Monday, March 30, 2009

முனியாண்டி விலாஸ்


........
........
உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மைகளை

நன்றி- சல்மா
பச்சை தேவதை கவிதைத்தொகுப்பிலிருந்து


ஒவ்வொரு நொடிகளின் நகர்விலும் அவன் வளர்ந்து கொண்டிருப்பதாக தோன்றியது. இது நிச்சயம் நல்லவிதமான செயல் என்று என்னால் நிம்மதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. நல்ல நாகரிகத்தின் அடிப்படை அம்சத்தின் முதல் விதியாய் மனிதன் வளர்தலை நியாயப்படுத்தியதிலிருந்து எல்லாம் தொடங்கியிருக்கக்கூடுமென்று நினைக்கத்தொடங்கினேன். வளர்தல் சிந்தனைகள் மையப்புள்ளி குவிவட்டம் கோளவிளிம்பு எல்லாமே தனித்து இயங்கி நீடுயராமல் பக்கவாட்டில் காற்றடைத்தது போல் வீங்கிக்கொண்டிருந்தது. ஒன்றுக்கொன்று இடித்து மோதி நகர்வை விரும்பியதன் காரணமாய் அழிந்தது என்ற வரலாற்றை நான் இனிதான் எழுத ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதனை நிகழ்வு குறிப்பாக கொள்ள முடிகின்ற நேரமுடிவின் ஆரம்பத்தில் அவன் தனித்திருந்தான். இந்தப்புனைவின் கடைசி மனிதன். இதனாலேயே அடுத்த தலைமுறைக்கான வரலாறாயும் அவனைப்பற்றிய சுய விவர குறியீட்டின் படிமமாயும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.


பெயர்கள் சூட்டுவதில் இருக்கின்ற சுவாரசியம் மற்றவர்களுக்கானதாக அமைகின்றது. மற்றையோர் இவனது பெயரை உச்சரித்தலில் இவன் மனம் மயங்குவதாயும் இவனது கவனம் சிதறுவதாயும் கொண்ட மனநிலையுடன் ஒத்திருப்பதால் இவனுக்கான பெயரை நான் முன்மொழியவில்லை. பெயர்கள் தங்கள் உரிமைகளை அதிகம் உபயோகித்துக்கொள்ளும் சொல்வழியாக அமைகின்றன. இவனைத்தவிர வேறு யாரும் இல்லாத இடத்தில் இவனுக்கு பெயர் சூட்டுவது எழுத்தின் வழியை திறந்து வைப்பதற்காகவே ஒழிய வேறு எந்த கருமத்திற்கும் இல்லை.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

முன்பு இறந்து போயிருந்த ஒரு கதையை உயிர்ப்பிப்பதற்காக வேண்டி அதில் மூவரை புதிதாய் இணைத்திருந்தேன். ஒரு அழகான பெண்ணையும் (பெண் அழகாக இருக்கிறாள் என்பதை வாசகப்பிரதிகளுக்கு உணர்த்துவதற்கான இணைப்பு வழி இது) இரு முட்டாள் ஆண்களையும் (ஆண்கள் முட்டாள்களாகியிருந்தததை சொல்ல வேண்டிய அவசியம் பெண்களுக்கு உபயோகப்படாவிட்டாலும் பிரதியின் குறியீட்டிற்கான வசியத்தன்மைக்காக எழுதப்படுகிறது) உருவாக்கி விட்டும் அவர்களுக்கான பெயர்களை நான் தரத்தொடங்கவில்லை. அவன், இவன், இவள்தான்..


அந்த அவன் இவள் மேல் மையல் கொண்டு காதலிக்கத்தொடங்க, இந்த இவளோ இவனை விரும்பத் தொடங்கியிருந்தாள். ஆனால் இந்த இவன் தன்னுடைய மூலப்பிரதியில் தான் யாராக இருக்க முடியும் என்ற ஆசையில் முடிவிலாது நீண்டிருந்த எழுத்துக்களில் தன்னைத்தேட தொடங்கியிருந்தான். தனக்கொரு பெயர் சூட்டிக்கொள்ளும் ஆசையில் மாத்திரமே இவன் இத்தகைய நிகழ்வை தொடங்கியிருப்பதாக நான் கருதியதால் இவனது போக்கிற்கு நான் தடை விதிக்கவில்லை. ஆனால் நிகழ்விற்கு எதிர்கோளாக மூலப்பிரதியில் காணப்பட்ட ஒவ்வொருவரின் பிரதிநிதித்துவ இயல்பிலும் செய்கையிலும் இவன் மயங்கி தன்னையும் அதுபோல் மாற்றிக்கொள்ள திருத்தம் மேற்கொண்டிருந்த நிலையில் இவனுக்கான தனித்துவம் என்ன என்பதை இவன் மறந்தான். இவனது இந்த தீவிர தேடுதல்களில் இலக்கிய வாசிப்பாளர்களால் மிகவும் ஆராதிக்கப்பட்டிருந்த அந்த செத்துப்போயிருந்த மூலப்பிரதியில் பிழைகள் ஏற்படத்தொடங்கியது. எழுத்துக்களில் உட்புகுந்து தன்னை தேடுவதும் வரிகளை முன்பின்னாக கலைத்துப்போட்டுச் செல்வதுமாக இருந்த பிரதியின் தன்மைக்கு என்னை காரணம் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல்கள் கண்டங்கள் கருத்துக்கள் நிலவத்தொடங்கின.


நான் எதிர்பாராதவிதமாய் இவை நிகழ்ந்தது என்றும் இதற்கான சாத்தியக்கூறுகளின் தன்மைக்கும் இவனின் பிறழ்வுக்கும் எழுத்துச்சிதறலும் அந்த மூலப்பிரதியின் கதாபாத்திரங்களே காரணம் என்றும் நான் சுயவிளக்கம் கூறி எழுதியிருந்த கடிதத்தின் மேல் சாணி பூசப்பட்டு அழகான வண்ணமிகு பூக்கள் வரையப்பட்ட காகித மேலுறையில் சுற்றப்பட்டு பின்னல் முடிச்சுகள் இடப்பட்டு தெளிவான தபால் முத்திரையுடன் அஞ்சல் வழி எனக்கு வந்து சேர்ந்தது.


அந்த மிக நீண்ட பத்தாயிரத்திற்கும் அதிக பக்கங்கள் கொண்ட மூலப்பிரதியின் காவியத்தன்மையில் இவன் அலைந்து திரிந்த பக்கங்களிலும் வரிகளிலும் வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் உண்டான பிழைகளை திருத்தும்நோக்கில் நேரும் களங்கத்தை துடைப்பது அத்தனை எளிதாயில்லை. எதிர்நாயகனின் காமத்தன்மையிலும் நாயகனின் காதல் தன்மையிலும் ஈடுபாடு கொண்டிருந்த இவன் தனக்கான சுயமாக இரண்டிலும் மையம் கொள்ளாது போக்குகளின் பாதையில் சென்றிருந்தான். அவை க‌டும் போர்க‌ள் நிக‌ழ்ந்த‌ இடத்தில் மீண்டெழுந்த துரோகங்களையும், த‌லைவ‌ன் த‌லைவியின் மேல் காத‌ல் கொண்டு வெதும்பி நின்றிருந்த‌ தோல்வியில் த‌ன‌து காம‌த்தை பிறிதோர் துணை மேல் ஏற்றி வைத்து துய‌ர் நீக்கிய‌ ப‌டியினையும் இவ‌ன் எழுத்துக்க‌ளில் ஒளிந்திருந்த‌ சூட்சும‌த்தை க‌ண்ட‌றிந்த‌து அதிர்ச்சிய‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

புனைவின் க‌டைசி ம‌னித‌ன் இன்ன‌மும் அம்ம‌ண‌மாக‌த்தான் அலைந்து கொண்டிருந்தான். உல‌க‌ம் அவ‌னுக்கான‌ மிக‌ப்பெரிய‌ புதிய‌ ப‌ழ‌த்தை ஒத்திருந்த‌து. மிகுத‌ல்க‌ள் தோலென‌வும் காற்றை மாத்திர‌ம் சுவாசித்தும் அவ‌ன் இன்ன‌மும் அலைந்து கொண்டிருந்தான்.மிக‌ப்பெரிய‌ ம‌ண் மூடிய‌ அதிக‌ம் கேடு விளைவிக்கும் காற்றுட‌ன் கொஞ்ச‌ம் ந‌ல்ல‌ காற்றும் சேர்ந்திருந்த‌ அந்த புனைவு உல‌கில் உடைக‌ளுக்கான‌ அவ‌சிய‌மோ நாண‌ம் என்ற‌ பொருள்சொல்லியின் விள‌க்க‌மோ அவ‌ன் அறித‌லுக்கு அத்த‌னை ஒத்திசைந்த‌தில்லை என்ப‌த‌னால் அவ‌னை இன்ன‌மும் நிர்வாண‌மாக‌வே அலைய‌ வைத்துக்கொண்டிருந்தேன். இதிலொரு ந‌ன்மையாக‌ அவ‌ன் விரும்பிய‌ இட‌த்தில் மூத்திர‌ம் விட‌வும் அல்ல‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூத்திர‌ம் பெய்துகொண்டே ந‌ட‌க்க‌வும் ப‌ழ‌கியிருந்தான். உடைக‌ள் இருந்திருந்தால் பாழாகியிருக்கும் என‌ நினைத்துக்கொண்டேன். அந்த‌ ம‌னித‌னுக்கான‌ புதிய‌ மொழியை தோற்றுவித்த‌ல் மிக‌ அவ‌சிய‌மாய் இருந்த‌து. இவ‌னுக்கு உப‌யோக‌ப்ப‌டாவிட்டாலும் இவ‌னைப்ப‌ற்றி ப‌டிப்போர் இவ‌னுக்கான‌ மொழிய‌றிவு இருந்த‌து என்று காட்டிக்கொள்ள‌ச்செய்வ‌து ந‌வ‌ந‌ம்பிக்கையை ச‌ற்று அதிக‌ரிக்கும் என்று தோன்றிய‌து.புதிய‌ உல‌க‌ம் புதிய‌ மொழி வித்தியாச‌ எழுத்து. ஆனால் ச‌ற்றுக்க‌டுமையாக‌ ஒரு விச‌ய‌த்தில் நான் கெடுதிய‌ளித்த‌து க‌ட‌வுளைத்தான். அவ‌னுக்கான‌ எந்த‌ ஒரு புதிய‌ க‌ட‌வுளையும் நான் எழுதி வைத்தோ வ‌ரைந்து கொடுக்க‌வோ இல்லை. இந்த‌ கொடுமையின் கார‌ண‌மாக‌வே நான் சாத்தானின் அம்ச‌ம் என்று வ‌ன்ம‌ம் கொள்ள‌ வாய்ப்புக‌ள் நிறைந்திருந்த‌ன‌. க‌ட‌வுளே இல்லாத‌ இட‌த்தில் சாத்தானுக்கு வேலை இல்லை என்றும் நான் நினைத்துக்கொண்டேன்.



(தொட‌ரும்)

38 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி on Monday, March 30, 2009 8:04:00 AM said...

மீ த பர்ஸ்ட் ... :)

கோபிநாத் on Monday, March 30, 2009 8:06:00 AM said...

மீ த ரெண்டு ;)))

ஆயில்யன் on Monday, March 30, 2009 8:19:00 AM said...

மீ த மூன் :))

ஆயில்யன் on Monday, March 30, 2009 8:25:00 AM said...

புனைவு/பி.நவீ பின்னிட்டீங்க சென்ஷி !

கண்டினியூ !

கண்டினியூ!!

கோபிநாத் on Monday, March 30, 2009 8:58:00 AM said...

\\ இந்த‌ கொடுமையின் கார‌ண‌மாக‌வே நான் சாத்தானின் அம்ச‌ம் என்று வ‌ன்ம‌ம் கொள்ள‌ வாய்ப்புக‌ள் நிறைந்திருந்த‌ன‌.\\

மாப்பி நீ ரொம்ப நல்லவன் டா...;)))

முதல் சுற்றில் முனியாண்டி விலாஸ் படிச்சவுங்களுக்கு எல்லாம் முனியாடித்திருக்கும் என்பது உலகறிந்த உண்மை செய்தி ;))

அடுத்த ஸ்பெசலுக்கு வெயிட்டிங் ;)

கோபிநாத் on Monday, March 30, 2009 9:00:00 AM said...

\\ஆயில்யன் said...
புனைவு/பி.நவீ பின்னிட்டீங்க சென்ஷி !

கண்டினியூ !

கண்டினியூ!!
\\

அண்ணே நீங்க உண்மையில் படிச்சிங்களா சந்தேகமாக இருக்கு!??? ;)

ஸ்ரீமதி on Monday, March 30, 2009 9:14:00 AM said...

Me the 4th... :)(Kummi ellaam kanakkula serththukka maattom.. ;)))

ஸ்ரீமதி on Monday, March 30, 2009 9:15:00 AM said...

இன்னும் படிக்கல அண்ணா படிச்சிட்டு கமென்ட்டறேன் :)))

ஸ்ரீமதி on Monday, March 30, 2009 9:16:00 AM said...

//கோபிநாத் said...
\\ஆயில்யன் said...
புனைவு/பி.நவீ பின்னிட்டீங்க சென்ஷி !

கண்டினியூ !

கண்டினியூ!!
\\

அண்ணே நீங்க உண்மையில் படிச்சிங்களா சந்தேகமாக இருக்கு!??? ;)//

கிர்ர்ர்ர்ர் இப்படி ஆயில்ஸ் அண்ணாவ படிசீங்கலான்னு கேட்டு அவமானப்படுத்தரத நான் வன்மையா கண்டிக்கிறேன்... ;))))

ஸ்ரீமதி on Monday, March 30, 2009 9:16:00 AM said...

வந்ததுக்கு பத்து போட்டுட்டு போறேன் ;)))

பரிசல்காரன் on Monday, March 30, 2009 9:37:00 AM said...

நான் வந்ததுக்கு 11 போட்டுக்கறேன்.

ஒரு சின்ன வேண்டுகோள்..

மெயில்ல சொல்றேன்!

சுல்தான் on Monday, March 30, 2009 11:15:00 AM said...

12 எனக்குப் பிடித்த எண். வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.

நான் ஆதவன் on Monday, March 30, 2009 12:03:00 PM said...

எனக்கு 13 ஆம் நம்பர் பிடிக்கும்

நான் ஆதவன் on Monday, March 30, 2009 12:05:00 PM said...

//(தொட‌ரும்) //

என்னா வில்லத்தனம்????

முத்துலெட்சுமி-கயல்விழி on Monday, March 30, 2009 12:17:00 PM said...

எனக்கு கடைசி வரி பிடிச்சிருந்ததுன்னா உடனே எது தொடருமான்னு கேக்காதீங்க எல்லாரும்.. அது வார்த்தை.. :)
கடவுளே இல்லாத இடத்தில்
சாத்தானுக்கு என்ன வேலை?

காற்றே இல்லாத வானில்
சிறகிருந்தும் என்ன பயன்?
சரி சரி கிளம்பரேன்..

சென்ஷி on Monday, March 30, 2009 5:22:00 PM said...

@

முத்துக்கா, மாப்பி கோபி, ஆயில் தம்பி, ஸ்ரீமதி தங்கச்சி, பரிசலண்ணே, சுல்தான்ஜி, ஆதவன் தம்பி

எல்லோரும் கரெக்டா நம்பர் சொல்லி கருத்து சொன்னதுக்கு நன்றி :-)

சென்ஷி on Monday, March 30, 2009 5:23:00 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கு கடைசி வரி பிடிச்சிருந்ததுன்னா உடனே எது தொடருமான்னு கேக்காதீங்க எல்லாரும்.. அது வார்த்தை.. :)
கடவுளே இல்லாத இடத்தில்
சாத்தானுக்கு என்ன வேலை?

காற்றே இல்லாத வானில்
சிறகிருந்தும் என்ன பயன்?
சரி சரி கிளம்பரேன்..//

அவ்வ்வ்வ்..

அக்கா எப்படிக்கா இப்படில்லாம் :-)

ராஜ நடராஜன் on Monday, March 30, 2009 7:28:00 PM said...

முனியாண்டி விலாஸ் பிரியாணி போடுறீங்களோன்னு வந்தேன்.ஆனால் பதிவு கூர்ந்து படிக்க வேண்டும் போல இருக்குது.மீண்டும் வருகிறேன்.

ராஜ நடராஜன் on Monday, March 30, 2009 7:37:00 PM said...

வந்தவங்க எல்லாம் ஒண்ணு ரெண்டு சொல்லிட்டுப் போயிட்டாங்க.முத்துலட்சுமி கயல்விழி மட்டும் பதிவை ஆழ்ந்து படித்திருப்பது பின்னூட்டத்தில் தெரிகிறது.

எனக்கு பின் நவீனத்துவம் கொஞ்சம் இடிக்கும் எப்பவும்.இருந்தாலும் நிர்வாணத்தில் இருக்கும் புதுதத்துவம் எனக்கு புதுசு:)

பினாத்தல் சுரேஷ் on Monday, March 30, 2009 7:52:00 PM said...

அற்புதமான திகில் பதிவு. திகிலை உயர்த்தி கொலைவெறியையும் ஏற்றிய அந்த கடைசி வார்த்தை! புனைவாளன்யா நீ!

மாட்டாமயா போயிருவே?

Poornima Saravana kumar on Tuesday, March 31, 2009 2:16:00 AM said...

நல்லா இருக்கு

Poornima Saravana kumar on Tuesday, March 31, 2009 2:17:00 AM said...

நானும் நெம்பர் சரியா சொல்லனும் இல்ல...
மீ த 21:))

தமிழன்-கறுப்பி... on Tuesday, March 31, 2009 10:05:00 PM said...

மாப்பி கொஞ்சும் பொறு இன்னொரு வாட்டி வாசிக்கிறேன்...

தமிழன்-கறுப்பி... on Tuesday, March 31, 2009 10:06:00 PM said...

ஏன்யா பீதியைக்கிளப்புற...?

கிருத்திகா on Friday, April 24, 2009 5:30:00 PM said...

"இவ‌னுக்கான‌ மொழிய‌றிவு இருந்த‌து என்று காட்டிக்கொள்ள‌ச்செய்வ‌து ந‌வ‌ந‌ம்பிக்கையை ச‌ற்று அதிக‌ரிக்கும் என்று தோன்றிய‌து.புதிய‌ உல‌க‌ம் புதிய‌ மொழி வித்தியாச‌ எழுத்து. ஆனால் ச‌ற்றுக்க‌டுமையாக‌ ஒரு விச‌ய‌த்தில் நான் கெடுதிய‌ளித்த‌து க‌ட‌வுளைத்தான். அவ‌னுக்கான‌ எந்த‌ ஒரு புதிய‌ க‌ட‌வுளையும் நான் எழுதி வைத்தோ வ‌ரைந்து கொடுக்க‌வோ இல்லை. இந்த‌ கொடுமையின் கார‌ண‌மாக‌வே நான் சாத்தானின் அம்ச‌ம் என்று வ‌ன்ம‌ம் கொள்ள‌ வாய்ப்புக‌ள் நிறைந்திருந்த‌ன‌. க‌ட‌வுளே இல்லாத‌ இட‌த்தில் சாத்தானுக்கு வேலை இல்லை என்றும் நான் நினைத்துக்கொண்டேன்."
கிளாஸ் வரிகள்....

தமிழினி on Saturday, April 25, 2009 9:54:00 AM said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

சென்ஷி on Saturday, April 25, 2009 2:01:00 PM said...

@ ராஜநடராஜன்..

முதல் வருகைன்னு நினைக்குறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.. :)

@ பூர்ணிமா..

கிர்ர்ர்ர்ர்ர் :-))

@ பினாத்தலார்..

ஹி..ஹி.. உங்களுக்கு புனைவு பத்தி நல்லா தெரிஞ்சுருக்குது. ஆனா இந்த கொலவெறியெல்லாம் வச்சுக்கப்படாது :)

சென்ஷி on Saturday, April 25, 2009 2:03:00 PM said...

@ தமிழன் கறுப்பி..

வருகைக்கு நன்றி மாப்பி :-)

@ கிருத்திகா..

ஆச்சரியம்தான். உங்கள் வருகையும் கருத்தும் :-))

மிக்க நன்றி கிருத்திகா..

கே.ரவிஷங்கர் on Saturday, April 25, 2009 2:54:00 PM said...

தல,

ஏதோ வித்தியாசமா இருக்கு.இந்த ஏரியா நமக்கு கொஞ்சம்............
.......தூரம்.

புனைவு எழுதுவதற்க்கும் டேலண்ட் வேணும்.

வாழ்த்துக்கள்.

சென்ஷி on Saturday, April 25, 2009 3:20:00 PM said...

// கே.ரவிஷங்கர் said...

தல,

ஏதோ வித்தியாசமா இருக்கு.இந்த ஏரியா நமக்கு கொஞ்சம்............
.......தூரம்.

புனைவு எழுதுவதற்க்கும் டேலண்ட் வேணும்.

வாழ்த்துக்கள்.//

:-))

நல்ல வேளை கொஞ்ச் தூரம்ன்னு சொல்லி இடைவெளியை சுருக்கிட்டீங்க. அப்ப அடுத்தது புனைவுன்னா என்னன்னு விளக்க ஆரம்பிச்சுடணும் ஓக்கேவா :))

வருகைக்கு நன்றி ரவிஷங்கர்...

கிருத்திகா on Sunday, April 26, 2009 10:17:00 AM said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க உங்க கடைக்கு நாம ரெகுலர் கஸ்டமர்தான்.... ரீடர் மூலமா வந்திடுவேன்.. கருத்துக்களை பகிர்ந்துக்க நினைக்கற பதிவுக்கு மட்டும் பின்னூட்டம்... (கொஞ்சம் சோம்பேறித்தனம் உண்டு...:))

முரளிகண்ணன் on Sunday, April 26, 2009 10:47:00 AM said...

ஆழ்ந்து படிக்க வைத்தது இந்த பதிவு.

சென்ஷி on Sunday, April 26, 2009 11:54:00 AM said...

// கிருத்திகா said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க உங்க கடைக்கு நாம ரெகுலர் கஸ்டமர்தான்.... ரீடர் மூலமா வந்திடுவேன்.. கருத்துக்களை பகிர்ந்துக்க நினைக்கற பதிவுக்கு மட்டும் பின்னூட்டம்... (கொஞ்சம் சோம்பேறித்தனம் உண்டு...:))//

ஆஹா... !! நீங்க ரெகுலரா படிக்கறீங்கன்னு சொன்னதுமே சந்தோசப்பட்ட மனசு, கருத்து சொல்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லன்னதும் பொசுக்குன்னு போச்சு :-))

அதனால, நீங்க பின்னூட்டம் போடாததுக்கு காரணம் உங்க சோம்பேறித்தனம்ன்னு சொன்னதையே இதுக்கான காரணமா எடுத்துக்கறேன்! :-))

சென்ஷி on Sunday, April 26, 2009 11:56:00 AM said...

// முரளிகண்ணன் said...

ஆழ்ந்து படிக்க வைத்தது இந்த பதிவு.//

உங்க கமெண்ட் படிச்சுட்டு ஒரு பதிவர், புரிஞ்சுதா இல்லையான்னு சொல்லலை பார்த்தியான்னு கலாய்க்கறாங்க தலைவா! :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி..

வல்லிசிம்ஹன் on Sunday, April 26, 2009 12:10:00 PM said...

எனக்கு அவ்வளவாக வாசிக்கத் தெரியாது.
அதுவும் இவனுக்கு அவள் மேல், அவளுக்கு இவன் என்றேல்லாம் பயமுறுத்தறீங்க சென்ஷி.

:)
கவிகள் படித்துப் பாராட்டும் இடத்தில் ஈக்கு என்ன வேலை....

சென்ஷி on Sunday, April 26, 2009 12:21:00 PM said...

// வல்லிசிம்ஹன் said...

எனக்கு அவ்வளவாக வாசிக்கத் தெரியாது.
அதுவும் இவனுக்கு அவள் மேல், அவளுக்கு இவன் என்றேல்லாம் பயமுறுத்தறீங்க சென்ஷி.

:)
கவிகள் படித்துப் பாராட்டும் இடத்தில் ஈக்கு என்ன வேலை....//

ஆஹா.. :-))

ராணித்தேனீ கணக்கா சுறுசுறுப்பா பிடிச்ச பதிவிலெல்லாம் கமெண்டு போடுறீங்க. என் பதிவுல வர்றதில்லைன்னு கமெண்டு போட்டுட்டு திரும்பி வர்றதுக்குள்ள உங்க கமெண்டு :-)))

கவிகள் படித்து பாராட்டுறதும் ஓக்கே. நீங்க திட்டுனாலும் டபுள் ஓக்கே :)

ஜ்யோவ்ராம் சுந்தர் on Sunday, April 26, 2009 12:50:00 PM said...

சென்ஷி,

இப்போதுதான் தமிழ்மணத்தில் உலாவிக் கொண்டிருக்கும்போது இதைப் பார்த்து இங்கு வந்து தொலைத்தேன்.

நீங்கள் யாரையோ பகடி செய்யவோ அல்லது பிரதி எடுக்கவோ முயல்கிறீர்கள் எனத் தோன்றுகிறது இந்த மொழி நடையைப் பார்த்தால்... முதலாவதென்றால், தயவுசெய்து சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு வேண்டாம்; இரண்டாவதென்றால், போலியான முகமூடி வேண்டாம் எனச் சொல்லத் தோன்றுகிறது.

வெளிப்படையான இந்த விமர்சனத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சென்ஷி on Sunday, April 26, 2009 1:00:00 PM said...

@ சுந்தர்ஜி...

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு போட்ட ஒரு பதிவு (எழுதி வைச்சு இரண்டு மாசமாச்சு!) இப்ப திடீர்ன்னு இலக்கிய உலகுல பெரிய்ய கவனிப்பு கிடைக்கப்பெற்றதே பெரிய்ய விசயம்தான். இதுல திட்டுனா என்ன, உதைச்சா என்ன.. எல்லாம் சந்தோசம்தான்!

இது ஒரு அக்மார்க் புனைவுலகத்தை பத்தின மொக்கை கதை.. அதனால நீங்க சமீபத்துல எப்பவோ படிச்ச ஏதாவது ஞாபகம் வந்தா நான் அந்தளவுக்கு படிச்சவன் இல்லைன்னு சொல்லிக்குறேன். :-)

இரண்டாவது, முகமூடியை நான் கழட்டும்போது எனக்கே என்னை யாருன்னு தெரியாம போகற அளவுக்கு குழப்பவாதியாவே நான் வாழ்ந்துட்டு இருக்கறதால அப்படியே இருந்துட்டு போயிடறேனே. அதான் எனக்கு நல்லாயிருக்கும்ன்னு தோணுது!

வெளிப்படையான விமர்சனம் சுந்தர்கிட்டேந்து வரலைன்னாதான் அது தப்பா தெரியும். வர்றதுல எந்த தவறும் கிடையாது...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா..

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com