Sunday, September 21, 2008

என்ன கொடும சுப்பையா சார் இது..?!!!?



உண்மையிலேயே இப்படி மறுபடி மறுபடி சொல்றதுக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது.

என்னைப்பத்தி என் கல்யாண ராசியப் பத்தி ஊர்ல எல்லோருக்குமே தெரியும்னாலும் நானே பதிவு போட்டு தமிழ்மணத்துக்கு தெரிய வச்சிருந்தேன்.

கல்யாணராசின்னா என்னன்னு தெரியாதவங்க என்னோட இந்த பதிவ படிச்சுப் பாருங்க. இல்லைன்னா கஷ்டப்பட வேணாம். நான் அடுத்த பாராவுல அதைப்பத்தி எழுதிடறேன்.

யாருக்காவது பொண்ணுக்கு கல்யாணம் ஆகனும்னா நம்மளை லுக் விடுறாளுங்க.. கல்யாணம் கட்டிட்டு போயிடுறாளுங்க. நமக்கு ரொம்ப நாள் டவுட்டு.. இது உண்மைதானான்னு தெரிஞ்சுக்க லேடிஸ்காலேஜ்ல படிக்குற காலேஜ் பஸ்ல போற ஒரு பொண்ண பாத்து சிரிச்சு வச்சேன். ரெண்டு நாளைக்கு அப்புறம் பஸ்லேந்தும் சிரிப்பு வரத்தொடங்க... 4வது நாள்லேந்து ஆளைக்காணோம். என்னடான்னு கேட்டா.. அவளுக்கு கல்யாணம்ன்னாங்க. சத்தியமாங்க... அப்பத்தான் என் கூட இருந்த பசங்களே நம்புனாங்க.. எனக்கு இப்படி ஒரு தோஷம் இருக்குன்னு :(

கேர்ள் ப்ரண்ட் உள்பட எல்லோரும் என்னை வச்சு கிண்டல் பண்ணியாச்சு. என் ஃபிரண்ட்ஸ் அன்னைலேந்து தூது போகக்கூட என்னை அனுப்ப பயப்படுறானுங்க.

இந்த பதிவு போட்ட அன்னிக்கு நைட்டே தல பாலபாரதி போன் செஞ்சு "ஏண்டா மாப்ள! உன்னோட இந்த ராசி பொண்ணுங்களுக்கு மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகுமா.. இல்ல பசங்களுக்குமா"ன்னு கேட்டு ராகிங் செஞ்சாரு.
(குறிப்பிட வேண்டிய விசயம்: தலைக்கு கல்யாணம் நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீணாய் பிரம்மச்சாரிகள் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.)

மறுநாள், செந்தழல் ரவி போன் செஞ்சு, "ஏன் சென்ஷி! வேலை வாய்ப்பு பதிவுக்கு பக்கத்துல கல்யாண மாலை பதிவும் ஆரம்பிக்கலாமா"ன்னாரு. அவருக்கு தெரிஞ்ச நிறைய்ய ஆண்ட்டிங்க கல்யாணம் ஆகாமலேயே இருக்காங்கன்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். கூடவே சில பேர் மெயில்ல வேற டார்ச்சர்.. அந்த கதைய இப்ப சொன்னா சுவாரசியமா இருக்காது. அதனால் அது சென்சார்..

கோவையில ஆசானை பார்த்தப்பக்கூட இந்த மேட்டர கேக்க தோணாம மத்த விசயம் எல்லாம் பேசித்தீர்த்தேன். (இல்லன்னா அவர் பேசுனத கேட்டுக்கிட்டு இருந்தேன்னு கூட சொல்லிக்கலாம்).

சரி. இந்தியாவ விட்டே வந்தாச்சே சார்ஜாவுல நமக்கு ராசி ஒர்க் ஆகிடும்ன்னு நம்பி ஆயில்யனை கேட்டேன். அவரும் "கவலையேப்படாதீங்க அண்ணே! வீக் என்ட் ஜொள்ளு போட்டா உடனே கல்யாணம் தான். பாருங்க நம்ம மங்களூர் சிவாவ" அப்படின்னு உதாரணமெல்லாம் கொடுத்தாரு.

ஒரே ஒரு போட்டோ போட்டு ஒரு பதிவுதாங்க போட்டேன். அதுக்கே பாருங்க. ஓணம் அன்னிக்கு ஏசியா நெட் டிவியில மீரா ஜாஸ்மின் பேட்டி கொடுத்திருக்காங்க. அவங்க கல்யாணத்துக்கு ரெடியாம். மாப்பிள்ளை பெங்களூர். கர்நாட சங்கீதம் போல.. என்ன கொடும சார் இது..!

வீக் என்ட் ஜொள்ளு போட்டு எனக்கு கல்யாணம் ஆகும்ன்னு நினைச்சா இப்படியா விதி திருப்பிக்கிட்டு அடிக்கணும். அம்மிணிக்கு கல்யாணம் பிக்ஸ் ஆன சோகமான சுகமான சந்தோசத்தை நான் யார்கிட்ட சொல்லி அழ...! வெறும் போட்டோ போட்டு சொன்னதுக்கே இந்த கதின்னா மத்ததப்பத்தி நீங்களே யோசிச்சு பாருங்க மக்களே...!

ஆக மொத்தம் இதனால எனக்கு தெரிஞ்ச தெரிஞ்சுக்கிட்ட விசயம் என்னன்னா இன்னும் என்னோட கல்யாண ராசி படு பயங்கரமா என்னை கைப்புள்ள ஆக்கி சுத்தி சுத்தி அடிச்சு தன்னோட வேலையை காட்டிட்டு இருக்குது.

டிஸ்கி 1: ஆசானே! இந்த ராசி தற்காலிகமாவாச்சும் தடை செய்ய ஏதாச்சும் பரிகாரம் இருக்குதா? ஜலதோஷம் பிடிக்காத சந்தோஷமான பரிகாரம்ன்னா ஓக்கே :)

டிஸ்கி 2: இதை படிச்சுட்டு டெல்லியிலேந்து மங்கை அக்காவோ இல்ல முத்துக்காவோ, இது தீர ஒரே வழி வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் செய்யறதுதான்னு பின்னூட்டம் போட இப்பவே தடை உத்தரவு சொல்லிடறேன். இந்த பாராவை காப்பி பேஸ்ட் செஞ்சு கூட ரிப்பீட்டே போடக்கூடாது சொல்லிட்டேன். புதுசா வேற பின்னூட்டம் அய்யோ பாவம் இப்படி போட எந்த அப்ஜெக்சனும் இல்ல.. :):)

டிஸ்கி 3: சூழ்நிலைய பார்த்தா விடை கொடுங்கள் நண்பர்களேன்னு கடைசி பதிவு போட்டு, மொத்தமா இழுத்து மூடிட்டு சாமியாரா போயிடலாமாங்கற எண்ணமும் இருக்குது. தலைமை சீட கேடியா ஆயில்யனை நியமிக்கலாம்ன்னு இருக்கேன். ஷார்ஜா, தோஹாவை தவிர தற்சமயம் வேறெங்கும் கிளைகள் இல்லை. விண்ணப்பம் வேண்டுவோர் ஆயில்யனை தொடர்பு கொள்க. அவர் எனது பேங்க் அக்கவுண்ட் தருவார். பணத்தை தவிர சாமி படம் போட்ட எந்த டாலரும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது அது சுப்பிரமணிய சாமியா இருந்தாலும் கூட..!

டிஸ்கி 4: வீக் என்ட் ஜொள்ளு இனிமேல் சத்தியமா கிடையாது! மேலும் எனக்கு இந்த விசயத்தை வெகு சந்தோஷமாக சொன்ன மலையாள தோழருக்கு பேதி மாத்திரையை டீயில் அல்லது கோக்கில் எதில் கலந்து தருவது என்ற குழப்பம் இன்னும் இருக்கிறது. :(

55 comments:

ஆயில்யன் on Sunday, September 21, 2008 2:52:00 AM said...

அச்சச்சோ !!!!

சும்மா அதிருதுல on Sunday, September 21, 2008 3:07:00 AM said...

பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!
/

நாங்க இங்க தான் குந்திகினு இருப்போம் :)


கொய்யால அனானி அலவ்ட் இல்ல

பேச்ச பாரு பேச்ச

சும்மா அதிருதுல on Sunday, September 21, 2008 3:12:00 AM said...

இரு பதிவ படிச்சிட்டு வர்ரேன்

சும்மா அதிருதுல on Sunday, September 21, 2008 3:18:00 AM said...

ச்சீ மொக்க பதிவு :)

தமிழன்... on Sunday, September 21, 2008 4:37:00 AM said...

1

தமிழன்... on Sunday, September 21, 2008 4:38:00 AM said...

test 1

தமிழன்... on Sunday, September 21, 2008 4:38:00 AM said...

test 2

தமிழன்... on Sunday, September 21, 2008 4:38:00 AM said...

test 3

தமிழன்... on Sunday, September 21, 2008 4:39:00 AM said...

\\
உண்மையிலேயே இப்படி மறுபடி மறுபடி சொல்றதுக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது.
\\

எங்களுக்கும்தான்...

தமிழன்... on Sunday, September 21, 2008 4:41:00 AM said...

\\
"கவலையேப்படாதீங்க அண்ணே! வீக் என்ட் ஜொள்ளு போட்டா உடனே கல்யாணம் தான். பாருங்க நம்ம மங்களூர் சிவாவ"
\\

சூப்பரு ஆயில்யன்...:))

ஆனா அவர் நயன்தாராவுக்கு கவிதை எழுதியில்ல கல்யாணம் நடந்திச்சு அப்படின்னாங்க...?!

தமிழன்... on Sunday, September 21, 2008 4:43:00 AM said...

\\
அதுக்கே பாருங்க. ஓணம் அன்னிக்கு ஏசியா நெட் டிவியில மீரா ஜாஸ்மின் பேட்டி கொடுத்திருக்காங்க. அவங்க கல்யாணத்துக்கு ரெடியாம். மாப்பிள்ளை பெங்களூர். கர்நாட சங்கீதம் போல.. என்ன கொடும சார் இது..!
\\

மீரா நீயுமா???????

(கோபிகாதான் போயிட்டாள்னு பாத்தா...)

தமிழன்... on Sunday, September 21, 2008 4:48:00 AM said...

\\
மறுநாள், செந்தழல் ரவி போன் செஞ்சு, "ஏன் சென்ஷி! வேலை வாய்ப்பு பதிவுக்கு பக்கத்துல கல்யாண மாலை பதிவும் ஆரம்பிக்கலாமா"ன்னாரு. அவருக்கு தெரிஞ்ச நிறைய்ய ஆண்ட்டிங்க கல்யாணம் ஆகாமலேயே இருக்காங்கன்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன்.
\\

அப்ப அவரு அங்கிளா??? ;)

தமிழன்... on Sunday, September 21, 2008 4:50:00 AM said...

\\
சூழ்நிலைய பார்த்தா விடை கொடுங்கள் நண்பர்களேன்னு கடைசி பதிவு போட்டு, மொத்தமா இழுத்து மூடிட்டு சாமியாரா போயிடலாமாங்கற எண்ணமும் இருக்குது. தலைமை சீட கேடியா ஆயில்யனை நியமிக்கலாம்ன்னு இருக்கேன். ஷார்ஜா, தோஹாவை தவிர தற்சமயம் வேறெங்கும் கிளைகள் இல்லை.
\\

அண்ணே நானும் வரேன்...:)

தமிழன்... on Sunday, September 21, 2008 4:51:00 AM said...

வீட்டுல பாக்கிற பெண்ணை கல்யாணம் பண்ணாதீங்க சென்ஷி அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்...:)

தமிழன்... on Sunday, September 21, 2008 4:53:00 AM said...

அண்ணே நீங்க கவிதை சொல்லி பல நாள் ஆச்சு அண்ணே...?

SP.VR. SUBBIAH on Sunday, September 21, 2008 5:18:00 AM said...

///////டிஸ்கி 1: ஆசானே! இந்த ராசி தற்காலிகமாவாச்சும் தடை செய்ய ஏதாச்சும் பரிகாரம் இருக்குதா? ஜலதோஷம் பிடிக்காத சந்தோஷமான பரிகாரம்ன்னா ஓக்கே :)/////

தேவை வேறு, ஆசை வேறு!
தஞ்சாவூர் மானம்பூச்சாவடி அல்லது மேல ரத வீதியில், பல கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணானகத் தேடினால்
திருமணம் நிச்சயம். இது தேவைக்காக முயற்சிப்பதும் நடக்ககூடியதும் ஆகும்.
முகேஷ் அம்பாணியின் பெண்ணை மணந்து கொள்ள ஆசைப் பட்டால், அல்லது மன்மோகன் சிங்கின் பேத்தியை மனம் செய்து கொள்ள ஆசைப்பட்டால், இந்த ஜென்மத்தில் அது நடக்காது.( பாவனா, நயந்தாரா, ப்ரியா மணி என்று மினுக்கும் நடிகைகள் அத்தனை பேரும் இந்த் லிஸ்ட்டில்தான் சென்ஷி!)

ஆகவே தேவையை நிறைவேற்றுங்கள். ஆசையை வலைப்பதிவில் வைத்துக்கொள்ளூங்கள்:-)))))

சும்மா அதிருதுல on Sunday, September 21, 2008 5:59:00 AM said...

ஆசையை வலைப்பதிவில் வைத்துக்கொள்ளூங்கள்:-)))))
//

அன்பை
பிலிபேனி பொண்ணு மனசில் வை

ஆசை அடங்கிடும்

வலை பக்கம் வரமாட்டாய்

தமிழ் பிரியன் on Sunday, September 21, 2008 6:48:00 AM said...

இது தீர ஒரே வழி வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் செய்யறதுதான்

பரிசல்காரன் on Sunday, September 21, 2008 8:16:00 AM said...

நீங்க ‘என்ன கொடுமை மீரா இது?'ன்னுகூட தலைப்பு வெச்சிருக்கலாம்.

பரிசல்காரன் on Sunday, September 21, 2008 8:18:00 AM said...

அப்ப, இனிமே மரத்தை சுத்தறதுக்குப் பதிலா, உங்க ஃபோட்டோவைச் சுத்தி வரச் சொல்லவா?

செந்தழல் ரவி on Sunday, September 21, 2008 9:06:00 AM said...

மீ த 21ஸ்டு

செந்தழல் ரவி on Sunday, September 21, 2008 9:07:00 AM said...

நல்ல தரமான மொக்கை பதிவு...!!!

செந்தழல் ரவி on Sunday, September 21, 2008 9:07:00 AM said...

அபி அப்பா மற்றும் ஆற்காடு வீராசாமி ஆதரவு இந்த பதிவுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் !!!

செந்தழல் ரவி on Sunday, September 21, 2008 9:11:00 AM said...

நீங்க மாட்ரிமேனியில எல்லாம் தேடுனது இல்லையா ?

கோபிநாத் on Sunday, September 21, 2008 10:37:00 AM said...

அய்யோ...அய்யோ....ஒரே காமெடி தான் போங்க....;))

விஜய் ஆனந்த் on Sunday, September 21, 2008 10:41:00 AM said...

:-)))...

ரொம்ப புண்பட்டுப்போயிருக்கீங்களோ...

அய்யோ ப்ப்ப்பாவம்...

வெண்பூ on Sunday, September 21, 2008 10:51:00 AM said...

//
இதை படிச்சுட்டு டெல்லியிலேந்து மங்கை அக்காவோ இல்ல முத்துக்காவோ, இது தீர ஒரே வழி வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் செய்யறதுதான்னு பின்னூட்டம் போட இப்பவே தடை உத்தரவு சொல்லிடறேன். இந்த பாராவை காப்பி பேஸ்ட் செஞ்சு கூட ரிப்பீட்டே போடக்கூடாது சொல்லிட்டேன். புதுசா வேற பின்னூட்டம் அய்யோ பாவம் இப்படி போட எந்த அப்ஜெக்சனும் இல்ல..
//

அய்யோ பாவம் :))))

முத்துலெட்சுமி-கயல்விழி on Sunday, September 21, 2008 11:15:00 AM said...

அய்யோ பாவமே!

சென்னை பித்தன் on Sunday, September 21, 2008 12:11:00 PM said...

கல்யாணம் ஆகறத்துக்காக , திருமணஞ்சேரி, திருவிடந்தைன்னு எங்கெங்கெயோ போயிட்டு வாராகளே எல்லோரும்.போய்ப் பாத்துர வேண்டியதுதானே!கோவில்ல வச்சே பொண்ணு கெடச்சாலும் கெடக்குமில்லெ!இல்லே நீங்க பாத்த நேரம்,அங்க வந்த பொண்ணுகளுக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆகுமில்ல!நல்ல காரியந்தானே!

சென்னை பித்தன் on Sunday, September 21, 2008 12:18:00 PM said...

உங்க சாதகத்துலெ,ஏழாமெடத்திலெ,சனி இருந்து பாடாப்படுத்துறான் போல.அந்த சனி பார்வை போனாத்தான் வாழ்க்கையிலெ புதுச் சனி வந்து சேரும்னு நெனைக்கிறேன்!!

ஸ்ரீ on Sunday, September 21, 2008 12:20:00 PM said...

//தலைமை சீட கேடியா ஆயில்யனை நியமிக்கலாம்ன்னு இருக்கேன். //

Ennayum second seeda KDya sethuko naina. Edhavadhu enterance test iruka? ;)

நிஜமா நல்லவன் on Sunday, September 21, 2008 4:49:00 PM said...

அடங்கொய்யால....!

நிஜமா நல்லவன் on Sunday, September 21, 2008 4:49:00 PM said...

சென்ஷியானந்தா வாழ்க..:)

நிஜமா நல்லவன் on Sunday, September 21, 2008 4:51:00 PM said...

/கோபிநாத் said...

அய்யோ...அய்யோ....ஒரே காமெடி தான் போங்க....;))/


சென்ஷி நல்லா பார்த்துக்குங்க....உங்க நண்பருக்கு உங்க சோகம் காமடியா தெரியுதாம்.....என்ன கொடுமை சார் இது??????????

நிஜமா நல்லவன் on Sunday, September 21, 2008 4:53:00 PM said...

ஒன்னு மட்டும் நல்லா தெரியுது....வர்ற தைல நல்ல விஷயம் நடக்க போகுது...:)

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:37:00 PM said...

இனிதாய் எண்ட்ரீ போட்டுக்கிறேன் ரெண்டாவது தபா! :))

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:42:00 PM said...

//உண்மையிலேயே இப்படி மறுபடி மறுபடி சொல்றதுக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது.///

என்ன பண்றது!

உண்மைன்னா சொல்லித்தானே ஆகணும்! இல்லாட்டின்னா அது எப்படி உண்மையாகும்!

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:48:00 PM said...

//யாருக்காவது பொண்ணுக்கு கல்யாணம் ஆகனும்னா நம்மளை லுக் விடுறாளுங்க../

சரி !

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:48:00 PM said...

//தலைக்கு கல்யாணம் நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீணாய் பிரம்மச்சாரிகள் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்.)
///


ஒரே ஒரு வாட்டி மட்டும்!~

ப்ளீஸ்!

ப்ளீஸ்

புண்ணியமா போகும் பிரதர்!

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:50:00 PM said...

//இதை படிச்சுட்டு டெல்லியிலேந்து மங்கை அக்காவோ இல்ல முத்துக்காவோ, இது தீர ஒரே வழி வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் செய்யறதுதான்னு பின்னூட்டம் போட இப்பவே தடை உத்தரவு சொல்லிடறேன். /

ஹல்லோ தில்லிக்காரங்களே

சீக்கிரமா வீட்டுக்கு இன்பார்ம் பண்ணுங்கப்பான்னு வெறுத்து போய் சொல்ற மாதிரியில்ல இருக்கு ?????

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:52:00 PM said...

//தலைமை சீட கேடியா ஆயில்யனை நியமிக்கலாம்ன்னு இருக்கேன். //


அடியேன் பாக்கியம் குருவே!

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:54:00 PM said...

//தமிழன்... said...
\\
"கவலையேப்படாதீங்க அண்ணே! வீக் என்ட் ஜொள்ளு போட்டா உடனே கல்யாணம் தான். பாருங்க நம்ம மங்களூர் சிவாவ"
\\

சூப்பரு ஆயில்யன்...:))

ஆனா அவர் நயன்தாராவுக்கு கவிதை எழுதியில்ல கல்யாணம் நடந்திச்சு அப்படின்னாங்க...?!
//


ஓ இது வேறயா???

தமிழன் ஏகப்பட்ட விசயம் கைவசம் வைச்சிருக்காருப்பா!

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:55:00 PM said...

// தமிழன்... said...
\\
அதுக்கே பாருங்க. ஓணம் அன்னிக்கு ஏசியா நெட் டிவியில மீரா ஜாஸ்மின் பேட்டி கொடுத்திருக்காங்க. அவங்க கல்யாணத்துக்கு ரெடியாம். மாப்பிள்ளை பெங்களூர். கர்நாட சங்கீதம் போல.. என்ன கொடும சார் இது..!
\\

மீரா நீயுமா???????

(கோபிகாதான் போயிட்டாள்னு பாத்தா...)
///

தம்பி தமிழா நீ முதல்ல உன்னோட லிஸ்ட ரீலிசு பண்ணுப்பா!

(எத்தனை???)

ஆயில்யன் on Sunday, September 21, 2008 5:57:00 PM said...

//தமிழ் பிரியன் said...
இது தீர ஒரே வழி வீட்ல பார்க்குற பொண்ண கல்யாணம் செய்யறதுதான்
//

அனுபவம் பேசுகிறது!???

வடகரை வேலன் on Sunday, September 21, 2008 10:30:00 PM said...

சென்ஷி,

நடிகை மீனாவுக்கு ஒரு பதிவு போடுங்க பாவம். ரெம்ப நாளா பாத்துட்டு இருக்காங்க.

ஸ்ரீமதி on Monday, September 22, 2008 11:02:00 AM said...

எங்கண்ணா ராசி நல்ல ராசி..!! எப்போதும் பெரியவங்க ஆசி..!! :))))))

ஆயில்யன் on Monday, September 22, 2008 11:33:00 AM said...

//வடகரை வேலன் said...
சென்ஷி,

நடிகை மீனாவுக்கு ஒரு பதிவு போடுங்க பாவம். ரெம்ப நாளா பாத்துட்டு இருக்காங்க.
//


குரு!

வ.வே சொல்றத பார்த்தா பெரிய லிஸ்டே ரெடியாகுது போல!

எதுக்கும் ஒரு பாங்கு ஒபன் பண்ணிடலாமா??

ஆயில்யன் on Monday, September 22, 2008 11:34:00 AM said...
This post has been removed by the author.
rapp on Monday, September 22, 2008 6:22:00 PM said...

49

rapp on Monday, September 22, 2008 6:22:00 PM said...

me the 50th

ஜோசப் பால்ராஜ் on Monday, September 22, 2008 9:00:00 PM said...

ஏன் சாமி, உங்களுக்கு தான் ஒரு பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுன்னு புலம்புறீங்களே, இதுல எப்டி நீங்க சாமியாரா ஆக முடியும்? இருக்க முடியாதவன் பறக்க ஆசைப்பட்ட கதையால்ல இருக்கு? ஆசை படுறது தப்புல்ல, ஆனா நீங்க படுறது பேராசையால்லா இருக்கு?

பொழைக்கிற வழிய பாருங்கண்ணா.

நான் வேணும்ணா ஒரு நல்ல யோசனை சொல்லட்டா? இங்கு பெண்களுக்கு திருமண தடை நீக்க பூஜை செய்யப்படும்னு போட்டு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சுருங்க. ( ராயல்டி எனக்கு குடுத்துரனும்.) நல்லா ஓடும்ல.

( நாங்களும் இப்டியெல்லாம் புலம்புனவங்க தான்)

நாமக்கல் சிபி on Monday, September 22, 2008 10:14:00 PM said...

// பாவனா, நயந்தாரா, ப்ரியா மணி என்று மினுக்கும் நடிகைகள் அத்தனை பேரும் இந்த் லிஸ்ட்டில்தான் சென்ஷி!)

ஆகவே தேவையை நிறைவேற்றுங்கள். ஆசையை வலைப்பதிவில் வைத்துக்கொள்ளூங்கள்:-)))))
//

ம்ஹூம்! வேற வழி!

நாமக்கல் சிபி on Monday, September 22, 2008 10:19:00 PM said...

குழந்தாய்,

மனதைத் தளர விடாது உன்னும் பல கல்லூரி வாசல்களை வலம் வருவாயாக! பலபேருக்கு மாங்கல்ய பாக்கியம் ஏற்படுத்தித் தரப் போகும் வரம் உமக்குக் கிடைத்திருக்கிறது! அது உமக்குப் புண்ணியம்! அது உமக்கு ஆன்ம திருப்தி!(திருப்பதி அல்ல) அதுவே உமக்கு முக்தியை அடையும் வழியை நல்கும்!

வாழ்க! வளர்க!

- சுவாமி பித்தானந்தா
கீழ்ப்பாக்கம்

வால்பையன் on Monday, September 22, 2008 10:42:00 PM said...

உங்களிடம் நட்பு வைத்து கொண்டால் இரண்டாவது கல்யாணம் கூட நடக்கும்னு குசும்பன் எல்லாத்துக்கும் மெயில் அனுப்புராரமே உண்மையா

Jeeves on Wednesday, September 24, 2008 4:59:00 PM said...

sema jadhagambaa
attakaasam

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com