இன்னிக்கு ஸ்ரீதர் அண்ணா, அவரோட பதிவுல பைசல் ஆன கணக்க எழுதியிருந்தத படிச்சதும் எனக்கும் பழைய ஞாபகம் வந்துடுச்சு.
பைசல் நம்பர் 1:
அப்ப நான் 11ம் கிளாஸ் படிச்சுட்டு இருந்தேன். என்கூட படிச்ச ஒரு பையன் கணக்குல கொஞ்சம் வீக்கு. கொஞ்சம்ன்னா ரொம்ப கொஞ்சமா மார்க்கு வாங்குற அளவுக்குத்தான் அவன் படிப்பு. எங்க ஸ்கூல்லயே கணக்கு வாத்தியார் ரொம்ப ஸ்டிரிக்ட்டுன்னு பேர் வாங்கிட்டதால ஹெ.எம்கிட்ட சொல்லி, இந்த மாதிரி படிக்காத பையனை ஸ்கூல்ல வச்சிட்டு இருந்தா 12வதுல தேர்ச்சி சதவீதம் சதி செஞ்சுடும்ன்னு நெனைச்சு அவன 11வதுக்கு அப்புறம் டி.சி. கொடுத்து வேற ஸ்கூல்ல சேர சொல்லி அனுப்பி வச்சுட்டாரு. விதியை நொந்துக்கிட்டு அந்த பையனும் அதே ஊர்ல வேற ஒரு ஸ்கூல்ல சேர்ந்துட்டான். ஆனா கொடுமை பாருங்க. எங்க ஸ்கூல் கணக்கு வாத்தியார்கிட்ட பன்னிரண்டாவதுல டியூசன் படிச்ச பசங்கள்ல பாதிக்கு மேல கணக்குல பெயில் ஆகிட்டாங்க. ஸ்கூல விட்டுப்போன அந்த பையன் அந்த ஸ்கூல் ஃபர்ஸ்ட்டு... இத்த என்னன்னு சொல்ல. அந்த வாத்தியார்கிட்ட படிச்ச பசங்கள்ல சிலபேர் அவங்க 10வது மார்க் ஷீட் வச்சு பாலிடெக்னிக் ஜாயின் செஞ்சதுதான் மிச்சம்.
பைசல் நம்பர் 2:
எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் முஸ்லீம் மதத்து பொண்ண லவ் செஞ்சு அந்த பொண்ணோட ஊர விட்டு ஓடிப்போயிட்டாரு. அப்புறமா அந்த பொண்ணு வீட்டுக்கு போன் செஞ்சு நான் வாழ்ந்தா அவர் கூடத்தான். இல்லைன்னா என்னை தேடாதீங்கன்னு சொல்ல அந்த பொண்ணோட அப்பா அம்மா பத்திரமா அவங்க ரெண்டு பேரையும் கூட்டி வந்து ஊர் பஞ்சாயத்து நடந்தது. காதல் படத்துல வர்றாமாதிரி இல்லாம ரெண்டு குடும்பத்தையும் நிறுத்தி வச்சு பொண்ணோட அப்பா, பையனோட அப்பாக்கிட்ட உங்களுக்கு பையன் வேணும்னா என்னோட பொண்ணு மறந்துடுறேன். அவ உங்ககூடவே இருக்கட்டும். இல்லைன்னா நீங்க உங்க பையனை மறந்துடுங்கன்னு சொல்ல.. பையனோட அப்பாவும் எனக்கு இனிமே பையனே இல்லைன்னு டயலாக் விட்டுட்டாரு. அப்புறம் அந்த பையனை முஸ்லீமா மதம் மாத்தி அந்த பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு வீட்டோட மாப்பிள்ளை ஆக்கிட்டாங்க. இது நடந்து இருவது நாள் கழிச்சு அந்த பையனுக்கு அவனோட பிரண்டு போன் செஞ்சு அவன் பேர் சொல்லி இருக்கானான்னு கூப்பிட உடனே அந்த பொண்ணோட அம்மா கோவமா, நாங்க ****** செலவு செஞ்சு அவனுக்கு பேர் மாத்தியிருக்கோம். அவனோட் பேர் இப்ப ***. அத சொல்லி கூப்பிடு. அப்பத்தான் போன் தருவேன்னு பயங்கரமா ராகிங்க் செஞ்சுருக்காங்க. போன் செஞ்சவன் வெறுத்துப்போய் வெளிய வந்து அவன் லவ்வுக்காக போலிஸ்ல அடிவாங்குன கதையெல்லாம் எடுத்துவுட்டு புண்ணியத்த சேர்த்துக்கிட்டான்.
பைசல் நம்பர் 3:
நான் சார்ஜா வந்து சேர்ந்த கம்பெனில நான் மட்டும்தான் இந்தியாவுலேந்து வந்தவன். மத்தவங்க பாகிஸ்தான், பங்களாதேஷ்லேந்து வந்தவங்க. இந்த விசயம் எனக்கு அங்க போய்தான் தெரிய வந்தது. எனக்கு சும்மாவே நாக்குல சனி. எவனாச்சும் இந்தியாவ பத்தி தப்பாப்பேசிடக்கூடாதேன்னு டெய்லி சூடு ஏறும். ஆனா நான் நெனைச்சதுக்கு மாறா இந்தியாவ எல்லோரும் பாராட்டவே ஜிவ்வுன்னு இருந்துச்சு. ஆனா கொடுமையா மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு டிரைவர் வேலைக்கு, தெரிஞ்சவர் மூலமா மும்பைலேந்து ஒருத்தர் புதுசா சேர்ந்தாரு. எப்பப்பார்த்தாலும் பேசுறப்ப இந்தியாவுல அது சொள்ளை. இது சொட்டைங்குற ரேஞ்சுக்கு விலாவரியா சீன் கட்டுவாரு. அவரு ஒவ்வொரு தடவை இந்தியாவப்பத்தி சொல்றப்பவும் என்னோட கமெண்ட் என்னன்னு எல்லோரும் என்னைய பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.
போன மாசம் கிரைம் ரேட் பத்தி பேச்சு வந்தப்ப இந்தியாவுல வன்முறை ரொம்ப ஜாஸ்திங்கற ரேஞ்சுக்கு அவர் பேச்சு எடுத்து வுட்டுட்டு இருந்தாரு. அவரு முடிக்கற சமயம் நான் சொன்னேன். ஆமா... மும்பைல ரெண்டு தடவ குரூப்பா இவர கேங் ரேப் செஞ்சுட்டாங்கன்னேன். அவ்வளவுதான். எல்லோரும் சிரிக்க.. அவரும் ஒண்ணும் சொல்லிக்க முடியாம சிரிச்சு வச்சாரு. இப்ப ஒரு மாசமா என் முன்னாடி இந்தியாவ பத்தி எதுவும் சொல்றதில்லைங்கற வரைக்கும் எனக்கு நிம்மதி..
Saturday, August 09, 2008
Subscribe to:
Post Comments (Atom)





11 comments:
முதலில் வந்தவன் நான் தானே! :))
பைசல் ஆன கணக்குகளை விட பைசல் ஆகாமல் இருக்கும் கணக்குகள் தான் வாழ்க்கையில் சுகமானது! அப்படின்னு யாரோ ஒரு பெரியவர் சொல்லிட்டு போயிருக்காராம் உங்களுக்கு தெரியுமா???
:)))))
ஷார்ஜாவில் பெண் ஓட்டுனர்கள் வேலைக்கு எடுப்பீர்களா? ஓஹோ, அந்த மாதிரி கேங் ரேப்பா! சரி சரி.
அனுஜன்யா
சென்ஷி அண்ணா,
சூப்பரா கொசுவர்த்தி சுத்தியிருக்கீங்க.
//மும்பைல ரெண்டு தடவ குரூப்பா இவர கேங் ரேப் செஞ்சுட்டாங்கன்னேன்.//
:-)))) உங்க டைமிங் சென்ஸ் அருமை.
அப்புறம் தொடுப்புக்கு நன்றிங்க்ணா.
ஆயில்யன் யாரு அந்த பெரியவரு காவி போட்டுக்கிட்டு ஸ்டேட்ட்ஸ் படமா இருக்காரே அவரா?/
சென்ஷி உன் திறமை தெரியாம அந்த ஆளு பேசிட்டாரு போல.. :)
இந்த பதிவுலருந்து 3 மேட்டர் தெரியுது...
1. சென்ஷி 12வது டொக்கடிச்சி பாலிடெக்னிக் படிச்சிருக்காரு :)
2. ஃப்ரண்டோட லவ்வுக்காக போலிஸ் ஸ்டேஷன்ல அடி வாங்கியிருக்காரு :)
3. "எவனாயிருந்தா எனக்கென்னா" பட ராஜசேகர சென்ஷிக்கு ரொம்ப புடிக்கும்.
என்னா சென்ஷி.. சரியா??? :))))
//மும்பைல ரெண்டு தடவ குரூப்பா இவர கேங் ரேப் செஞ்சுட்டாங்கன்னேன்//
அடப்பாவிங்களா. அதுக்காக இப்படியா?
ஜாக்கிரதை. யாரிடமாவது நீங்களும் மாட்டுவீர்கள்.
சீ. நான் கிண்டல் பண்றதை சொன்னேன்.
நல்லாருங்கண்ணே...:)
என்கிட்டயும் நிறைய கொசுவத்தி இருக்கு ஆனா அதுல்லாம் சரியா சுத்த முடியாத மாதிரிக்குதான் நினைவில இருக்கு ...
:)
மாப்பி....நலமா! ;))
Post a Comment