இப்போ சக்கை போடு போட்டுக்கிட்டு இருக்கற ஹிந்தி படம் தாரே ஜமீன் பர் தமிழ்ல தயாராகப்போகுது.. நடிக்கறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கற படங்கறதால இத வாங்க ஏகப்பட்ட போட்டி நடக்குதாம். ஆனா கதை....!
டைட்டில் ஓடுறதுக்கு முன்னாடி ஞாபகசக்தி குறைஞ்ச, படிப்புல கவனம் இல்லாத 3வதுல பெயிலான அந்த பையன ஹாஸ்டல்ல போய் சேர்த்துடுறாங்க அவங்க அப்பாம்மா.. முடிஞ்சா அந்த பையனோட அம்மா செத்துப்போச்சு. சித்தி கொடுமைக்காரியா இருக்கறா மாதிரி காட்டுறது அம்மா சென்ட்டிமென்ட்க்கு நல்லா உதவும்.
டைட்டில் முடிஞ்சதுமே ஸ்கூலுக்கு போற சின்ன வயசு பொண்ணுங்க கிட்ட 4,5 ரவுடிங்க கலாட்டா செய்யறாங்க. அப்பர்ல பல்டி அடிச்சு அந்தர்லேந்து குதிக்கறாரு ஹீரோ... இன்னாது ஹிந்தி படத்துல அமீர்கான் இடைவேளையிலதான் வர்றாரா!? யோவ்.! நம்ம தலைவர் மூஞ்ச இடைவேளை வரைக்கும் காட்டாம இருந்தோம்ன்னா ரசிகர்கள் கொதிச்சுப்போய் தியேட்டர கொளுத்திட மாட்டானுங்க.. என்ன தலைவா சொல்றீங்க!.. ம். தலைவர் இன்ட்ரோ கொடுக்கறப்போ ஒரு ஃபைட்டு , அது முடிஞ்சதும் திரைய பார்த்து தலைவர் தன்னோட எதிரிங்களுக்கு சவால் வுடுறா மாதிரி ஒரு பாட்டு.. ச்சும்மா கலர் கலரா பொடி பறக்கணும் தெரியும்ல..
அந்த பொண்ணுங்க, உங்கள மாதிரி ஒரு வாத்தியார்தான் எங்க ஸ்கூலுக்கு பாடம் நடத்த தேவை. அதனால நீங்க எங்க ஸ்கூல் சேரணும்னு சொல்றாங்க. உடனே நேரா போய் ஸ்கூல்ல சேர்ந்துட்டா ஹீரோவோட மதிப்பு என்னவாகறது.. அதனால முதல்ல ஒரு பொண்ணு நீங்க எங்க ஸ்கூலுக்கு வாத்தியாரா வரச்சொல்லி கூப்பிடணும். அப்புறம் பிரின்ஸிபாலோட சேர்ந்து மொத்த ஸ்கூலும் கூப்பிடும். அப்பவும் ஹீரோ மனசு மாறாம இருப்பாரு. சிட்டியில இருக்கற எல்லா ஸ்கூலோட குழந்தைகளும் ஹீரோவ வாத்தியார் ஆகச்சொல்லி நடைபயணம் போறாங்க. இந்த நடைபயணத்தை பார்க்குற ஹீரோ ஒரு குழந்தைய கட்டிப்பிடிச்சு கண்கலங்கி அழுதுடுறாரு. படம் பாக்கறவங்களும் குமுறி குமுறி அழுவாங்க..
இப்ப ஹீரோயின இன்ட்ரட்யூஸ் செய்யறோம். 10வது படிச்சுட்டு சின்ன பசங்களுக்கு டியுஷன் எடுத்துட்டு இருக்கறாங்க ஹீரோயின். ஹீரோ ஸ்கூல்ல சேந்ததுக்கப்புறம் பசங்க யாருமே டியுசனுக்கு டீச்சர் வீட்டுக்கு போகாததால ஹீரோ மேல கோவம் வந்து இவரு நல்ல வாத்தியார் இல்லன்னு எல்லாருக்கும் காட்டுறேன்னு சொல்லிட்டு ஹீரோ வாத்தியாரா இருக்கற அதே ஸ்கூல்ல வந்து பதினொன்னாப்பு சேர்ந்துட்டு சரியா படிக்காம அலும்பு பண்ணுது. ஹீரோவும் பரிட்சை சமயத்துல அந்த பொண்ணுக்கு ஜாக்கெட் பிட்டு எடுத்து தந்து "பரிட்சைக்கு படிக்கலைன்னு சொல்லி பிட்டு கேட்டே... ஆனா எந்த பிட்டுன்னு சொல்லலையே"ன்னு சொல்லி ஹீரோயின் மனச டச் பண்ணிடுறாரு.
இப்பல்லாம் ஒரு ஹீரோயின் இருந்தா ஹீரோவுக்கே புடிக்க மாட்டேங்குது.. என்ன செய்ய.. இதுக்காகவே எப்பவுமே தொப்புள காட்டிக்கிட்டு இருக்கற மாதிரி ஒரு கவர்ச்சியா இன்னொரு ஹீரோயின பாடம் நடத்தவுட்டு பசங்கள ஜொள்ளு விட வைக்குறோம். அந்த செகண்ட் ஹீரோயின் கூட தனியா ஒருதபா ஹீரோ டூயட் வுடுவாரு. ரெண்டு ஹீரோயின் கூடவும் சேர்ந்து ஒரு தடவ டூயட் வுடுவாரு. என்னது குழந்தைய பத்தி ஏதாச்சும் சொல்லணுமா?... ம்ம்ம்.. சரி... அந்த படிக்காத மக்கு பிள்ளைக்கு மட்டும் இவர் ஏதாச்சும் தனியா டியுசன் எடுக்கறதா வச்சுக்குவோம். ஆனா ரெண்டு ஹீரோயின் கூட ஹீரோ ஆடுற அந்த குத்து பாட்டுக்கு தியேட்டர்ல எல்லோரும் எழுந்திருச்சு டான்ஸ் ஆடணும்.
வெங்காயம் இல்லாம சாம்பார் கிடைக்கலாம். ஆனா வில்லன் இல்லாம தமிழ் சினிமா கிடையாது. நம்ம படத்தோட வில்லனுக்கு ஹீரோ வேலைக்கு சேர்ற ஸ்கூல் மேல கண். தன்னோட சின்ன வூட்டுக்கு பெருசா வூடு கட்ட இஞ்சினியர கூப்ட்டு பிளான் போடுறாரு. வில்லன் சும்மா தாதா, ரவுடியா காட்டுனதெல்லாம் அந்த காலம். இப்பல்லாம் சிஎம்ம தேர்ந்தெடுத்தவரு.. பிரதமருக்கே பினாமியா இருக்காருன்னு அடிச்சு வுட்டோமுன்னா இந்த படத்துக்கு அப்புறம் ஹீரோ அரசியலுக்குள்ள கால வைக்க அஸ்திவாரமா இருக்கும். கண்டிப்பா வில்லன் தன்னோட செல்வாக்க பயன்படுத்தி ஹீரோவ ஜெயில்ல போடனும். அப்ப டோட்டல் தமிழ்நாடும் உஜாலாவுல தொவைச்ச சட்டைய போட்டுக்கிட்டு ஹீரோவ வெளியில கொண்டு வர போராட்டம் நடத்தும்.
இவன் ஒருத்தன் அப்பப்ப நச்சுநச்சுன்னு குழந்தைய கொண்டு வா.. குடும்பத்த கொண்டு வா. சரி.. சரி.. உன் ஆசைப்படி வில்லன் பள்ளிக்கூடத்துல பாம் வச்சிருக்கற மேட்டர அந்த சின்ன பையன் ஒண்ணுக்கு போறப்ப ஒட்டு கேட்டுடறான். அத ஹீரோகிட்ட சொல்ல ஓடி வர்றப்ப வழக்கம்போல பையனுக்கு என்ன சொல்ல வந்தோம்ன்னு மறந்து போயிடுது. உடனே ஹீரோ அவருக்கு தெரிஞ்ச ஹிப்னாடிசத்த பயன்படுத்தி வில்லன் வைக்கப்போற பாமை தெரிஞ்சுகிட்டு சுமார் 200 ரவுடிங்க அரிவாள், கத்தி, துப்பாக்கி எடுத்து வந்தும் போராடி எல்லோரையும் சாய்ச்சுட்டு பா...மை... தூ...க்....கி... வீ...சி....யெ...றி..ய... டொம்ம்ம்ன்னு சத்ததோட வானத்துல பாம் வெடிக்கறத காட்டுறோம். அப்புறம் ஜனங்கல்லாம் சேர்ந்து ஹீரோவ தூக்கி வச்சு ஆடுறது.. பாடுறது.. வில்லனை அடிச்சு கொன்னு போடுறது.. அதுக்காக ஐந்து வருடங்களுக்கு பிறகுன்னு திரையில அடியில எழுத்து போட்டு சென்ட்ரல் ஜெயில்ல இருந்து ரிலீஸாகுற ஹீரோவுக்கு ஹீரோயின் மாலைபோட்டு வரவேற்கறது.. மறக்காம அந்த இடத்துல அந்த சின்னப்பையனையும் கூட்டத்துக்கு நடுவுல காட்டிடணும்.
படத்துக்கு பேரு ஹிந்தியில எத வச்சா என்ன! நாம படத்துல ஹீரோவுக்கு என்ன பேரோ அதத்தான் டைட்டிலா வைக்கணும். யப்பா! தமிழ்பேரா தேடுங்கப்பா.. வரிவிலக்கும் கொடுக்கறாங்க..
டிஸ்கி 1: இந்த மாதிரி படம் வரும்போது அண்ணாச்சி காலை கழுவிய தண்ணிய குடிச்சுமாடா நீங்க திருந்தலை. நல்லா இருங்கடேன்னு ஒரு பதிவு போடுவாரு.
டிஸ்கி 2: அதுக்கு நாங்க ஆசிப் மீரான் ஆயிரம் பதிவு போட்டாலும் நீங்கள்லாம் திருந்த மாட்டீங்கடான்னு பின்னூட்டம் போடுவோம்.
Wednesday, January 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)




12 comments:
:):)
டிஸ்கிலைமர் தான் பஞ்ச் இங்கே
சூப்பர் காமெடி மச்சி ;;)
ஆகா. அந்தப் படமெல்லாம் நீங்க டைரக்ட் பண்ணதுதானா சார். கொல்றீங்க.
அந்தக் கும்பல் வால்க ஒளிக கோஷம் போட்டதை எழுதாதது கண்டிக்கத்தக்கது.
//வினையூக்கி said...
:):)
டிஸ்கிலைமர் தான் பஞ்ச் இங்கே//
நன்றி வினையூக்கி :))
//கோபிநாத் said...
சூப்பர் காமெடி மச்சி ;;)//
தேங்க்ஸ்டா மாப்பி :))
//சுல்தான் said...
ஆகா. அந்தப் படமெல்லாம் நீங்க டைரக்ட் பண்ணதுதானா சார். கொல்றீங்க.
அந்தக் கும்பல் வால்க ஒளிக கோஷம் போட்டதை எழுதாதது கண்டிக்கத்தக்கது.//
:))))
இவ்வளவு மோசமா படம் எடுத்துட்டு அத விட்டு வைப்போமா.. இங்க சும்மா விமர்சனம் தான் போட்டிருக்கேன். சினிமாவா வந்தா (வந்துடுமோ :(( ) அதெல்லாம் கண்டிப்பா வரும். :))
:-)))))
இந்த படத்துல டாக்டர்.. (த்தூ..) விஜய் தானே ஹீரோ?
;-P
//ல்லி நடைபயணம் போறாங்க. இந்த நடைபயணத்தை பார்க்குற ஹீரோ ஒரு குழந்தைய கட்டிப்பிடிச்சு கண்கலங்கி அழுதுடுறாரு. படம் பாக்கறவங்களும் குமுறி குமுறி அழுவாங்க..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//சூப்பர் காமெடி மச்சி ;;)//
ரிப்ப்பீட்டே!
கிராமத்து திருவிழாவும் ஹை ஹீல்ஸோட ஹீரோயின் ஆடுறா டான்ஸும் சேக்கலையே
முதல்ல படத்துக்கு டைட்டிலும் அதுக்கு ஒரு டிஸ்கிரிப்ஷனும் ரெடி பண்ணு சென்ஷி
அச்சச்சோ....ஏன் இந்த விபரீத ஆசை..யாராவது தயாரிப்பாளருக்கு இந்த எண்ணம் வராமலிருக்க வேண்டுமே...
நீங்களே கதையை சொன்னப்பிறகு அவனுக சும்மாவா இருக்க போறானுக.
பரட்டே, பத்தவச்சிட்டெயே ......
Post a Comment