Tuesday, March 04, 2008

கவுஜ... கவுஜ...


வானத்தின் நிறம் நீலம்
வானுக்கு கீழோ பாலம்
டெய்லி குறையுது காலம்
கடேசில அடிப்பாங்க மோளம்

கூவத்துல இருக்குதுடா தண்ணி
சூடு பண்ணா கெடைக்கும்டா வெந்நி
டிவில தெரியுறா ஒரு கன்னி
இங்க இவ யாருக்குடா அண்ணி

வெயிலுக்கு நல்லதுடா மோரு
சூடானா அடி ச்சில் பீரு
ரோட்டு மேல போகுதுடா காரு
அவளை தினமும் பாக்கலைன்னா போரு

நாய் ஆட்டுதுடா வால
பூனை சுத்துதுடா கால
கழுத்துல போடுறாங்க மால
என்கிட்ட காட்டாத உன் வேல

பிப்ரவரி மாசம்னா லவ்வு
பிகர் ஏதும் சிக்கிட்டா ஜிவ்வு
மொக்கயா மாட்டுச்சுனா ஜவ்வு
ஏதுமே கிடைக்கலயா போய் சாவு!

அழகான பொண்ணு பாக்குறா ஒரு தினுசா
அவ சமையல்ல யூஸ் பண்றா கசகசா
சங்கம்ன்னு சொன்னா அது வவாச
தல சரித்திரத்த சொல்றது பாகச

உண்டான் கொடுத்தான் வந்தானை தானறிய
கண்டான் தள்ளும் சூழ்கடல் மடியோரம்
வெந்தான் கிடைத்து சூடினான் மனதறிய
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்

37 comments:

சென்ஷி on Tuesday, March 04, 2008 11:27:00 PM said...

எழுத மறந்த சிறு குறிப்பு:

அமீரகத்தில் வெயில் ஆரம்பமாகிவிட்டது :)))

ஆயில்யன் on Tuesday, March 04, 2008 11:27:00 PM said...

//டிவில தெரியுறா ஒரு கன்னி
இங்க இவ யாருக்குடா அண்ணி//

எனக்கு வேணாம்ப்பா :))

சென்ஷி on Tuesday, March 04, 2008 11:30:00 PM said...

அட ஆண்டவா!
ஆயில்யன் நீங்களுமா... :)))

ஆயில்யன் on Tuesday, March 04, 2008 11:33:00 PM said...

//சென்ஷி said...
அட ஆண்டவா!
ஆயில்யன் நீங்களுமா... :)))
//

என்ன நீங்களுமா!

ஏன் நான் ப்ரீயா இருக்கும்போது இங்க கும்மியடிக்க வரக்கூடாதா :)))

காட்டாறு on Tuesday, March 04, 2008 11:35:00 PM said...

அடடே அடடே.. என்னவொரு ரைம்ங்... இதை படிச்சிட்டு வரவா இத்தனை நாள் ஒழிஞ்சி இருந்தீங்க?

சென்ஷி on Tuesday, March 04, 2008 11:36:00 PM said...

அப்ப சரி... ஆனா நீங்க தனியாத்தான் ஆட வேண்டியிருக்கும். :))

ஆயில்யன் on Tuesday, March 04, 2008 11:38:00 PM said...

//சென்ஷி said...
அப்ப சரி... ஆனா நீங்க தனியாத்தான் ஆட வேண்டியிருக்கும். :))
//

ஏன் உங்க மாப்பி கிதர் ஹே????

சென்ஷி on Tuesday, March 04, 2008 11:38:00 PM said...

ஆஹா காட்டாறு அக்கா!
உள்குத்து குத்துறீங்கன்னு நெனைச்சா இப்படி கும்மாங்குத்தா குட்டிட்டீங்க :))

சென்ஷி on Tuesday, March 04, 2008 11:38:00 PM said...

அவரு இன்னிக்கு பிஸி போல :((

காட்டாறு on Tuesday, March 04, 2008 11:39:00 PM said...

//மொக்கயா மாட்டுச்சுனா ஜவ்வு
ஏதுமே கிடைக்கலயா போய் சாவு!
//

அடப்பாவி! என்ன கொலவெறி இது?

//அழகான பொண்ணு பாக்குறா ஒரு தினுசா
அவ சமையல்ல யூஸ் பண்றா கசகசா
//
இது இன்னமும் நம்திருநாட்டுல நடக்குதுங்களா?

//
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்
//
அடி ஒன்னும் பலமா இல்லையே?

கோபிநாத் on Tuesday, March 04, 2008 11:39:00 PM said...

\\உண்டான் கொடுத்தான் வந்தானை தானறிய
கண்டான் தள்ளும் சூழ்கடல் மடியோரம்
வெந்தான் கிடைத்து சூடினான் மனதறிய
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்\\

சார்...சார் சென்ஷி சார்...எப்படி சார் இப்படி எல்லாம் ;))

வரும் வெள்ளி திருவிழான்னு கேள்விப்பட்டேன் அப்படியா!

ஆயில்யன் on Tuesday, March 04, 2008 11:47:00 PM said...

//வரும் வெள்ளி திருவிழான்னு கேள்விப்பட்டேன் அப்படியா!//

ம்
ம்

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோமா என்ன ஸ்பெஷல் ??? :))))

கயல்விழி முத்துலெட்சுமி on Tuesday, March 04, 2008 11:49:00 PM said...

கடைசிப்பாராவுக்கு உரை கிடைக்குமா அய்யா.. :)

சென்ஷி on Wednesday, March 05, 2008 12:02:00 AM said...

//காட்டாறு said...
//மொக்கயா மாட்டுச்சுனா ஜவ்வு
ஏதுமே கிடைக்கலயா போய் சாவு!
//

அடப்பாவி! என்ன கொலவெறி இது?/////////

தற்கொல வெறி :))

//அழகான பொண்ணு பாக்குறா ஒரு தினுசா
அவ சமையல்ல யூஸ் பண்றா கசகசா
//
இது இன்னமும் நம்திருநாட்டுல நடக்குதுங்களா?/////////////////

சும்மா கவுஜயிலயாச்சும் வாழட்டும்மேன்னுதான் :))

//
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்
//
அடி ஒன்னும் பலமா இல்லையே?

இப்ப வரைக்கும் ஒண்ணும் தெரியல. உள்காயமா இருக்கும் போல :))

சென்ஷி on Wednesday, March 05, 2008 12:03:00 AM said...

//கோபிநாத் said...
\\உண்டான் கொடுத்தான் வந்தானை தானறிய
கண்டான் தள்ளும் சூழ்கடல் மடியோரம்
வெந்தான் கிடைத்து சூடினான் மனதறிய
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்\\

சார்...சார் சென்ஷி சார்...எப்படி சார் இப்படி எல்லாம் ;))

வரும் வெள்ளி திருவிழான்னு கேள்விப்பட்டேன் அப்படியா!//


வாடா மாப்பி, இப்பத்தான் உன்ன ஆயில்யன் தேடுனாரு :))

வெள்ளின்னாலே விசேஷம்தானே. அதுவும் இந்த வெள்ளி கோபி ரொம்ப நாளைக்கு அப்புறம் அபி அப்பாவ பார்க்க போறது செம்ம விசேஷம் :)0

பத்த வச்சாச்சுல்ல :))

சென்ஷி on Wednesday, March 05, 2008 12:05:00 AM said...

//ஆயில்யன் said...
//வரும் வெள்ளி திருவிழான்னு கேள்விப்பட்டேன் அப்படியா!//

ம்
ம்

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோமா என்ன ஸ்பெஷல் ??? :))))//

வழக்கமான விசேஷங்கள் தான். கூட இந்த முறை கோபியும் வர்றது அநியாயத்துக்கு நல்ல சகுனமா எனக்கு தெரியுது :)))

சென்ஷி on Wednesday, March 05, 2008 12:06:00 AM said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
கடைசிப்பாராவுக்கு உரை கிடைக்குமா அய்யா.. :)//

ஆஹா... எல்லோருமே குருப்பாத்தான் கெளம்பியிருக்கீங்களா.... :)))

ILA(a)இளா on Wednesday, March 05, 2008 12:24:00 AM said...

கவுஜ'ன்னு தலைப்புல போட்டு இருக்கே.. எங்கே இருக்கு?

ஆயில்யன் on Wednesday, March 05, 2008 12:29:00 AM said...

//அபி அப்பாவ பார்க்க போறது செம்ம விசேஷம் :)0

பத்த வச்சாச்சுல்ல :))
//

வியாழக்கிழமை எரியுமோ :)))

பாச மலர் on Wednesday, March 05, 2008 1:41:00 AM said...

நல்லாத்தானே இருந்தீங்க சென்ஷி..என்னாச்சு திடீர்னு..

Praveena Jennifer Jacob on Wednesday, March 05, 2008 7:23:00 AM said...

\\பிப்ரவரி மாசம்னா லவ்வு
பிகர் ஏதும் சிக்கிட்டா ஜிவ்வு
மொக்கயா மாட்டுச்சுனா ஜவ்வு
ஏதுமே கிடைக்கலயா போய் சாவு!\\

ROTFL:)

are you related to T.Rajendran???

தமிழ் பிரியன் on Wednesday, March 05, 2008 9:05:00 AM said...

சென்ஷி ! உங்களால மட்டும் எப்படி இந்த மாதிரி மொக்கை கவுஜ எல்லாம் போட முடியுது :))

அருட்பெருங்கோ on Wednesday, March 05, 2008 7:10:00 PM said...

/அழகான பொண்ணு பாக்குறா ஒரு தினுசா
அவ சமையல்ல யூஸ் பண்றா கசகசா
சங்கம்ன்னு சொன்னா அது வவாச
தல சரித்திரத்த சொல்றது பாகச/

:)))

சென்ஷி on Wednesday, March 05, 2008 10:46:00 PM said...

//ILA(a)இளா said...
கவுஜ'ன்னு தலைப்புல போட்டு இருக்கே.. எங்கே இருக்கு?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... :(((

சென்ஷி on Wednesday, March 05, 2008 10:46:00 PM said...

//பாச மலர் said...
நல்லாத்தானே இருந்தீங்க சென்ஷி..என்னாச்சு திடீர்னு..//

முதல் பின்னூட்டத்துல சிறுகுறிப்ப பாருங்க :))

சென்ஷி on Wednesday, March 05, 2008 10:48:00 PM said...

//Praveena Jennifer Jacob said...
\\பிப்ரவரி மாசம்னா லவ்வு
பிகர் ஏதும் சிக்கிட்டா ஜிவ்வு
மொக்கயா மாட்டுச்சுனா ஜவ்வு
ஏதுமே கிடைக்கலயா போய் சாவு!\\

ROTFL:)

are you related to T.Rajendran???//

எல்லோருமே குட்டணும்ன்னு முடிவு செஞ்சப்புறம் தலைய காட்டித்தானே ஆகணும் :))

சென்ஷி on Wednesday, March 05, 2008 10:49:00 PM said...

//தமிழ் பிரியன் said...
சென்ஷி ! உங்களால மட்டும் எப்படி இந்த மாதிரி மொக்கை கவுஜ எல்லாம் போட முடியுது :))//


:))) அதுவ்வ்வா வருதுங்க :)))

சென்ஷி on Wednesday, March 05, 2008 10:50:00 PM said...

//அருட்பெருங்கோ said...
/அழகான பொண்ணு பாக்குறா ஒரு தினுசா
அவ சமையல்ல யூஸ் பண்றா கசகசா
சங்கம்ன்னு சொன்னா அது வவாச
தல சரித்திரத்த சொல்றது பாகச/

:)))//

ஸ்மைலிக்கு நன்றி அருட்பெருங்கோ :)))

மங்களூர் சிவா on Thursday, March 06, 2008 12:26:00 AM said...

ஜூப்பர் ஜூப்பர்!!

சிறில் அலெக்ஸ் on Thursday, March 06, 2008 3:43:00 AM said...

//உண்டான் கொடுத்தான் வந்தானை தானறிய
கண்டான் தள்ளும் சூழ்கடல் மடியோரம்
வெந்தான் கிடைத்து சூடினான் மனதறிய
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்//

ஏதோ சூப்பர் மேட்டர்ணு தோணுது ஆனா புரியல.. கோனார் உரை போடவும்

சுல்தான் on Thursday, March 06, 2008 5:26:00 PM said...

ஓ! கவுஜ ன்னா இதானா?

நிஜமா நல்லவன் on Friday, March 07, 2008 7:48:00 PM said...

தூக்க கலக்கத்துல எதையோ கிளிக் பண்ணி இங்க வந்து விழுந்து கவிதை(?)ய படிச்சி ஒரே மண்டைகொடைச்சலா இருக்கு. நல்லா இருங்க.

சென்ஷி on Friday, March 14, 2008 1:11:00 PM said...

தேங்க்ஸ் மங்களூர் சிவா :))

சென்ஷி on Friday, March 14, 2008 1:13:00 PM said...

//சிறில் அலெக்ஸ் said...
//உண்டான் கொடுத்தான் வந்தானை தானறிய
கண்டான் தள்ளும் சூழ்கடல் மடியோரம்
வெந்தான் கிடைத்து சூடினான் மனதறிய
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்//

ஏதோ சூப்பர் மேட்டர்ணு தோணுது ஆனா புரியல.. கோனார் உரை போடவும்//

சூப்பர் மேட்டர்தான். ஆனா கோனார் நோட்ஸ் போடற பொறுப்பு, ரைட்ஸ் அய்யனார்கிட்ட இருக்குது :))

சென்ஷி on Friday, March 14, 2008 1:15:00 PM said...

//சுல்தான் said...
ஓ! கவுஜ ன்னா இதானா?//

இது மட்டுமில்ல சுல்தான் ஜி, இன்னும் இருக்கு.. அத யாராவது பின்னூட்ட்டத்துல கண்டினியு செய்வாங்கன்னு பார்த்தா யாரயும் காணோம் :))

சென்ஷி on Friday, March 14, 2008 1:16:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
தூக்க கலக்கத்துல எதையோ கிளிக் பண்ணி இங்க வந்து விழுந்து கவிதை(?)ய படிச்சி ஒரே மண்டைகொடைச்சலா இருக்கு. நல்லா இருங்க.//

ஒத்துக்கறேன்.. இப்ப ஒத்துக்கறேன்..

நீ நிஜமாவே நல்லவந்தான் :))

ஆசிப் மீரான் on Saturday, July 19, 2008 9:34:00 AM said...

//கூவத்துல இருக்குதுடா தண்ணி
சூடு பண்ணா கெடைக்கும்டா வெந்நி
டிவில தெரியுறா ஒரு கன்னி
இங்க இவ யாருக்குடா அண்ணி//

நல்லவேளைப்பா!! உன் ரைமிங்கை இத்தோட நிறுத்துக்கிட்டே. நான் பயந்தே போயிட்டேன்

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com