Tuesday, December 16, 2008

மெசியாவின் காயங்களும் மஞ்சள் வெயிலும்


மெசியாவின் காயங்கள்

என்னைப்பொறுத்தவ‌ரை ந‌ல்ல‌ க‌விதைக‌ளின் சிற‌ப்பு அரூப‌த்தை உண‌ர‌வைத்த‌ல் அல்ல‌து ந‌ம்மை ந‌ம்மிட‌மிருந்து பிரித்து ந‌ம்மை ந‌ம‌க்கே புதிதாய் காட்டுத‌ல். "மெசியாவின் காய‌ங்க‌ள்" த‌னித்த‌ அரூப‌ நிலை சி‌ந்தும் புத்த‌ம் புதிய‌ வாக்கிய‌த்தொட‌ர்க‌ளாய் ந‌ம்மை விடாம‌ல் துர‌த்துகின்ற‌ பெருவெளியின் கூரிய‌வாளாய் இருந்த‌து. ப‌க‌லைத் தொலைத்துவிட்டு இர‌வுக‌ளில் ஏங்கி அழுகின்ற‌ குழ‌ந்தைப்ப‌ருவ‌த்தில் கிடைத்த பதில் காண இயலாத கேள்விக‌ளை மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்தியது. ஆனால் இப்போது பதில்க‌ள் கிடைக்காத‌ ஏக்க‌ம் இல்லை. சூழ‌லின் த‌னித்துவங்கள்‌ என‌க்குத் தேவைய‌ற்ற‌து என்ற பேச்சுக்களின் முடிவில் கிடைக்கின்ற‌ மெல்லிய‌ வ‌ருத்த‌ம் எல்லாக்க‌விதைக‌ளிலும் கிடைக்கின்ற‌ன‌. புத்தகத்திற்கு யூமா.வாசுகி எழுதியுள்ள கசங்கல் பிரதி வாசகர்களுக்கான இரட்டை கவிதை விருந்து.

நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ க‌விதைப்புத்த‌க‌ம் வாசித்த‌ திருப்தி கிடைத்த‌து. ந‌ன்றி ஜெ.பிரான்சிஸ் கிருபா.

க‌விதைக‌ளில் சில‌ உங்க‌ள் பார்வைக்காக‌வும்...

"இச்ச‌ன்ன‌ல் வழியே தெரிவ‌து
வான‌த்தின் ஒரு ப‌குதிதான்"
என்றான்.


முழுவான‌மும் தெரியும்வ‌ச‌மாய்
ஒரு ஜ‌ன்ன‌ல் செய்ய‌முடியுமா?


=============================================

உயிர் பிரியும் க‌ண‌த்தில்
த‌ம் காய‌ங்க‌ளை
க‌டைசியாய் பார்வையிட்ட‌
மெசியாவின் க‌ண்க‌ளை
ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் க‌ழித்து
இன்று ச‌ந்தித்தேன்
க‌ட‌ற்க‌ரையில்
ம‌டித்த‌ கைப்பைக‌ளுட‌ன்
சூழ்ந்து நின்ற‌ ம‌னித‌ர்க‌ளுக்கு
ம‌த்தியில் ம‌ல்லாத்தியிட்டு
த‌ன் வ‌யிற்றில் இற‌ங்கி முழு
வ‌ட்ட‌ம‌டித்த‌ க‌த்தியைத்
த‌லை தூக்கி எட்டிப் பார்த்த‌து
ஆமை


===============================================

சிலிர்க்க‌ச் சிலிர்க்க‌ அலைக‌ளை ம‌றித்து
முத்த‌ம் த‌ரும்போதெல்லாம்
துடிக்க‌த் துடிக்க‌ ஒரு மீனைப் பிடித்து
அப்ப‌ற‌வைக்குத் த‌ருகிற‌து
இக்க‌டல்.


=================================================

மித‌க்கும் கிர‌க‌த்தில்
க‌ன‌க்கும் வாழ்வை
சும‌க்கும் ப‌க்குவ‌ம‌ற்ற‌வ‌னை
முற்றுகையிடும் மௌன‌மே
வில‌கிப் போ.
கூச்ச‌லிட‌வில்லையெனினும்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாக‌ நீ
கொன்று கொண்டிருக்கிறாய்
ஏழு ஏழு சென்டிமீட்ட‌ராய்
எவ‌ரெஸ்ட் சிக‌ரம்
எங்கு ந‌க‌ர்ந்து போனால் என‌க்கென்ன‌
நான் எழுந்து ந‌ட‌க்க‌ வேண்டும்
அங்கொரு பிட்சு நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌
க‌ண் விழித்திருந்தால் நான் என்ன‌ செய்ய‌ட்டும்
நான் கொஞ்ச‌ நேர‌மேனும் உற‌ங்கி எழ‌ வேண்டும்.
க‌ரையில் ப‌ட‌குக‌ள் அட‌கில் இருப்ப‌தாய்
குமுறும் க‌ற்ப‌னை என்னுடைய‌த‌ல்ல‌.
க‌ட‌வுளுக்கு ஆள் தேடும்
க‌ன‌வுக‌ளுக்கு அஞ்சி
புய‌லாடிய‌ ஏழுக‌ட‌ல் ந‌ட‌ன‌ங்க‌ள்
க‌ண்டு பிதுங்கிய‌ விழிக‌ள்
கைக‌ளுக்கு எட்டாத‌ தூர‌த்தில்.
எண்ணிக் கொண்டுதானிருக்கிறேன்
திருட்டுபோய் நான் மீளாத‌
ஏழாவ‌து அதிகாலை இது.


=======================================

வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ

===========================================

கவிதைகள் முழுவதுமே முழுக்க முழுக்க புத்தம் புதிய வார்த்தைக்கோர்வைகளோடு மூன்றாம் பார்வைகளின் தனித்த ரசனைகள் கொட்டிக்கிடக்கின்றன. யோனி, குறி, ரத்தம், வெறி எதையும் விட்டு வைக்காத கவித்தொகுப்பு.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%

ம‌ஞ்ச‌ள் வெயில்

உங்க‌ள் காத‌லியை உங்க‌ளால் எந்த‌ள‌வுக்கு காத‌லிக்க‌ முடியும். உங்களின் காதலை அவள் மறுத்தால் அவள் உங்களை வெறுத்தால் உங்களது காதலை அவளுக்கு எப்படி புரிய வைக்க முடியும். அவ‌ள் உங்கள் கண்காணாத தொலைவில் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் அவளுக்கு உங்கள் காதலை எப்படி புரியவைப்பீர்கள்? மஞ்சள் வெயில் காதலின் போதையை சொல்கிறது. காதலின் வலியை அனுபவிக்க வைக்கிறது. காதலில் பைத்தியமாகப் போகும் ஒருவனின் வாழ்க்கையை தருகிறது. மஞ்சள் வெயில் தன் காதலை தன் காதலிக்கு புரியவைக்க காதலனால் எழுதப்படுகின்ற கடிதம். சற்றே நீண்ட தன் தினப்படி நிகழ்வுகளில் கூட அவள் இவனை அழுத்தமாய் பாதிப்பதை, அவள் மீதான இவனது காதலை இணைத்து காதலின் வலிகளை சொல்கின்ற கடிதம்.

ம‌ஞ்ச‌ள் வெயிலின் நாய‌க‌ன் க‌திர‌வ‌ன் ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்தில் ஓவிய‌ராக‌ ப‌ணிபுரிப‌வன். அங்கு புதிதாக‌ க‌ணிணித்துறைக்கு ப‌ணியில் சேருகின்ற‌ ஜீவிதா, க‌திர‌வ‌னின் ஓவிய‌த்திற‌மையில் ம‌ய‌ங்குகிறாள். புதிய‌வ‌ர்க‌ளிட‌ம் பேச‌த் த‌ய‌ங்குகின்ற, பெண்க‌ளிட‌ம் ப‌ழ‌க‌அச்ச‌ப்ப‌டுகின்ற‌ க‌திர‌வ‌ன் ஜீவிதா த‌ன‌து ர‌சிகை என‌த்தெரிந்து சந்தோஷப்படுகிறான். ச‌க‌ஜ‌மாகிறான்.

இவ‌னுட‌னான‌ அவ‌ள‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ள் க‌திருக்கு காத‌லை அறிமுக‌ம் செய்கின்ற‌ன‌. அவ‌னுக்கு நிச்ச‌ய‌மாய் தெரிகிற‌து. அவ‌ள் த‌ன்னை காத‌லிப்ப‌து. பெண்க‌ளுக்கான‌ இய‌ல்பான‌ த‌ய‌க்க‌ங்க‌ள் அவ‌ள‌து காத‌லை த‌ன்னிட‌ம் சொல்ல‌ த‌டை செய்கிற‌து என்ற‌ எண்ண‌த்தில் த‌ன‌து காத‌லை அவ‌ளிட‌ம் சொல்கிறான். அவ‌ள் அத‌னை மறுத்துவிட்டு அவ‌னை புற‌க்க‌ணிக்க‌ ஆர‌ம்பிக்கின்றாள். இத‌ன்பிற‌கான‌ நாய‌க‌னின் நிக‌ழ்வுக‌ளோட்ட‌ங்க‌ள் க‌தைக்க‌ள‌னில் செல்கின்ற‌ன.

காதல் வ‌லிக‌ளில் கொடிய‌தாய் உண‌ருவ‌து புற‌க்க‌ணிப்புதான். அவ‌ளைப்ப‌ற்றி அறியாத‌வ‌ரை அவ‌னுக்குள் எந்த‌ க‌வ‌லையும் இன்றி இருக்கின்ற‌ வாழ்வில் அவள் அவனைச் ச‌ந்தித்து அவனிட‌ம் பேசிப்ப‌ழகி இவன் தனது காத‌லை சொல்லிய‌வுட‌ன் அவ‌ள் அவ‌னை புற‌க்க‌ணித்த‌ப்பின் இவ‌னுக்கு ஏற்ப‌டுகின்ற‌ வ‌லி, அனுப‌வித்த‌வ‌ர்க‌ளுக்கு மாத்திர‌மே புரிய‌ வைக்க‌ இய‌லும்.

அப்ப‌டியானால் அவ‌ள் இவ‌னை காத‌லிக்க‌வில்லையா இவ‌ன‌து க‌ண்ணோட்ட‌ங்க‌ள் த‌வ‌றான‌தாக‌ இருக்கின்ற‌தா என்ற‌ இய‌ல்பான‌ அச்ச‌மும் ம‌ன‌திற்குள் எழுந்தாலும் இவ‌ன‌து பார்வை த‌வ‌றான‌தாக‌ இல்லாத‌ கார‌ண‌த்தினால் அந்த‌ காத‌லியின் மேல் இய‌ல்பான‌ கோப‌ம் எழுவ‌தை த‌விர்க்க‌ இய‌லாத‌தாகிற‌து.

க‌திர‌வ‌னின் ந‌ண்ப‌ர்க‌ள் அவனது காத‌லுக்கு உத‌வுத‌ல், கதிரவனின் காதலுக்காக வருந்துகின்ற பத்திரிகை நண்பர், க‌திர‌வ‌னின் அறையில் தொங்க‌விட‌ப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌னின் குழ‌ந்தையின் ஒற்றை ஷு, க‌திர‌வ‌னின் ஆலோச‌கராக‌ உற்ற‌ தோழ‌ராக‌ வ‌ருகின்ற‌ அந்த‌ வாட்ச்மேன், ஓவிய‌ம் வ‌ரைந்து கேட்டு வ‌ருகின்ற‌ குழ‌ந்தைக‌ள், கணிணியில் கடிதத்தை தட்டச்சு செய்து தருகின்ற பெண், என‌ அத்த‌னை க‌தாபாத்திர‌ங்க‌ளும், சூழ‌ல்க‌ளும் இய‌ல்புக்கேற்ற‌தாய் ம‌ன‌தில் த‌ங்க‌ வைக்கின்ற‌து. கதிரவனின் அழுகை, சிரிப்பு, கோபம், வருத்தம், ரத்தம், வியர்வை, அவனது அறையின் கட்டமைப்பு, அவனது தற்கொலை முயற்சி, குடித்தல் என அத்தனை நிகழ்வுகளிலும் புதிய வாக்கிய அமைப்புகள் கொண்டு சொல்லியிருப்பது கதிரவனை வாசிப்பவர்களிடையே மிக எளிதாக மிக நெருக்கமாக்குகிறது. இத்தனை வார்த்தைகள் கொண்ட காதலை அந்த புத்தகம் தாங்கிக்கொண்டிருப்பது மிக ஆச்சரியமாகவும் அழகாவும் இருந்தது.

க‌விதையாய் காத‌லை சொல்ல‌ முடியும். காத‌லை க‌விதையாயும் சொல்ல‌ முடியும் என‌ வார்த்தைச்சித்திர‌ங்க‌ளில் காத‌லில் மூழ்க‌டித்து ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்தும் எழுத்துக்க‌ளில் நெருங்குகின்றார் யூமா. வாசுகி.

உதார‌ண‌மாய் ஜீவிதா வ‌சிக்கின்ற‌ தெருப்ப‌க்க‌ம் சென்று அங்கிருக்கின்ற‌ பேருந்து நிழ‌ற்குடை, ம‌ர‌ங்க‌ள், இலைக‌ள், பூக்க‌ள், பாதைக‌ள் என‌ எல்லாவ‌ற்றிலும் த‌ன‌து முத்த‌ங்க‌ளை ப‌திக்கின்றான் க‌திர‌வ‌ன். ஏனெனில் நாளை காலை அவ‌ள் இவ்வ‌ழியாய் வ‌ரும்பொழுது த‌ன‌து முத்த‌ங்க‌ளில் ஏதாவ‌தொன்று அவ‌ளிட‌ம் சென்று சேர்ந்துவிடாதா என்ற‌ ஆசையினால். பைத்திய‌க்கார‌த்த‌ன‌மாக‌ தோன்ற‌க்கூடும் ஆனால் அது காத‌லே பைத்திய‌க்கார‌த்த‌ன‌மான‌து என்ற‌ எண்ண‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கான‌ க‌ருத்தாக‌ இருக்க‌க்கூடும்.

ஜீவிதாவிற்கு எழுதிய‌ க‌டித‌த்திற்கான‌ ப‌தில் க‌திர‌வ‌னுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற முடிவு தெரியாமலே கதை முடிகிறது. ஆனால் இத்த‌னை ஆசைக‌ளை சும‌ந்து கிட‌க்கின்ற‌ க‌திர‌வ‌னின் காத‌லை ஜீவிதாவால் தாங்க‌ இய‌லுமா என்ற‌ ஆச்சரிய‌ம்தான் ம‌ன‌தில் த‌ங்குகிற‌து.

காதலித்த அல்லது காதலிக்கப்போகும் ஆண்களுக்கு நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் காதலை கதிரவன் ஞாபகப்படுத்துவார். பெண்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு ஜீவிதா உருவாகாதவரை சந்தோஷம்தான் என்பதை தவிர...

42 comments:

ஆயில்யன் on Tuesday, December 16, 2008 9:18:00 PM said...

மீ த பர்ஸ்டாய் வந்தேன்!

வாசித்தேன்!

சொல்கிறேன்

இப்போது செல்கிறேன்!

(ஆபிஸ்லே இருக்கேம்ப்பா!)

ஆயில்யன் on Tuesday, December 16, 2008 9:20:00 PM said...

//முழுவான‌மும் தெரியும்வ‌ச‌மாய்
ஒரு ஜ‌ன்ன‌ல் செய்ய‌முடியுமா?
///


முடியும்!

அய்யனார் on Tuesday, December 16, 2008 9:32:00 PM said...

/த‌னித்த‌ அரூப‌ நிலை சி‌ந்தும் புத்த‌ம் புதிய‌ வாக்கிய‌த்தொட‌ர்க‌ளாய் ந‌ம்மை விடாம‌ல் துர‌த்துகின்ற‌ பெருவெளியின் கூரிய‌வாளாய் இருந்த‌து./
தட்டச்சு பலகைல முற்றுப்புள்ளின்னு ஒண்ணு இருக்குடே அத பயன்படுத்தி தொலைங்க :)
யூமாவின் மொழி சமதளத்தை உடைப்பது.உணர்வுப்பெருக்கில் நெக்குருகிப்போகச் செய்வது.சிலருக்கு அதீதமாய் தெரிந்தாலும் எனக்குப் பிடித்தமானது..

PoornimaSaran on Tuesday, December 16, 2008 9:55:00 PM said...

//ப‌க‌லைத் தொலைத்துவிட்டு இர‌வுக‌ளில் ஏங்கி அழுகின்ற‌ குழ‌ந்தைப்ப‌ருவ‌த்தில் கிடைத்த பதில் காண இயலாத கேள்விக‌ளை மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்தியது//

குழந்தை பருவத்துக்கே போன மாதிரி ஒரு உணர்வு :))

SUREஷ் on Tuesday, December 16, 2008 10:00:00 PM said...

//காதல் வ‌லிக‌ளில் கொடிய‌தாய் உண‌ருவ‌து புற‌க்க‌ணிப்புதான். //



என் செய்வேண்ண்ன்

SUREஷ் on Tuesday, December 16, 2008 10:01:00 PM said...

காதலித்த அல்லது காதலிக்கப்போகும் ஆண்களுக்கு நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் காதலை கதிரவன் ஞாபகப்படுத்துவார்.//



அப்ப கண்டிப்பாக வெற்றீதான்

PoornimaSaran on Tuesday, December 16, 2008 10:02:00 PM said...

//சிலிர்க்க‌ச் சிலிர்க்க‌ அலைக‌ளை ம‌றித்து
முத்த‌ம் த‌ரும்போதெல்லாம்
துடிக்க‌த் துடிக்க‌ ஒரு மீனைப் பிடித்து
அப்ப‌ற‌வைக்குத் த‌ருகிற‌து
இக்க‌டல்.
//

மெய் சிலிர்க்க வைத்தது :))

முத்துலெட்சுமி-கயல்விழி on Tuesday, December 16, 2008 10:05:00 PM said...

ஏம்ப்பா யாராச்சும் ஜீவிதாவுக்கான கதையை எழுதுவாங்களா? கதிரவனின் கதை படிச்சாச்சு.. :)

PoornimaSaran on Tuesday, December 16, 2008 10:16:00 PM said...

ம‌ஞ்ச‌ள் வெயில் பற்றி எடுத்துரைத்ததிற்கு நன்றி!!

PoornimaSaran on Tuesday, December 16, 2008 10:16:00 PM said...

me the 10th

அதிஷா on Tuesday, December 16, 2008 11:30:00 PM said...

அண்ணே அது ஏன் இப்படி எழுதறீங்க..


அரூபம்,பெருவெளி,சூழலின் தனித்துவங்கள்,இதுக்குல்லாம் என்னண்ணே அர்த்தம்.. இதுக்குலாம் தமிழ்ல புரியறமாதிரி எளிமையான வார்த்தைங்க இல்லையா அதபோட்டா என்னாட்டாம் ரொம்பபேருக்கு இது மாதிரி மேட்டர்லாம் புரியும்ல

தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிடுங்கோ...

rapp on Wednesday, December 17, 2008 3:17:00 AM said...

அண்ணே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........இது நிஜப் படிப்பாளிங்க பதிவா இருக்கே. நானெல்லாம் என்னப் பண்றது?:):):) நான் முத்துக் கிட்ட எனக்குப் புரியறமாதிரி சொல்லச் சொல்லி வியாழக்கிழமை கேக்கப் போறேன்:):):)

Saravana Kumar MSK on Wednesday, December 17, 2008 3:39:00 AM said...

பகிர்வுகளுக்கு நன்றிங்க்னா..

படிக்க வேண்டியவைகளின் எண்ணிக்கை கூடி கொண்டே போகின்றதே..!!!

அதிரை ஜமால் on Wednesday, December 17, 2008 7:19:00 AM said...

\\காதல் வ‌லிக‌ளில் கொடிய‌தாய் உண‌ருவ‌து புற‌க்க‌ணிப்புதான். \\

புறக்கணிப்பு என்பதே வலி மிகுந்தது, அதிலும் காதலில் என்றால் ...

அதிரை ஜமால் on Wednesday, December 17, 2008 7:22:00 AM said...

\\வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ\\

அழகான கனவு

கனவுகளே அழகுதானே

ஸ்ரீமதி on Wednesday, December 17, 2008 10:19:00 AM said...

//பெண்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு ஜீவிதா உருவாகாதவரை சந்தோஷம்தான் என்பதை தவிர...//

:))))))))

கோபிநாத் on Wednesday, December 17, 2008 10:32:00 AM said...

கவிதை எல்லாம் கலக்கல் ;))

\\வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ\\

அட்டகாசம்..;)

கோபிநாத் on Wednesday, December 17, 2008 10:39:00 AM said...

ம‌ஞ்ச‌ள் வெயில்

இந்த கதையை பற்றி என்ன சொல்வது..!!!!

எங்க இருந்து தான் அவருக்கு (யூமா. வாசுகி) வார்த்தைகள் கிடைத்திருக்குமோ!!! அட்டகாசமான நடை...படிக்க படிக்க போதை ஏறுது மாப்பி..;))

\\ஓவிய‌ம் வ‌ரைந்து கேட்டு வ‌ருகின்ற‌ குழ‌ந்தைக‌ள்\\\

அதுல அந்த நாய்கார சீமாட்டி அப்படியே கண்ணுகுள்ள இருக்க ;)

ஆனா ஒன்னு மாப்பி மஞ்சள் வெயிலை மட்டுமே ஒரு தனிபதிவாக போட்டுயிருக்க வேண்டும்...ஏன்னு தெரியல நீ சரியாக எழுதவில்லைன்னு நான் நினைக்கிறேன்.

கோபிநாத் on Wednesday, December 17, 2008 10:43:00 AM said...

மாப்பி....நீ ரொம்ப நல்லவன் டா...இந்த புத்தகத்தை கொடுக்கும் போது சொன்னியே ஒரு வார்த்தை..மச்சி மறக்கவே முடியாது டா...நல்லாயிருடா...நல்லாயிரு ;))

முத்துலெட்சுமி-கயல்விழி on Wednesday, December 17, 2008 11:20:00 AM said...

ராப் மாதிரி ஆளுங்கள்லாம் முதல் விமர்சனம் படிச்சே பாதியில் போஸ்ட் கமெண்டுக்கு ஓடி இருப்பாங்க.. சென்ஷி..
கோபி சொன்னமாதிரி தனி போஸ்டா போட்டிருகனும்..

சந்தனமுல்லை on Wednesday, December 17, 2008 11:21:00 AM said...

//முழுவான‌மும் தெரியும்வ‌ச‌மாய்
ஒரு ஜ‌ன்ன‌ல் செய்ய‌முடியுமா?//

//துடிக்க‌த் துடிக்க‌ ஒரு மீனைப் பிடித்து
அப்ப‌ற‌வைக்குத் த‌ருகிற‌து
இக்க‌டல்.
//

படிக்க அருமையான கவிதைகளை பகிர்ந்தமைக்க்கு நன்றி!

gayathri on Wednesday, December 17, 2008 11:42:00 AM said...

யூமா. வாசுகி.

intha bookla iruka kathai fulla oru pathiva podunga pa.
kathai padikarthuku naala iruku

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:04:00 PM said...

//ஆயில்யன் said...
//முழுவான‌மும் தெரியும்வ‌ச‌மாய்
ஒரு ஜ‌ன்ன‌ல் செய்ய‌முடியுமா?
///


முடியும்!
//

நீங்க கட்டிடக்கலை வல்லுநராச்சே.. உங்களால முடியலைன்னா வேற யாரால முடியும். :-))

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:12:00 PM said...

//அய்யனார் said...
/த‌னித்த‌ அரூப‌ நிலை சி‌ந்தும் புத்த‌ம் புதிய‌ வாக்கிய‌த்தொட‌ர்க‌ளாய் ந‌ம்மை விடாம‌ல் துர‌த்துகின்ற‌ பெருவெளியின் கூரிய‌வாளாய் இருந்த‌து./
தட்டச்சு பலகைல முற்றுப்புள்ளின்னு ஒண்ணு இருக்குடே அத பயன்படுத்தி தொலைங்க :)
யூமாவின் மொழி சமதளத்தை உடைப்பது.உணர்வுப்பெருக்கில் நெக்குருகிப்போகச் செய்வது.சிலருக்கு அதீதமாய் தெரிந்தாலும் எனக்குப் பிடித்தமானது..
//

:-))

யூமாவின் மொழி தளத்தை உடைக்கிறதோ இல்லையோ மனதை உடைத்தெறிந்து விட்டது.

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:13:00 PM said...

//PoornimaSaran said...
//ப‌க‌லைத் தொலைத்துவிட்டு இர‌வுக‌ளில் ஏங்கி அழுகின்ற‌ குழ‌ந்தைப்ப‌ருவ‌த்தில் கிடைத்த பதில் காண இயலாத கேள்விக‌ளை மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்தியது//

குழந்தை பருவத்துக்கே போன மாதிரி ஒரு உணர்வு :))
//

அப்படியா... :)))

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:17:00 PM said...

@ சுரேஷ்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ். கிடைத்தால் மேற்குறிப்பிட்ட புத்தகங்களை படித்துப் பாருங்கள். நல்ல வாசிப்பனுபவமாக இருக்கும்

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:19:00 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஏம்ப்பா யாராச்சும் ஜீவிதாவுக்கான கதையை எழுதுவாங்களா? கதிரவனின் கதை படிச்சாச்சு.. :)
//

ம்ம். யாராச்சும் எழுதுனா அதையும் படிக்கலாம்.

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:22:00 PM said...

/அதிஷா said...
அண்ணே அது ஏன் இப்படி எழுதறீங்க..


அரூபம்,பெருவெளி,சூழலின் தனித்துவங்கள்,இதுக்குல்லாம் என்னண்ணே அர்த்தம்.. இதுக்குலாம் தமிழ்ல புரியறமாதிரி எளிமையான வார்த்தைங்க இல்லையா அதபோட்டா என்னாட்டாம் ரொம்பபேருக்கு இது மாதிரி மேட்டர்லாம் புரியும்ல

தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிடுங்கோ...
//

வாஸ்தவம்தான் அதிஷா.. நீங்க சொன்னத இப்ப உணர்ந்து பார்க்குறேன் :-(

அரூபம் - அனானி கமெண்ட்
பெருவெளி - இன்ஃபினிட்டி ஸ்பேஸ்
சூழலின் தனித்துவங்கள் - எந்த இடத்துக்கு போனாலும் அதிஷா அதிஷாவே இருக்கறது

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:23:00 PM said...

//rapp said...
அண்ணே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........இது நிஜப் படிப்பாளிங்க பதிவா இருக்கே. நானெல்லாம் என்னப் பண்றது?:):):) நான் முத்துக் கிட்ட எனக்குப் புரியறமாதிரி சொல்லச் சொல்லி வியாழக்கிழமை கேக்கப் போறேன்:):):)
//

ஆனாலும் இது ரொம்ப ஓவர்ர்ரூ :)

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:24:00 PM said...

//Saravana Kumar MSK said...
பகிர்வுகளுக்கு நன்றிங்க்னா..

படிக்க வேண்டியவைகளின் எண்ணிக்கை கூடி கொண்டே போகின்றதே..!!!
//

உண்மைதான் சரவணா.. :)))

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:25:00 PM said...

//அதிரை ஜமால் said...
\\வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ\\

அழகான கனவு

கனவுகளே அழகுதானே
//

அழகான கருத்துரை அதிரை ஜமால் :))

மிக ரசித்தேன்..

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:26:00 PM said...

//ஸ்ரீமதி said...
//பெண்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு ஜீவிதா உருவாகாதவரை சந்தோஷம்தான் என்பதை தவிர...//

:))))))))
//

வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றி மூத்தப்பதிவரே...

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:29:00 PM said...

//கோபிநாத் said...
ம‌ஞ்ச‌ள் வெயில்

இந்த கதையை பற்றி என்ன சொல்வது..!!!!

எங்க இருந்து தான் அவருக்கு (யூமா. வாசுகி) வார்த்தைகள் கிடைத்திருக்குமோ!!! அட்டகாசமான நடை...படிக்க படிக்க போதை ஏறுது மாப்பி..;))

\\ஓவிய‌ம் வ‌ரைந்து கேட்டு வ‌ருகின்ற‌ குழ‌ந்தைக‌ள்\\\

அதுல அந்த நாய்கார சீமாட்டி அப்படியே கண்ணுகுள்ள இருக்க ;)

ஆனா ஒன்னு மாப்பி மஞ்சள் வெயிலை மட்டுமே ஒரு தனிபதிவாக போட்டுயிருக்க வேண்டும்...ஏன்னு தெரியல நீ சரியாக எழுதவில்லைன்னு நான் நினைக்கிறேன்.
//

தனிப்பதிவாக இட நினைத்ததுதான். ஆனால் வாசகனாக இதை ரசித்ததை விமர்சகனாக என்னால் மாற்றுவது கடினம். அதனாலேயே வாசித்தலோடு எனக்குள்ள பந்தம் மகிழ்ச்சியுடன் நிறைவுறுகிறது.

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:31:00 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ராப் மாதிரி ஆளுங்கள்லாம் முதல் விமர்சனம் படிச்சே பாதியில் போஸ்ட் கமெண்டுக்கு ஓடி இருப்பாங்க.. சென்ஷி..
கோபி சொன்னமாதிரி தனி போஸ்டா போட்டிருகனும்..
//

கோபியே இந்த புத்தகம் படிச்சு முடிச்சதும் விமர்சன பதிவு எழுதுவாருக்கா :-))

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:32:00 PM said...

//சந்தனமுல்லை said...
//முழுவான‌மும் தெரியும்வ‌ச‌மாய்
ஒரு ஜ‌ன்ன‌ல் செய்ய‌முடியுமா?//

//துடிக்க‌த் துடிக்க‌ ஒரு மீனைப் பிடித்து
அப்ப‌ற‌வைக்குத் த‌ருகிற‌து
இக்க‌டல்.
//

படிக்க அருமையான கவிதைகளை பகிர்ந்தமைக்க்கு நன்றி!
//

நன்றிகள் சந்தன முல்லை..

சென்ஷி on Wednesday, December 17, 2008 4:35:00 PM said...

//gayathri said...
யூமா. வாசுகி.

intha bookla iruka kathai fulla oru pathiva podunga pa.
kathai padikarthuku naala iruku
//

:-))

சில பக்கங்களை எழுதுறதுங்கறது தப்பாகாதுன்னு தோணுது. ஆனால் புக்கையே பதிவா போட சொல்றதெல்லாம் ஓவரு..

புத்தகம் தற்சமயம் கைவசமில்லாததால அதோட பதிப்பக முகவரி எழுத முடியல. அடுத்த முறை எழுதுகிறேன். :-))

ஸ்ரீமதி on Wednesday, December 17, 2008 7:58:00 PM said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//பெண்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு ஜீவிதா உருவாகாதவரை சந்தோஷம்தான் என்பதை தவிர...//

:))))))))
//

வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றி மூத்தப்பதிவரே...//

அண்ணா ஏன் இப்படி ஒரு கொலைவெறி??

ச.முத்துவேல் on Thursday, December 18, 2008 11:57:00 AM said...

அற்புதமான கவிதைகளைப் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி. கவிதைகள் குறித்த உங்களின் கருத்துரைகள் ,சொற்கள் கவர்கிறது. கடைசிக் கவிதையை மட்டும் விளக்க முடியுமா? புரிந்தும் புரியாத நிலை.

/பைத்தியக்காரத்தனமாக தோன்றக்கூடும் ஆனால் அது காதலே பைத்தியக்காரத்தனமானது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கான கருத்தாக இருக்கக்கூடும்./

சூப்பர்.

சென்ஷி on Tuesday, December 23, 2008 10:14:00 PM said...

// ச.முத்துவேல் said...
அற்புதமான கவிதைகளைப் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி. கவிதைகள் குறித்த உங்களின் கருத்துரைகள் ,சொற்கள் கவர்கிறது. கடைசிக் கவிதையை மட்டும் விளக்க முடியுமா? புரிந்தும் புரியாத நிலை.

/பைத்தியக்காரத்தனமாக தோன்றக்கூடும் ஆனால் அது காதலே பைத்தியக்காரத்தனமானது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கான கருத்தாக இருக்கக்கூடும்./

சூப்பர்.
//

வருகைக்கு நன்றி முத்துவேல்..

//வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டுகொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ
//

இயற்கையை கவித்துவத்துடன் கலந்து பார்க்கும் அபூர்வ நிகழ்வின் ஒரு துளி...

தேனருந்திவிட்டு காற்றின் திசையில் பறக்கின்ற வண்டு எந்த பூவின் கனவை சுமந்து செல்கிறது என்று கவிஞர் யோசிக்கின்றார்.

மகரந்த சேர்க்கை வண்டுகளால் ஆகிறது என்று கொள்வோமானால் ஒரு பூவின் மகரந்த தாட்கள் அதன் கனவாகிறது. அதனை வண்டு தன் கால்களில் சுமந்து செல்லும்போது அது எந்த பூவிலிருந்து புறப்பட்டது எங்கு சேரும் என்று யாருக்கு தெரியும்.

தமிழ்நதி on Tuesday, December 23, 2008 10:53:00 PM said...

நண்பரே,

உங்கள் பெயரை விளிக்கச் சிரமமாக இருக்கிறது:)

'மஞ்சள் வெயில்'ஒரு அற்புதமான நாவல் அல்லது குறுநாவல். அதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். நேரமிருப்பின் இந்தச் சுட்டியைத் தொடர்ந்து செல்லவும்.

http://tamilnathy.blogspot.com/2007/09/blog-post_19.html

ச.முத்துவேல் on Monday, January 05, 2009 9:35:00 AM said...

thank you. very nice , and poetic explanation.

மாதங்கி on Saturday, March 28, 2009 10:54:00 AM said...

நல்ல பதிவு சென்ஷி,
முதலிரண்டு கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com