அவளுக்கும் இவன ரொம்ப பிடிச்சுப்போச்சு. இருந்துட்டு போகட்டும். இதுல என்ன பிரசினைன்னு கேக்கறீங்களா? ஆனா அது இவளை கல்யாணம் செஞ்சுக்கப்போறவனுக்கும், அவளோட அப்பனுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகறது?! அதனால இவ அவன் மேல வச்சிருந்த காதல அப்பனோட பிடிவாதத்துக்கு பயந்து அவன்கிட்ட சொல்லாமலே இல்லேன்னா சொல்ல முடியாமலே போயிடறா. ஆனா இவ தன்னை காதலிக்கறாங்கறத தீர்மானமா தெரிஞ்சுக்கிட்ட காதலன் அவளைத்தேடி புறப்பட்டு அவ கல்யாணம் செஞ்சுக்கப்போற அந்த ஊருக்கு காதலிய கூட்டிட்டுப்போக வந்துடறான். ஆனா அங்க.... மீதிய நீங்க கண்டிப்பா பார்த்துருப்பீங்கங்கற நம்பிக்கையில கொட்டாவி விட வைக்காம விட்டுடறேன்.
செம்ம ஸ்டைலோட ராஜ்ஜா ஷாருக்... ரொம்ப ஜாலியா சிம்ரனா கஜோல். கலர்புல் கலக்கல் பாட்டுங்க. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. மொத்தத்துல மறுபடி பார்க்கலாமான்னு தோணவைக்கற படத்துல இது முக்கியமான படம். காதலி கூட இருந்தா தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்த எத்தனை தடவை வேணும்னாலும் பார்க்கலாம்.
காதல் எப்படி வரும்ங்கறதுக்கு எந்த வரைமுறையும் கிடையாதுன்னு சொல்ற படத்துக்கு இதயும் ஒரு உதாரணமா காட்டலாம். சிடி கிடைச்சதுலேந்து கிட்டத்தட்ட இன்னிய வரைக்கும் இந்த படத்த நான் எத்தன தடவ பார்த்தேன்னு கணக்கே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு எனக்கு அந்த தேவதைய ரொம்ப பிடிச்சு போச்சு. படம் அவ்வளவு நல்லா ஓடலைன்னா கூட பணம் சம்பாதிக்கற படமெல்லாம் நல்ல படம்ங்கற வரைமுறைக்குள்ள அடங்கறதில்லையே.. ஹய்யோ! ஹீரோயின் செம்ம அழகு.... படத்துல அவங்கள எல்லோருமே தேவதைன்னு கூப்பிடறாங்க.. ஏத்த பட்ட பெயர்தான். இவங்க கூட பரத், அருண்குமாரும் நடிச்சுருக்காங்க. கூடவே தீபுங்கற ஒரு குட்டி தேவதையும் நடிச்சுருக்காங்க. எல்லோருமே காதலுக்காக அலையறதும், காதலன நெனச்சு உருகுறதுமா படத்த கலகலன்னு கொண்டு போயிருக்காங்க. தேவதையோட சின்ன சின்ன அசைவுகளை கூட குறும்பா காட்டியிருக்கற திரைக்கதை, கேமராவுக்கு ஒரு பெரிய சபாஷ்.
உதாரணமா தூரத்துல அருண்குமாரும், தீபுவும் பேசிக்கிட்டு இருக்கறத பைனாக்குலர்ல பார்க்கற தேவதை அவங்க பேசுறத கேக்கறதுக்காக அதே பைனாகுலர காதுல வைக்குற காட்சி... அப்புறம் ஹீரோ இன்ட்ரட்யூஸ் ஆகறப்ப பஸ் அலர்ற அந்த கிராபிக்ஸ் கலாட்டா.. செம்மயா கலாய்ச்சல் செஞ்சிருக்காங்க. அதேமாதிரி படத்தோட வசனம் திரைக்கதைக்கு அழகு சேர்த்திருக்கு. படத்தின் மிக முக்கிய திருப்புமுனை பாடலான அந்த ஸ்லீப்பிங்க் பியூட்டி பாடல்.... பாடலின் ஆரம்ப வரிகள் மற்றும் இசை மனதை கொள்ளை கொள்ளும். ம்ஹ்ம்! இவ்ளோ அழகா ஒரு தேவதை மாதிரி ஒரு காதலி இருந்தா எவ்வளவு ரிஸ்க் வேணும்னாலும் எடுக்கலாம். ஆனா கிடைக்கணுமே....! தேவதைய டுபுக்கு மந்திரிசபைல சேர்த்திருக்கறதா பிபிசு (பிகர்களின் பின்னால் சுற்றுபவன்) ஆன்லைன்ல நியூஸ் வந்துச்சு. அங்க நமக்கு ஏதும் சேர் காலியா இருக்கான்னு கேக்கணும்.
படம்: அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது..

அந்த தேவதையின் பெயர்: மல்லிகா கபூர்
சிடி தந்து உதவிய தெய்வம்: கோபி
தேவதைக்கான ஒரு குட்டி இன்ஸ்டண்ட் கவுஜ... யாராச்சும் சொல்லுங்கப்பா.. நான் இப்ப தேவதை மயக்கத்துல இருக்கறதால கவுஜ எழுதற மூடு கூட இல்ல.
இருபது நாட்களுக்கும் மேலாக இணையதொடர்பு இல்லாததால் சினிமா சிடிக்களை பார்த்து பொழுது போக்குகின்றேன். ஹிந்தியில் சாஜன், தில் சாஹ்தா ஹை, டிராபிக் சிக்னல் (பதிவு, போனில் விவர்சனத்திற்கு நன்றி: அயன் உலகம் கார்த்தி), மெய்ன் ஹூன் நா, மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஐயர், சீனி கம், ஜப் வீ மெட், ரங் தே பசந்தி... ஆங்கிலத்தில் தி டெர்மினல், லையர் லையர், வைல்டு ஹாக்ஸ், கில் பில் 1, மெக்கனாஸ் கோல்டு என்று லிஸ்ட் போட்டு சிடிக்களை வாங்கி வந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இரண்டு படங்களை மட்டும் வாங்கி வந்தோம். (தோமின் அர்த்தம் கூட கோபி இருந்தார்) கோபியின் சாய்ஸாக சில்லுனு ஒரு காதலும் என் சாய்ஸாக தனிக்காட்டு ராஜாவும். விமர்சனம் எழுத மனது வரவில்லை. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது போல.... ஆனாலும் பார்த்த சில படங்களிலிருந்து பிடித்த ஓரிரு விஷயங்கள்...
சாஜன்: சஞ்சய்தத், மாதுரி தீட்சித், சல்மான்கான் நடிச்சுருக்காங்க. நதீம் ஷ்ரவன் இசையில அத்தனை பாட்டும் கலக்கல். அரதப்பழசு படம். (நாம நேத்துதானே பொறந்திருக்கோம்) இருந்தாலும் பாட்டுக்காக நிம்மதியா உக்கார்ந்திருந்தேன்.
மெய்ன் ஹூன் நா: டான்ஸ் மாஸ்டர் ஃபராகான், ஷாருக்கானோட தயாரிப்புல முதல்ல டைரக்ட் செஞ்ச படம். கேமரா நம்ம ஊரு மணிகண்டன். சுஷ்மிதாசென்ன பார்க்கறபோதெல்லாம் ஷாருக் பின்னாடி ஒரு கோஷ்டி மியுசிக் வாசிச்சுக்கிட்டு அலையறது பிடிச்சிருந்தது.
சீனி கம்: ராகதேவன் இசையில முதல் ஹிந்திப்படம். அமிதாப், தபு நடிப்ப விட அந்த பாட்டி, சின்னப்பொண்ணு நடிப்பு மனசுக்கு புடிச்சிருந்தது. தபுவோட அப்பா அமிதாப்கிட்ட ஒவ்வொரு தடவையும் வயசைப்பத்தி பேசறதும் அதுக்கு அமிதாப் தபுகிட்ட பொறுமுறதும் செம்ம காமெடி...
மெக்கனஸ் கோல்டு: இந்த படத்தைப்பற்றிய கதை சிறு வயதில் அதிகமாக எதிர்ப்பார்ப்பை தூண்டி விட்டதால் அதே நம்பிக்கையில் வாங்கி பார்த்தேன். இதற்கு முன்பே ஸ்பீல்பெர்க்கின் இன்டியானா ஜோன்ஸ் மூன்று பாகமும் பார்த்துவிட்டதால் கொஞ்சம் ஏமாற்றமளித்தது. ஆனாலும் கடைசியில் கிடைக்கின்ற தங்க வேட்டை சூப்பர்.
லையர் லையர்: ஏற்கனவே பலமுறை பார்த்து இருந்தாலும் ஜிம் கேரி மற்றும் அந்த குட்டிப்பையனின் நடிப்புக்காகவே மீண்டும் சிடி வாங்கி வந்தேன். மகன் வாங்கிய வரத்தினால் ஒரு நாள் முழுதும் பொய் பேச முடியாமல் தவிக்கும் ஒரு திறமையான வக்கீலின் கதை. எதிர்பார்ப்பு எதையும் ஏமாற்றாமல் கலக்கியிருப்பார் ரப்பர் உடம்புக்காரர்.
கில் பில்1 : முதல் ஐந்து நிமிடத்திலேயே அடுத்த பாகத்தையும் வாங்கி பார்க்க தூண்டும் ஆவலை ஏற்படுத்திய படம். படம் முடிந்த 10 நிமிடத்திற்கு பின்னும் எங்கே ரத்தத்தை மிதித்து விடுவேனோ என்று தரையில் கால் வைக்க பயமாயிருந்தது. படம் முழுக்க அத்தனை ரத்தம்..!
மொக்கை போட கூப்பிட்டு இருந்தனர், முத்துக்காவும் காட்டாறு அக்காவும்.. எதைப்பற்றி என்று சொல்லாமல் மொக்கையாய் மொக்கை போட கூப்பிட்டு இருந்ததால் எந்த மொக்கையை போடுவது என்று மொக்கையாய் வான் பார்த்து சிந்தித்ததிலேயே நேரம் மொக்கையாய் போனது. இருந்தாலும் ஏதாவது மொக்கை போட்டு சமாளிக்க வேண்டியதுதான். அடுத்த பதிவு அக்காக்களுக்காக….




17 comments:
சோதனை...கடமை...
தம்பீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீ
செளக்கியமா..? நல்லா இருக்கியா..? நல்லாவே இரு..
உன்னோட 'தேவதை' அழகுதான்.. ஆனா அந்தப் படத்தைப் பத்தி இவ்ளோ அடுக்குறது டூ மச்சு..
'தில்வாலே' சூப்பர்தான்.. ஆனா அதையே பார்த்துக்கிட்டிருந்தா உனக்கு ஏதாவது 'மேனியா' புடிச்சுக்கும்.. அதுனால எல்லாத்தையும் ஒரு நாள் கைவிட்டுத்தான் ஆகணும்.. விட்ரு.
அப்புறம் தனிக்காட்டு ராஜா படத்தைப் பத்தி விமர்சனம் எப்ப எழுதப் போற..?
பாதிப் பேரு அந்தப் படம் பார்த்திருக்க மாட்டாங்க.. தாராளமா நீ எழுதலாம்.
கடைசியா உன்னோட குரு, அதுதான் சிரிக்க மட்டும் வைத்தவர்ன்னு பேர் போட்டு போட்டோ மாட்டி வைச்சிருக்கியே.. அந்த மனுஷன் உடம்பு சவுகரியமில்லாம வீட்ல படுத்திருக்காரு.. அவர் உடம்பு சரியாகி நல்லாயிருக்கணும்னு முருகனை வேண்டிக்க.. நானும் வேண்டிக்கிறேன்..
//காதலன் அவளைத்தேடி புறப்பட்டு அவ கல்யாணம் செஞ்சுக்கப்போற அந்த ஊருக்கு காதலிய கூட்டிட்டுப்போக வந்துடறான்.//
நீங்க வேற... அப்டியெல்லாம் தேடிப் போயிட்டாலும்... சந்தர்ப்பம் பாத்து தெளிவா நமக்கு ரிஸ்க் குடுப்பாங்க சம்பந்தப் பட்ட பெண்கள்...
உங்களுக்கு பெண்களைப் பற்றி இன்னும் சரியா தெரியலைன்னு நெனக்கிறேன்..படத்துக்குத் தான் நீங்க சொல்லறது சரியா இருக்குமுங்கோ...
ஹிஹி...
மத்தவங்களுக்கு பயந்தெல்லாம் வேணாம்ன்னு சொல்லறதில்லை.. தன்னோட விருப்பத்தை வெளிக்காட்டிக்கிட்ட அப்புறம்,வேற நல்ல ஆஃபர் வந்துச்சுன்னா இருக்கவே இருக்கு,இந்த வீட்டுல பயம்/பாசம/பிடிக்கலை போன்ற ஆயுதங்கள்.அனுபவப்பட்ட நண்பர்கள் சொல்லறாங்கல்ல... :))))
படம் பார்த்த உணர்வு. நல்லா விமர்சனம் எழுதியிருக்கிங்க.. :)
<<< சீனி கம்: ராகதேவன் இசையில முதல் ஹிந்திப்படம்.>>>
?????????
r u sure??
படமா பாத்துத்தள்ளரீங்களாக்கும்.. தில்வாலே பாட்டேல்லாம் சூப்பராச்சே.. அதும் ஜராஸா ஜ்ஜூம்லும்ம்மே.. ம் காதலுக்காக ரிஸ்கா.. காதலே ரிஸ்க் தானே.. அதான் யாரோ எழுதினாங்களே.. அணுஅணுவாய் சாவதென்று முடிவெடுத்துவிட்டபின்
காதல் சரியான வழிதான்
அப்படின்னு
//அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது..///
என்னது இந்த படம் ரிலீஸ் ஆயிட்டா? எப்ப? அட பாவிகளா இப்ப எல்லாம் ஆனந்தவிகடன், குமுதத்துக்கு எல்லாம் பிர்வீயு ஷோ போடாம வலைபதிவர் (பெருந்தலைகளுக்கு) போட்டு காட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
படம் எப்படி மக்கா 100 நாள் ஓடுமா?
உங்களுக்கு சினிமா வா.....ரமா. இத்தனை படமா? எத்தனை நாள்ல பார்த்தது?
பாப்பா பேரு மல்லிகா கபூரா!?
பாத்திரூவோம்.
"காதலுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்....!?"
* * * * * *
காதலி ஓகே சொல்லலைனா
வேற ட்ரை பண்ணலாம்
இல்லைனா
போட்டு தள்ளலாம்!!
நாக்குக்கு கீழ ப்ளேடு பீஸ் வெச்சு மூஞ்சில கோடு இல்ல ரோடே போடலாம்
ஆசிட் அட்டாக் பண்ணலாம்.
ஆம்னில அள்ளிகிட்டு போயி......
இப்பிடி எல்லாம் தவறான ஐடியா கொடுக்காததற்கு மிக்க நன்றி சென்ஷி
உண்மைத்தமிழன் அண்ணா... நான் சௌக்கியமா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.
தேவதைக்காக எழுத ஆரம்பிக்கறப்ப அங்கங்க மானே, தேனே, பொன்மானே போடுறதெல்லாம் சகஜம்தானே... :))
தில்வாலே பார்த்துல்லாம் நமக்கு மேனியா பிடிக்க சான்ஸ் இல்ல. அதுக்கு முன்னாடியே நாங்க அப்படித்தான்.. :))
கண்டிப்பா தனிக்காட்டு ராஜாவப் பத்தி எழுதனும். ஆனா தமிழ்ல ச்ரி வர மாட்டேங்குது. அதுக்கு எதை டைப் பண்றதுன்னு தெரியல. தேவி, பிரியான்னு அடிச்சா சரியில்ல பாருங்க :))
குருவுக்காக நானும் வேண்டிக்கிட்டேன். உங்க வேண்டுதலுக்கும் நன்றி.
அன்பு தம்பி
சென்ஷி
நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியல ரசிகன். நாம நம்மளையே முழுசா புரிஞ்சுக்க முடியாம இருக்கறப்ப பெண்களை புரிஞ்சுக்க முடியலன்னு சொல்றது தப்பு :))
பயங்கறது இங்க நம்பிக்கையோட சம்மந்தபட்டது. அவங்க நம்பிக்கைய நீங்க சரியா நம்பி கை கொடுக்கலைன்னா அப்புறம் அண்ணா, டாட்டா பை பை தான் :))
கமெண்டுக்கு நன்றி :))
//Anonymous said...
<<< சீனி கம்: ராகதேவன் இசையில முதல் ஹிந்திப்படம்.>>>
?????????
r u sure??//
இல்லீங்க தலைவா...!
படுபயங்கரமா ஸ்லிப் ஆகிடுச்சு :((
சுட்டி காட்டி உதவிய வினையூக்கிக்கு நன்றி ;))
பாட்டு எல்லாமே கலக்கல்தான். ரொம்ப நாளா நெனைச்சுட்டு இருந்து இப்பத்தான் சிடி வாங்கிட்டு வந்தேன். ரிஸ்க் எடுக்கறதுன்னா எங்களுக்கெல்லாம் ரஸ்க் சாப்பிடுறா மாதிரின்னு சிலபேர் (நிறைய பேரு) கெளம்பி வந்துக்கிட்டு இருக்காங்க :))
தினமும் கொஞ்ச நேரம் படம் பார்க்கணும்னு முடிவு செஞ்சு முழு படத்தையும் முடிச்சுட்டு தான் தூங்கவே போறேன் சுல்தான் சார்... :))
எழுத நினைச்சது எல்லாம் தூங்கிட்டு இருக்கு அதான் இந்த பதிவு :))
ஆஹா சிவாண்ணே... நீங்க சீயான மிஞ்சிடுவீங்க போலருக்கே :))
பார்த்துண்ணே... என்னைய காலி பண்ணிட போறாங்க :))
//
சென்ஷி said...
ஆஹா சிவாண்ணே... நீங்க சீயான மிஞ்சிடுவீங்க போலருக்கே :))
பார்த்துண்ணே... என்னைய காலி பண்ணிட போறாங்க :))
//
என்னது அண்ணனா நாந்தான் உங்களுக்கு கடேசி தம்பி
ச்சின்ன பையன்.
வேணும்னா என் ப்ளாக பாருங்க!!
\\சீனி கம்: ராகதேவன் இசையில முதல் ஹிந்திப்படம்.\\
மாப்பி...ராஜா இதுக்கு முன்னாடியே ஹிந்தியில் படம் பண்ணிட்டாரு..
Post a Comment