அந்த மரத்தின் மேல் நின்றபடி இயற்கை காட்சிகளை ரசித்தபடி நின்றிருந்தனர் சிவனும்.. பார்வதியும்... மரத்தின் கீழ் சோம்பலாய் கண் மூடி அமர்ந்திருந்த அழகான அவன்மேல் இருவரின் கவனமும் சென்றது.
"சுவாமி! இவனுக்கு நாம் ஏதும் வரம் தரலாமா?"
முக்காலமும் உணர்ந்த சிவன் மெல்ல சிரித்தார். "நான் வேண்டாமென்று கூறினால் நீ கேட்கவா போகிறாய்! சரி. இவனுக்கு இப்போது ஒரு சிறிய இடையூறை உண்டாக்குவோம். அவன் 'மம்மி' என்று கத்தினால் நீ தரிசனம் கொடு. 'டாடி' என்று கத்தினால் நான் தரிசனம் தருகிறேன்."
பார்வதி முகம் முழுக்க சந்தோஷத்துடன் சரியென தலையசைக்க.. மரத்திலிருந்து ஒரு பழம் உதிர்ந்து பையனின் தலைமேல் நச்சென்று விழுந்தது.
பையன் கத்தப்போகும் வார்த்தைக்காக சாமிகள் காத்திருக்க, தலையில் விழுந்த ஆப்பிள் பழத்தை கையில் எடுத்துக்கொண்டு பழம் ஏன் மரத்தின் மேலிருந்து கீழே விழுகிறது என யோசிக்க ஆரம்பித்தான் நியூட்டன்.
சர்வேசனின் நச்சென்று ஒரு கதை போட்டிக்காக...... :))
Monday, March 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)




32 comments:
சென்ஷி...
ரூம் போட்டு யோசிக்குறாப்புல இருக்கேன்...
:)
அய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ!
நன்றாக இருக்கு...;)
நெசமாவே ரசிச்சேன். சூப்பர் நச்.
அட்டகாசமா இருக்கு நண்பா... இப்படி எல்லாம் என்னால் யோசிக்க முடியலியேன்னு கொஞ்சம் பொறாமையாக் கூட இருக்கு
// நாகை சிவா said...
சென்ஷி...
ரூம் போட்டு யோசிக்குறாப்புல இருக்கேன்...
:)//
எதுக்காக புலி?!.. ஸ்மைலிக்கு நன்றி :)))
//ஆயில்யன் said...
அய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ!//
எதுக்கு சின்னப்புள்ளத்தனமா இத்தன ஓஓ.. ஒரு ஓ பத்தாதா.. ஓ போடுங்கறதுக்கு பதிலா அய்யோன்னு தப்பா டைப் பண்ணிட்டீங்க. உடனே தமிழ் கத்துக்க பாருங்க.
TBCD நல்ல தமிழாசிரியராம். சொல்லிக்கிட்டாங்க :))
//கோபிநாத் said...
நன்றாக இருக்கு...;)//
தேங்க்ஸ்டா மாப்பி :))
//காட்டாறு said...
நெசமாவே ரசிச்சேன். சூப்பர் நச்.//
நெசமாவேவா.. அப்ப இத்தன நாளா போட்ட சூப்பர் கமெண்ட்டெல்லாம் சும்மா லு..லு..வுக்கா :((
வாழ்த்துக்கு நன்றி :))
கதை நல்லா இருக்கு. நான் ஒரு விளம்பர பத்திரிக்கை நடத்திவருகிறேன். நான் இந்த கதையை
பிரசுரிக்கலாமா?
உங்கள் பதிலை அனுப்பவும்:shiv_telecomcud@rediffmail.com or visit: www.shiva-telecom.blogspot.com
கதை நல்லா இருக்கு. நான் ஒரு விளம்பர பத்திரிக்கை நடத்திவருகிறேன். நான் இந்த கதையை
பிரசுரிக்கலாமா?
உங்கள் பதிலை அனுப்பவும்:shiv_telecomcud@rediffmail.com or visit: www.shiva-telecom.blogspot.com
அனேகமா பரிசுக்கான கதை!!!
இது இது இதேதாங்க, இத்தனை சுருக்கமா நச்சுன்னு,
ஹ்ம்ம் முதல் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் சென்ஷி
என்னங்க நிலா..
முதல் பரிசு பெற்றதுக்கா.. இல்ல பெறுவதற்கா :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நிலா :))
:) பரிசு worthy :)
ஹாஹாஹா... நல்லா இருக்கு. ;-)
வித்தியாசமா யோசிக்கரீங்க,நன்றாக இருக்கு
நச்:-)))))
உண்மையிலேயே இது வரை படித்த கதைகளில் இது தான் நச்சென்ற கதை - பரிசுக்குப் பரிந்துரைக்க வேண்டிய கதை.
வித்தியாசமான சிந்தனை..
நல்ல குறுங்கதை...
ஆப்பிள் நச் நச்னு விழுந்தால் இப்பிடித்தான் நச்னு கதை ஐடியா கிடைக்குமா?கொஞ்சம் லேட்தான் ஆனாலும் பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை.
அருணா
//அபி அப்பா said...
அனேகமா பரிசுக்கான கதை!!!//
நீங்க சொன்னா போதாதுன்னு நினைக்குறேன் :))
//SurveySan said...
:) பரிசு worthy :)//
அப்படியா... :))))
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஹாஹாஹா... நல்லா இருக்கு. ;-)//
நன்றி தங்கச்சி... :))
//Nithya A.C.Palayam said...
வித்தியாசமா யோசிக்கரீங்க,நன்றாக இருக்கு//
தேங்க்ஸ் நித்யா A.C. பாளையம் அவர்களே :)))
வித்தியாசமான பேரா இருக்கேன்னு பதிவ எட்டிப்பார்த்தா அங்க பேரு மட்டும்தான் இருக்குது.. :))
//துளசி கோபால் said...
நச்:-)))))//
தேங்க்ஸ் :))))
//cheena (சீனா) said...
உண்மையிலேயே இது வரை படித்த கதைகளில் இது தான் நச்சென்ற கதை - பரிசுக்குப் பரிந்துரைக்க வேண்டிய கதை.//
நன்றி சீனா சார்.....
//அறிவன் /#11802717200764379909/ said...
வித்தியாசமான சிந்தனை..
நல்ல குறுங்கதை...//
நன்றி அறிவன் ஐயா... :))
//aruna said...
ஆப்பிள் நச் நச்னு விழுந்தால் இப்பிடித்தான் நச்னு கதை ஐடியா கிடைக்குமா?கொஞ்சம் லேட்தான் ஆனாலும் பின்னூட்டம் போடாமல் இருக்க முடியலை.
அருணா//
பின்னூட்டம் வந்ததே பெரிய விஷயம்.. இதுல லேட்.. லேட்டஸ்ட்டுன்னு பிரிச்சு பார்க்கறது நல்லாவா இருக்கும். இருந்தாலும் நன்றிகள் :))
பதிவு இன்னைக்கு தேதில இருக்கு தமிழ்மணத்துல இன்னைக்கு வருது (27-03-2008) ஆனா கமெண்ட்டெல்லாம் டிசம்பர் 2007ன்னு இருக்கு!?!?!?
:)))))))
//மங்களூர் சிவா said...
பதிவு இன்னைக்கு தேதில இருக்கு தமிழ்மணத்துல இன்னைக்கு வருது (27-03-2008) ஆனா கமெண்ட்டெல்லாம் டிசம்பர் 2007ன்னு இருக்கு!?!?!?
//
ஹி...ஹி.. இது மீள்பதிவுன்னு போட மறந்துட்டேன் அண்ணாச்சி.. :)
சின்ன தப்பால டேட்ட மட்டும் மாத்திட்டேன் :(
உங்களுக்கு பரிசு கிடைச்சுதா?
Post a Comment