப்படியே ர்ரப்புன்னு அறையனும்னு தோணும். வேலை மெனக்கெட்டு இவனுங்க லவ்வுக்காக வந்து பொண்ணுக்காக நாம தேவுடு காப்போம். இவரு சைட்ட பாத்துக்கிட்டு அப்படியே சேஃபா இருப்பாராம். நமக்கோ ஆளே இல்லாத கடையில டீ ஆத்துற கதையாத்தான் தெரியும்.
இவனுங்க தொல்ல தாங்க முடியாம சரி ஒழிஞ்சு போகட்டும்ன்னு நாமளே போய் சொல்லிடலாம்ன்னு பார்த்தா பொண்ணுங்க ஏதோ சுயம்வரத்துல மாப்ளைய பாக்கப்போறது மாதிரி ஒரு கும்பலா வந்துக்கிட்டு, " ஏய்! இவந்தாண்டி உன்னை பாக்குறான்.. என்னடி இவன் இன்னிக்கு கேவலமா டிரெஸ் செஞ்சிருக்கான்'னு நம்மள நக்கல் சொல்லிக்கிட்டு போற போக்குல ஓரக்கண்ணால பார்த்துட்டு போவாங்க. தனியா வந்தாலாவது 'என்ன வேணும்னா திட்டிட்டு போ, வீட்ல போய் மாத்திரம் வத்தி வச்சிடாதேம்மா'ன்னு கெஞ்சலாம். கூடவே ஒரு வானரத்த கூட்டிட்டு வந்தா என்ன செய்ய முடியும். அந்த வானரம் மாத்திரம் பர்மனன்டா அவ கூடவே சுத்த ஆரம்பிச்சப்புறம், நம்ம ஹீரோ உடனே ஒரு புது வலைய விரிப்பாரு. "டேய்! எனக்கென்னமோ அந்த பொண்ணு (வானரம்) உன்னை பாக்குது போல இருக்குடா"ன்னு... இதுக்கு பேருதான் லின்ங் கொடுக்கறது...
ஊருல உள்ளவன் லவ்வுற கதையெல்லாம் வாயத்தொறந்து கேட்டவனுக்கு, தன்னைக்கூட ஒரு பொண்ணு லவ்வு பண்ணுறான்னு(!) தெரியறப்போ முதல்ல உள்ளுக்குள்ள வேர்த்துக்கொட்டி உடனே குளிர் ஜூரம் வந்துடும். ஆனா என்னமோ அசினும் திரிஷாவும் அய்யாவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கறா மாதிரி "சேச்சே! அவளா, என்னையா.. சான்ஸே இல்லை" அப்படிம்பான். உண்மை அதுதான்னாலும் இதுல இருக்கற இன்னொரு உண்மை என்னன்னு பார்த்தா, பொண்ணு தன்னை நிமிந்து கூட பாக்கலைன்னா விழுந்து விழுந்து அவ பின்னாடி சுத்தறது, அதுவே ஆட்டோமேடிக்கா பார்ட்டி மாட்டிக்கிச்சுன்னு தெரிஞ்சப்புறம் அப்படியே ரிவர்ஸ் வாங்குவானுங்க.
ஏதோ ஒரு காமெடில என்னெத்த கன்னைய்யா சொல்றா மாதிரி "வரும், ஆனா வராது"ம்பானுங்க. நான் அறிஞ்சவரைக்கும் பொண்ணுங்களும் இந்த மாதிரி கேஸ்களை ரொம்ப லைக் பண்ணுதுங்க. ஆனா இதோட பின்விளைவுகள் பத்தி (அதாவது லவ் பண்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கற ராசி உங்ககிட்ட இருந்ததுன்னா) வைஃபாலஜியில பெனாத்தலார் பாடம் கொடுப்பார். உன் மூஞ்சிக்கெல்லாம் இந்த பிகரே அதிகம்ன்னு பிரண்டு அட்வைஸ் மழை பொழிஞ்சு அருள் தருவாரு. அதுக்கப்புறம் நடக்கற கூத்துக்கள்.... அடடா!!
தொடருவேன்........




11 comments:
வேற வழியில்லை டாட்டராலஜி நான் ஆரம்பிச்சாதான் சரியாவரு:-))
மாப்ள.. இன்னும் சப்ஜட்டுக்குள்ள்ளேயே நீ போகலையோன்னு தோனுது. சீக்கரம் மேட்டரை ஆரம்பீப்பா..! அட்வைஸ் போதும். மேலும் காதலிக்கிறவர்களை கோயிந்துகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றிக்கொள். இல்லையெனில் கிடேசன் பார்க்கில் காதலர்களை திரட்டி வந்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவேன்.
வாங்க அபி அப்பா, அப்ப நீங்க இன்னும் ஆரம்பிக்கலையா? ஆனா என்னைக்கேட்டா உங்களை விட அபி பாப்பா, ஃபாதராலஜி நல்லா எழுதுவாங்கன்னு நினைக்குறேன் :))
யெஸ்.பாலபாரதி ♠ said...
மாப்ள.. இன்னும் சப்ஜட்டுக்குள்ள்ளேயே நீ போகலையோன்னு தோனுது. சீக்கரம் மேட்டரை ஆரம்பீப்பா..! அட்வைஸ் போதும். மேலும் காதலிக்கிறவர்களை கோயிந்துகளாக சித்தரிக்கும் போக்கை மாற்றிக்கொள். இல்லையெனில் கிடேசன் பார்க்கில் காதலர்களை திரட்டி வந்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவேன்.
தல நீயா இப்படி! உன் பேர முதல்ல எழுதித்தானே நான் மேட்டரே ஆரம்பிச்சு இருக்கேன். காதலிக்கற எல்லோருமே முதல்ல ஒழுங்காத்தான் இருக்கானுங்க.. அப்புறமாத்தான் கோயிந்தா மாறிடுறாங்க :))
அபி அப்பா.. யாரு சரி ஆவாங்க?
பாலபாரதி.. காதலிக்கறவன் கோயிந்து இல்லாம வேற யாரு? எங்கேயோ போற மாரியாத்தா, என்மேலே வந்து ஏறாத்தான்னு சொல்றதுதானே காதலே?
சென்ஷி.. //அதைவிட ரொம்ப கஷ்டம் காதலிக்கறவனுக்கு பிரண்டாயிருக்கறதுதான்// ரொம்ப அனுபவிச்சிருக்கேன்பா இந்த அவஸ்தைய!
மாப்பி உன் உடம்புக்குள்ள இம்புட்டு சோகமா! ;))
\\காதல் இந்த சின்ன வார்த்தைக்குள்ள சிக்கி சின்னாபின்னமாகி செத்துப்போனவனும் இருக்கான்\\
இருக்கான் அவனை எனக்கு தெரியும் :))
சும்மா ஜெகஞ்ஜோதியா ஆரம்பிச்சிருக்கீங்களே.. ஆமா ஆரம்பத்துல நண்பன் ஸ்தானத்துல இருந்து கஷ்டப்ட்டா மாதிரியும்..அடுத்து கொஞ்ச் தூரத்துல வாசிச்சா காதலிச்சு கஷ்டப்பட்டா மாதிரியும் தொணிக்குதே ! அது ஏன்?
ரொம்ப அனுபவப்பட்டு/நொந்து எழுதியிருக்கீங்க போல? :-))))
இத எப்ப தொடருவீங்க???????:))
me the 10 :):)
sir super sir...
yenakum oru kathali eruka....
aval yenudaya thevathai....
oru naal nanum eppadi yeluthuven....
Post a Comment