Saturday, June 07, 2008

உண்மைத்தமிழனின் புனிதப்போர் - திறனாய்வு


நமது சக வலைப்பதிவரான அண்ணன் திரு. உண்மைத்தமிழன் அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த புனிதப்போரின் விமர்சனம் வாசிக்கும் பேறு பெற்றேன். அந்த விமர்சன அடிப்படையில் அமைந்த திறனாய்வு என இதை கொள்வோர் கொல்லலாம். குறைப்போர் குரைக்கலாம்.

டிஸ்கி 1 : உங்கள் சுய புத்தி, சொல்புத்தி, புனைவு புத்தி, பொது புத்தி, சார் புத்தி, பித்தளை, ஈயம், ஷூ மற்றும் செருப்பையும் கழற்றி வைத்து கீழே படிக்கத்தொடருங்கள்.

அநேகமாய் இந்த குறும்படம் நடக்கக்கூடிய காலகட்டம் சமீபத்தில் எதிர்வரும் கி.பி. 2018க்கு பிறகு என்று நினைக்கிறேன். அதற்கு சற்று முன்பும் இருக்கக்கூடும். ஏனெனில் ஆண்கள் அனைவரும் இத்தனை தைரியமாய் பெண்களை எதிர்த்து கூட்டம் போடுவோர் இப்போது இல்லாத காரணத்தினால் அத்தகைய காலகட்டமென நினைக்கத்தோன்றுகிறது. ஆணாதிக்க பித்தளை பல்லை இளித்து அதனால் அழிந்து பெண் ஈயம் கோலோச்சும் காலகட்டத்திற்கான அவசியத்தை இந்த குறும்படம் பத்து நிமிடங்களுக்கு விவரிக்கிறது. இதை புனிதப்போர் அல்லது புனைவுப்போர் என்றும் கருத வேண்டிய கட்டாயம் கூடுகிறது.

காட்சிப்படுத்துதல் மேடையிலிருந்து தொடங்குவதாக விமர்சன குறிப்பு கூறுகிறது. இங்கு மேடை என்பது ஆணாதிக்க சமுதாய மேம்பாட்டு கட்டமாக நாம் கொள்ளவேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பு தராது ஆண்கள் கூட்டத்தில் வெறும் ஆறு பேருக்கு மட்டும் மேடையில் அமர வைத்திருக்கும் காட்சியமைப்பு அண்ணன் உண்மைத்தமிழன் தீவிர முருக ஈடுபாடு கொண்டிருப்பதை பறை சாற்றும் விஷயமாகும். ஆறுமுகம், ஆறுபடைவீடு என்ற தமிழ்க்கடவுளின் நாம வழிபாட்டு மந்திரத்தை நாம் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆண்களுக்காக முதலில் பேசத்தொடங்குபவர் (யார் கண்ணன்), பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துவிட்டதைப் பற்றி பேசுகிறார். பெண்ணாதிக்க சமுதாயத்தில் இப்படி பேச அதுவும் மேடையில் பேச மிக தைரியம் வேண்டும். அடுத்து வருபவர்களும் பெண்ணாதிக்க சமுதாயத்தை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர். பெண்களை மூட்டைப்பூச்சி என்று வருணனை தருவதாக குறிப்பிடுகிறார். ஆண்களின் ரத்தம் உறிஞ்சுவதால் அவர்களை நசுக்க வேண்டும் என்று கர்ஜிக்கிறார்.

ஆணாதிக்க காலகட்டத்தில் மகளிரை கரப்பான் பூச்சிக்கு பயந்தது போல் குறிப்பிட்ட சமூகத்தில் அவர்களை அதற்கும் கீழே மூட்டைப்பூச்சிகளாக்கி இறக்கைகளை ஒடித்தது பெண்கள் ஆணகளை விட தாழ்ந்தவர்களே என்ற கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. பெண்கள் கரப்பானுக்கு பயந்த உவமானம் ஆண்களாவது சாத்தியம். ஆண்களை கரப்பான் பூச்சிகள், அவர்களின் மீசைகள் மொசுக்கட்டைகள் என்ற பெண்களின் பேச்சுக்கள் நியாயப்படுத்தலின் எதிர்ப்பக்கத்தை ஈடுகட்டுகிறது. கி.பி. 2018ல் பெண்கள் ஆண்களுக்கு பயந்தது ஒழிந்தது போல் கரப்பான்களின் தாக்குதலுக்கும் ஈடு கொடுத்தார்களா என்ற கேள்வி பூச்சியாய் மனதுக்குள் ஓடுகிறது.

இப்படி ஒவ்வொருவரும் பேசிமுடித்து அமரும் முன் அவர்களுக்கு மோர், இளநீர், பெப்சி மற்றும் கோக் வழங்கப்படுகிறது. மோரின் அவசியம் போதையை குறைப்பதற்காக கொடுக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. ஆயினும் மற்ற உப பானங்கள் கலந்து கட்டுதல் அதாவது மிக்சிங் எனப்படும் வகைக்கு உபயோகப்படும் என்பது டாஸ்மாக் அறிந்த உண்மை. இளநீர் நமது பண்பாட்டு கலாச்சாரத்தை கட்டிக்காப்பாற்ற காட்டியிருக்கக்கூடும்.

கடைசியாக வருபவர் மற்றவர்க்கு எதிர்மாறாக பெண்கள் சிறந்தவர்களென்றும், நமக்கு சமமானவர்களென்றும் பேசுகிறார். இதன் காட்சிமூலம் நமக்கு விரித்துச்சொல்லும் உண்மை இன்னும் எட்டப்பர்கள் இறக்கவில்லை. வம்சாவழியாக ஏதோ ஒரு இடத்திலிருந்து விரிவை நோக்கி நகர்கின்றனர் என்பதாகிறது. ஆயினும் இதில் இயக்குநர் தேர்ந்தவராக தனது ஆணாதிக்க கருத்தை உட்திணிக்கும் பொருள் - பெண்களுக்கு சமமாக ஆண்களை சொல்லும் நோக்கில் ஆண்கள் இன்னும் கைகளை மேலே தூக்கிக்கொண்டுதானிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் அது சரணடையும் கோணியா அல்லது சாக்கா என்பது விளங்க முடியாத மறைபொருள் கருத்தாக காணப்படுகிறது.

கடைசியாகப் பேசியவரை எதிர்த்து கூட்டத்தில் குரல்களும் முன்னால் சில பாட்டில்களும் வைக்கப்படுகின்றன. கூட்டத்திலிருந்து ஒரு குரல் மவனே உனக்கு ஆசிட்தான் என்று கூக்குரலிடுகிறது. இதை நாம் சற்று விரிவாக தள்ளி அமர்ந்து தம்மடித்துக்கொண்டு சிந்திக்கும்போது பலப்பல உண்மைகள் உணர முடியும். அந்த காலகட்டத்தில் அதாவது பெண்ணியம் உயர்ந்து கிடக்கும் எதிர்காலத்தில் பெண்ணை ஆதரிப்பவரை அடிக்க இயலாத கையாலாகாத தனத்திலேயே ஆண் சமூகம் வீழ்ந்து கிடக்கிறது என்ற உண்மை நம் நெஞ்சை சுடும். சிகரெட் தீர்ந்து போகப்போவதால் இப்போது என் விரலும் சுடுகிறது. ஆயினும் மேடைப்பேச்சுக்கெல்லாம் கை தட்டும் நாகரீக போக்கு அந்த காலகட்டத்தில் வழக்கொழிந்து கொஞ்சமாவது சிந்தித்து மேடையிலிருப்பவரை எதிர்த்து குரல் கொடுக்கும் அம்சம் காணப்படுவது சிறப்பு.

இப்படத்தில் சிறப்பம்சமாக குறிப்பிட்ட வகையில் ஒன்று நடித்தவர்களின் முகம் மறைக்கப்பட்டதுதான். முகம் தெரிந்தால் வீடு மறந்து, வீதியில் அலைய வேண்டிய துர்கதிக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் நடித்தவர்களும் முகம் காட்ட மறுத்திருக்கூடும். எனினும் தப்பித்தார்கள் என்று ஆசுவாசப்படுத்தலில் நிம்மதி பிறக்கிறது.

டிஸ்கி 2 : ஒவ்வொரு பதிவிலும் சென்று பதிவை சீர்தூக்கி, தளைதட்டி பின்னூட்ட மழை பொழியும் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு இந்த பதிவை காணிக்கையாக்குகின்றேன்.

விமர்சன பதிவு உதவி: அதிஷா

7 comments:

ILA on Saturday, June 07, 2008 12:55:00 AM said...

Good review, insisting to watch this short film. let me try to grab a copy from him during my india visit.

ஆயில்யன் on Saturday, June 07, 2008 12:59:00 AM said...

//பெண்களுக்கு சமமாக ஆண்களை சொல்லும் நோக்கில் ஆண்கள் இன்னும் கைகளை மேலே தூக்கிக்கொண்டுதானிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் அது சரணடையும் கோணியா அல்லது சாக்கா என்பது விளங்க முடியாத மறைபொருள் கருத்தாக காணப்படுகிறது///

:))

முரளிகண்ணன் on Saturday, June 07, 2008 8:36:00 AM said...

\\வெறும் ஆறு பேருக்கு மட்டும் மேடையில் அமர வைத்திருக்கும் காட்சியமைப்பு அண்ணன் உண்மைத்தமிழன் தீவிர முருக ஈடுபாடு கொண்டிருப்பதை பறை சாற்றும் விஷயமாகும்.\\

ரூம் போட்டு யோசிச்சீங்களா?

அதிஷா on Saturday, June 07, 2008 9:21:00 AM said...

படத்த அலசி பிழிந்து துவைத்து காய போட்டுவிட்டீர்களே

நிஜமா நல்லவன் on Saturday, June 07, 2008 10:04:00 AM said...

பதிவு முழுவதும் படித்துவிட்டேன்:)

புகழன் on Sunday, June 08, 2008 11:10:00 PM said...

நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

நீங்க நல்லவரா? கெட்டவரா?

நீங்க ஆணீயவாதியா? பெண் ஈய வாதியா?

சென்ஷி on Friday, June 13, 2008 12:03:00 PM said...

@ இளா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளா :)

@ ஆயில்யன்..

:))

@முரளி கண்ணன்..

:)) ஆமாங்க. ரூம்ல உக்காந்து யோசிச்சேன்.

@அதிஷா..

எல்லாம் உங்க பதிவு மகிமைதான் :)

@ நிஜமா நல்லவன்..

நன்றி அண்ணே :))

@புகழன்...

தெரியலயேப்பா :)

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com