Monday, July 07, 2008

காமக்கதைகள்.... வகை: கூடுதல், வரிசை : 111, பிரிவு : 420


அந்த வனத்தில் சூரியனின் ஒளியை உள்ளே விழ விடாது குடையாய் மாறியிருந்த மரங்களுக்கிடையே கிடைத்த‌ இடைவெளிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ளும் சாம‌ர்த்திய‌சாலியாய் வெளிச்ச‌ம் பூமியை முத்த‌மிட்டு ர‌சித்து விழுந்து ம‌கிழ்ந்தது.

மெல்லிய‌ காற்றின் அலைச்ச‌ல்க‌ள் இலைக‌ளின் நுனிக‌ளில் அம‌ர்ந்து ஊஞ்ச‌லாடிய‌து. சில்வ‌ண்டுக‌ளின் ரீங்கார‌ங்க‌ள் ஒரே ச‌ம‌ய‌த்தில் எழுந்து அட‌ங்கி அட‌ங்கி எழுந்து தொட‌ர்ந்து ப‌ற‌ந்து சென்ற‌து. எங்கோ தொலைதூர‌த்தில் பெய்கின்ற‌ ம‌லைய‌ருவி ஓசையின் ச‌ப்த‌த்துட‌ன் நிச‌ப்த‌ம் ச‌ற்று அடிப‌ட்டு செத்துப்போகும் நேர‌த்திலும் அமைதி க‌ட்டுக்குலையாம‌ல் இருந்த‌து. கிளிக‌ள் த‌ங்க‌ள் இணைக‌ளோடு சிறகுகளை சப்தப்படுத்தி ப‌ற‌ந்து சென்ற‌து.

ஒவ்வொரு ம‌ர‌த்தின் அடியிலும் செத்துப்போயிருந்த‌ ச‌ருகுக‌ள் காற்றின் உயிர்த்துடிப்புக‌ளை தன்மேல் ஏற்றி உயிர்த்து ம‌ரித்த‌து. அட‌ர்ந்த‌ ம‌ண்துக‌ள்க‌ள் ச‌ருகுக‌ளின் சாவை பொறுக்காம‌ல் தானே த‌ன்னைய‌ள்ளி தாவி ப‌ட‌ர்ந்த‌து. சில‌ ம‌ர‌ங்க‌ளின் அடியிலிருந்து த‌னியாய் வெடித்திருந்த‌ சிறு செடிக‌ளின் மஞ்சளும் நீலமும் சேர்த்து இதழ்களை கொண்ட பூக்க‌ள் ப‌ற்றுத‌லாய் ம‌ர‌த்தின் ம‌டியில் காற்றோடு த‌லைசாய்த்து முத்த‌ம் த‌ந்த‌து. ம‌ர‌த்தை சுற்றி பிணைந்திருந்த‌ கொடிக்கு சொரசொரக்கும் ம‌ர‌த்தின் ப‌ட்டைக‌ளைப் ப‌ற்றிய சந்தோஷத்தில் கொஞ்சம் க‌வ‌லையும் சேர்ந்திருந்த‌து.

எங்கிருந்தோ ப‌ற‌ந்து வ‌ந்த‌ காகம் ஒன்று மரங்களின் இடையே கிளைகளின் நடுவே புகுந்து வேக‌மாய் த‌ரையிற‌ங்கி மெதுவாய் நட‌க்க‌ ஆர‌ம்பித்த‌து. அத‌னை தொட‌ர்ந்து அடுத்த‌ காக‌மும் ம‌ண்ணில் இற‌ங்கிய‌து. அத‌னை தொட‌ர்ந்து அடுத்த‌ காக‌மும் அதற்கடுத்த காகமும் அதற்கடுத்தடுத்த காகங்களும் ம‌ண்ணில் இற‌ங்கிய‌ சில‌ நிமிட‌த்துளிக‌ள் முடிவ‌த‌ற்குள்ளாக‌ அந்த‌ இட‌ம் காக‌ங்க‌ளால் சூழ‌ப்ப‌ட்டு இருந்த‌து.

காகங்கள் கூட்டம் கலைந்த பின்னர் சிறிது நேர‌த்திற்கு முன்பு செத்துப்போயிருந்த‌ எலியின் உடலின் எலும்பின் மேல் ஒட்டியிருந்த சதையின் மிச்ச‌ங்க‌ளும் 5 அங்குல‌ அள‌வு கொண்ட‌ தோலும் ம‌ட்டுமே மிஞ்சியிருந்த‌து.

டிஸ்கி குதிப்பு 1: காமக்கதைகள் ம‌னித‌னுக்கு ம‌ட்டும்தான் என்ற‌ அதிகார‌ க‌ட்டுக்களை உதிர வைக்க‌ எழுதப்படிக்க தெரியாவிட்டாலும் காமம் & பசி என்பது காக்காய், குருவி மற்றும் இன்னபிற எல்லா விலங்குகளுக்கும் உண்டு என்ப‌தை மறவாமல் காகங்கள் கூடுதலாய் கூடிய இந்த முதல் க‌தையை செத்துப்போன எலிக்கு சம‌ர்ப்பிக்கிறேன்.

21 comments:

ஆயில்யன் on Monday, July 07, 2008 3:59:00 PM said...

// காமக்கதைகள் ம‌னித‌னுக்கு ம‌ட்டும்தான் என்ற‌ அதிகார‌ க‌ட்டுக்களை உதிர வைக்க‌ எழுதப்படிக்க தெரியாவிட்டாலும் காமம் & பசி என்பது காக்காய், குருவி மற்றும் இன்னபிற எல்லா விலங்குகளுக்கும் உண்டு என்ப‌தை மறவாமல் காகங்கள் கூடுதலாய் கூடிய இந்த முதல் க‌தையை செத்துப்போன எலிக்கு சம‌ர்ப்பிக்கிறேன்.//


எல்லா விலங்குகளுக்கும் உண்டு! :))
.



இது கொடூரமாய் இறந்த எலிக்கான அஞ்சலி :((

கயல்விழி முத்துலெட்சுமி on Monday, July 07, 2008 3:59:00 PM said...

செத்துப்போன சருகுகள் உயிர்பெறுகிறதா.. ??? மண் அதப்பாத்து தன் மேலே யே மண்னுபோட்டுக்குதா.. அய்யோ இதெல்லாம் நான் எங்கயும் படிச்சதே இல்லையே.. ரொம்ப நல்லாருக்கு.

வல்லிசிம்ஹன் on Monday, July 07, 2008 3:59:00 PM said...

senshe,
ஓஹோ இதுதான் கா.கதையா.
தமிழ்மணத்தில ஏன் இப்படிக் கதைகள் பெருக்கெடுத்து ஓடுதுனு பார்த்தேன்.:)

கயல்விழி முத்துலெட்சுமி on Monday, July 07, 2008 4:00:00 PM said...

என் கண்ணுல கண்ணீர் வரவழைச்ச டிஸ்கி... :(

ஆயில்யன் on Monday, July 07, 2008 4:01:00 PM said...

//மெல்லிய‌ காற்றின் அலைச்ச‌ல்க‌ள் இலைக‌ளின் நுனிக‌ளில் அம‌ர்ந்து ஊஞ்ச‌லாடிய‌து.//

//ஒவ்வொரு ம‌ர‌த்தின் அடியிலும் செத்துப்போயிருந்த‌ ச‌ருகுக‌ள் காற்றின் உயிர்த்துடிப்புக‌ளை தன்மேல் ஏற்றி உயிர்த்து ம‌ரித்த‌து.//


ரசிகனய்யா நீர்

சூப்பரூ :)))

கயல்விழி முத்துலெட்சுமி on Monday, July 07, 2008 4:02:00 PM said...

டிஸ்கி குறிப்புகேள்விப்பட்டிருக்கேன்.. இது என்ன குதிப்பு.. இதுவும் எதாச்சும்.. பி.ந வா..
அது என்ன எண்ணிக்கை போட்டு ஒன்னு தான் இருக்கு இன்னோரு குதிப்பு எங்க..

கோபிநாத் on Monday, July 07, 2008 6:03:00 PM said...

விரைவில் எலி பிரியாணி வாங்கி தருகிறேன் ;))

அய்யனார் on Monday, July 07, 2008 11:21:00 PM said...

அருமை :)

குறிப்பா முதல் பத்தி அட்டகாசம்

சென்ஷி on Tuesday, July 08, 2008 12:26:00 AM said...

@ ஆயிலண்ணே...

:)) வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஆயில்யண்ணே...

@ முத்துக்கா...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
செத்துப்போன சருகுகள் உயிர்பெறுகிறதா.. ??? மண் அதப்பாத்து தன் மேலே யே மண்னுபோட்டுக்குதா.. அய்யோ இதெல்லாம் நான் எங்கயும் படிச்சதே இல்லையே.. ரொம்ப நல்லாருக்கு.
//

ஆனாலும் இது ரொம்ப ஓவரூ... :))

@ வள்ளிம்மா...

//senshe,
ஓஹோ இதுதான் கா.கதையா.
தமிழ்மணத்தில ஏன் இப்படிக் கதைகள் பெருக்கெடுத்து ஓடுதுனு பார்த்தேன்.:)//

ஹா...ஹா...ஹா...

சென்ஷி on Tuesday, July 08, 2008 12:28:00 AM said...

மறுக்கா @ முத்துக்கா..

//கயல்விழி முத்துலெட்சுமி said...
டிஸ்கி குறிப்புகேள்விப்பட்டிருக்கேன்.. இது என்ன குதிப்பு.. இதுவும் எதாச்சும்.. பி.ந வா..
அது என்ன எண்ணிக்கை போட்டு ஒன்னு தான் இருக்கு இன்னோரு குதிப்பு எங்க..
//

:)) விரைவில் வரும்.

@ மாப்பி கோபி..

நீயும் இந்த கூட்டத்துல ஒருத்தனா... :))

@ அடர்கானகப்புலி அய்யனார்..

உங்க பின்னூட்டத்த படிச்சுட்டு காத்து அடிக்காமலே ஒரு அஞ்சு இஞ்ச் மேல பறந்துட்டு உக்கார்ந்துருக்கேன். :))

அனுஜன்யா on Tuesday, July 08, 2008 12:36:00 PM said...

சென்ஷி,

செம்ம அட்டகாசம். உங்கள் ஹாஸ்யத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

அனுஜன்யா

Sri on Tuesday, July 08, 2008 1:18:00 PM said...

:-) nalla irundhadhu anna..!!

rapp on Tuesday, July 08, 2008 4:55:00 PM said...

செம செம கலக்கல் பதிவு, குறிப்பா கடசீ பன்ச் சூப்பர்

சென்ஷி on Tuesday, July 08, 2008 10:58:00 PM said...

@ அனுஜன்யா...

வருகைக்கு நன்றி அனுஜன்யா.. வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :))

@ஸ்ரீ..

ரொம்ப நன்றி ஸ்ரீ

@ ராப்...

:)) தேங்க்ஸ் ராப் :))

தமிழன்... on Tuesday, July 08, 2008 11:34:00 PM said...

ஹையையோ...!!!//;)

தமிழன்... on Tuesday, July 08, 2008 11:35:00 PM said...

பதிவின் ஆரம்பம் பிடிச்சிருக்கு...

தமிழன்... on Tuesday, July 08, 2008 11:37:00 PM said...

///
ஒவ்வொரு ம‌ர‌த்தின் அடியிலும் செத்துப்போயிருந்த‌ ச‌ருகுக‌ள் காற்றின் உயிர்த்துடிப்புக‌ளை தன்மேல் ஏற்றி உயிர்த்து ம‌ரித்த‌து///

! நல்லாருக்கு...

பரிசல்காரன் on Wednesday, July 09, 2008 1:54:00 AM said...

என்னடா. நம்மாளு இன்னும் களத்துல இறங்கலியேன்னு நெனச்சென்! நடத்துங்க.. நடத்துங்க..


//பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அவ்ளோதான் சொல்லுவேன் :)//

இது எப்போ?

சரி.. நம்ம பக்கம் வராம போக்கு காட்றீங்கள்ல.. ஒம்பதாம் தேதி நம்ம பதிவைப் பாருங்க உங்களுக்கு ஒரு கேள்வி காத்திட்டிருக்கு. வந்து பார்த்துட்டு, பதிலை பதிவா போடுங்க!

Thamira on Wednesday, July 09, 2008 11:54:00 AM said...

ஏதாவது பின் நவீனத்துவத்தை ட்ரை பண்ணி பார்க்கலாமே. நடை ரொம்ப நல்லா வருதே உங்களுக்கு.! - இலைகளுக்கு நடுவே மழைத்துளிகள் ஒரு பாம்பைப் போல நழுவி நழுவி இறங்கி தரையைத் தொட எத்தனித்து மலர்ந்து கொண்டிருக்கையில்.. (அட போங்கப்பா..) எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு.!

பரிசல்காரன் on Wednesday, July 09, 2008 11:55:00 AM said...

நம்ம வீட்டுக்கு வாங்க.. ஒரு கேள்வி காத்துட்டு இருக்கு உங்களுக்கு..

சென்ஷி on Friday, July 11, 2008 9:10:00 PM said...

@ தமிழன்...

ரொம்ப நன்றி அண்ணா....

@ பரிசல்....

நானும் எட்டிப்பார்த்து ஏட்டிக்கு போட்டி செஞ்சாச்சுல்ல:)

@தாமிரா,...

:))))

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com