Wednesday, August 06, 2008

இருட்டின் திசையறிதல்....


க‌ண்கள் அதிக‌ம் எடுத்துக்கொண்ட
மையை துடைத்தெடுத்து
சூனிய‌த்தில் அப்பிவிட‌
மேலும் அட‌ர்த்தியான‌து இருட்டு...

வெளிச்சம் குறைவதை இருட்டு என சொல்வது அத்தனை ஏற்புடையதாயில்லை. இருட்டு கிழிவது வேண்டுமானால் வெளிச்சமாயிருக்கக்கூடும். அத‌னாலேயே இருட்ட‌ ஆர‌ம்பித்திருந்த‌ அந்த‌ மாலைநேர‌ம் என‌ எழுதுவ‌த‌ற்கு ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. வெளிச்ச‌க்கீற்றுக்களின் முனைகள் ம‌ழுங்கத்தொடங்கியிருந்த நேர‌‌த்தில் என‌க்கு த‌ற்கொலை செய்துகொண்டால் என்ன என்ற எண்ண‌ம் ஆர‌ம்பித்திருந்த‌து.

பகலை விட இரவு நேரங்கள் எனக்கு ஏற்புடையவதாய் இருக்கின்றன. இரவுகளில் என்னை யாரும் தேடுவதில்லை. பகல்களில் அந்நியங்களின் புன்னகைகள் கூட என்னை சுலபமாய் தாக்கத்தொடங்கிவிடுகிறது. எனக்கு மட்டுமான தனித்த அந்த இரவுகள் யாருக்கும் அத்தனை எளிதாய் கிட்டிவிடுவதில்லை. இருட்டு என் நேசிப்பிற்குரிய விஷயங்களின் முதல் நண்பன்.

கண்களை மூடிக்கொண்டாலே இருட்டு வந்துவிடுமே என்று கருதுபவர்களுக்கு, என் கண்களை மூடிக்கொள்ளும்போது விழிகளின் விளிம்புகளில் நான் விரும்புகின்ற வண்ணம் கசிந்து எனது இருட்டை வண்ணமாக்கிவிடுகின்றன. எப்போதும் நீலம், சிலநேரம் மஞ்சளாய் இருட்டை காண்பதற்கு மனம் விரும்புவதில்லை. வெள்ளையடித்த சுவர் மீது விழும் நிழல்போல இருட்டை காண விரும்புகிறேன். அதனாலேயே வெளிச்சக்கூறுகள் செத்துப்போன அடர்ந்த அந்த இருட்டினை முடிந்த மட்டும் கண்களால் உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருப்பேன். இருட்டும் என்னை முழுவ‌தும் ஆக்கிர‌மித்துக்கொண்டு என்னை காணாம‌ல் செய்துவிடும்.

எழுத்துக்களில் நான் என்ற‌ வ‌ரிசையில் தொட‌ங்கும்போது வார்த்தைக‌ளின் க‌டின‌ங்க‌ள் புல‌ப்ப‌டுகின்ற‌து. என‌க்கொரு பெய‌ர் வேண்டும். எளிதில் வாயில் நுழையாத‌ ஆங்கில‌ப்பெய‌ர்கள் என்மேல் நாட்ட‌ம் கொள்வ‌தில்லை. அதிக‌ம் யோசித்தும் ஏதும் தோணாமல் ப‌ழ‌கிய‌ ப‌த்ம‌னை என் பெய‌ராக‌ நான் எடுத்துக்கொண்டேன்.

ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்ள‌ வேண்டும். ஆனால் அது விப‌த்தாய் காட்சிப்ப‌டுத்த‌ப்பட‌ வேண்டும் என்ப‌தில் நான் முக்கிய‌த்துவ‌ம் கொண்டிருந்தேன். ப‌த்ம‌ன் விப‌த்தில் இற‌ந்த‌து ப‌ல‌ருக்கு ஆச்ச‌ரிய‌ம் கொடுக்க‌ வேண்டும். ஏனெனில் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்வான் என‌ ந‌ம்பிக்கை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் நம்பிக்கையையும் நான் சேர்த்து கொல்ல‌ப்போகின்றேன். ஆனால் ஜெனிதா மோச‌ஸ் மட்டும்தான் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்திருப்பான் என்று ந‌ம்புவாள்.

ம‌ன்னிக்க‌வும் ஜெனிதா மோச‌ஸை நான் இன்னமும் உங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்திருக்க‌வில்லை. ஜெனிதாவின் பெய‌ரோடு தொக்கி நிற்கும் மோச‌ஸ் அவ‌ள‌து த‌ந்தை என்று நீங்க‌ள் க‌ருதினால் நீங்க‌ள் க‌ண்டிப்பாய் என்னுட‌ன் ப‌ழ‌கிய‌வ‌ராய் இருந்திருக்க‌க்கூடும். ஆமாம்.. ஏனென்றால் நான் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளுட‌ன் மோச‌ஸ் என்ப‌து அவ‌ள் த‌ந்தை பெய‌ர் என்றுதான் கூறி வ‌ந்திருக்கிறேன். இத‌ற்காக‌வும் அவ‌ர்க‌ள் என்னை மோச‌க்கார‌ன் என்று க‌ருத‌க்கூடும்.

ஜெனிதா மோச‌ஸைப் ப‌ற்றி இதில் அதிக‌ம் என்னால் விவ‌ர‌ண‌ப்ப‌டுத்த‌ இய‌லாது. ஏனெனில் அவ‌ளைப்ப‌ற்றி நான் அதிக‌ம் என‌து டைரிப்ப‌க்க‌ங்க‌ளில் எழுதி வ‌ந்திருக்கிறேன். என் ம‌ர‌ண‌த்திற்கு பிற‌கு யாராவ‌து அந்த‌ டைரியை எடுத்து ப‌திப்பிக்க‌ முய‌ற்சித்து அதில் வார்த்தைக‌ளின் மேல் க‌றுப்புப்ப‌ட்டைக‌ள் அடிக்க‌ப்ப‌ட்டிருந்தால் நினைவு கொள்க‌. அந்த‌ வார்த்தைக‌ள் புனித‌மாக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ என்று.

இற‌ப்ப‌த‌ற்கு முடிவெடுத்த‌ நொடி முத‌ல் பத்மன் தீர்மானித்த‌து இனி ஒவ்வொரு நொடிக‌ளையும் ச‌ந்தோஷ‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ப‌துதான். க‌டைசியாக‌ ச‌ட்டைப்பையிலிருந்த‌ வெள்ளைப்ப‌குதியில் இத‌ய‌ம் ப‌ட‌ம் வ‌ரைந்து அம்பினால் கிழிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ அந்த‌ ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு டீ குடித்து ஒரு வில்ஸ் சிக‌ரெட் வாங்கிக்கொண்டான். டீ மிக‌ மோச‌மான‌தாக‌ இருந்த‌து. ஆனாலும் ர‌சிப்புத்த‌ன்மை என்னுள் எல்லை மீறிப்போன‌தால் பத்மன் அத‌னை ர‌சித்து ஆன‌ந்த‌மாக‌ குடித்து சிக‌ரெட்டை ப‌ற்ற‌ வைத்தான். கடைசித்துளி சிக‌ரெட் வ‌ரை விடாம‌ல் இழுத்தான். விர‌ல் சுடும் உண‌ர்வு வ‌ந்தும் அடுத்த‌ சிக‌ரெட் கிடைக்காத‌ ஆற்றாமையால் நான் அவ‌னை சிக‌ரெட்டை கீழே போட‌ விட‌வில்லை. இத‌ற்கு மேல் முடியாது என்ற‌ நிலையில் சிக‌ரெட் கீழே வீசியெறிந்து மிதிக்க‌ ம‌ன‌மின்றி ப‌த்ம‌னை தாண்டி ந‌ட‌க்க‌விட்டேன்.

இருட்டின் வாசிப்புக‌ள் அலாதியான‌வை. இருட்டு அனைத்திலும் வியாபித்துள்ள‌து. சொல்ல முடியாத‌ சோக‌ங்க‌ள், அசிங்க‌ங்க‌ள், தொல்லைக‌ள் எதையும் இருட்டு மிச்ச‌ம் வைத்த‌தில்லை. ப‌த்ம‌ன‌து சாவும் இருட்டில் ந‌ட‌க்க‌வேண்டும் என்று குறிக்கோள் கொண்டிருந்தேன்.

அந்த‌ மேம்பால‌த்தின் மேல் த‌ற்கொலைக்கான‌ நிக‌ழ்வை ஆர‌ம்பிக்க‌ முடிவு செய்திருக்கிறேன். மூன்று கோண‌ங்க‌ளாக‌ பிரிந்து ஒரு புள்ளியில் மேலேறி மீண்டும் ச‌ரிவைத்தொட‌ங்கும் அந்த‌ மேம்பால‌ம் என‌க்கு மிக‌ப்பிடித்த‌ இட‌ம். இருட்டு அந்த‌ மேம்பால‌த்தை முழுவதுமாக‌ மூடி வைத்திருந்த‌து என‌க்கு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. என‌து நேசிப்புக‌ள் சில‌வாவ‌து ஒன்று சேர்கிற‌து. அந்த‌ நிமிட‌ம் ப‌த்ம‌னின் உண‌ர்வுக‌ளை உங்க‌ளிட‌ம் நான் சொல்லியாக‌ வேண்டும். நெஞ்சின் மேல் க‌ல்லை வைத்துக் க‌ட்டிக்கொண்டாற் போல் ஒரு உண‌ர்வு. ஆனால் த‌லை ம‌ற்றும் கால்க‌ள் ப‌ஞ்சு போல‌ இல‌குவாக‌ இருந்த‌து. ப‌த்ம‌னிட‌மிருந்து மிச்ச‌மிருந்த‌ யோச‌னைகளை அழித்துவிட்டேன். அவ‌ன் சாக‌வேண்டிய‌து க‌ட்டாய‌மாகிய‌தால்.

இருட்டைக்கிழித்து ஒரு வெளிச்ச‌ப்புள்ளி த‌ன‌து துக‌ளை அனுப்பி வைத்த‌து. ப‌த்ம‌னுக்கு தைரிய‌ம் போத‌வில்லை. நெஞ்சு வேக‌மாக‌ துடித்துக்கொண்ட‌து. ஆசுவாச‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முய‌ற்சிக்கிறான். கூடாது. அவ‌ன் யோசிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டால் த‌ற்கொலை செய்துகொள்ள‌ மாட்டான். அந்த பெரிய வண்டி பெருத்த இரைச்சலோடு பத்மனை தாண்டிப்போனது. எனக்கு எரிச்சலாக இருந்தது. இருட்டை கிழிக்க‌ப்போகும் அடுத்த‌ வெளிச்ச‌க்க‌த்திரிக்காக‌ காத்திருக்க‌ ஆர‌ம்பித்தேன். மீண்டும் வெளிச்ச‌ம் இருட்டின் வ‌ழியே வ‌ந்த‌து. ப‌த்ம‌னை த‌யார்ப‌டுத்தினேன். 'ம்.. ஆர‌ம்பி.. யோசிக்காதே.. யோச‌னைக‌ள் இனி உன‌க்கு ப‌ல‌ன‌ளிக்காது. போ...'

ப‌த்ம‌ன் வேக‌மாக‌ பால‌த்தின் ந‌டுவில் வ‌ந்து நின்று க‌ண்க‌ளை இறுக‌ மூடிக்கொண்டான். வேக‌மாக‌ வ‌ந்த‌ அந்த‌ கார் ந‌டுவில் அவ‌ன் நிற்ப‌தை பார்த்து த‌டுமாறி திசை திருப்பி அதிக‌ அழுத்த‌த்துட‌ன் குலுங்கி நின்ற‌து. காரின் ஜன்னலின் வழியே வெளியே காரோட்டி வந்தவன் இருட்டில் முக‌ம் ச‌ரியாக‌ தெரியாத‌ ப‌த்ம‌னைப்பார்த்து பலத்த குரலில் கத்தினான்.

"தேவிடியாப்பையா..."

கார் நகர்ந்து சென்றது.

ப‌த்ம‌ன் க‌ண்க‌ளை திற‌க்க‌ முய‌ற்சிக்க‌வில்லை. க‌ண்ணீர் வ‌ழிந்து கொண்டிருந்த‌து. மெதுவாய் பால‌த்தின் ந‌டைபாதையோர‌மாய் சென்று அம‌ர்ந்து கொண்டான். இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் கூட‌ அவ‌னால் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை. வேக‌மாய் வாய்விட்டு அழ‌ ஆர‌ம்பித்தான்.

36 comments:

ஆயில்யன் on Wednesday, August 06, 2008 11:46:00 PM said...

:(((((((((((((((((((

சோகம்!
சோகம்!
என சொல்லொண்ணா சோகத்தில் ஆழ்கிறது என் மனம்!

ஆயில்யன் on Wednesday, August 06, 2008 11:47:00 PM said...

//என்னை யாரும் தேடுவதில்லை. பகல்களில் அந்நியங்களின் புன்னகைகள் கூட என்னை சுலபமாய் தாக்கத்தொடங்கிவிடுகிறது.//

பரவாயில்லை உங்களை அந்நிய புன்னகைகளாவது தாக்குகின்றனவே????

எனக்கு அதுவும் கூட இல்ல :(((

ஆயில்யன் on Wednesday, August 06, 2008 11:48:00 PM said...

//மேல் க‌றுப்புப்ப‌ட்டைக‌ள் அடிக்க‌ப்ப‌ட்டிருந்தால் நினைவு கொள்க‌. அந்த‌ வார்த்தைக‌ள் புனித‌மாக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ என்று.//


இன்று முதல் என் புனித வாக்கியமானது!

ஆங்காங்கே அல்ல, உடம்பு முழுக்க எனக்கு கறுப்பு பட்டைகள் அடிக்கப்பட்டுள்ளதால் நான் இன்று முதல் புனிதன் ஆக அழைக்கப்படவேண்டியவன்!

விஜய் ஆனந்த் on Wednesday, August 06, 2008 11:54:00 PM said...

// ஏனெனில் அவ‌ளைப்ப‌ற்றி நான் அதிக‌ம் என‌து டைரிப்ப‌க்க‌ங்க‌ளில் எழுதி வ‌ந்திருக்கிறேன் //

டைரிய எங்க வச்சிருக்கீங்க????

சதீசு குமார் on Thursday, August 07, 2008 12:04:00 AM said...

கதையின் வரும் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை, உங்கள் எழுத்துகளின்வழி அருமையாக புரிய வைக்கிறீர்கள். கொஞ்ச நேரம் அந்தக் கதாப்பாத்திரத்தோடு வாழ்ந்துவிட்டு வந்ததுபோல் ஓர் உணர்வு. வாழ்த்துகள்..

http://olaichuvadi.blogspot.com/2008/08/blog-post_05.html

தமிழன்... on Thursday, August 07, 2008 12:26:00 AM said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் மாப்பி...

தமிழன்... on Thursday, August 07, 2008 12:26:00 AM said...

இரவுகள் எனக்கும் பிடித்தமானதாயிருக்கிறது சென்ஷி...

தமிழன்... on Thursday, August 07, 2008 12:28:00 AM said...

ஜெனிதா (மோஸஸ்)-நல்ல பெயர்...

தமிழன்... on Thursday, August 07, 2008 12:30:00 AM said...

இரவுகளை எழுதுபவன்...

தமிழன்... on Thursday, August 07, 2008 12:31:00 AM said...

என்ன கொடுமையடா இது பின் நவீனம் எழுத அரம்பிச்சு கொஞ்ச நாள் ஆகலை அதுக்குள்ள தற்கொலைக்கு வந்துட்டாரு

தமிழன்... on Thursday, August 07, 2008 12:31:00 AM said...

அண்ணே அதை நாங்க பண்ணனும்..

இதெல்லாம் படிக்கிறம்ல...;)

தமிழன்... on Thursday, August 07, 2008 12:41:00 AM said...

பத்மன் ??????? பத்மா??????

தமிழன்... on Thursday, August 07, 2008 12:43:00 AM said...

சொல்லுங்க சென்ஷி பதிவுக்கான புலம் என்ன...

தமிழன்... on Thursday, August 07, 2008 12:44:00 AM said...

இரவுகளில் நிறைய நல்ல விசயம் செய்யலாம் சென்ஷி ஏனிந்த சோகம்...

கோவை விஜய் on Thursday, August 07, 2008 7:29:00 AM said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

முத்துலெட்சுமி-கயல்விழி on Thursday, August 07, 2008 11:26:00 AM said...

Style நல்லாருக்க்கு.. தற்கொலை எண்ணம் ஒரு ஆளாவும் . .. அவன் ஒருத்தனாவும் .. :)

பரிசல்காரன் on Friday, August 08, 2008 7:46:00 AM said...

அபாரம் சென்ஷி!

மறுபடி சொல்வதில் பெருமையே... இப்படி ஒருஇ எழுத்திற்காக எத்தனை நாளாகினும் காத்திருப்போம்!

அனுஜன்யா on Friday, August 08, 2008 1:28:00 PM said...

சென்ஷீ,

மீண்டும் படிக்கத்தூண்டும் நல்ல பதிவு. நல்ல பி.ந.நடை. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

புகழன் on Friday, August 08, 2008 1:47:00 PM said...

பின்நவீனத்துவ வெளிச்சப்புள்ளிகள் பின்னூட்டமிட வழிகாட்டினாலும் சில நவீன இருள்கள் எழுத்தின் அந்நியத்தை ஆராதிக்கும் வேளையில் படித்ததால் பகர்வதற்கு வார்த்தைகளின்றி தட்டுத்தடுமாறி விசைப் பலகையின் ஒவ்வொரு அழுத்தத்திலும் வெடித்துச் சிதறிய அதிர்வுகளை ஆரமாக்கி வாழ்த்தும்போதும் வானத்தையே வெறித்துப் பார்க்கச் செய்கிறது இந்த இருள்கள்.
வெளிச்சத்திற்கு மட்டுமல்ல இருளுக்கும் திசையுண்டு என்பதை உரக்கச் சொல்லும் இந்த சிறுகதை ரெம்பவே சூப்பர்.

சென்ஷி on Friday, August 08, 2008 9:26:00 PM said...

@ ஆயில்யன்...

//ஆங்காங்கே அல்ல, உடம்பு முழுக்க எனக்கு கறுப்பு பட்டைகள் அடிக்கப்பட்டுள்ளதால் நான் இன்று முதல் புனிதன் ஆக அழைக்கப்படவேண்டியவன்!//

நீ என்னிக்குமே புனிதன் தான் கண்ணா :))

சென்ஷி on Friday, August 08, 2008 9:27:00 PM said...

@ விஜய் ஆனந்த்...

கவலைப்படவேண்டாம். பத்திரமாய் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. :)

சென்ஷி on Friday, August 08, 2008 9:29:00 PM said...

@ சதீசுகுமார்..

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல :))

சென்ஷி on Friday, August 08, 2008 9:30:00 PM said...

@ தமிழன்...


//தமிழன்... said...
என்ன கொடுமையடா இது பின் நவீனம் எழுத அரம்பிச்சு கொஞ்ச நாள் ஆகலை அதுக்குள்ள தற்கொலைக்கு வந்துட்டாரு
//

:))

அப்படில்லாம் இல்லை. கொஞ்சநாள் இந்தமாதிரி கொஞ்ச பேர சாகடிச்சுக்கலாம்ங்கற நல்லெண்ணம்தான்.

சென்ஷி on Friday, August 08, 2008 9:49:00 PM said...

//தமிழன்... said...
பத்மன் ??????? பத்மா??????
//

அது பத்மன் தான்.. அவனது முழுப்பெயர் பத்மநாபன்... :)).

சென்ஷி on Friday, August 08, 2008 9:50:00 PM said...

//தமிழன்... said...
இரவுகளில் நிறைய நல்ல விசயம் செய்யலாம் சென்ஷி ஏனிந்த சோகம்...
//

:))... சோகம் கூட எனக்கு சுகமான விஷயமாய்த்தான் தெரிகிறது நண்பா...

சென்ஷி on Friday, August 08, 2008 9:51:00 PM said...

ஒரு முக்கிய அறிவிப்பு.. போன பின்னூட்டத்துல 25 அடிச்சது நாந்தான்..

:))

சென்ஷி on Friday, August 08, 2008 9:52:00 PM said...

@ கோவை விஜய்...

:)). இருட்டைப்பற்றிய பதிவில் உங்கள் வெளிச்சம் மறுக்கும் பின்னூட்டம் அருமை..

சென்ஷி on Friday, August 08, 2008 9:53:00 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
Style நல்லாருக்க்கு.. தற்கொலை எண்ணம் ஒரு ஆளாவும் . .. அவன் ஒருத்தனாவும் .. :)
//

:).. ரொம்ப நன்றிக்கா...

சென்ஷி on Friday, August 08, 2008 9:53:00 PM said...

//அனுஜன்யா said...
சென்ஷீ,

மீண்டும் படிக்கத்தூண்டும் நல்ல பதிவு. நல்ல பி.ந.நடை. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா
//

:))

வாழ்த்துக்களுக்கு நன்றி அனுஜன்யா..

சென்ஷி on Friday, August 08, 2008 9:54:00 PM said...

@ புகழன்...

நான் போட்ட ஒரு ரிப்பீட்டேவுக்கு இப்படி ஒரு எஃபெக்டா :))

நிஜமா நல்லவன் on Friday, August 08, 2008 10:02:00 PM said...

வாழ்த்துக்கள் சென்ஷி. உங்க பி.ந.நடை மெருகேறிக்கொண்டே போகிறது.....எல்லாம் சரி அந்த டைரி கிடைக்குமா.....கொஞ்சம் சொல்லுங்க:)

ஸ்ரீ on Friday, August 08, 2008 10:09:00 PM said...

கதை சொல்லப்பட்ட விதம் வழக்கம் போல அருமை. டெம்ப்ளேட் மாத்தியாச்சா? நல்லா இருக்கு :)

சென்ஷி on Saturday, August 09, 2008 12:12:00 AM said...

@ நிஜமா நல்லவன்...

டைரி இப்போதைக்கு எந்த கையில அகப்பட்டிருக்குன்னு எனக்கே தெரியாது அண்ணா... :(

@ஸ்ரீ..

வருகைக்கு நன்றி நண்பா... டெம்ப்ளேட் மாற்றியவருக்காக ஒரு பதிவிட வேண்டும். நேரமின்மையால் தவிக்கிறேன் :(

King... on Saturday, August 09, 2008 11:28:00 PM said...

சென்ஷி said...

//தமிழன்... said...
இரவுகளில் நிறைய நல்ல விசயம் செய்யலாம் சென்ஷி ஏனிந்த சோகம்...
//

:))... சோகம் கூட எனக்கு சுகமான விஷயமாய்த்தான் தெரிகிறது நண்பா...
\\\

ம்ம்ம் சரிதான்...
இரவுகள் பிடித்துப்போக அதுவும் ஒரு காரணம்...

இனியவள் புனிதா on Tuesday, August 12, 2008 11:04:00 AM said...

எனக்கு தங்களின் பி.ந பதிவுகள் மிகவும் பிடிக்கும். அதிலும் தற்கொலையை வித்தியாசமான பரிமாணத்தில் சொல்லியிருப்பது அசத்தல். வாழ்த்துகள்!

சென்ஷி on Saturday, August 16, 2008 8:27:00 AM said...

@ கிங்..

இரவுகளின் புரிந்துணர்வான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா...!

@ இனியவள் புனிதா...

அசத்த வைக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி புனிதா...!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com