Tuesday, March 25, 2008

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை




என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!




எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?




மனிதனின் ஆதாரப்பூர்வ நோக்கங்களை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவன் எந்த தேசத்திலிருந்து பிரிந்து வந்தவன் ஆராய்ச்சிகள் அலறவிடுகின்றன. ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்.




எதேச்சையாக கிடைத்த தகவலில் நாம் நமது மனிதத்தன்மையை உணர வைக்க மிக எளிதான, பதில் சொல்லத்தக்க மூன்று கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த பதிலில் உங்கள் மனிதத்தன்மை எத்தனை சதவீதம் என்று கனகச்சிதமாக கிடைப்பது என்பது வியப்புக்குரிய சத்தியமான விஷயம்.




நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு அதே உள்ளுணர்வு எவரையும் வெறுக்கும்போதோ அல்லது கொலையே செய்ய துணியும்போதோ எந்த விதத்தில் சேரும்.. சிந்திக்க வேண்டும்.




நமது மனிதத்தன்மையின் சதவீதத்தை அளக்க சொல்லும் அந்த மூன்று கேள்விகள் கீழே..




1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...




(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை




2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...




(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை




3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...




(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை




இந்த 3 கேள்விகளுக்கும் சிலருக்கு ஒரே பதிலாகவும் அமையலாம். வெவ்வேறு பதிலாகவும் அமையலாம். இதைப்பொறுத்தே உங்களைப்பற்றிய சுயபரிசோதனையின் முடிவுகள் மாறுபடும்.




இதில் குறிப்பிடதகுந்த விஷயமாய் நான் கருதுவது.. இதில் வெறுக்கத்தக்க அல்லது எதிர்க்கத்தக்க எந்த குறிப்புகளும் அடங்குவதில்லை என்பதுதான். ஆயினும் முயற்சித்தல் நலம்.. பதில்களை சரிபார்க்கும்முன் உங்கள் விடைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு திறந்து பாருங்கள்... நீங்கள் எத்தனை சதவீதம் நல்லவர் என்பது உங்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கட்டும்...




பதில்களை இங்கு சரிபார்க்கவும்...




நல்ல மனிதர்களுக்கான அத்தனை வாழ்த்துக்களுடனும்...




சென்ஷி

21 comments:

ஆயில்யன். on Thursday, March 27, 2008 12:44:00 AM said...

அடப்பாவி மக்கா!
இப்படியெல்லாம் கூட யோசிச்சி யோசிச்சி பதிவீங்களோ :)

ஆயில்யன். on Thursday, March 27, 2008 12:54:00 AM said...

// ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்//

இது மேட்டர் :)

ஆயில்யன். on Thursday, March 27, 2008 12:55:00 AM said...

///காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

//
சந்தோஷமா இருக்கும் ஏன்னா நாம கேட்கறப்பத்தானே!
அனுபவிக்கிறப்பத்தாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப கஷ்டமா இருக்கும்னு நண்பன் சொன்னான்!

ஆயில்யன். on Thursday, March 27, 2008 12:55:00 AM said...

//மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...//

நல்லா அழகாக இருக்கான்னு தோணும்!
(ஆமாம் நண்பா உங்களுக்கு எப்படிதெரியும் மலரைப்பத்தி)

ஆயில்யன். on Thursday, March 27, 2008 12:55:00 AM said...

//இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...//

எனக்கு பயமா இருக்கும் காலையில எழுந்திரிப்போமா?
தமிழ்மணம் பாப்போமா?
கும்மி அடிக்க மேட்டர் இருக்குமான்னு ஏகப்பட்ட சிந்தனைகளாப்பா????

மங்களூர் சிவா on Thursday, March 27, 2008 1:22:00 AM said...

உன் பதிவை 'நம்பி' வந்து படிக்கிறப்பவே 100% நல்லவங்கன்னு தெரியாதா??

Wish u the same

நிஜமா நல்லவன் on Thursday, March 27, 2008 3:15:00 AM said...

ரொம்ப சீரியஸாக படித்து கேள்விகளை பார்த்து கொஞ்சம் குழம்பி பதிலை பார்த்தா..... ஏனையா உமக்கு இந்த கொலவெறி? எப்படியெல்லாம் சந்தோஷப்பட்டுக்கிறாங்க. ஆயிலும் நானும் பின்னூட்டமாவது போட்டோம். எத்தனை பேரு பார்த்துட்டு அப்படியே அப்பீட்டு ஆனாங்களோ?

நிஜமா நல்லவன் on Thursday, March 27, 2008 3:18:00 AM said...

//////ஆயில்யன். said...
///காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

//
சந்தோஷமா இருக்கும் ஏன்னா நாம கேட்கறப்பத்தானே!
அனுபவிக்கிறப்பத்தாம் ரொம்ப்ப்ப்ப்ப்ப கஷ்டமா இருக்கும்னு நண்பன் சொன்னான்!/////

ஆயிலு எந்த நண்பன் சொன்னான்?
பேருக்கு முன்னாடி ஊரு உள்ள நண்பனா?

நிஜமா நல்லவன் on Thursday, March 27, 2008 3:19:00 AM said...

/////ஆயில்யன். said...
//மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...//

நல்லா அழகாக இருக்கான்னு தோணும்!
(ஆமாம் நண்பா உங்களுக்கு எப்படிதெரியும் மலரைப்பத்தி)////


:):):):)

நிஜமா நல்லவன் on Thursday, March 27, 2008 3:21:00 AM said...

//////ஆயில்யன். said...
//இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...//

எனக்கு பயமா இருக்கும் காலையில எழுந்திரிப்போமா?
தமிழ்மணம் பாப்போமா?
கும்மி அடிக்க மேட்டர் இருக்குமான்னு ஏகப்பட்ட சிந்தனைகளாப்பா????////


ஆயிலு என்னைய மாதிரியே யோசிக்கிறீங்களே?

நிஜமா நல்லவன் on Thursday, March 27, 2008 3:22:00 AM said...

///நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!////


உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

நிஜமா நல்லவன் on Thursday, March 27, 2008 3:25:00 AM said...

////ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?///



ஆறறிவு இருக்கிறதால குரங்கை தவிர்த்து வேற வேற மிருக குணத்தையும் மனுஷன் சேர்த்துகிட்டான் போல.

நிஜமா நல்லவன் on Thursday, March 27, 2008 3:27:00 AM said...

சென்ஷி எதற்கும் கொஞ்ச நாள் தலைமறைவா இருங்க.

கோபிநாத் on Thursday, March 27, 2008 11:08:00 AM said...

ஒரு நல்லவனுக்கு இன்னொரு நல்லவன் கையால தான்........தெரியுமா!!

தருமி on Thursday, March 27, 2008 2:12:00 PM said...

பரவாயில்லையே .. போட்டு வாங்குனாலும் நல்ல சதவிகிதம் தான் கிடச்சிருக்கு.

என்னைய விட யாருக்கும் சதவீதம் கூட இருந்தா அவுகள பாக்கணும்.

கயல்விழி முத்துலெட்சுமி on Thursday, March 27, 2008 4:12:00 PM said...

மங்களூர் சிவா said...
உன் பதிவை 'நம்பி' வந்து படிக்கிறப்பவே 100% நல்லவங்கன்னு தெரியாதா??
//

பின்னூட்டம்ன்னா இது பின்னூட்டம்..
வழிமொழிகிறேன்..

லக்கிலுக் on Thursday, March 27, 2008 4:17:00 PM said...

//நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு //

என்ன கருமம்யா இது? :-(

இதுலே என்ன மெல்லிய தருணங்கள் இருக்கு?

aruna on Thursday, March 27, 2008 7:26:00 PM said...

இவ்வளோ சீக்கிரமாவா முட்டாள் தினம் கொண்டாடுறது???
கொஞ்சம் ஆர்வம் அதிகமாயிடுச்சின்னு நினைக்கிறேன்?
சரி சரி ...wish you the same!!!!
அன்புடன் அருணா

delphine on Friday, March 28, 2008 11:07:00 AM said...

happy FOOLS day ..

உண்மைத் தமிழன்(15270788164745573644) on Friday, March 28, 2008 11:37:00 AM said...

டேய் சாமிகளா.. தாங்கலடா உங்க லொள்ளு..

bharath on Tuesday, April 01, 2008 8:45:00 PM said...

மது கிண்ணம் திறப்பு விழா எப்போ?

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com