Wednesday, December 12, 2007

ஐ மிஸ் யூ?


அது எப்படின்னு தெரியல. பத்மனை பாத்ததுமே பத்மினிக்கு புடிச்சுப்போச்சு. பத்மனுக்கும் அப்படித்தான்னாலும் மனசுக்குள்ள இன்னும் அவளை லவ் பண்றானான்னு தீர்மானிக்கல. காரணம்...!


எதேச்சையா நடந்த செயல்கள்ன்னு சொன்னாலும் பத்மினி மட்டும் தீர்மானமா இருந்தா. எதிர் வீட்ல குடிபோனது, ஒரே பையன்.. ஒரே பொண்ணு, பொருத்தமான பேரு, அழகான ஜோடி... மேட் ஃபார் ஈச் அதர்ங்கற மாதிரி...

ஆனா பத்மனுக்கு இதுதான் பிரசினை. பொருத்தமான ஜோடிங்கறதுல இல்ல. அத நான் இங்கிலீஷ்ல சொன்னேன்ல அதான். பையனுக்கு வதக்கிப்போட்டாலும் (எத்தனை நாள்தான் சுட்டுப்போடுறது) இங்கிலீஷ் வராது. இவனுக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்த ஆங்கிலம். அதனாலேயே கற்றது தமிழ் படத்த இன்ட்ரஸ்டிங்கா... சாரி... அய்யோ மன்னிச்சுக்குங்க.. விருப்பத்தோட பார்த்தான்.

ஆனா அம்மணி பத்மினி, பீட்டர் பார்ட்டி.. சும்மா இல்லீங்க.. ஊட்டி கான்வென்ட்ல படிச்ச தக்காளி.. இவன் முன்னாடி சும்மாங்காச்சும் பீட்டர் வுடுற சமயம் "அவளா நீ"ன்னு சொல்லி பையன் ஒதுங்கிட்டான். ஆனாலும் பொண்ணு மனசு கேக்கல.

ஒரு நா.. பிரண்டு கல்யாணத்துல பத்மன‌ சைட் வுட்டுக்கிட்டு இருந்தவ, பத்த வைக்காம‌ இருந்தா அரிசி பொங்காதுன்னு தெரிஞ்சுகிட்டு பையன் கிட்டக்க வந்ததுமே, "ஹாய்.. அயாம் பத்மினி"ன்னு சொல்லி எச்சிக்கைய‌ நீட்டுனா. பத்மனுக்கு கூவத்துல குளிச்சுட்டு எந்திரிச்சு வந்ததைவிட கேவலமா இவளை லுக்கு விட்டுட்டு ரசத்த ஊத்தாம வேகமா போயிட்டான். பின்ன... கேள்வி புரிஞ்சாதானே பதில் சொல்றதுக்கு. இவன் மனசு மாதிரி அப்பளம் நொறுங்கற சத்தம் அவன் பின்னாடி கேட்டது.

நைட்டு பிரண்டு வாங்கி குடுத்த ஓசி பீர அடிச்சு மல்லாக்கப்படுத்து யோசிக்கையில இவ நமக்கில்லைன்னா வாழுறதே வீண்‍னு சொல்லிட்டு அவளை மடிக்கறத பத்தி ஐடியா தேட ஆரம்பிச்சான்.

அசிங்கப்பட்டத நிவர்த்தி செஞ்சுக்கவாவது இங்கிலீஷ் கத்துக்கணும்னு ஒத்தக்கால்ல நின்னு அவங்க தெரு தாண்டி மூணாவது தெருவுல இருக்கற கோச்சிங் சென்டர்ல தினம் சாயங்காலம் 5 மணிக்கு போக ஆரம்பிச்சுட்டான்.

கொஞ்சங்கொஞ்சமா 'நீ'ங்கறதுக்கு, 'நான்'ங்கறதுக்கு என்ன சொல்றதுன்னு கத்துக்கிட்டான். ஆனா அவனுக்கு ரொம்ப பெருமை கையில ஒரு நோட்ட தூக்கிட்டு டெய்லி அந்த பக்கம் ரூட் வுடறதுதான்.

ப‌த்மினிக்கோ இவ‌னை பாக்காம‌ இவ‌ன்கூட‌ பேசாம‌ பொழுது போக‌ மாட்டேங்குது. ம‌ன‌சுக்குள்ள காத‌ல் வீடு க‌ட்டி இவ‌ன‌ அதுல‌ வாட‌க‌ வாங்காம‌ த‌ங்க‌ வ‌ச்சுட்டா. ச‌ரி ம‌றுக்கா ஒருத‌பா டிரை செய்வோம்ன்னு ஒரு நா அவ‌ன் வ‌ர்ற‌ப்ப‌ முன்னாடி போய் நின்னா.

மொதோ த‌ட‌வையா ப‌த்மினிக்கு வெக்க‌ம்ன்னா என்ன‌ன்னு புரிய‌ ஆர‌ம்பிச்ச‌து.

அவ‌ன் முக‌த்த‌ நிமிர்ந்து கூட‌ பாக்க‌ முடிய‌ல‌. மெல்ல‌ மென்னு முழுங்கிட்டு பொறுமையா, "ஐ மிஸ் யூ"ன்னு சொல்லிட்டு அமைதியா நின்னா..

அவ‌ன் இப்ப‌ தைரிய‌மா அவ‌ க‌ண்ண‌ பார்த்தான். அவ‌ கிட்டக்க‌‌ வ‌ந்தான். அவ‌னுக்குள்ள‌ ஒரு தைரிய‌ம் வ‌ந்துடுச்சு. பத்மினிக்கு இதயம் வெடிச்சுடும் போல வேகமா துடிச்சது.

கடைசியா சொல்லிட்டான்.

"மிஸ்ட‌ர்!"

25 comments:

Divya on Wednesday, December 12, 2007 1:03:00 AM said...

\\"ஐ மிஸ் யூ"ன்னு சொல்லிட்டு அமைதியா நின்னா..

அவ‌ன் இப்ப‌ தைரிய‌மா அவ‌ க‌ண்ண‌ பார்த்தான். அவ‌ கிட்டக்க‌‌ வ‌ந்தான். அவ‌னுக்குள்ள‌ ஒரு தைரிய‌ம் வ‌ந்துடுச்சு. பத்மினிக்கு இதயம் வெடிச்சுடும் போல வேகமா துடிச்சது.

கடைசியா சொல்லிட்டான்.

"மிஸ்ட‌ர்!"\\

ROTFL..
நல்லாயிருக்கு கதை.

காதல் ஒருவனை ஆங்கிலம் கத்துக்க வைச்சது நினைச்சு சந்தோஷபடுறதா! சிரிக்கிறதான்னு தெரில!!!

ரசித்தேன் கதையை!

ஆயில்யன் on Wednesday, December 12, 2007 1:09:00 AM said...

//Divya said...
காதல் ஒருவனை ஆங்கிலம் கத்துக்க வைச்சது நினைச்சு சந்தோஷபடுறதா!//
ஓஹோ...!

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஆங்கிலம் கத்துக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்குதாஆஆஆஆ :)

கோபிநாத் on Wednesday, December 12, 2007 4:06:00 AM said...

\\பத்த வைக்காம‌ இருந்தா அரிசி பொங்காதுன்னு \\

\\ம‌ன‌சுக்குள்ள காத‌ல் வீடு க‌ட்டி இவ‌ன‌ அதுல‌ வாட‌க‌ வாங்காம‌ த‌ங்க‌ வ‌ச்சுட்டா\\

எப்படி மச்சி இப்படி எல்லாம் பின்னுறிங்க..;))

காட்டாறு on Wednesday, December 12, 2007 5:54:00 AM said...

//அவ‌னுக்குள்ள‌ ஒரு தைரிய‌ம் வ‌ந்துடுச்சு. பத்மினிக்கு இதயம் வெடிச்சுடும் போல வேகமா துடிச்சது.
கடைசியா சொல்லிட்டான்.

"மிஸ்ட‌ர்!"//

இதைப் பார்த்ததும் கப கபன்னு சிரிச்சதுல எனக்கும் இதயம் வெடிச்சிரும் தோணிச்சி. ஹா ஹா ஹா

மங்களூர் சிவா on Wednesday, December 12, 2007 6:48:00 PM said...

//
\\"ஐ மிஸ் யூ"ன்னு சொல்லிட்டு அமைதியா நின்னா..

அவ‌ன் இப்ப‌ தைரிய‌மா அவ‌ க‌ண்ண‌ பார்த்தான். அவ‌ கிட்டக்க‌‌ வ‌ந்தான். அவ‌னுக்குள்ள‌ ஒரு தைரிய‌ம் வ‌ந்துடுச்சு. பத்மினிக்கு இதயம் வெடிச்சுடும் போல வேகமா துடிச்சது.

கடைசியா சொல்லிட்டான்.

"மிஸ்ட‌ர்!"\\

கலக்கல்
ROTFL

சுல்தான் on Wednesday, December 12, 2007 7:23:00 PM said...

எங்க தொழிற்சாலையில் பச்சைகள் 95 சதவிகிதம். ஆங்கிலம் சுட்டாலும் வராது. ப்ரொடெக்ஷன் மேனஜரா ஒருவர் தமிழகத்திலிருந்து வந்திருந்தார். இவரோ ஹிந்தி ஒழிக. உருது வராது. போர்மேனிடம் போய் ஆங்கிலத்தில் ஏதோ சொல்லவும் அவன் 'ஐ நோ இங்லீஸ்' என்றான். அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசவும், நேராக என்னிடம் வந்து 'தேக்கோ சாப். இன்கோ அப்னா பாஷாமே போல்னா' என்று ஆரம்பித்து விட்டான். அவன் சொன்னது 'I NO ENGLISH'
இவர் புரிந்தது 'I know English'

இம்சை அரசி on Wednesday, December 12, 2007 7:44:00 PM said...

சூப்பரா இருக்கு சென்ஷி :)))

நாகை சிவா on Wednesday, December 12, 2007 8:09:00 PM said...

:)

முத்துலெட்சுமி on Thursday, December 13, 2007 3:09:00 PM said...

:))

சுல்தான் on Thursday, December 13, 2007 4:17:00 PM said...

கதையைப் படித்ததும் என் ஞாபகத்தில் வந்ததைச் சொன்னேன். கதையைப்பற்றி:
ஐ மிஸ், யூ? மிஸ்டர் - சரியாகத்தான் சொல்றார் :))

.:: மை ஃபிரண்ட் ::. on Friday, December 14, 2007 9:50:00 PM said...

//அவ‌ன் முக‌த்த‌ நிமிர்ந்து கூட‌ பாக்க‌ முடிய‌ல‌. மெல்ல‌ மென்னு முழுங்கிட்டு பொறுமையா, "ஐ மிஸ் யூ"ன்னு சொல்லிட்டு அமைதியா நின்னா..

அவ‌ன் இப்ப‌ தைரிய‌மா அவ‌ க‌ண்ண‌ பார்த்தான். அவ‌ கிட்டக்க‌‌ வ‌ந்தான். அவ‌னுக்குள்ள‌ ஒரு தைரிய‌ம் வ‌ந்துடுச்சு. பத்மினிக்கு இதயம் வெடிச்சுடும் போல வேகமா துடிச்சது.

கடைசியா சொல்லிட்டான்.

"மிஸ்ட‌ர்!"
//

ஹாஹாஹா.. சூப்பர் கதை.. கடைசியில வச்ச தஜ் சூப்பரோ சூப்பர் அண்ணா. :-)

Divya on Saturday, December 15, 2007 12:40:00 AM said...

@ ஆயில்யன்
\\//Divya said...
காதல் ஒருவனை ஆங்கிலம் கத்துக்க வைச்சது நினைச்சு சந்தோஷபடுறதா!//
ஓஹோ...!

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஆங்கிலம் கத்துக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்குதாஆஆஆஆ :)\\

காதல் ஒருவனை புதியதொரு மொழி கற்றுக்கொள்ள வைப்பதை எண்ணி சந்தோஷப்படுவது தவறா???

சென்ஷி on Tuesday, December 18, 2007 12:44:00 AM said...

//
Divya said...
ROTFL..
நல்லாயிருக்கு கதை.

காதல் ஒருவனை ஆங்கிலம் கத்துக்க வைச்சது நினைச்சு சந்தோஷபடுறதா! சிரிக்கிறதான்னு தெரில!!!

ரசித்தேன் கதையை!//

தேங்க்ஸ் திவ்யா.. இதிலென்ன குழப்பம்? சந்தோஷமா சிரிங்க :)

சென்ஷி on Tuesday, December 18, 2007 12:47:00 AM said...

//ஆயில்யன் said...
//Divya said...
காதல் ஒருவனை ஆங்கிலம் கத்துக்க வைச்சது நினைச்சு சந்தோஷபடுறதா!//
ஓஹோ...!

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஆங்கிலம் கத்துக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்குதாஆஆஆஆ :)//

வாஸ்தவம்தான் தல... நாம கஷ்டப்பட்டு அவங்களுக்காக எல்லாத்தையும் கத்துக்கிட்டப்புறம் அவங்கள விட பெட்டரா நாம ஆயிடுவோம். அதுக்காக எல்லாத்தையும் மறக்க முடியுமா :))

ஆனாலும் உங்களுக்கு லொள்ளுசபா மனோகர ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப பிடிக்கும்ன்னு நினைக்கிறேன் :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 12:48:00 AM said...

//கோபிநாத் said...
\\பத்த வைக்காம‌ இருந்தா அரிசி பொங்காதுன்னு \\

\\ம‌ன‌சுக்குள்ள காத‌ல் வீடு க‌ட்டி இவ‌ன‌ அதுல‌ வாட‌க‌ வாங்காம‌ த‌ங்க‌ வ‌ச்சுட்டா\\

எப்படி மச்சி இப்படி எல்லாம் பின்னுறிங்க..;))//


எல்லாம் நீ விரிச்சு விட்ட சடைய வச்சுத்தான் மாப்பி :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 12:50:00 AM said...

//காட்டாறு said...

இதைப் பார்த்ததும் கப கபன்னு சிரிச்சதுல எனக்கும் இதயம் வெடிச்சிரும் தோணிச்சி. ஹா ஹா ஹா//

100% காட்டாறு ஸ்பெஷல் :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 12:51:00 AM said...

//மங்களூர் சிவா said...

கலக்கல்
ROTFL//

தேங்க்ஸ் சிவா :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 12:58:00 AM said...

//சுல்தான் said...
எங்க தொழிற்சாலையில் பச்சைகள் 95 சதவிகிதம். ஆங்கிலம் சுட்டாலும் வராது. ப்ரொடெக்ஷன் மேனஜரா ஒருவர் தமிழகத்திலிருந்து வந்திருந்தார். இவரோ ஹிந்தி ஒழிக. உருது வராது. போர்மேனிடம் போய் ஆங்கிலத்தில் ஏதோ சொல்லவும் அவன் 'ஐ நோ இங்லீஸ்' என்றான். அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசவும், நேராக என்னிடம் வந்து 'தேக்கோ சாப். இன்கோ அப்னா பாஷாமே போல்னா' என்று ஆரம்பித்து விட்டான். அவன் சொன்னது 'I NO ENGLISH'
இவர் புரிந்தது 'I know English'//

:))

நீங்க வேற sir, பாகிஸ்தானிங்க அடிக்கற காமெடிய பத்தி எழுதனும்னா தனியா ப்ளாக் ஆரம்பிச்சாத்தான் முடியும்.. :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 1:14:00 AM said...

@ இம்சை அரசி..

தேங்க்ஸ் இம்சை அரசி :))

@ நாகை சிவா..

ஸ்மைலிக்கு தேங்க்ஸ் புலி :))

@முத்துலட்சுமி..

ஸ்மைலிக்கு தேங்க்ஸ்க்கா :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 1:15:00 AM said...

//சுல்தான் said...
கதையைப் படித்ததும் என் ஞாபகத்தில் வந்ததைச் சொன்னேன். கதையைப்பற்றி:
ஐ மிஸ், யூ? மிஸ்டர் - சரியாகத்தான் சொல்றார் :))//

அதானே சுல்தான் சார்.. அத யாரும் புரிஞ்சுக்காம ஸ்மைலி போட்டுட்டு போயிட்டு இருக்காங்க.. :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 1:16:00 AM said...

//மைபிரண்டு..

ஹாஹாஹா.. சூப்பர் கதை.. கடைசியில வச்ச தஜ் சூப்பரோ சூப்பர் அண்ணா. :)//

தேங்க்ஸ் தங்கச்சி :))

சென்ஷி on Tuesday, December 18, 2007 1:18:00 AM said...

// Divya said...
காதல் ஒருவனை புதியதொரு மொழி கற்றுக்கொள்ள வைப்பதை எண்ணி சந்தோஷப்படுவது தவறா???//

யாரு சொன்னது அப்படி.. :))

காதல் கூட மிகச்சிறந்த மொழிதான் தெரியுமா! :))

cheena (சீனா) on Tuesday, December 18, 2007 7:00:00 AM said...

கதென்னா இதன் கதெ. நச்சுன்னு ஒரு வரி முடிவு. ம்மிஸ்டர்ர்ர்ர்ர்.

என்ன அருமையா பத்மன் ( என்னா பேரு இது) பதில் சொல்லிட்டான். பொண்ணுகளேக் கண்டாலே வாய் குளரும் - கை கால் ட்ய்பெ அடிக்கும்.

//பையனுக்கு வதக்கிப்போட்டாலும் (எத்தனை நாள்தான் சுட்டுப்போடுறது) இங்கிலீஷ் வராது.//

எனக்குப் பிடித்த வரிகள். சிரிப்ப்ப்ப்ப்பு வாய் விட்டுச் சிரித்தேன்.

காதலுக்காக என்னன்ன்வோ செய்யுறானுங்க - இங்கிலீசு கத்துக்க முடியாதா ??

கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம்.

aruna on Friday, January 18, 2008 5:39:00 PM said...

சும்மா பின்னிட்டீங்க மிஸ்டர்!!!
அருணா

பாச மலர் on Friday, January 18, 2008 6:56:00 PM said...

//பையனுக்கு வதக்கிப்போட்டாலும் (எத்தனை நாள்தான் சுட்டுப்போடுறது) இங்கிலீஷ் வராது.//

தமிழ்ல பிடிக்காத வார்த்தை ஆங்கிலம்..

நன்றாகச் சிரித்தேன்..

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com