Thursday, October 02, 2008

கண்ணாடி கொத்தும் பறவை!



வெயிலின் கண்கள்

புவியில் உணவிற்கான வாழ்க்கைப்பயணத்தின் முதற் சக்கரம் சுழலத்தொடங்கியிருந்தது. ஆதாம் சிறுவிலங்குகளை வேட்டையாடி கொல்லக்கற்றுக்கொண்டான். பெரிய மிருகங்களை அச்சப்படுத்தி விரட்டத்தெரிந்திருந்தது. ஏவாள் அழகாக இருந்தாள். ஆதாம் உணவின் ருசியை அனுபவித்து உண்ணத்தொடங்கினான். பச்சைநிற இலைகளுக்கு மத்தியில் மறைந்திருந்த பழங்களை தேடத்தொடங்கினான். ப‌ற‌வைக‌ளின் திசையில் கிடைக்கும் இனித‌ண்ணீரை ப‌ருகினான். ஏவாள் அழ‌காக இருந்தாள். ஆதாம் பெரிய‌தாய் ச‌ப்த‌மெழுப்பி அது எதிரொலித்த‌லை கேட்டு ர‌சித்தான். நெஞ்சு விரிவ‌டைய‌த் தொட‌ங்கியிருந்த‌து. கைக‌ளின் ப‌ல‌ம் உண‌ர்ந்தான். ஏவாள் அழ‌காக இருந்தாள்.

அந்த குகை மிகப்பெரிய பாறைகளால் சூழப்பட்டுள்ள‌தாய் இருந்தது. உள்ளே நுழைவதற்கான வழி சற்று வளர்ந்திருந்த மரத்தினால் குறுகி இருந்தது. ஆதாம் வாசலை பெரிதாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தான். ஒரு பக்கம் பருத்ததும் மறுபக்கம் கூர்மையும் கொண்டிருந்த, மிருகங்களின் தோலை சதைகளிலிருந்து பிரிப்பதற்கான‌ உபயோத்தில் இருந்த அந்த கல் அவனுக்கு மரம் அப்புறப்படுத்தலுக்கு அத்தனை உதவியாயில்லை. ஆனாலும் ஆதாம் சோர்வடையாமல் முயற்சித்துக்கொண்டிருந்தான்.

ஏவாள் குகையினுள்ளே தன் அழகை அறியாமல் உள்ளே குகையை விட அதிகமாய் பெரிதாய் விரவியிருந்த இருட்டை வாசித்துக்கொண்டிருந்தாள். இருட்டின் மறுபுறம் புதிய உலகம் இருக்கும் என்று அவள் நம்பிக்கொண்டிருந்தாள். ஆதாம் மற்றும் ஏவாளுக்கு முழுமையாய் வியர்வை உடையாக மாறியிருந்தது. சிறிது அதிகம் சென்ற நேரத்திற்கு பின் செதில்களாகி உரிந்திருந்த‌ பட்டைகள் பிரிந்த‌ மரத்தின் பகுதியிலிருந்த ஒரு கிளை மண் தொட்டது. குகையினுள் வெளிச்சம் ஒற்றைப்புள்ளிச்சீராக‌ ஏவாளை எட்டிப்பார்த்தது. ஏவாள் மெதுவாக இருட்டிலிருந்து வெளிச்சம் நோக்கி நகர்ந்தாள்.

பாறையை தடவி சிதறிய வெயிலின் மிச்சம் பாதை தவறாமல் ஒற்றைக்கோட்டோவியமாய் மண்ணில் கிடத்தி மகிழ்ந்தது வெளிச்ச‌ப்பொட்டை. ஏவாள் வெளிச்சத்தை கையில் தாங்கினாள். விரலின் இடுக்குகளின் வழியே புதிதாய் சிகப்புப்பூ பூத்திருந்தது. ஏவாள் மகிழ்ச்சியுற்றாள். வெயில் பிளவுகள் தாண்டி விழ விரும்பவில்லை. ஏவாள் அந்த வெளிச்சத்தை விரல்களால் சிறு சிறு பின்னல்களாக மாற்றத்தொடங்கினாள். முடிவில்லாது நீண்டு விழுந்து கொண்டிருந்தது ஒளி. பின்னல்கள் போர்வையாய் ஆனது. பெரியதாய் மிகப்பெரியதாய்.

ஒற்றைத்திசையெதிர்த்து முடிவிலியாய் தொடர்ந்த வெளிச்சப்புள்ளி, ஏவாள் உதடு குவித்து கொடுத்த முத்தத்தில் அறுந்தது. வெளிச்சச்சிதறல்கள் காற்றின் வெளியில் மிதத்தலை ஆதாரம் கொண்டு விர‌வி நின்றது. மிகுதி அறியாது மீத‌ம் கொண்டிருந்த‌ அத்த‌னை வெயிலும் சிதைவின் வ‌ழி ஒட்டி நின்ற‌ முத்த‌த்தின் எல்லைத்தொட்டு தாண்டாம‌ல் சேரத்தொடங்கிய‌‌து. ஏவாள் வெளிச்ச‌ப்பின்ன‌லை போர்த்திக்கொண்டு இருட்டினுள்ளே சென்று க‌ல‌ந்தாள். வெளிச்ச‌த்தின் குளிர்ச்சியால் ஏவாளுக்கு அதிக‌ம் குளிர்ந்த‌து. குகையின் இருட்டு அவ‌ளுக்கு வ‌ழி ஒதுக்கி ஒதுங்கி நின்ற‌து. ஏவாள் திரும்பி பார்க்காம‌ல் முன்னே சென்று கொண்டிருந்தாள்.

ஆதாம் குகையினுள் வ‌ந்து பார்த்த‌போது வாச‌ல் த‌ள்ளி அதிக வெளிச்ச‌த்தை தாங்கிக்கொண்டு நின்றிருந்த‌து ஏவாளின் முத்த‌ம். குகையில் ஏவாளை தேடி கிடைக்காம‌ல் குவிந்திருந்த வெளிச்ச‌த்தில் தேட‌சிதைவுக‌‌ளில் ஏவாள் பிம்பத்தின் மிச்சங்கள் சித‌றிக் காண‌ப்ப‌ட்ட‌ன‌. கோப‌த்துட‌ன் ஆதாம் த‌லைக்கு மேல் வெயில் தாங்கிய‌ முத்த‌த்தை க‌ல்லால் சிதைத்தான். முத்த‌ம் உடைய, வெயில் பிள‌வின் வ‌ழி வ‌ழிய‌த்தொட‌ங்கி பிர‌வாக‌மாய் ஆதாமை ந‌னைத்து மூழ்க‌டித்த‌து. ஆதாம் உருகி உறைந்து நின்றான். வெயிலின் மூர்க்கத்தில் ஏவாளின் முத்தம் தொலைந்து போயிருந்தது. ஏவாள் திரும்பி வந்தபோது வெயில் சுமந்த ஆதாமின் கண்கள் மட்டும் காணக்கிடைத்தன. அதிக வெளிச்சத்திலும் கண்களின் பிரகாசத்தில் ஏவாள் மட்டுமே தெரிந்தாள். ஏவாள், ஆதாமின் கண்களுக்குள் தன்னை ஊடுருவியபோது ஆதாமின் முகம் தெரிந்தது. வெயில் பட்டு மினுமினுத்த ஆதாமின் கண்களை எடுத்துக்கொண்டு ஏவாள் மீண்டும் வெளி நடந்தாள்.

சப்தவெளிகள்

ஜெனிதாவிற்கு மீண்டும் மீண்டும் அந்த சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் மௌனத்தை கலைக்க அவன் செய்த மாயம் என்ற எண்ணத்தில்தான் இவ்வளவு நேரமும் படுக்கையிலிருந்து நகராமல் அவள் இருந்தாள். ஆனால் நேரமாக ஆக சப்தத்தொனி மாறியிருந்தது விசித்திரமாயிருந்தது. அவனிடம் அவளுக்கு காதலை விட அதிகமாய் பயம் இருந்தது. காதலித்து விடுவோமோ என்ற பயம் அதிகரித்திருந்தது. நேராக எழுந்து அவனருகே சென்றாள். அந்த கண்ணாடியில் அவளது உருவம் தவிர்த்து அவன் நின்றிருந்தான். அவனையும் தவிர்த்து ஏதேனும் பிம்பம் கிடைக்குமானால் அது வெளிச்சத்தினுடையதாக இருந்தது. எத்தனை முயன்றும் அவன் மேல் விழுகின்ற வெளிச்சத்தை இவளால் தவிர்க்க இயலவில்லை. மெதுவாய் மிக மெதுவாய் வெயில் அந்த கண்ணாடியை கொத்தி அவனை இரையாக்கத் துடித்தது.

வெளிகளின் சப்த தரிசனங்கள் தொலைவுகளை குறைத்தல் குறித்த அனுபவக்கூறல்கள் காதல் பாதையின் எல்லைக்கோடான மறுகரையாக தோன்றியும் நீளும் வார்த்தைகளுடன் அவதானித்தலும் பின்னர் உருவெடுத்தலும் முற்றாய் முறை தீர்ந்து அவனை அவளை அவனை அவளை மீண்டும் அவனை அவனை அவனை மட்டும் இணைக்கச்செய்து பிணைப்பில் உள்ள சங்கிலியாய் இருந்தது.

ஜெனிதாவுக்கு அவன் மேல் காதல் வந்தது. அவனை பார்ப்பதை தவிர்த்தாள். ஜெனிதா அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாள். அவன் எங்கும் அவள் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தான். அவனிடம் பேசுவதற்காக மௌனத்தின் துணை கொண்டு வார்த்தைகளை சேர்க்க ஆரம்பித்திருந்தாள். மனங்கொள்ளாத அளவு வார்த்தைகள் சேர்ந்திருந்தது. மனத்தில் நிலைகொள்ளாத வார்த்தைகள் மேலும் மேலும் உடல் முழுவதும் சூழத்தொடங்கின. அவளைச்சுற்றிலும் சொல்லாத வார்த்தைகள் சூழ்ந்து கொண்டன. சாப்பிடும்போது, தும்மும்போது, முகம் கழுவும்போது வார்த்தைகள் நழுவுதல் கண்டு வேதனையுற்று செயல் மறந்திருந்தாள். அதி தீவிர மௌனம் கொண்ட அவள் அறை முழுவதும் வார்த்தைகள் நிறைந்து விட்டன. அவளது மூடப்பட்ட அறைக்கதவை வார்த்தைகள் முட்டி மோதி திறக்க முயற்சித்தன.

சுயம்புகளான வார்த்தைகள் மொத்தமும் ஒன்றையொன்று உடைத்து இறக்கும் தருவாயிலும் ஜெனிதாவால் கண்கலங்கி பார்க்க முடிந்ததேயொழிய தனது வார்த்தைகளை காப்பாற்ற முடியவில்லை. உள்ளடங்கிய பழைய வார்த்தைகள் வெளியேறிய வார்த்தைகளுடன் கொண்ட காதலில் புதிய வார்த்தைகள் பிறந்திருந்தது. முடிவற்ற பொழுதாய் தொடங்கியிராத போர்க்குணமும் ராட்சச படிமமும் கொண்ட வார்த்தைச்சிதறல்கள் புதிய சந்தேகங்களை அவளுள் கிளப்பியது. ஜெனிதாவின் மௌனத்தை சுற்றி சுழலும் அதிக சப்தவெளிகளை கேட்ட அவளது தாயார் மயக்கம் கொண்டார். ஜெனிதா கையில் கிடைத்த வார்த்தைகளை அள்ளிக்கொண்டு வாசல் தாண்டுகையில் மிச்ச வார்த்தைகள் அவளைத்தொடர முடியாது தவித்தன. வாசல் நின்று வார்த்தைகளை வான் நோக்கி வீசுகையில் அத்தனையும் அவனுக்கான வசவுகளாக மாறியிருந்தது எப்படியென்று எவராலும் அனுமானிக்க முடியவில்லை. அபரிமித காதல் அர்த்தமற்று மரித்துப்போயிருந்தது. ஜெனிதா மனப்பிறழ்வுற்றவளென முடிவு செய்து கொடுத்திருந்த அவளுக்கான தனியறையில் சப்தங்கள் கிடைக்காத வண்ணம் செய்ய யாராலும் முடியவில்லை. சப்தவெளிகளில் அவளது பாதை தெளிவானதாக இருந்தது. அங்கும் அவன் இருந்தான் வெளிச்சத்தையும் கூட சேர்த்து அழைத்துக்கொண்டு...

நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"

47 comments:

கோபிநாத் on Friday, October 03, 2008 2:31:00 AM said...

மாஸ் டா மாப்பி நீ....சும்மா பின்னியிருக்க ;)

\\நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"\\

ஒரே சிரிப்பு தான் வருது...;))))))

Sridhar Narayanan on Friday, October 03, 2008 5:06:00 AM said...

//மாஸ் டா மாப்பி நீ....சும்மா பின்னியிருக்க ;)//

எங்க? எங்க? :))

இருங்க எங்க தமிழ் வாத்தியாரை கூட்டிட்டு வரேன். அவர்தான் எல்லா செய்யுளுக்கும் பதம் பிரிச்சு விளக்கம் சொல்லித் தருவார்.

விஜய் ஆனந்த் on Friday, October 03, 2008 8:14:00 AM said...

:-))))...

பரிசல்காரன் on Friday, October 03, 2008 8:22:00 AM said...

//மிகுதி அறியாது மீத‌ம் கொண்டிருந்த‌ //


சபாஷ் சென்ஷி!

ஸ்ரீமதி on Friday, October 03, 2008 9:27:00 AM said...

நல்லா இருக்கு அண்ணா..!! :))

இனியவள் புனிதா on Friday, October 03, 2008 9:30:00 AM said...

அருமையா இருக்கு!!!!

rapp on Friday, October 03, 2008 10:32:00 AM said...

பிரதர், ரெண்டு நாளா பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................ஆகும் காதல் கதையை போட்டு ஓட்டுறீங்களே, வாட் இஸ் த மேட்டர்?

rapp on Friday, October 03, 2008 10:33:00 AM said...

உங்க காதலை கரெக்ட் செய்றதுக்கு ஏதாவது கவுஜ வேணும்னா கேளுங்க, மீ ஹெல்பிங்கோ ஹெல்பிங் யு :):):)

rapp on Friday, October 03, 2008 10:34:00 AM said...

எட்டு கெட்ட நம்பர், அதால இந்தப் பின்னூட்டம்:):):)

rapp on Friday, October 03, 2008 10:34:00 AM said...

me the 10th

rapp on Friday, October 03, 2008 10:35:00 AM said...

//இருங்க எங்க தமிழ் வாத்தியாரை கூட்டிட்டு வரேன். அவர்தான் எல்லா செய்யுளுக்கும் பதம் பிரிச்சு விளக்கம் சொல்லித் தருவார்.//

பன்ச் டயலாக் பரமசிவமாட்டம், சூப்பரா பொளந்து கட்டியிருக்கார் ஸ்ரீதர் சார் :):):)

rapp on Friday, October 03, 2008 10:37:00 AM said...

நியூ பாதர் விஜய் ஆனந்த் இப்டி ஸ்மைலி போட்டுட்டுப் போனா பிரசன்ட் சார்னு அர்த்தமா, இல்ல பிம்பிலிக்கி பிலாபினு அர்த்தமா :):):)

முத்துலெட்சுமி-கயல்விழி on Friday, October 03, 2008 10:53:00 AM said...

சென்ஷி கவிதையிலோ கதையிலோ புனைவிலோ காதலை ஜெயிக்கவைத்ததா சரித்திரம் இல்லையே ராப்..

ஆயில்யன் on Friday, October 03, 2008 11:02:00 AM said...

//பாறையை தடவி சிதறிய வெயிலின் மிச்சம் பாதை தவறாமல் ஒற்றைக்கோட்டோவியமாய் மண்ணில் கிடத்தி மகிழ்ந்தது வெளிச்ச‌ப்பொட்டை//

அருமை!
அருமை!

ஆயில்யன் on Friday, October 03, 2008 11:02:00 AM said...

//வெளிகளின் சப்த தரிசனங்கள் தொலைவுகளை குறைத்தல் குறித்த அனுபவக்கூறல்கள் காதல் பாதையின் எல்லைக்கோடான மறுகரையாக தோன்றியும் நீளும் வார்த்தைகளுடன் அவதானித்தலும் பின்னர் உருவெடுத்தலும் முற்றாய் முறை தீர்ந்து அவனை அவளை அவனை அவளை மீண்டும் அவனை அவனை அவனை மட்டும் இணைக்கச்செய்து பிணைப்பில் உள்ள சங்கிலியாய் இருந்தது.//

இதுதான் கொஞ்சம் டென்ஷனாக்கிடுச்சு!பட் பிரிச்சு வைச்சு மேஞ்சுட்டோம்ல்

ஆயில்யன் on Friday, October 03, 2008 11:02:00 AM said...

//கோபிநாத் said...
மாஸ் டா மாப்பி நீ....சும்மா பின்னியிருக்க ;)

\\நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"\\

ஒரே சிரிப்பு தான் வருது...;))))))
//
எதுக்கு அண்ணாச்சி சிரிப்பு?!

ஆயில்யன் on Friday, October 03, 2008 11:03:00 AM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
சென்ஷி கவிதையிலோ கதையிலோ புனைவிலோ காதலை ஜெயிக்கவைத்ததா சரித்திரம் இல்லையே ராப்..
///

ஆமாம்க்கா! எப்பவுமே பெயிலியர்தான்! :(

ஆயில்யன் on Friday, October 03, 2008 11:07:00 AM said...

//rapp said...
உங்க காதலை கரெக்ட் செய்றதுக்கு ஏதாவது கவுஜ வேணும்னா கேளுங்க, மீ ஹெல்பிங்கோ ஹெல்பிங் யு :):):)
///

ஹய்ய்ய்ய்ய்ய்
அக்கா, எனக்கு ????????

வால்பையன் on Friday, October 03, 2008 11:12:00 AM said...

//புவியில் உணவிற்கான வாழ்க்கைப்பயணத்தின் முதற் சக்கரம் சுழலத்தொடங்கியிருந்தது.//

அப்போது சக்கரமே இல்லையென்பதால் அந்த வார்த்தையை உபயோகித்தல் தவறு

வால்பையன் on Friday, October 03, 2008 11:13:00 AM said...

//ஆதாம் சிறுவிலங்குகளை வேட்டையாடி கொல்லக்கற்றுக்கொண்டான்.//

அப்படியில்லை.
கொன்று வேட்டையாட கற்று கொண்டான், இது தான் சரி

வால்பையன் on Friday, October 03, 2008 11:13:00 AM said...

//பெரிய மிருகங்களை அச்சப்படுத்தி விரட்டத்தெரிந்திருந்தது.//

ஆனால் ஏவாளைப் பார்த்தால் மட்டும் இவன் அச்சப்படுவான்

வால்பையன் on Friday, October 03, 2008 11:14:00 AM said...

//ஏவாள் அழகாக இருந்தாள்.//

அப்படி சொல்லமுடியாது, அப்போது அவள் மட்டுமே இருந்தால் அதனால் அவள் எப்படி இருந்தாலும் அழகு தான்

வால்பையன் on Friday, October 03, 2008 11:15:00 AM said...

//ஏவாள் அழ‌காக இருந்தாள்.//

இந்த வார்த்தையை இரண்டாவது முறையாக பயன்படுத்த காரணம்

வால்பையன் on Friday, October 03, 2008 11:16:00 AM said...

//ஏவாள் அழ‌காக இருந்தாள்.//

மறுபடியுமா, ஏதோ உள்குத்து இருக்கு

வால்பையன் on Friday, October 03, 2008 11:17:00 AM said...

//ஏவாள் மெதுவாக இருட்டிலிருந்து வெளிச்சம் நோக்கி நகர்ந்தாள். //

கூடவே அவளது அழகும் நகர்ந்திருக்குமே

வால்பையன் on Friday, October 03, 2008 11:22:00 AM said...

//வெயில் பட்டு மினுமினுத்த ஆதாமின் கண்களை எடுத்துக்கொண்டு ஏவாள் மீண்டும் வெளி நடந்தாள்.//

ரெண்டு பேரும் சாகலையா

வால்பையன் on Friday, October 03, 2008 11:25:00 AM said...

//நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"//

இது மட்டும் தான் புரிந்தது

வால்பையன் on Friday, October 03, 2008 11:26:00 AM said...

ஒன்றுமே புரியாமல் வெறும் வார்த்தைகளை வெறுமனே படித்து சொல்வது ஒரு சுகம் தான் இல்லையா

வால்பையன் on Friday, October 03, 2008 11:26:00 AM said...

நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு

வால்பையன் on Friday, October 03, 2008 11:27:00 AM said...

இத்தனையையும் படித்து விட்டு இதற்கு மேல் உயிரோடு இருக்க நான் என்ன கிறுக்கனா

வால்பையன் on Friday, October 03, 2008 11:27:00 AM said...

இத்துடன் கும்மி குத்திய ஆசிரியர் வால்பையன் இறந்துவிட்டார்

வால்பையன் on Friday, October 03, 2008 11:28:00 AM said...

இது மறுபிறவி

Jeeves on Friday, October 03, 2008 11:36:00 PM said...

\\நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"\\

ஒரே சிரிப்பு தான் வருது...;))))))
///




வன்மையாக ஆமோதிக்கிறேன்



ஏற்கனவே எச்சரித்திருக்கிறேன். புரியாத படி எழுதினால் எதிர் விளைவுகள் வரும் என்று. ஏற்கனவே அழுகாச்சிக் காவிய கவிதாயினிக்கு நேர்ந்தது உமக்கும் நேரக்கூடும்.


எச்சரிக்கை!!!

சென்ஷி on Saturday, October 04, 2008 12:00:00 AM said...

@ கோபிநாத்..

ஏன் இந்த கொலைவெறி? :(

@ ஸ்ரீதர் அண்ணா..

//இருங்க எங்க தமிழ் வாத்தியாரை கூட்டிட்டு வரேன். அவர்தான் எல்லா செய்யுளுக்கும் பதம் பிரிச்சு விளக்கம் சொல்லித் தருவார்.//

இப்பத்தான் அவரை கொலைவெறிதானேன்னு கேட்டேன். நீங்க அல்ரெடி ரெடியாயிட்டீங்களா :)

@ விஜய் ஆனந்த்..

ஸ்மைலிக்கு நன்றி விஜய் :))

சென்ஷி on Saturday, October 04, 2008 12:02:00 AM said...

@ பரிசல்காரன்..

நன்றி பரிசல் அண்ணா :)

@ ஸ்ரீமதி..

ரொம்ப நன்றி தங்கச்சி :)

@ இனியவள் புனிதா..

வருகைக்கு நன்றி புனிதா :)

சென்ஷி on Saturday, October 04, 2008 12:10:00 AM said...

@ rapp..

//பிரதர், ரெண்டு நாளா பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................ஆகும் காதல் கதையை போட்டு ஓட்டுறீங்களே, வாட் இஸ் த மேட்டர்?//

//உங்க காதலை கரெக்ட் செய்றதுக்கு ஏதாவது கவுஜ வேணும்னா கேளுங்க, மீ ஹெல்பிங்கோ ஹெல்பிங் யு :):):)//

நான் இனிமே என்னத்த சொல்றதுக்கு இருக்குது :(

என்னாது கவுஜயாஆஆஆஆஅ :)

சென்ஷி on Saturday, October 04, 2008 12:12:00 AM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
சென்ஷி கவிதையிலோ கதையிலோ புனைவிலோ காதலை ஜெயிக்கவைத்ததா சரித்திரம் இல்லையே ராப்..
//

:)

என்னக்கா செய்ய.. எனக்கு தோல்வியிலதான் அதிக அனுபவம் இருக்குது. :(

சென்ஷி on Saturday, October 04, 2008 12:14:00 AM said...

@ ஆயில்யன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன் :)

@ வால்பையன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வால்பையன் :)

@ ஜீவ்ஸ்..

என்னண்ணே.. எனக்கு சமகால புனைவு சேர்ந்த புதினத்த பார்சல் செஞ்சுட்டு இப்படி ஒரு கேள்வி :)

மோகன்தாஸ் on Saturday, October 04, 2008 12:24:00 AM said...

//நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"//

இதைத் தவிர்த்து கதை நல்லாயிருக்கு! தவிர்த்திருக்கலாம். :)

நல்ல முயற்சி. தொடருங்கள்.

Sridhar Narayanan on Saturday, October 04, 2008 2:42:00 AM said...

//பன்ச் டயலாக் பரமசிவமாட்டம், சூப்பரா பொளந்து கட்டியிருக்கார் ஸ்ரீதர் சார் :):):)//

ராப் ஏதோ உ.குத்து வச்சிப் போட்டிருக்காங்கப் போல.

மக்களே! நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. இந்தப் பாவத்துக்கெல்லாம் நான் ஆளில்லை. எனக்கு எப்பவும் 'ஒருபக்கம்' மட்டும்தான் தெரியும் :-))

Sridhar Narayanan on Saturday, October 04, 2008 2:45:00 AM said...

//சென்ஷி said...
@ ஆயில்யன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன் :)
//

என்ன வெறும் நன்றியா? ட்ரீட்மெண்ட் செலவெல்லாம் யாரு ஏத்துப்பாங்க?

ஆயில்ஸ் அண்ணனும் அசராம உங்க எல்லாப் பதிவையும் படிச்சு (நிசமாவா?) கமெண்ட் போட்டுகிட்டுத்தான் இருக்கார். இன்னமும் ஏன் துன்புறுத்தறீங்க இப்படி?

நிஜமா நல்லவன் on Monday, October 06, 2008 3:18:00 PM said...

சிரிப்பு தான் வருது...;))))))

சென்ஷி on Monday, October 06, 2008 9:50:00 PM said...

//மோகன்தாஸ் said...
//நான் மட்டும் கடைசியாய் சப்தமாய் அவளிடம் சொல்லிவிட்டு வந்தேன், "லவ் பண்ணா சொல்லித்தொலைங்கடி!"//

இதைத் தவிர்த்து கதை நல்லாயிருக்கு! தவிர்த்திருக்கலாம். :)

நல்ல முயற்சி. தொடருங்கள்.
//

அதை எழுதலைன்னா சுத்தமா புரியலைன்னு சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டேன் தலைவா :))

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ::)

சென்ஷி on Monday, October 06, 2008 9:51:00 PM said...

//Sridhar Narayanan said...
//பன்ச் டயலாக் பரமசிவமாட்டம், சூப்பரா பொளந்து கட்டியிருக்கார் ஸ்ரீதர் சார் :):):)//

ராப் ஏதோ உ.குத்து வச்சிப் போட்டிருக்காங்கப் போல.

மக்களே! நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. இந்தப் பாவத்துக்கெல்லாம் நான் ஆளில்லை. எனக்கு எப்பவும் 'ஒருபக்கம்' மட்டும்தான் தெரியும் :-))
//

நாங்களும் உங்களை இந்த பக்கத்துலேந்து பார்த்துக்கிட்டுதாண்னே இருக்கோம் :))

சென்ஷி on Monday, October 06, 2008 9:52:00 PM said...

//Sridhar Narayanan said...
//சென்ஷி said...
@ ஆயில்யன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன் :)
//

என்ன வெறும் நன்றியா? ட்ரீட்மெண்ட் செலவெல்லாம் யாரு ஏத்துப்பாங்க?

ஆயில்ஸ் அண்ணனும் அசராம உங்க எல்லாப் பதிவையும் படிச்சு (நிசமாவா?) கமெண்ட் போட்டுகிட்டுத்தான் இருக்கார். இன்னமும் ஏன் துன்புறுத்தறீங்க இப்படி?
//

அட நீங்க வேற அண்ணே. ஒரு வாரம் அவரை சாட்ல பார்க்க முடியலைன்ன உடனே சந்தோசமா உடம்பு சரியில்லையாமேன்னு மெயில் அனுப்பி பாசமா விசாரிக்கறவர அவ்வளவு சீக்கிரமா வுட்டுடுவோமா :))

சென்ஷி on Monday, October 06, 2008 9:53:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
சிரிப்பு தான் வருது...;))))))
//

அப்ப கன்ஃபர்மா கீழ்பாக்கத்துக்கு அனுப்பிட வேண்டியதுதான் :)))

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:44:00 PM said...

ஏற்கனவே இரண்டு மூணுமுறை படிச்சிருக்கேன் ஆனால் பின்னூட்டத்துக்கான தருணம் இம்முறையும் வாய்க்கவில்லை அதனால அப்புறமா வாறேன்...!!!

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com