நாலு பதிவுல எழுத வேண்டிய பதில்களை ஈசியா ஒரே பதிவுல எழுதறது எவ்வளவு கஷ்டம்ன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். நிறைய எழுத வேண்டியிருந்தும் பதிவு பெருசாகறதால நானே எடிட் பண்ணிட்டேன். கேள்விகள் கேட்ட ஆயில்யனுக்கு என் நன்றிகள்..
1.தமிழ் வலைப்பதிவுகளில் கெமிஸ்டிரி வேணும்னு சொல்றாங்களே! அது பத்தி கெமிஸ்டிரி படிச்ச நீங்க ஏதாவது ஐடியா சொல்லமுடியுமா?
நான் படிச்ச கெமிஸ்டிரில வலைப்பதிவ பத்தி படிச்ச ஞாபகம் இல்ல. ஆனாலும் பொதுவா வலைப்பதிவுகள் பார்க்குறப்ப ஏற்கனவே எதிர்வினை, கிரியாஊக்கி, சோதனை முயற்சிகள் மற்றும் போதையை தரக்கூடிய ஆல்கஹால் அப்படின்னு நிறைய்ய வகைகள் இருக்குது. புதிய தனிமங்களா உருவெடுக்கற எல்லா தனிமங்களும் ஏதாவது ஒரு குழு வகையை சார்ந்ததா காணப்படுது. ஆதரவு நிலை, எதிர் நிலை குழுமத்துல நடுநிலைங்கறது மொக்கையா இருக்குதுங்கற எண்ணம் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். வெறும் புகை மூட்டத்தால மட்டும் காத்து கெளம்பாதுன்னு தெரிஞ்சுக்கிட்டவங்க நல்லாயிருக்காங்க. இரண்டு சேர்க்கை சரியில்லாத பதிவு வர்றப்ப கெளம்புற வாயுவின் அளவு தமிழ்மணத்த ரொம்ப பிரகாசமா காட்டுது. முக்கியமா தமிழ்மணத்துல வினையூக்கின்னு ஒரு பதிவர் உலா வர்றதும் கெமிஸ்டிரிக்கு சந்தோஷமான விஷயம்தான்.
எதிர்வினை : அய்யனார் பதிவுக்கு கண்டிப்பா எங்கேந்தாச்சும் இது கெளம்பும். இல்லன்னா இருக்கவே இருக்காரு குசும்பரு...
கிரியா ஊக்கி: சில மூத்த பதிவர்களை தாண்டி கும்மி பதிவர்களும் இந்த வகையில் இருக்குறது சந்தோஷமான விஷயம். பின்னூட்டங்களையும் நாம இதுல சேர்த்துக்கலாம்.
சோதனை முயற்சி: இந்த வார்த்தைக்கு தனியாக அர்த்தம் தேட வேண்டியது இல்லை.
ஆல்கஹால்: இப்போதைக்கு சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்களை படைக்கும் சினிமா நிருபர் குழு மற்றும் வீக் என்ட் ஜொள்ளு நண்பர்களின் தனி அடையாளம்.
சிரிப்பூட்டும் வாயு: வ.வா.சங்கம். மற்றும் சில புண்ணியாத்மாக்களின் பதிவுகள் அல்லது அதற்கு வரும் சூப்பரான பின்னூட்டங்கள்.
தொடர் வினை: உண்மைத்தமிழனின் பின்னூட்டங்கள்
எரிவாயு: தமிழ்மண சூடான இடுகைகளின் தலைப்புகள்
வலைப்பதிவ தாண்டி வலைப்பதிவர்கள் கிட்டயும் கெமிஸ்டிரி உண்டாகறத பத்தி கேட்கணும்னா என்னை விட விவரமானவங்க சொல்வாங்க.. :))
2.பின் நவீனத்துவ வாதியாக மாறிக்கொண்டிருக்கும் உங்களின் நடவடிக்கைகள் எப்படி கட்டமைக்கப்பட்டு உருவானது என்று கடும்சொற்பிரயோகமின்றி பிரக்ஞையோடு சொல்லுங்களேன்?
பின்நவீனத்துவம்ன்னா என்னன்னே முழுசா தெரியாத என்கிட்ட இப்படி ஒரு கேள்வியா...!? சரியாப்போச்சு.. டெல்லியில நடந்த சந்திப்புல முதன்முறையா ஒரு பதிவர் மகாபாரதம் பின்நவீனத்துவ எளக்கியம்ன்னு சொன்னப்ப ஆரம்பிச்ச தலைசுத்தல் அதுக்கப்புறம் ஒரு வாரம் வரைக்கும் அடங்காம இருந்தது. பின்நவீனத்துவத்துக்கு முன்னாடி கத்துக்க வேண்டிய விசயங்கள் நிறைய்ய்ய்ய்ய இருக்கறதால நான் ஜகா வாங்கலாம்ன்னு இருக்கேன்.
ஆனாலும் பின்நவீனத்துவ எழுத்துங்கறது இயல்புக்கு மாறான வாக்கியக்கோர்வைகள் மாறுபட்ட கோணங்களில் வெவ்வேறு வடிவங்களை பிரதிபலிக்கும் உணர்வின் விழுதுகள்ன்னு நான் டைப் அடிச்சா பிரக்ஞை இல்லாம போயிடும்ங்கற கவலை வர்றதால அத அப்படியே விட்டுடறேன்.
இதுதான் பின்நவீனத்துவமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு அடிக்கடி எட்டிப்பார்த்த சுகுணா திவாகர் மற்றும் அய்யனார் பதிவுகள்தான் எனக்கு முதல் வாசல்ன்னு சொல்லலாம். அய்யனார்கிட்ட ஒரு வாசகனா அறிமுகமாகி அப்புறம் நல்ல நண்பனாக மாறுனதுக்கு பிறகும் அவரை நேர்ல பார்த்தா கேட்க வேண்டிய கேள்விகள்ன்னு அரைடஜன் சேமிச்சு வச்சுருந்தேன். திருவிழா மாதிரியான கூட்டத்துக்கு மத்தியில அவர்கிட்ட அவரோட எழுத்துக்கள்ல காணப்படுற காமத்தைப்பற்றிய சிந்தனைகளை, என்னோட தனிப்பட்ட விமர்சனங்களை சொன்னப்ப எனக்கு குறை கண்டுபிடிச்சேன்ங்கற ஒரு மனபாவம்தான் இருந்தது. ஆனா அவரை, பின்நவீனத்துவவாதிகளின் சிந்தனைகளை பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்ச பிறகு நானும் அதை முழு மனசோட ரசிச்சு ஏத்துக்கிட்டேன். நாடகத்தனமான வசனங்களைகூட முழுசா ஏத்துக்காத மனது சிலரால் அதைவிட மோசமாக கருதப்படக்கூடிய பின்நவீனத்துவத்தை நாடுவது எனக்கே புரியாத புதிர்.
உங்க கேள்விய பார்த்துட்டு ஒரு பதிவர் என்கிட்ட சாட்ல கேட்டது.
"டேய்... நீ எப்படா பின்னவீனத்துவவாதி ஆனே? பின்நவீனத்துவம்ன்னா என்னன்னு தெரியுமா உனக்கு"
"இல்லண்ணே.. சத்தியமா அதப்பத்தி எனக்கு தெரியாது"
"அப்புறம் எப்படிடா உன் பேரு அந்த லிஸ்ட்ல வந்துச்சு"
"ஏதோ பாசக்கார பயபுள்ளைக ஆசப்பட்டு நோட்டிஸ் அடிச்சுட்டானுக. விட்டுத் தள்ளுவியா.. அத விட்டுட்டு நோண்டுறியே.."
"டேய்.. இந்த விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேணாம். எவ்வளவு செலவு செஞ்சேன்னு மரியாதையா சொல்லிடு."
அடப்பாவிகளா.... இன்னுமாடா நீங்க அடங்கலைன்னு நானே நொந்துக்கிட்டு அடங்கிட்டேன். என்னை இன்னும் அவரு மொக்கை லிஸ்ட்லேந்து மாத்தலை போலருக்குது.
3. லிஸ்ட் போட்டு வாசிக்கும் உங்களின் காதல்களில் ஏதேனும் உங்களை குழப்பியதுண்டா? அதாவது நினைவுகளில் வாழ்க்கையில் யார் முன்பு வந்தது யார் பின்பு வந்தது என்ற வரிசைகளில் மாறுதல்கள் இருந்தால் எப்படி நீங்கள் செக் செய்து கொள்வீர்கள்?
உண்மையிலேயே இது ரொம்ப கொடுமையான கேள்வி.. காதலிகள் எப்பவுமே என்னை குழப்பிவிட்டதுண்டு. ஏண்டா இவளை லவ் செஞ்சோம்ன்னு... ஆனா காதல் மட்டும் குழப்பமானதில்லை. காதலில் மட்டும் எனக்கு எப்பவும் இடைவெளிகள் என்பது விருப்பமானது இல்லை. ஒரு காதல் முடிவுக்கு வரப்போகுதுன்னு தெரிய வரும்போதே அடுத்த காதலிய ரெடி செஞ்சுக்கற அளவு விவரமான ஆளு நான். அப்படிப்பட்டவன் காதலிகளின் லிஸ்ட் மறந்து போகுமா என்ன... தவமாய் தவமிருந்து பெற்ற காதலிகளின் வரிசை நெஞ்சினிலே ஆட்டோகிராப்பாக மாறியுள்ளதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி கொள்கிறேன்.
நான் ஒருத்தியை காதலித்தது மற்றொருத்திக்கு தெரிய வராதவரை இந்த கவலைகள் எனக்கு வர வேண்டிய அவசியம் இருந்ததில்லை. காதல்ல தோத்துட்டேன் என்று சொல்லிவிட்டு தைரியமாக காதலிக்க என்னால் முடிந்தது. அதையும் ரசிக்க அவர்களால் முடிந்தது கூடவே காதல் தோல்வி பரிச்சயம்தானே என்று மீண்டும் தோல்வியின் அடுத்த படிக்கு அவர்களால் அனுப்பி வைக்க முடிந்தது. சுருங்கக் கூறின் ஆதாம் கொடுத்த ஆப்பிளுக்கு பதிலாய் அல்வா கொடுத்த ஏவாள்கள் என் காதலிகள்.
4.மீரா ஜாஸ்மீனுடன் நீங்கள் எண்ண அலைகளினூடாக சென்று பேசினால் என்ன பேசிக்கொள்(ல்)வீர்கள்?
எனக்கு அவ்வளவாக மலையாளம் பரிச்சயமான மொழி இல்லை பிரேமம் என்ற ஒரு வார்த்தையை தவிர. மீரா ஜாஸ்மினுடன் பேசுவது என்று முடிவானபிறகு ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் எண்ண அலைகள் என்ற ஒரு விசயம் ரொம்ப யோசிக்க வைக்கிறது. ஏதோ செல்போன்ல பேசுனாக்கூட பரவாயில்ல. இப்படி எல்லாம் பேசுனா அப்புறம் பேய்ன்னு நினைச்சு தேவதைய பயமுறுத்துன பாவம் வந்து சேர்ந்துடும்.
ஆனாலும் எண்ண அலைகள்ங்கறது ரொம்ப சுவாரசியமான ஒரு வார்த்தை. நம்ம பதிவர்கள், நலம் விரும்பிகள் எல்லார்கிட்டயும் மீராஜாஸ்மினோட நினைவலைகள்ல போய் சென்ஷி நல்லவரு, வல்லவரு, உங்களை ரொம்ப விரும்புறாரு அப்படி இப்படின்னு பேச வைச்சோம்ன்னு வைங்க. சுஜாதா கதையில வர்ற ஹீரோயின் மாதிரி எவண்டா அது சென்ஷின்னு யோசிக்க வைச்சாலே அது பெரிய விஷயம் இல்லையா... அதுக்கப்புறம் எதுக்கு தமிழெல்லாம் கத்துக்கிட்டு கவுஜயெல்லாம் எழுதிட்டு இருக்கோம். நல்லதா நாலு கவுஜ சொல்லி சாகடிக்கவேண்டியதுதான்.. அப்படியே காதல் தோத்தாலும் அதுக்கெல்லாம் கவலைப்படுற பார்ட்டியா நாம.. டேய் நான் மீரா ஜாஸ்மினையே லவ் பண்ணித் தோத்தவன்டான்னு கொஞ்சம் ஜரூரா சொல்லிக்கலாம் பாருங்க.
என்னது ரொம்ப ஓவரா எதிர்ப்பார்க்குறேனா.. எதிர்ப்பார்ப்பு இல்லைன்னா எதுக்குங்க வாழ்க்கை. இதையே மொக்கையா சொன்னோம்னு வைங்க... பிகரை எப்படி மடிக்கிறோம்ங்கறது முக்கியமில்ல. எப்படியாச்சும் மடிக்குறோமாங்குறதுதான் முக்கியம்..
எனது நான்கு கேள்விகளை நான் முத்துலட்சுமி அக்காவிடம் கேட்கிறேன்..
1. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற விஷயத்தில் தலைமுறைகள் இழந்ததாக எதை நீங்கள் கருதுகிறீர்கள். உங்களால் மீட்க முடியும் என்ற என்ற சக்தியிருந்தால் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். (திண்ணையை தவிர..)
2. தசாவதாரத்தில் தங்களை கவர்ந்த அவதாரம் எது, ஏன்?
3. உலகத்திரைப்படங்களை பற்றிய உங்கள் பார்வை எவ்வளவு தூரம்?
4. தமிழ்மணத்தில் கலக்குகின்ற (என் போன்ற) புதிய பதிவர்களுக்கு மூத்த பதிவராய் தங்களின் மேலான ஆலோசனை என்ன?
Wednesday, July 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)




34 comments:
// எல்லா தனிமங்களும் ஏதாவது ஒரு குழு வகையை சார்ந்ததா காணப்படுது. ஆதரவு நிலை, எதிர் நிலை குழுமத்துல நடுநிலைங்கறது மொக்கையா இருக்குதுங்கற எண்ணம் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.//
சூப்பரூ!
இப்படிக்கு
மொக்கை குழுமத்திலிருந்து மீ த பர்ஸ்டூ :))
:
//. என்னை இன்னும் அவரு மொக்கை லிஸ்ட்லேந்து மாத்தலை போலருக்குது.//
:((((
மாத்த சொல்லி ஒரு மிரட்டல் கடுதாசி எழுதிடலாமா???? :))
//ஒரு காதல் முடிவுக்கு வரப்போகுதுன்னு தெரிய வரும்போதே அடுத்த காதலிய ரெடி செஞ்சுக்கற அளவு விவரமான ஆளு நான்.//
வெவரம்ய்யா! கத்துக்கணும் போல நிறைய விஷயங்கள்! :)))
//காதல்ல தோத்துட்டேன் என்று சொல்லிவிட்டு தைரியமாக காதலிக்க என்னால் முடிந்தது. அதையும் ரசிக்க அவர்களால் முடிந்தது கூடவே காதல் தோல்வி பரிச்சயம்தானே என்று மீண்டும் தோல்வியின் அடுத்த படிக்கு அவர்களால் அனுப்பி வைக்க முடிந்தது//
சோகம் :((((
ரொம்ப ஃபீல் பண்றேன் இந்த கேள்வி கேட்டதுக்கு :((
//பிகரை எப்படி மடிக்கிறோம்ங்கறது முக்கியமில்ல. எப்படியாச்சும் மடிக்குறோமாங்குறதுதான் முக்கியம்..//
நோட் பண்ணிக்கிட்டேன் (பட் காலம் கடந்த சிந்தனையாகிப்போச்சு இத்தனை நாள் எங்கண்ணே இருந்தீங்க ஏன் இந்த மாதிரி சிந்தனைகளை நீங்க ஆரம்பத்துலயே பதிவுகளில் தெளிக்காம விட்டீங்க :()
:)))))))))
ரொம்ப எதிர்பார்த்து வந்தா தசாவதாரம் மாதிரி இருக்கு:))
///தொடர் வினை: உண்மைத்தமிழனின் பின்னூட்டங்கள்//
எங்கடா காணுமேன்னு பார்த்தேன். இருக்காரு. இருக்காரு. அவரு பேரை நீங்க மந்திரம் மாதிரி தினமும் சொல்லிகிட்டே இருப்பீங்களோ?
///வலைப்பதிவ தாண்டி வலைப்பதிவர்கள் கிட்டயும் கெமிஸ்டிரி உண்டாகறத பத்தி கேட்கணும்னா என்னை விட விவரமானவங்க சொல்வாங்க.. :))///
விவரமானவங்க சொல்லுவாங்கன்னு சொல்லி இருந்தா அவங்க கிட்ட கேக்கலாம். உங்களை விட விவரமானவங்க சொல்லுவாங்கனா நீங்களும் ஓரளவுக்கு விவரமானவர்ன்னு தானே அர்த்தம். உங்களுக்கு தெரிஞ்சத சொல்லி இருக்கலாமே?
//பின்நவீனத்துவம்ன்னா என்னன்னே முழுசா தெரியாத என்கிட்ட இப்படி ஒரு கேள்வியா...!? //
அப்ப ஓரளவுக்கு தெரியுமா? அப்படினா ஆயில்யன் கேட்ட கேள்வியும் சரிதான். அவரு உங்களை பின்நவீனத்துவ வாதின்னா சொன்னார். ''பின் நவீனத்துவ வாதியாக மாறிக்கொண்டிருக்கும்'' என்று தானே சொன்னார்?
//இதுதான் பின்நவீனத்துவமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு அடிக்கடி எட்டிப்பார்த்த சுகுணா திவாகர் மற்றும் அய்யனார் பதிவுகள்தான் எனக்கு முதல் வாசல்ன்னு சொல்லலாம்.///
அடுத்தடுத்த வாசல்கள் எல்லாம் யாரு? அதையும் சொல்லுங்க:)
///"டேய்.. இந்த விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேணாம். எவ்வளவு செலவு செஞ்சேன்னு மரியாதையா சொல்லிடு."///
அட கூச்சப்படாம எவ்வளவு செலவு செஞ்சீங்கன்னு சொல்லுங்க சென்ஷி. பாவம் அவரு எவ்ளோ செலவு செஞ்சாரோ தெரியல. ஒரு ஒப்பீட்டுக்கு உதவும்ல:))
//3. உலகத்திரைப்படங்களை பற்றிய உங்கள் பார்வை எவ்வளவு தூரம்?//
கயல் அக்கா இனிமே ஸ்டேட்டஸ் மெசேஜ்ல நீங்க பார்க்கிற உலகத்திரைப்படங்களின் பெயர்களை போடாதீங்க:)
//தமிழ்மணத்தில் கலக்குகின்ற (என் போன்ற) புதிய பதிவர்களுக்கு மூத்த பதிவராய் தங்களின் மேலான ஆலோசனை என்ன//
என்னது? “என் போன்ற”-வா? நீங்க புதுசுன்னா, அப்ப நாங்கல்லாம்?
என்னதான் பின்நவீனத்துவம் அது, இதுன்ன்னு உங்களை வேறு தளத்துக்கு கொண்டுபோக ஆயில்யன் ட்ரை பண்ணினாலும், நம்ம மொக்க வலையிலயே வந்து வந்து விழறீங்களே சார்?
sir உங்க பதிலெல்லாம் அசத்தல் சார்..
படிச்ச கெமிஸ்ட்ரி எனக்கு மறந்துருச்சு சார்..இப்ப கொஞ்சமா எதோ நினைவுக்கு வருது சார்.. உங்க பன்முகத்திறமை அறியாமல் மொக்கை லிஸ்ட்டில் தொடர்ந்து வைத்திருப்பவரை மன்னிக்கனும் நீங்க..
அது தான் உங்க பெருந்தன்மை..
அப்பறம் கேள்வி கேட்டதுல எனக்கு முதல் கேள்வி தவிர எல்லாமே அவுட் ஆப் சிலபஸ் மாதிரியே என்கண்ணுக்குத் தெரியுது..அதுவும் கடைசி கொஸ்டின் சார் ரொம்பவே தப்பான கொஸ்டின்..சார்.. :)
கலக்கல் பதில்கள். கெமிஸ்ட்ரி மற்றும் பின்நவீனத்துவம் பதில்கள் ரசித்தேன்.
அனுஜன்யா
:-) Romba nalla irukku anna unga answers...!!
Rasichu sirichen..!! :-)
முதல் கேள்வியை தவிர மீதி எல்லாம் சூப்பரு ;))
அடுத்து யாரு அக்காவா! ;)
\\ கயல்விழி முத்துலெட்சுமி said...
sir உங்க பதிலெல்லாம் அசத்தல் சார்..
படிச்ச கெமிஸ்ட்ரி எனக்கு மறந்துருச்சு சார்..இப்ப கொஞ்சமா எதோ நினைவுக்கு வருது சார்.. உங்க பன்முகத்திறமை அறியாமல் மொக்கை லிஸ்ட்டில் தொடர்ந்து வைத்திருப்பவரை மன்னிக்கனும் நீங்க..
அது தான் உங்க பெருந்தன்மை..
அப்பறம் கேள்வி கேட்டதுல எனக்கு முதல் கேள்வி தவிர எல்லாமே அவுட் ஆப் சிலபஸ் மாதிரியே என்கண்ணுக்குத் தெரியுது..அதுவும் கடைசி கொஸ்டின் சார் ரொம்பவே தப்பான கொஸ்டின்..சார்.. :)
\\\
அக்கா இது என்ன கடைசி கேள்விக்கு பதிலா!! ?
ஏன் இத்தனை சார் வருது??
;-)))))
:-))))))))
நல்லா இருக்கு. :-)
@ ஆயில்யன்..
:)))
//நோட் பண்ணிக்கிட்டேன் (பட் காலம் கடந்த சிந்தனையாகிப்போச்சு இத்தனை நாள் எங்கண்ணே இருந்தீங்க ஏன் இந்த மாதிரி சிந்தனைகளை நீங்க ஆரம்பத்துலயே பதிவுகளில் தெளிக்காம விட்டீங்க :()//
வாங்கண்ணே.. அப்புறம் 60 ஆம் கல்யாணத்துக்காச்சும் பொண்ணு கிடைக்குதான்னு தேட வேண்டி வரும். ஜாக்கிரதை :)
முதல்ல சூப்பரு...
முதல்ல சூப்பரு...
@ நிஜமா நல்லவன்.
:))
@ பரிசல்காரன்...
தமிழ்மணத்துக்குள்ள சேர்றதுக்குள்ள வந்த கமெண்டு உங்களோடது. :)).
மொக்கைய அவ்வளவு சீக்கிரம் நான் விட்டாலும் அது என்னை விடாது போல :))
@முத்து லட்சுமி...
தங்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. :)
///எரிவாயு: தமிழ்மண சூடான இடுகைகளின் தலைப்புகள்///
:))
///எதிர்வினை : அய்யனார் பதிவுக்கு கண்டிப்பா எங்கேந்தாச்சும் இது கெளம்பும். இல்லன்னா இருக்கவே இருக்காரு குசும்பரு...///
இதுக்கொரு எதிர்வினை இல்லாமலா போகும்...
// எல்லா தனிமங்களும் ஏதாவது ஒரு குழு வகையை சார்ந்ததா காணப்படுது. ஆதரவு நிலை, எதிர் நிலை குழுமத்துல நடுநிலைங்கறது மொக்கையா இருக்குதுங்கற எண்ணம் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.//
நல்லா சொன்னிங்க..
(தனிமம் அப்படின்னா என்ன...:)
///ஆல்கஹால்: இப்போதைக்கு சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்களை படைக்கும் சினிமா நிருபர் குழு மற்றும் வீக் என்ட் ஜொள்ளு நண்பர்களின் தனி அடையாளம்.///
//வீக் என்ட் ஜொள்ளு நண்பர்களின் தனி அடையாளம்///
அவர் கவிதைக்கு மாறி பல நாட்கள்...
ஆனா அவர் கவிதைகளே அப்படித்தான் இருக்கு! :)
@ அனுஜன்யா..
தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் பின்னூட்ட ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் :))
@ ஸ்ரீ...
வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றிகள் :))
@ கோபிநாத்..
:)))
@ தமிழன்...
ரொம்ப நன்றிண்ணே... :))
சுகுணாதிவாகர் அப்படின்னதும் அவருக்கு சமீபத்துல நீங்க போட்ட பின்னூட்டம் நினைவுக்கு வந்திடுச்சு..
இருந்தாலும் சுகுணா மற்றும் அய்யனார் இருவருக்கும் நானும் வாசகன்தான்..
///அதுக்கெல்லாம் கவலைப்படுற பார்ட்டியா நாம.. டேய் நான் மீரா ஜாஸ்மினையே லவ் பண்ணித் தோத்தவன்டான்னு கொஞ்சம் ஜரூரா சொல்லிக்கலாம் பாருங்க.///
என்ன தெளிவு!
அண்ணே உங்க காலக்காட்டுங்க...:)
///உண்மையிலேயே இது ரொம்ப கொடுமையான கேள்வி.. காதலிகள் எப்பவுமே என்னை குழப்பிவிட்டதுண்டு. ஏண்டா இவளை லவ் செஞ்சோம்ன்னு... ஆனா காதல் மட்டும் குழப்பமானதில்லை. காதலில் மட்டும் எனக்கு எப்பவும் இடைவெளிகள் என்பது விருப்பமானது இல்லை. ஒரு காதல் முடிவுக்கு வரப்போகுதுன்னு தெரிய வரும்போதே அடுத்த காதலிய ரெடி செஞ்சுக்கற அளவு விவரமான ஆளு நான். அப்படிப்பட்டவன் காதலிகளின் லிஸ்ட் மறந்து போகுமா என்ன... தவமாய் தவமிருந்து பெற்ற காதலிகளின் வரிசை நெஞ்சினிலே ஆட்டோகிராப்பாக மாறியுள்ளதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி கொள்கிறேன்.///
மூன்றாவது கேள்வி மற்றும் அதற்கான பதிலுக்கும் காதலன் என்கிற உங்கள் பெயருக்கும் இருக்கம் என்று நான் நினைப்பதாகிய தொடர்பை பற்றிய உங்கள் கருத்து என்வாக இருக்கும்...?
///காதல்ல தோத்துட்டேன் என்று சொல்லிவிட்டு தைரியமாக காதலிக்க என்னால் முடிந்தது. அதையும் ரசிக்க அவர்களால் முடிந்தது கூடவே காதல் தோல்வி பரிச்சயம்தானே என்று மீண்டும் தோல்வியின் அடுத்த படிக்கு அவர்களால் அனுப்பி வைக்க முடிந்தது.///
அண்ணே இந்தப்பதில், நிஜமா நீங்கள் மறைக்க முயல்கிற வலிகள் போலத்தான் இந்தப்பதில் எனக்கு தெரிகிறது...
ஆயில்யன் மற்றும் நிஜமாநல்லவன் இரண்டு பேரோட அத்தனை "கமன்ட்ஸ்" க்கும் மொத்தமா ஒரு
ரிப்பீட்டு...:))
Post a Comment