Monday, December 01, 2008

எனக்குப் பிடித்த கவிதைகளில் சில..!


கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி
--------------------------------------------------------------ஆத்மாநாம்

அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில் எது
என் நீர்?
--------------------------------------------------------------சுகுமாரன்

என் பார்வையைப் பறித்து சூடிக்
கொண்டுபோனது ஒரு காட்சி
காக்கி உடையில் ஒரு பெண் போலீஸ்
பஸ்ஸுக்கு காத்திருந்தாள் தன்
கைக் குழந்தை தோள் சாய்த்து!
------------------------------------------------------------- பாதசாரி

மழையின் பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில் நீர் வழிந்து
கொண்டிருக்கிறது
------------------------------------------------------------தேவதச்சன்

வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்
-------------------------------------------------------------ஷண்முக சுப்பையா

நீலத்தை சூடிக்கொண்டடது வானம்
பச்சையை ஏந்திக்கொண்டது வயல்
கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்
வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி
மஞ்சளை அப்பிக்கொண்டது சந்தனம்
பழுப்பை அணிந்துகொண்டது மரம்
சிவப்பை வரிந்துகொண்டது ரத்தம்
ஏழு வண்ணங்களிலும் கொஞ்சம் திருடி
எடுத்துக்கொண்டது இந்திர தனுசு
இவனுக்கென்று இல்லாமல் போயிற்று
தனி ஒரு நிறம்.
---------------------------------------------------------------------விக்ரமாதித்யன்

ஒரு இரவைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்
அதிலொரு விரலைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள்
--------------------------------------------------------------------------ஸ்ரீநேசன்

அலைகளைச் சொல்லி...
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை.
-------------------------------------------------------------------------நகுலன்

பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத் துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி. டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை
--------------------------------------------------------------------முகுந்த் நாகராஜன்

ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்துகொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்
------------------------------------------------------------------பாலைநிலவன்

நிறைய
நதிக்கு
ஒரு புன்னகையே
போதும்
--------------------------------------------------------------பி. ராமன்

எங்கோ மலைப்பிரதேசத்தில்
ஒரு தோட்டக்காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த திராட்சை செடி
பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
எனது பால்கணியில்!
---------------------------------------------------------தென்றல்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.
-------------------------------------------------------நா.விச்வநாதன்

வீட்டின் கதவைத் தட்டுகிறது
எப்பொழுதும்
ஒரு பகல்
யாவரும் வெளிக்கிளம்பினர்
எனது தந்தை அலுவலகத்திற்கு
சகோதரி கல்லூரிக்கு
அம்மா சமையலறைக்கு
நானும் வெளிக்கிளம்பினேன்
நண்பகலோடு.
--------------------------------------------------------அப்பாஸ்

கூண்டுக் கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?
-------------------------------------------------------கல்யாண்ஜி

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்
-------------------------------------------------------வண்ணநிலவன்

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
---------------------------------------------------கலாப்ரியா

அவன் மலை மீது அமர்ந்திருந்தான்
ஒரேயொரு கணம்
அவன் தோளுக்கும் வலிக்காமல்
ஒரு பறவையின் நிழல்
சற்றே
அமர்ந்து
கடந்துவிட்டது.
-----------------------------------------------------ராணி திலக்

குழந்தை என்னிடம் கேட்டது
மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?
இல்லை என்றேன் நான்
அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்
சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்
காலை நேரத்துக் கல்லறையைப் போல
குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்
குழந்தை மறுபடியும் கேட்டது
உனக்கு எப்படித் தெரியும் அது
இறந்து போனாலன்றி?
-----------------------------------------------------------பிரெய்ன் டர்னர் (தமிழில்: எஸ். பாபு)

நீ இருக்கும்
திசைக்கு முகம்காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்
---------------------------------------------------------------------கல்யாண்ஜி

கவிதைகள் அனைத்தும் எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி"யின் அத்தியாய தொகுப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

32 comments:

ஆயில்யன் on Monday, December 01, 2008 7:59:00 AM said...

சிறப்பாக தொகுக்கப்பட்ட கவிதைகள்
நன்றி!

//இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை//

அருமையான கவிதை வெளிப்பாடு!

திகழ்மிளிர் on Monday, December 01, 2008 8:28:00 AM said...

/வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன்
தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்
வேலியைச் சுற்றி காவல் போட்டேன்
காவலைப் பற்றி கவலைப்பட்டேன்/

அருமையான வரிகள்

smile on Monday, December 01, 2008 9:28:00 AM said...

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.


இன்று அனைவரின் மனநிலையும் அப்படிதான் உள்ளது

அனுஜன்யா on Monday, December 01, 2008 10:18:00 AM said...

வாவ், நல்ல தொகுப்பு. சென்ஷீ கலக்குறார் என்று பார்த்தால், தொகுப்பு எஸ்ரா :))

நன்றி சென்ஷீ.

ஸ்ரீமதி on Monday, December 01, 2008 10:53:00 AM said...

:-)))))))))Superb.. :-))

இனியவள் புனிதா on Monday, December 01, 2008 10:57:00 AM said...

கவித்துவமான தொகுப்பு :-)

வெண்பூ on Monday, December 01, 2008 10:59:00 AM said...

அருமையான கவிதைகள் சென்ஷி.. பகிர்தலுக்கு நன்றி..

வடகரை வேலன் on Monday, December 01, 2008 11:49:00 AM said...

நல்ல கவிதைகளை மீண்டும் வாசிக்கத் தந்த சென்ஷிக்கு நன்றிகள்.

முகுந்த் நாகராஜன் கவிதை சட்டுனு ஒட்டிக்கிச்சு.

பரிசல்காரன் on Monday, December 01, 2008 12:12:00 PM said...

கட் பேஸ்ட் பண்ணி என் ஃபேவரைட்ல வெச்சுகிட்டேன். அருமை சென்ஷி!!!

RAMYA on Monday, December 01, 2008 3:14:00 PM said...

suuuuuuuuuuuuuuuuuuper

முத்துலெட்சுமி-கயல்விழி on Monday, December 01, 2008 4:31:00 PM said...

இரவு கவிதை அழகு.. சென்ஷி.. நன்றி பகிர்ந்து கொட்டதற்கு :)

சுல்தான் on Monday, December 01, 2008 5:12:00 PM said...

நல்ல சுவையான தொகுப்பு நண்பரே. நன்றி.

RAMYA on Monday, December 01, 2008 5:27:00 PM said...

//
அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில் எது
என் நீர்?
//

அருமைங்க, போகும் நீரில் எது
என் நீர்? தேடினாலும் கிகைகாது. எவ்வளவு அரிமையான உட்கருத்துள்ள நடை.

ரொம்ப நல்லா இருக்கு

RAMYA on Monday, December 01, 2008 5:28:00 PM said...

//
அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நீரில் எது
என் நீர்?
//

அருமைங்க, தேடினாலும் கிடைக்காது. எவ்வளவு அருமையான உட்கருத்துள்ள நடை. ரொம்ப நல்லா இருக்கு,

சென்ஷி on Monday, December 01, 2008 8:37:00 PM said...

@ ஆயில்யன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்..

@ திகழ்மிளிர்..

நன்றி திகழ்மிளிர்..

@ ஸ்மைல்..

தங்களின் மேலான கருத்துக்கு நன்றி ஸ்மைல்!

சென்ஷி on Monday, December 01, 2008 8:42:00 PM said...

@ அனுஜன்யா..

நன்றி அனுஜன்யா..

@ ஸ்ரீமதீ..

நன்றி ஸ்ரீமதி..

@ இனியவள் புனிதா..

நன்றி புனிதா..

சென்ஷி on Monday, December 01, 2008 8:44:00 PM said...

@ வெண்பூ..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெண்பூ..

@வடகரை வேலன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..

@ பரிசல்காரன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரிசலண்ணே...

சென்ஷி on Monday, December 01, 2008 8:47:00 PM said...

@ ரம்யா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரம்யா..

@ முத்துக்கா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா..

@ சுல்தான்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுல்தான் ஜி

முரளிகண்ணன் on Monday, December 01, 2008 9:11:00 PM said...

அருமையான தொகுப்பு. நன்றிகள்

rapp on Tuesday, December 02, 2008 2:59:00 AM said...

அய்யய்யோ நான் இங்க வந்தத எப்டி சொல்றது?:):):)

rapp on Tuesday, December 02, 2008 3:00:00 AM said...

என்னருந்தாலும் என் கவுஜத் தெறம யார்கிட்டயும் இல்லைங்கறதுதான் குறை:(:(:(

கப்பி | Kappi on Tuesday, December 02, 2008 3:52:00 AM said...

பகிர்ந்தமைக்கு நன்றி!

கோபிநாத் on Tuesday, December 02, 2008 6:12:00 PM said...

எல்லா கவிதையும் சொல்லிட்டிங்க மாப்பி சார்...ஆனா ரெண்டு நாளா ஒரு கவிதையை பத்தி சொல்லிக்கிட்டு இருந்திங்களே அதை காணோம்!!!??

;)

சென்ஷி on Tuesday, December 02, 2008 6:22:00 PM said...

@ முரளிகண்ணன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி

@ ராப் அக்கா...

:):):) உங்க திறமையப்பத்தி எஸ்.ராவுக்கு இன்னமும் தெரியல.

@கப்பி

நன்றி கப்பி :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 6:23:00 PM said...

//கோபிநாத் said...
எல்லா கவிதையும் சொல்லிட்டிங்க மாப்பி சார்...ஆனா ரெண்டு நாளா ஒரு கவிதையை பத்தி சொல்லிக்கிட்டு இருந்திங்களே அதை காணோம்!!!??

;)
//

அதை அடுத்த பதிவுல தேடுங்க மச்சி சார் :)

ச.முத்துவேல் on Wednesday, December 03, 2008 11:07:00 AM said...

எல்லாமே அருமை. சற்று மாத்தி யோசிக்கப்பட்ட கவிதைகள்.தொகுப்பாகப் படிக்கக் கிடைத்ததற்கு நன்றி. இதுபோல் இன்னும் எழுதலாமே.

Saravana Kumar MSK on Friday, December 05, 2008 11:51:00 PM said...

எல்லாமே அழகாதான் இருக்கு..

அப்பாஸ், கலாப்ரியா கவிதை மிக மிக அழகு..

பிறைதீசன் :: Praitheeshan on Monday, December 08, 2008 3:15:00 PM said...

சூப்பருங்க... :)

reena on Friday, May 15, 2009 9:26:00 AM said...

காட்சியாய் விரிந்தன பல கவிதைகள்... இத்தனையும் வாசிக்க தந்தமைக்கு நன்றி சென்ஷி

reena on Friday, May 15, 2009 9:29:00 AM said...

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்
.
.
.
எதையேனும் சார்ந்திருக்காவிடில் நாமே உலகத்தில் காணாமல் போய் விடும் சாத்தியக்கூறுகள் அதிகம் இல்லையா?

Maniz on Saturday, July 18, 2009 12:49:00 AM said...

IT should be like this..

என்
குடத்தில்
நிறைய
நதிக்கு
ஒரு புன்னகையே
போதும்

சென்ஷி on Saturday, July 18, 2009 9:03:00 AM said...

தாமதமான பதில் பகிர்வுகளுக்கு மன்னிக்க நண்பர்களே!!! :(

@ முத்துவேல்..

நிச்சயமாய் கவிஞரே..

@ சரவணகுமார்..

நன்றி சரவணா..

@ பிறைதீசன்..

நன்றி தலைவரே.. (வித்தியாசமான பெயர்!)

@ ரீனா...

நன்றி ரீனா

@ மணீஸ்..

தெரியலை தலைவா.. நான் தேசாந்திரி தொகுப்பிலிருந்து பிடித்த சில கவிதைகளை எடுத்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com