பத்மனுக்கு லேசாக வியர்க்கத்தொடங்கியது. சென்னையின் காலைவெயில் சூடு பொறுக்க முடிந்ததாக இருந்தும் பஸ்ஸிற்காக காத்திருக்கும் சமயத்தில் கிடைத்த இளங்காற்று பார்வையை அவனால் தாங்க முடியவில்லை. மனதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு மீண்டும் எதேச்சையாக சாலையைப் பார்ப்பது போல அவள் பக்கம் பார்வையை வீசினான்.
அவள் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்தாள். அழகாக கழுத்தை நெருங்கி சுற்றியிருந்த துப்பட்டாவின் பின்னல்கள் கொண்டிருந்த ஒரு முனை அவளது இடுப்பின் கீழ்வரை தொங்கிக்கொண்டிருந்தது. சுடிதாரில் ரங்கோலிப்பூக்கள் நூல்களில் சிக்கிக்கொண்டு வடிவங்களில் சிதறிக்காணப்பட்டன. வலது கையில் சில புத்தகங்களை அணைத்து பிடித்திருந்ததில் தெரிந்த வளையல்களில் நான்கு சுடிதாரின் வண்ணத்தை ஒத்திருந்தது. இடது கையின் மணிக்கட்டு அருகே சிகப்புக்கயிறின் மேலே அந்த மெல்லிய கறுப்புப்பட்டை கடிகாரம் சற்றே குறுகலாய் ஏறியிருந்தது. வெயிலுக்கு அணியும் கறுப்புக்கண்ணாடியால் கண்கள் மறைத்து அணிந்திருந்ததில் மிச்சம் தெரிந்த நெற்றி, நாசி, உதடுகள், முகவாய் மற்றும் கன்னத்தில் அவள் முகத்தை பார்த்துவிட்டு பத்மன் பிரமித்து நின்றான்.
தேவதை.. நிச்சயமாய் தேவதைதான். வாரப்பத்திரிகைகளில் ஓவியமாய் கிடைத்திருந்த பிரதிகளின் ஒப்பீட்டளவில் இறக்கைகளை உதறிவிட்டு வந்த தேவதையாய்த்தான் அவள் தெரிந்தாள்.
நிமிடத்தில் கவிஞனாகிவிட்ட கர்வம் பத்மனிடம் ஏறியமர்ந்தது. அடுத்த கவிதைக்கான வரிகளை கண்ணாடி அணிந்திருந்த அவள் கண்களில் தேட முயன்றான். அவளும் தன்னைத் திரும்பிப்பார்த்தது தைரியம் தந்திருந்தது அவனுக்கு.
அவள் பார்க்கிறாள். மீண்டும் அவனை திரும்பிப் பார்க்கிறாள். இவன் அவள்மேல் வைத்த பார்வையை உதிர்க்காமல் வைத்திருந்தது அவளது பார்வையை உதிர வைத்தது. அதிர்வு சலனங்களை பத்மனின் மனக்குளத்தில் வீசியெறிந்த கல்லாய் அவள் நிற்க மையவட்டம் சுற்றித்தொலைகின்ற நீரலையானான் பத்மன். இப்போது சுடிதாரின் துப்பட்டா தலையை சுற்றி வெயிலுக்கான குடையாகியிருந்தது.
அந்த பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் இல்லாதது பத்மனின் மனதை, கனவை மற்றும் கற்பனையை சுவாரஸ்யப்படுத்த உதவியது. தனக்குள் அவள் பார்வையை நிச்சயப்படுத்திக்கொண்டான் மீண்டும் மீண்டும்.
திருவின் ஞாபகம் வந்தது. அவன் இருந்திருந்தால் பாவை பார்வையின் அர்த்தங்களின் அர்த்தங்களை சொல்லியிருப்பான். நிச்சயம் செய்திருப்பான். இது காதலா இல்லை வேடிக்கையா என்று. அவனது விசித்திரங்களில் புரியாத விஷயம் இது. எப்படி கணிக்கின்றான் என்று அறிவதற்கு முன்பே அது செயலாகியிருக்கும் மாயம். மீண்டும் அவள் தன்னை கவனிப்பது கண்டு பத்மனுக்குள் காதல்சோறு பெருமையாக மாறி பொங்கியது.
அவளது பார்வை தன்மேல் விழுந்ததை தனக்குள் விழுந்ததாய் மாற்றி உள்நுழைந்த சப்தத்தை கேட்க விரும்பினான். மனம் பலத்த மௌனத்தில் கொண்டாடும் சின்னப்பிள்ளையின் விளையாட்டை ஒத்திருந்தது. வடிவம் தெரியாது கிழித்தெறியப்பட்ட வண்ணத்துண்டுகளின் வரிசை சேர்க்கின்ற ஆர்வம் தனக்குள் தன்னை அவளைப்பற்றி யோசித்தது. அவனுக்குத் தெரிந்துப்போனது. இதற்கு மேல் சத்தியமாய் முடியாது. அவளது இன்னொரு பார்வையை தாங்குவது இவனுக்கு கடினமாய் போய்விடும். காதலை தூண்டிவிடும் வேகம் அதிகமாகிவிடும் ஆபத்து நிறைந்திருந்தது.
மனத்தூண்டிலில் சிக்கிக்கொண்டு நீரிலின்றி வெளியேற்றி காற்றுக்காய் உயிர்துடிக்கும் மீனாய் இருந்தது பத்மனின் காதல். இரைக்குப்பயந்து இரையாய் மாறி இல்லாமல் போய்விடுவானோ என்ற பயமும் அவனை சூழ்ந்தது. இதற்குமேல் தாங்கும் சக்தி இழந்த நிலை கிடைத்தபோது அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் அவளிடம் பேசிவிடலாமென முடிவு செய்திருந்தான். அடுத்த நிமிடம் கிடைப்பதற்காக வினாடிகளை குறைக்கத் தொடங்கினான்.
60...59...58...57...56...55...54...53...52...51...50...49...48...47...46....45....44...43....42...41...
அவனது வினாடிக்குறிப்பை அறியாமல் அவளே சற்று மேலேறி வெயில் படாத இடத்தில் நின்றாள். அது அவனுக்கு ம்ம்ம்ம்ம்ம்மிகப்பக்கத்தில் இருந்தது இவனது புண்ணியத்தின் பலனாகவேப் பட்டது.(அந்த பேருந்து நிறுத்தம் மிகச்சிறியதாக இருந்தது அவனது முன்னோர் செய்த புண்ணியமாயிருந்திருக்கக்கூடும்.)
பத்மன் அவள் பக்கம் திரும்பிப்பார்த்தான்.
அவளும் அவனைப் பார்த்தாள்.
பத்மன் குரலின் அடைப்பு இன்னும் உடைபடாமலிருந்ததை மெல்லிய செருமலில் சரிப்படுத்தினான்.
அவள் மூச்சு விடும் சப்தம் அவனுக்குள் பெருத்த அலையோசையாக கேட்டது. மெல்ல அவளிடம் பேச வார்த்தைகளை தேட முயன்று முடியாமல்,
"எக்ஸ்யூஸ் மீ..!"
'ம்' என்ற பாவனைக்கு ஏற்றவாறு அவள் பத்மனை பார்த்தாள்.
"நீங்க...." தாயிடம் தன்னை அடையாளம் தெரிய வைக்க தவிக்கின்ற குழந்தையின் தவிப்பை முகத்தினில் ஏற்றி வார்த்தைகளை முடிக்கும்முன்பு... அவனது முகக்குறியின் வியப்பைக் கண்டு அவள் கண்களிலிருந்து கண்ணாடியை கழற்றினாள்.
அந்த கண்கள்...! அந்த பார்வை...!!
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
தானைக்கொண் டன்ன துடைத்து.
அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் என்னைத் தாக்குவது போன்று இருந்தது.
அடிப்பாவி! மெட்ராஸ் ஐ.......யாடி உனக்கு...

94 comments:
பின்னவீனத்துவப் புலி, புனைவு மன்னன்
முடிவு சத்தியமா உன்னால மட்டும் தான்யா முடியும்..
அப்புறம் சிவந்த கண்ணுக்கு மருந்து போட்டியோ ? சிவந்த கன்னத்துக்கு என்ன போட்டே ?
கதை சுருக்கம்!
பத்மன் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது ஒரு பெண்னை பார்க்கிறான். கருப்பு கண்ணாடி அணிந்த அவளும் இவனை எதேச்சையாக பார்த்து விடுகிறாள்,
பேசலாம் என்று அருகில் சென்று பார்த்தால் அவளுக்கு மெட்ராஸ் ஐ.
இருந்தாலும் இது ஒரு பின்நவீன சஸ்பென்ஸ் கதை
கலக்கல் சென்ஷி.. ஒரு ரொமாண்டிக் காமெடியை திருக்குறளை விளக்க சொல்லிட்டீங்க.. இந்த குறளும் எனக்கு புதுசுன்றதால ஒரு ஸ்பெஷல் நன்றி..
இது தொடர் கதையா!
அட கொன்நீயா என்ன இது?
ஹை நல்லாருக்கு அண்ணா.. :)))))
முடிவு...
:)))))!
'ஆண்டி' கிளைமேக்ஸ் மன்னன் அண்ணன் சென்ஷி வாழ்க வாழ்க:):):)
//அவள் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்தாள்./
இன்னும் அந்த ரன் மீரா மனசை விட்டு அகலவில்லை போல!!!
//60...59...58...57...56...55...54...53...52...51...50...49...48...47...46....45....44...43....42...41...//
ஏண்ணே!
கவுண்டிங்க இத்தோட நிப்பாட்டிப்புட்டீங்க?
//தாயிடம் தன்னை அடையாளம் தெரிய வைக்க தவிக்கின்ற குழந்தையின் தவிப்பை முகத்தினில் ஏற்றி வார்த்தைகளை முடிக்கும்முன்பு... //
வாவ்! சூப்பரூ!
//அடிப்பாவி! மெட்ராஸ் ஐ.......யாடி உனக்கு.../
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
:-)))...
எம்புட்டு ஆசையா ஃபாலோ பண்ணுனேன்!
கடைசியில இப்படி ஆயிடுச்சே?????
கருப்பு கண்ணாடினு அழுத்தமா சொன்னதால ஏறகுறைய முடிவை யூகித்து விட்டேன்.
கூலிங்கிளாஸ்னு சொல்லி இருக்கலாமோ? :)
வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க சென்ஷி. ரசித்தேன். :))
// Jeeves said...
அப்புறம் சிவந்த கண்ணுக்கு மருந்து போட்டியோ ? சிவந்த கன்னத்துக்கு என்ன போட்டே ?
//
பொளேர்ர்ன்னு ரெண்டு அறை விட்டிருப்பாரு! :)))))
வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க சென்ஷியண்ணே. ரசித்தேன். :))
உங்களுக்கு காமத்துப்பால் குறள் தான் கிடைச்சதா? எங்களைப் போன்ற சிறுவர்களுக்காக அறத்துப்பால் குறளை வைத்து ஒரு கதை போடுங்க தலைவா!
எப்படிப்பா இப்படி ...........தேடி கண்டுபிடிச்சிருப்ப போல குறளை.. இந்த முடிவில் தான் எப்பவும் இப்படி ஒரு காமெடி பண்ணிடற.. :)
ஆரம்பத்துலேயே யோசிச்சேன்பா இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு(இப்படித்தான் சொல்லிக்கனும்!!;-)))
ஆனாலும் இடையில் கொஞ்சம் ஜவ்வு மிட்டாய்ப்பா(அல்லது ஓவர் பில்டப்பு)
:-))
நல்ல கதை
நல்ல முடிவு ::))
இந்த கதையின் மூலம் அறியப்படும் கருத்து;
கறுப்பு கண்ணாடி போட்ட பெண்ணை பார்த்து ஜொள்ளு விடக்கூடாது ,
அப்படிதானே?!
கிர்ர்ர்ர்ர்ர்...
kjdfydsiufyfwuyajk
@%$#%^&^%&%*&^(*&*)(
\\
நிமிடத்தில் கவிஞனாகிவிட்ட கர்வம் பத்மனிடம் ஏறியமர்ந்தது. அடுத்த கவிதைக்கான வரிகளை கண்ணாடி அணிந்திருந்த அவள் கண்களில் தேட முயன்றான்.
\\
நிமிடத்தில் ஒருவனை கவிஞனாக்குகிற சக்கதி பெண்மைக்குத்தான்...இருக்கிறது அப்படித்தானே அண்ணே...;)
குறளுக்காகத்தான் வரிகள் இவ்வளவும் என்றாலும்..
முடிவை வேறு கொணத்தில் சொல்லி இருக்கலாம்....
வர்ணனைகள் மீராஜாஸ்மினை கற்பனை பண்ணி எழுதின மாதிரி இருக்கு...;)
அடக்கடவுளே..என்னங்க இப்படி எல்லாம் எழுதறீங்க.. ?..
சென்ஷி, உங்க கதைய படித்து இப்படிக்கூட திருக்குறளை ஒரு சாதாரண விஷயத்துடன் தொடர்பு படுத்த முடியுமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது முந்தைய கமெண்டு போட்டுட்டேன்.. :)
கதை சூப்பர்..
கண்ணாடி சூப்பர்,
கண்வலி' யும் சூப்பர்..
உங்க கண்'ணு இப்ப எப்படி இருக்கு சரியா போச்சா..? இல்ல நீங்களும் இப்ப கருப்பு கண்ணாடியா?
//ஒரு தானையுடன் என்னைத் தாக்குவது //
தானை என்றால் சேனையா? நமக்கு தமிழறிவு கம்மிதானுங்களே.
இறுதி வரி இல்லாமலேயே கதை நன்றாகத்தான் இருக்கிறது :-). அந்த பஞ்ச் லைன் சிரிப்பு வந்ததும் உண்மை.
இன்னமும் 1332 கதை இருக்குன்னு சொல்றீங்க அப்ப.... விதி வலியதுதான்.
me the 30th:):):)
\\ஸ்ரீமதி said...
ஹை நல்லாருக்கு அண்ணா.. :)))))\\
வழிமொழிக்கிறேன் ;))
//அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் என்னைத் தாக்குவது போன்று இருந்தது.//
பின்ன இப்படி பார்த்துகிட்டே இருந்தா, கொலைவெறி தான் வரும்..அடிச்சிட்டாளா??;-))))))))
சென்ஷி,
உங்கள்ட்ட திருக்குறள் கதை கேட்ட மனுசன் இத படிச்சிட்டு நொந்து நூலாயிருப்பாரு........ :)
சூப்பராய் கொண்டுச் செல்லப்பட்டு கடைசியில் சப்புனு போச்சு...
திருக்குறளை வைத்து இப்படி நீநீநீநீநீங்க காமெடி பண்ணுவீங்கன்னு நினைக்கல. மனது வலிக்கின்றது. :-(
:)))))))))
நடையில் புலமை தெரிகிறது.
இப்படில்லாம் கூட திருக்குறள் கத்துக்கலாம்போல.மறக்காது பாருங்க.
/Jeeves said...
பின்னவீனத்துவப் புலி, புனைவு மன்னன்
முடிவு சத்தியமா உன்னால மட்டும் தான்யா முடியும்..
அப்புறம் சிவந்த கண்ணுக்கு மருந்து போட்டியோ ? சிவந்த கன்னத்துக்கு என்ன போட்டே ?
//
நன்றி அண்ணா.. எல்லாம் உங்க ஆசிதான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)
// வால்பையன் said...
கதை சுருக்கம்!
பத்மன் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது ஒரு பெண்னை பார்க்கிறான். கருப்பு கண்ணாடி அணிந்த அவளும் இவனை எதேச்சையாக பார்த்து விடுகிறாள்,
பேசலாம் என்று அருகில் சென்று பார்த்தால் அவளுக்கு மெட்ராஸ் ஐ.
//
திருக்குறளை விட ரொம்ப சுருக்கமாயிருக்குது :)
//வால்பையன் said...
இருந்தாலும் இது ஒரு பின்நவீன சஸ்பென்ஸ் கதை
//
ஹி..ஹி... இருந்தாலும் உங்களுக்கு நொம்ப தெகிரியமுங்க :))
//வெண்பூ said...
கலக்கல் சென்ஷி.. ஒரு ரொமாண்டிக் காமெடியை திருக்குறளை விளக்க சொல்லிட்டீங்க.. இந்த குறளும் எனக்கு புதுசுன்றதால ஒரு ஸ்பெஷல் நன்றி..
//
ஆஹா. தலைவா! நீங்களே வாழ்த்துனதும் புல்லரிச்சுடுச்சு.. ரொம்ப தேங்க்ஸ்..
//வால்பையன் said...
இது தொடர் கதையா!
அட கொன்நீயா என்ன இது?//
இது தொடர்கதை மாதிரி.. ஆனா தொடர்கதை இல்ல.
"அடங் கொன்னியா" கவுண்டமணிகிட்ட பேட்டர்ன் ரைட்ஸ் விசாரிச்சுட்டீங்களா
// ஸ்ரீமதி said...
ஹை நல்லாருக்கு அண்ணா.. :)))))//
ரொம்ப தேங்க்ஸ் தங்கச்சி :))
//ராமலக்ஷ்மி said...
முடிவு...
:)))))!//
ரொம்ப நன்றிங்க :))
//rapp said...
'ஆண்டி' கிளைமேக்ஸ் மன்னன் அண்ணன் சென்ஷி வாழ்க வாழ்க:):):)
//
ஆமாம்க்கா.. இன்னும் கையில திருவோடு மட்டும்தான் ஏந்தலை..!
//ஆயில்யன் said...
//அவள் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்தாள்./
இன்னும் அந்த ரன் மீரா மனசை விட்டு அகலவில்லை போல!!!
//
ஹைய்.. மீரா ஜாஸ்மின் சொல்லியிருந்தா கூட சும்மா போயிருப்பேன். கரெக்டா ரன் படம் வரைக்கும் சொல்லிட்டீங்க.. சூப்பர் :))
//ஆயில்யன் said...
//60...59...58...57...56...55...54...53...52...51...50...49...48...47...46....45....44...43....42...41...//
ஏண்ணே!
கவுண்டிங்க இத்தோட நிப்பாட்டிப்புட்டீங்க?
//
அதுக்குமேல டைப் அடிக்க எரிச்சலாயிருந்தது :((
//ஆயில்யன் said...
//தாயிடம் தன்னை அடையாளம் தெரிய வைக்க தவிக்கின்ற குழந்தையின் தவிப்பை முகத்தினில் ஏற்றி வார்த்தைகளை முடிக்கும்முன்பு... //
வாவ்! சூப்பரூ!
//
தேங்க்ஸூ :)
//ஆயில்யன் said...
//அடிப்பாவி! மெட்ராஸ் ஐ.......யாடி உனக்கு.../
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//
:)))
மீ த 50 :))
(ராப் அக்கா ஷ்டைலு)
//விஜய் ஆனந்த் said...
:-)))...
//
தேங்க்ஸ்ங்க :)
//ஆயில்யன் said...
எம்புட்டு ஆசையா ஃபாலோ பண்ணுனேன்!
கடைசியில இப்படி ஆயிடுச்சே?????
//
ஹி..ஹி..
//ambi said...
கருப்பு கண்ணாடினு அழுத்தமா சொன்னதால ஏறகுறைய முடிவை யூகித்து விட்டேன்.
கூலிங்கிளாஸ்னு சொல்லி இருக்கலாமோ? :)
வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க சென்ஷி. ரசித்தேன். :))
//
ரொம்ப நன்றி அம்பி அண்ணா... காலர தூக்கிவிட்டுக்கிட்டு உக்கார்ந்திருக்கேன். :))
//ஆயில்யன் said...
// Jeeves said...
அப்புறம் சிவந்த கண்ணுக்கு மருந்து போட்டியோ ? சிவந்த கன்னத்துக்கு என்ன போட்டே ?
//
பொளேர்ர்ன்னு ரெண்டு அறை விட்டிருப்பாரு! :)))))
//
அய்யய்யோ.. என்னாது இது. கலவர பூமியாக்குறீங்க..
//பாவை பார்வையின் அர்த்தங்களின் அர்த்தங்களை //
//அதிர்வு சலனங்களை பத்மனின் மனக்குளத்தில் வீசியெறிந்த கல்லாய் அவள் நிற்க மையவட்டம் சுற்றித்தொலைகின்ற நீரலையானான் பத்மன். //
கலக்குரீங்க சென்ஷி.
linq il link kidaithu vanthen.
valthukkal
அண்ணா. எங்களை வெச்சி ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே.. ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு..
இவ்ளோ பெரிசா படிக்க வச்சி, நக்கலா முடிச்சி வச்சி இருக்கீங்க..
////rapp said...
'ஆண்டி' கிளைமேக்ஸ் மன்னன் அண்ணன் சென்ஷி வாழ்க வாழ்க:):):)
//
ஆமாம்க்கா.. இன்னும் கையில திருவோடு மட்டும்தான் ஏந்தலை//
நான் சொன்னது aunty climax :):):)
//பின்னவீனத்துவப் புலி, புனைவு மன்னன்
//
எப்பிடில்லாம் திட்டிருக்கார் பாருங்க:):):)
me the 60th:):):)
//ஆயில்யன் said...
வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க சென்ஷியண்ணே. ரசித்தேன். :))
//
நன்றி ஆயில் அண்ணே!
//குட்டிபிசாசு said...
உங்களுக்கு காமத்துப்பால் குறள் தான் கிடைச்சதா? எங்களைப் போன்ற சிறுவர்களுக்காக அறத்துப்பால் குறளை வைத்து ஒரு கதை போடுங்க தலைவா!
//
கண்டிப்பாக அண்ணா.. :)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எப்படிப்பா இப்படி ...........தேடி கண்டுபிடிச்சிருப்ப போல குறளை.. இந்த முடிவில் தான் எப்பவும் இப்படி ஒரு காமெடி பண்ணிடற.. :)
//
:))
தேங்க்ஸ் அக்கா!
// யோசிப்பவர் said...
ஆரம்பத்துலேயே யோசிச்சேன்பா இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு(இப்படித்தான் சொல்லிக்கனும்!!;-)))
ஆனாலும் இடையில் கொஞ்சம் ஜவ்வு மிட்டாய்ப்பா(அல்லது ஓவர் பில்டப்பு)
:-))
//
:))
வருகைக்கு நன்றிண்ணே... எப்படியாச்சும் ஒரு பக்கத்தை தாண்டனும்னு எழுதினதுல இப்படி ஆகிடுச்சு :))
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
நல்ல கதை
நல்ல முடிவு ::))
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுடர்மணி சார் :)
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
இந்த கதையின் மூலம் அறியப்படும் கருத்து;
கறுப்பு கண்ணாடி போட்ட பெண்ணை பார்த்து ஜொள்ளு விடக்கூடாது ,
அப்படிதானே?!
//
இல்லைண்ணே.. பொண்ணுங்க கறுப்பு கண்ணாடி போட்டிருந்தாலும் ஜொள்ளு விடக்கூடாதுங்கறதுதான் கருத்து :))
//தமிழன்...(கறுப்பி...) said...
\\
நிமிடத்தில் கவிஞனாகிவிட்ட கர்வம் பத்மனிடம் ஏறியமர்ந்தது. அடுத்த கவிதைக்கான வரிகளை கண்ணாடி அணிந்திருந்த அவள் கண்களில் தேட முயன்றான்.
\\
நிமிடத்தில் ஒருவனை கவிஞனாக்குகிற சக்கதி பெண்மைக்குத்தான்...இருக்கிறது அப்படித்தானே அண்ணே...;)
//
உங்களுக்குத் தெரியாததா நண்பா :))
//கவிதா | Kavitha said...
அடக்கடவுளே..என்னங்க இப்படி எல்லாம் எழுதறீங்க.. ?..
//
:)))
//கவிதா | Kavitha said...
சென்ஷி, உங்க கதைய படித்து இப்படிக்கூட திருக்குறளை ஒரு சாதாரண விஷயத்துடன் தொடர்பு படுத்த முடியுமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது முந்தைய கமெண்டு போட்டுட்டேன்.. :)
கதை சூப்பர்..
கண்ணாடி சூப்பர்,
கண்வலி' யும் சூப்பர்..
உங்க கண்'ணு இப்ப எப்படி இருக்கு சரியா போச்சா..? இல்ல நீங்களும் இப்ப கருப்பு கண்ணாடியா?
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிதா அக்கா!
என் கண்ணு கரெக்டாதான் இருக்குதுன்னு சொல்றேன். யாரும் நம்ப மாட்டேங்குறாங்க :(
//Sridhar Narayanan said...
//ஒரு தானையுடன் என்னைத் தாக்குவது //
தானை என்றால் சேனையா? நமக்கு தமிழறிவு கம்மிதானுங்களே.
இறுதி வரி இல்லாமலேயே கதை நன்றாகத்தான் இருக்கிறது :-). அந்த பஞ்ச் லைன் சிரிப்பு வந்ததும் உண்மை.
இன்னமும் 1332 கதை இருக்குன்னு சொல்றீங்க அப்ப.... விதி வலியதுதான்.
//
தானைக்கு அர்த்தத்த எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவத்துல சொல்லியிருக்காரு. புக் கையில இல்லாததால டைப் செய்ய முடியல.
சத்தியமா 2 இல்ல 3 கதையோட முடிச்சுக்கறேன் :))
//rapp said...
me the 30th:):):)
//
கரெக்ட் அக்கா :)
//கோபிநாத் said...
\\ஸ்ரீமதி said...
ஹை நல்லாருக்கு அண்ணா.. :)))))\\
வழிமொழிக்கிறேன் ;))
//
ரொம்ப நன்றிடா மச்சி :))
//ஸ்ரீமதி said...
//அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் என்னைத் தாக்குவது போன்று இருந்தது.//
பின்ன இப்படி பார்த்துகிட்டே இருந்தா, கொலைவெறி தான் வரும்..அடிச்சிட்டாளா??;-))))))))
//
இல்ல. நான் ஜஸ்ட் அந்த மிஸ்கிட்டேந்து மிஸ்டர்ரு ஆகிட்டேன் :))
/வெயிலான் said...
சென்ஷி,
உங்கள்ட்ட திருக்குறள் கதை கேட்ட மனுசன் இத படிச்சிட்டு நொந்து நூலாயிருப்பாரு........ :)
//
அவரு என்ன ஆனாருன்னு இன்னமும் சொல்ல மாட்டேங்குறாரு :((
நேர்ல பார்த்தா உதைப்பாருன்னு நினைக்குறேன் :))
//VIKNESHWARAN said...
சூப்பராய் கொண்டுச் செல்லப்பட்டு கடைசியில் சப்புனு போச்சு...//
அதானே சென்ஷி :))
//இனியவள் புனிதா said...
திருக்குறளை வைத்து இப்படி நீநீநீநீநீங்க காமெடி பண்ணுவீங்கன்னு நினைக்கல. மனது வலிக்கின்றது. :-(
//
ந்ந்ந்ந்ந்நீங்க இப்படி ஒரு கமெண்டு போடுவீங்கன்னு நான் நினைக்கல :(
//தாரணி பிரியா said...
:)))))))))
//
வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றி தாரணி அக்கா :))
//ச.முத்துவேல் said...
நடையில் புலமை தெரிகிறது.
இப்படில்லாம் கூட திருக்குறள் கத்துக்கலாம்போல.மறக்காது பாருங்க.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துவேல் சார் :))
//வடகரை வேலன் said...
//பாவை பார்வையின் அர்த்தங்களின் அர்த்தங்களை //
//அதிர்வு சலனங்களை பத்மனின் மனக்குளத்தில் வீசியெறிந்த கல்லாய் அவள் நிற்க மையவட்டம் சுற்றித்தொலைகின்ற நீரலையானான் பத்மன். //
கலக்குரீங்க சென்ஷி.
//
ரொம்ப நன்றி வேலன் அண்ணே :))
//BARBIE GIRL said...
linq il link kidaithu vanthen.
valthukkal
//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பார்பி கேர்ள் :))
எந்த லிங்க்லேந்து வந்தீங்கன்னு சொல்லியிருக்கலாமுல்ல!
//Saravana Kumar MSK said...
அண்ணா. எங்களை வெச்சி ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே.. ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு..
இவ்ளோ பெரிசா படிக்க வச்சி, நக்கலா முடிச்சி வச்சி இருக்கீங்க..
//
நான் என்னைக்கு சீரியசா யோசிச்சுருக்கேன். இன்னிக்கு புதுசா மொக்கய போட்டா மாதிரி கோவப்படுறீங்க :)))
//rapp said...
////rapp said...
'ஆண்டி' கிளைமேக்ஸ் மன்னன் அண்ணன் சென்ஷி வாழ்க வாழ்க:):):)
//
ஆமாம்க்கா.. இன்னும் கையில திருவோடு மட்டும்தான் ஏந்தலை//
நான் சொன்னது aunty climax :):):)
//
வெளக்கத்திற்கு நன்றி அக்கா :))
//rapp said...
//பின்னவீனத்துவப் புலி, புனைவு மன்னன்
//
எப்பிடில்லாம் திட்டிருக்கார் பாருங்க:):):)
//
எல்லாம் பக்கத்துல இல்லாத தைரியம்தான். இருந்திருந்தா உதைச்சிருப்பாரு போல :))
//rapp said...
me the 60th:):):)
//
me the 84 th :)))
சென்ஷீ,
முதலில் இத்தனை நாள் absent ஆனதற்கு ஒரு பெரிய மன்னாப்பு கோருகிறேன். வருகைப் பதிவேட்டிலிருந்து பெயர்நீக்கம் செய்யவில்லைதானே?
அக்மார்க் சென்ஷீ பகடி. நீங்கள் பகடி செய்திருப்பது பின் நவீனத்தை. எல்லா பிம்பங்களையும் போல பின் நவநீனமும் உடைக்கப்படவேண்டியதே. கலக்கல்.
அனுஜன்யா
உக்காந்து யோசிப்பாங்களோ..
நடை அழகா வந்திருக்கு சென்ஷி...அதுக்கு ஒரு சபாஷ்!
வணக்கம்,
கதையை நன்றாக நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள். எப்படி முடிகிறது? திருக்குறளை வைத்து கதை (காமடி) எழுத?
Nice story
இதை நான் முன்னயே படிச்சிட்டேன். ஆனா இப்போதான் பின்னூட்டத்துக்கு நேரம் கிடைச்சது. உண்மைய சொல்லணும்னா கடைசி வரியைப் படிச்சதும் சிரிப்பு அடக்க முடியல... அதுக்காகத்தான் பின்னூட்டமே போடுறேன்ன்னா பாருங்களேன். கதை நல்ல்லா வந்த்திருக்கு வாழ்த்துகள்.
சிரிக்கவச்சதுக்கு நன்றி....
//அனுஜன்யா said...

புரிதலுக்குட்பட்ட ஒரு பின்னூட்டம். நன்றி அனுஜன்யா...
//பாச மலர் said...
உக்காந்து யோசிப்பாங்களோ..
நடை அழகா வந்திருக்கு சென்ஷி...அதுக்கு ஒரு சபாஷ்!
//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அக்கா :))
//து. பவனேஸ்வரி said...
வணக்கம்,
கதையை நன்றாக நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள். எப்படி முடிகிறது? திருக்குறளை வைத்து கதை (காமடி) எழுத?
//
முதல் வருகைக்கு நன்றி பவனேஸ்வரி.. நமக்கு காமெடி செய்யறதுக்கு அந்த சமயத்துல திருக்குறள்தான் கிடைச்சது. :))
//Muniappan Pakkangal said...
Nice story
///
நன்றி அண்ணா.. :))
தங்களின் தனிமடல் கிடைத்தது. சற்று பணி அதிகமாய் இருந்ததால் தொடர இயலவில்லை. மன்னிக்க :((
//ayanulagam said...
இதை நான் முன்னயே படிச்சிட்டேன். ஆனா இப்போதான் பின்னூட்டத்துக்கு நேரம் கிடைச்சது. உண்மைய சொல்லணும்னா கடைசி வரியைப் படிச்சதும் சிரிப்பு அடக்க முடியல... அதுக்காகத்தான் பின்னூட்டமே போடுறேன்ன்னா பாருங்களேன். கதை நல்ல்லா வந்த்திருக்கு வாழ்த்துகள்.
சிரிக்கவச்சதுக்கு நன்றி....
//
வாங்க மாப்ள.. எப்படியிருக்கீங்க.. அட என்னையெல்லாம் ஞாபகம் வச்சுருக்கியா நீயி :)))
Post a Comment