Thursday, April 09, 2009

மூன்று கவிதைகள்


1. இரவு பெய்தல்

அந்தரவெளிகளில் வழிந்த
மிச்சத்தில்
வெளிச்சக்குடைகள்
நனையாமல் காத்து நின்றும்
ஜன்னல்களில் உருகி
இன்னும் காத்து நிற்கிறது
தீராமல் இரவு
மூடாத விழிகளுக்காய்

2. மீள்விளைவு

குவாட்டர் பாட்டிலும்
கூட கொஞ்சம் சோடாவும்
இடைவெளி விட்டிருந்த
புகை நாற்றமும்
அறை முழுக்க நட்பின் சியர்ஸ்களும்
அடுத்த ஃபிகருக்கான ரூட்டுக்களும்
எல்லாமே பழகி விட்டது
உன்னுடனான எனது
மூன்றாம்
காதல் தோல்விக்குப்பின் (சாரி தங்கச்சி!)


3. மீரா ஜாஸ்மின்



88 comments:

அமிர்தவர்ஷினி அம்மா on Thursday, April 09, 2009 1:03:00 PM said...

ரெண்டாவது கவிதை நல்லா இருக்குது

ஆயில்யன் on Thursday, April 09, 2009 1:04:00 PM said...

மூணாவது கவிதை நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லா இருக்கு!

ஆயில்யன் on Thursday, April 09, 2009 1:06:00 PM said...

முதல் கவிதை புரியவே இல்ல அதான் ரெண்டாவது மூணாவதுன்னு தாவிட்டேன்!

(அமித்து அம்மா பாஸ் நீங்களும் தானே....!)

ஆயில்யன் on Thursday, April 09, 2009 1:07:00 PM said...

ரெண்டாவது கவிதையில பிரயோகிக்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் மட்டும் எனக்குபுரியல பாஸ்!


தனியா வெளக்கம் கொடுங்க!

குவார்ட்டர்

சியர்ஸ்

வல்லிசிம்ஹன் on Thursday, April 09, 2009 1:14:00 PM said...

எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. பின் நவீனத்துவம்தானே:)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:21:00 PM said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

ரெண்டாவது கவிதை நல்லா இருக்குது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமித்து அம்மான்னு சாதாரணமா சொல்ல முடியாம மீ த ஃபர்ஸ்ட்டாய் வந்ததுக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக்கறேன் :-)

அமுதா on Thursday, April 09, 2009 1:22:00 PM said...

முதல் கவிதை புரிஞ்சும் புரியாமலும்
இரண்டாவது கவிதை நல்லா இருக்கு
மூணாவது - :-)

/* ஆயில்யன் said...
ரெண்டாவது கவிதையில பிரயோகிக்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் மட்டும் எனக்குபுரியல பாஸ்!*/
டெரராவே இருக்கீங்க பாஸ்...

சென்ஷி on Thursday, April 09, 2009 1:22:00 PM said...

/ஆயில்யன் said...

மூணாவது கவிதை நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லா இருக்கு!/

மூணாவது கவிதையப்பத்தி கருத்து சொல்லக்கூடாதுன்னு டிஸ்கி போடலாமுன்னு நினைச்சு போடாம விட்டதுக்கான காரணம் இப்ப தெரியுது.. :))

நன்றி ஆயில்ஸ்

கோபிநாத் on Thursday, April 09, 2009 1:25:00 PM said...

\\ஆயில்யன் said...
ரெண்டாவது கவிதையில பிரயோகிக்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் மட்டும் எனக்குபுரியல பாஸ்!


தனியா வெளக்கம் கொடுங்க!

குவார்ட்டர்

சியர்ஸ்
\\

சீக்கிரம் வாங்கண்ணே...சிறப்பு தள்ளூபடி போட்டு உங்களையும் இந்த ஆட்டத்தில் சேர்த்ததுக்கிறோம் ;)

கோபிநாத் on Thursday, April 09, 2009 1:27:00 PM said...

\\எல்லாமே பழகி விட்டது
உன்னுடனான எனது
மூன்றாம்
காதல் தோல்விக்குப்பின் \\

மாப்பி இதை படிக்கும் போது வடிவேலு காமெடி ஒன்னு ஞாபகத்ததுக்கு வருது..

செத்து செத்துவிளையாடுவோமா ;))

நாமக்கல் சிபி on Thursday, April 09, 2009 1:27:00 PM said...

3 வது கவிதையா?

சென்ஷி on Thursday, April 09, 2009 1:28:00 PM said...

//ஆயில்யன் said...

முதல் கவிதை புரியவே இல்ல அதான் ரெண்டாவது மூணாவதுன்னு தாவிட்டேன்!

(அமித்து அம்மா பாஸ் நீங்களும் தானே....!)//

ஒத்துக்கறேன். நீ கரெக்டா லைன்ல வர்றேங்கறத ஒத்துக்கறேன் :)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:29:00 PM said...

//ஆயில்யன் said...

ரெண்டாவது கவிதையில பிரயோகிக்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் மட்டும் எனக்குபுரியல பாஸ்!


தனியா வெளக்கம் கொடுங்க!

குவார்ட்டர்

சியர்ஸ்//

கோபி சிறப்பூ தள்ளுபடியில உங்களுக்கு வெளக்கத்தோட கத்துக்கொடுக்கறதா சொல்லியிருக்கார். வெக்கப்படாம வாங்க :)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:30:00 PM said...

//வல்லிசிம்ஹன் said...

எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. பின் நவீனத்துவம்தானே:)//

இல்லியே வல்லிம்மா.. தப்பா சொல்றீங்க. பின்நவீனத்துவம்ன்னா சுத்தமா புரியலைன்னு சொல்லிட்டு பின்நவீனத்துவமான்னு கேக்கனும். அதான் இங்கத்தய ஷ்டைல் :))

கவிதா | Kavitha on Thursday, April 09, 2009 1:30:00 PM said...

மூணாவது கவிதை எனக்கும் பிடிச்சி இருக்கு.... :)))

சென்ஷி on Thursday, April 09, 2009 1:31:00 PM said...

// அமுதா said...

முதல் கவிதை புரிஞ்சும் புரியாமலும்
இரண்டாவது கவிதை நல்லா இருக்கு
மூணாவது - :-)//

எனக்கென்னமோ மூணாவது கவிதைக்குத்தான் பலத்த ஆதரவு கிடைக்கும்ன்னு தோணுது :)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:32:00 PM said...

//அமுதா said...

/* ஆயில்யன் said...
ரெண்டாவது கவிதையில பிரயோகிக்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் மட்டும் எனக்குபுரியல பாஸ்!*/
டெரராவே இருக்கீங்க பாஸ்...//

அவர் கேரக்டரே அப்படி மாத்திக்கிட்டு இருக்காருன்னு நினைக்குறேன் :)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:32:00 PM said...

// கோபிநாத் said...

\\ஆயில்யன் said...
ரெண்டாவது கவிதையில பிரயோகிக்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் மட்டும் எனக்குபுரியல பாஸ்!


தனியா வெளக்கம் கொடுங்க!

குவார்ட்டர்

சியர்ஸ்
\\

சீக்கிரம் வாங்கண்ணே...சிறப்பு தள்ளூபடி போட்டு உங்களையும் இந்த ஆட்டத்தில் சேர்த்ததுக்கிறோம் ;)//

நான் இதுக்கு ரிப்பீட்டே போட்டுட்டு ஒதுங்கிக்கறேன். தேதி சொல்லி விடு மச்சி :))

சென்ஷி on Thursday, April 09, 2009 1:33:00 PM said...

// கோபிநாத் said...

\\எல்லாமே பழகி விட்டது
உன்னுடனான எனது
மூன்றாம்
காதல் தோல்விக்குப்பின் \\

மாப்பி இதை படிக்கும் போது வடிவேலு காமெடி ஒன்னு ஞாபகத்ததுக்கு வருது..

செத்து செத்துவிளையாடுவோமா ;))//

வாழ்க்கைன்னா இதெல்லாம் ஜகசமடா மச்சி... :)) அன்னிக்கு சொன்ன பஞ்ச் டயலாக்க சொல்லிக்க வேண்டியதுதான் :-))

சென்ஷி on Thursday, April 09, 2009 1:35:00 PM said...

//நாமக்கல் சிபி said...

3 வது கவிதையா?//

நயந்தாராங்கற இலக்கியத்த ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்குற இலக்கியவாதி இப்படியெல்லாம் சந்தேகப்பட்டு கேள்வியெழுப்பினா அடுத்த தடவை லிங்க் அனுப்பி வைக்க மாட்டேன்னு நினைப்பா. :-)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:36:00 PM said...

//கவிதா | Kavitha said...

மூணாவது கவிதை எனக்கும் பிடிச்சி இருக்கு.... :)))//

அந்தக்கவிதைய பிடிக்காதவங்க யாருக்கா இருக்கா :-))

narsim on Thursday, April 09, 2009 1:38:00 PM said...

4 வது ‘டாப்பா’ இருந்திருக்குமோ?

நான் ஆதவன் on Thursday, April 09, 2009 1:39:00 PM said...

மூணாவது கவிதைய பாதி மட்டும் எழுதுன சென்ஷியை கடுமையாக கண்டிக்கிறேன்

முழு கவிதையையும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்

narsim on Thursday, April 09, 2009 1:39:00 PM said...

முதல் கவிதை அருமை

ஆயில்யன் on Thursday, April 09, 2009 1:39:00 PM said...

/சென்ஷி said...

எனக்கென்னமோ மூணாவது கவிதைக்குத்தான் பலத்த ஆதரவு கிடைக்கும்ன்னு தோணுது :)

//

கண்டிப்பா பாஸ்!

கன்னா பின்னான்னு ஆதரவு கண்டினியூவா வாராங்காட்டி கண்ணுல ஃபால்ட்டுன்னு சொல்லிடுவோம்ல :)))

சென்ஷி on Thursday, April 09, 2009 1:41:00 PM said...

//narsim said...

4 வது ‘டாப்பா’ இருந்திருக்குமோ?//

ஹா ஹா ஹா.. வார்த்தை விளையாட்டுன்னா நர்சிம்ன்னு சும்மாவா சொல்றாங்க :-))

உங்க கமெண்ட்ட ரொம்ப ரசிச்சேன் :-)

நான் ஆதவன் on Thursday, April 09, 2009 1:41:00 PM said...

//குவாட்டர் பாட்டிலும்
கூட கொஞ்சம் சோடாவும்
இடைவெளி விட்டிருந்த
புகை நாற்றமும்
அறை முழுக்க நட்பின் சியர்ஸ்களும்
அடுத்த ஃபிகருக்கான ரூட்டுக்களும்
எல்லாமே பழகி விட்டது//

ரூமுக்கு வந்தபொழுதே நினைச்சேன்...

சென்ஷி on Thursday, April 09, 2009 1:42:00 PM said...

//நான் ஆதவன் said...

மூணாவது கவிதைய பாதி மட்டும் எழுதுன சென்ஷியை கடுமையாக கண்டிக்கிறேன்

முழு கவிதையையும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்//

கண்டிக்கறதோ கண்ணடிக்கறதோ என்னோடவே நிறுத்திக்கோ. கவிதைக்கிட்ட போகாதே :-)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:43:00 PM said...

// narsim said...

முதல் கவிதை அருமை//

இதுல என்ன விளையாட்டு இருக்குன்னு சரியா தெரியல. குரூப்ல கேட்டுட்டு சொல்றேன் :-)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:44:00 PM said...

//ஆயில்யன் said...

/சென்ஷி said...

எனக்கென்னமோ மூணாவது கவிதைக்குத்தான் பலத்த ஆதரவு கிடைக்கும்ன்னு தோணுது :)

//

கண்டிப்பா பாஸ்!

கன்னா பின்னான்னு ஆதரவு கண்டினியூவா வாராங்காட்டி கண்ணுல ஃபால்ட்டுன்னு சொல்லிடுவோம்ல :)))//

பின்ன அதை விட நமக்கு இங்க வேற என்ன வெட்டி முறிக்க வேண்டிய வேலை இருக்குங்கறேன்.. :)))

சென்ஷி on Thursday, April 09, 2009 1:46:00 PM said...

//நான் ஆதவன் said...

//குவாட்டர் பாட்டிலும்
கூட கொஞ்சம் சோடாவும்
இடைவெளி விட்டிருந்த
புகை நாற்றமும்
அறை முழுக்க நட்பின் சியர்ஸ்களும்
அடுத்த ஃபிகருக்கான ரூட்டுக்களும்
எல்லாமே பழகி விட்டது//

ரூமுக்கு வந்தபொழுதே நினைச்சேன்...//

ஆனா நீ அப்ப சியர்ஸ் சொல்லவே இல்லியே தம்பி :-)

ஸ்ரீமதி on Thursday, April 09, 2009 1:46:00 PM said...

1st one as usual super.. Senshe anna touch...

2nd one.. Girrrrrrrrr....

3rd one... yaaro ezhuthina, yaarukko sondhamaagappora kavithaiya sondham kondaaradhu thappu... ;))

டக்ளஸ்....... on Thursday, April 09, 2009 1:47:00 PM said...

எல்லா கவிதையுமே சூப்பர் ரகம்...
அதுகயும் ரெண்டவது டாப்பு..

அமிர்தவர்ஷினி அம்மா on Thursday, April 09, 2009 1:50:00 PM said...

ஆயில்யன் said...
முதல் கவிதை புரியவே இல்ல அதான் ரெண்டாவது மூணாவதுன்னு தாவிட்டேன்!

(அமித்து அம்மா பாஸ் நீங்களும் தானே....!)


ரகசியத்த இப்படியா சபையில போட்டு உடைப்பாங்க

ஏன் பாஸ்

இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க

எப்ப
எப்ப????????????/

வித்யா on Thursday, April 09, 2009 1:53:00 PM said...

முதல் கவிதை ஒன்னுமே புரியல.
ரெண்டாவது கொஞ்சம் புரிஞ்சதானால நல்லாருக்கு.
மூணவது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:x

ஆயில்யன் on Thursday, April 09, 2009 1:54:00 PM said...

//3rd one... yaaro ezhuthina, yaarukko sondhamaagappora kavithaiya sondham kondaaradhu thappu... ;))//


இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!

மென்மையான இதயத்தோடு கலங்காமல் கருத்து சொல்லும்
அன்பு ஆயில்யன்

ஆயில்யன் on Thursday, April 09, 2009 1:55:00 PM said...

/ அமிர்தவர்ஷினி அம்மா said...
ஆயில்யன் said...
முதல் கவிதை புரியவே இல்ல அதான் ரெண்டாவது மூணாவதுன்னு தாவிட்டேன்!

(அமித்து அம்மா பாஸ் நீங்களும் தானே....!)


ரகசியத்த இப்படியா சபையில போட்டு உடைப்பாங்க

ஏன் பாஸ்

இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க

எப்ப
எப்ப????????????//

டெவல்ப் ஆகுவீங்கன்னு தானே பாஸ் கேக்குறீங்க

சான்ஸே இல்ல அவ்ளோதான் இனி இதான் நிரந்தரம் !

சென்ஷி on Thursday, April 09, 2009 1:56:00 PM said...

//ஸ்ரீமதி said...

1st one as usual super.. Senshe anna touch...

2nd one.. Girrrrrrrrr....

3rd one... yaaro ezhuthina, yaarukko sondhamaagappora kavithaiya sondham kondaaradhu thappu... ;))//

:-))

முதல் ரெண்டு கவிதைக்கான உங்களோட ரியாக்சன் தெரிஞ்ச விசயம்தான்.. :)))

என்னங்க இது. கவிதைய ரசிக்கக்கூட மாட்டேங்குறீங்க. அதுக்குள்ள தப்பு சொல்றீங்க :))

அது என்ன யாருக்கோன்னு எப்பவுமே என்னை தனியா வெளியில இழுத்து விட்டுட்டு போறீங்க. திஸ் இஸ் டூ பேட் தங்கச்சி ;-)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:57:00 PM said...

// டக்ளஸ்....... said...

எல்லா கவிதையுமே சூப்பர் ரகம்...
அதுகயும் ரெண்டவது டாப்பு..//

ஆனா அந்த ரெண்டாவது கவிதை ஒரு டூப்பு.. :-)
எதிர் கவுஜ ரேஞ்சுல ஏதோ டிரை செஞ்சேன். அவ்ளோதான் :-)

சென்ஷி on Thursday, April 09, 2009 1:59:00 PM said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
முதல் கவிதை புரியவே இல்ல அதான் ரெண்டாவது மூணாவதுன்னு தாவிட்டேன்!

(அமித்து அம்மா பாஸ் நீங்களும் தானே....!)


ரகசியத்த இப்படியா சபையில போட்டு உடைப்பாங்க

ஏன் பாஸ்

இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க

எப்ப
எப்ப????????????///

என்ன கொடும சார் இது... ஆயில்ஸோட வெள்ளை மனசை யாருமே புரிஞ்சுக்கலை போலருக்குதே :-))

விழியன் on Thursday, April 09, 2009 2:00:00 PM said...

ஒன்னுமே புரியலே உலகத்திலே..என்னமோ நடக்குது மர்மமா இருக்குது :)

அனுஜன்யா on Thursday, April 09, 2009 2:02:00 PM said...

முதல் - கவிதை.

இரண்டு - கவுஜ

மூன்று - (கவு)ஜொள்ளு

அனுஜன்யா

சென்ஷி on Thursday, April 09, 2009 2:05:00 PM said...

//வித்யா said...

முதல் கவிதை ஒன்னுமே புரியல.
ரெண்டாவது கொஞ்சம் புரிஞ்சதானால நல்லாருக்கு.
மூணவது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:x//

இதுக்கெல்லாம் கோவப்படக்கூடாது. அதான் தெளிவா லேபிள்ல ரவுசுன்னு குத்தி வச்சிருக்கோமுல்ல :-)

மொக்கையா இருந்தாலும் பாராட்டிட்டு போகணும் :)

சென்ஷி on Thursday, April 09, 2009 2:06:00 PM said...

//ஆயில்யன் said...

//3rd one... yaaro ezhuthina, yaarukko sondhamaagappora kavithaiya sondham kondaaradhu thappu... ;))//


இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!

மென்மையான இதயத்தோடு கலங்காமல் கருத்து சொல்லும்
அன்பு ஆயில்யன்/

நீ என் இனமடா ஆயில்யா.. :-))

சென்ஷி on Thursday, April 09, 2009 2:07:00 PM said...

// விழியன் said...

ஒன்னுமே புரியலே உலகத்திலே..என்னமோ நடக்குது மர்மமா இருக்குது :)//

என்ன விழியன் நீங்களே இப்படி சொன்னா எப்படி. தன்மான தமிழனோட கவிதையில இருக்குற ஏதாவது உள்குத்த எடுத்து பதிவிட்டா எனக்கும் வியாபாரம் ஆகுமுல்ல :-)

சென்ஷி on Thursday, April 09, 2009 2:08:00 PM said...

//அனுஜன்யா said...

முதல் - கவிதை.

இரண்டு - கவுஜ

மூன்று - (கவு)ஜொள்ளு

அனுஜன்யா//

இது அனுஜன்யா ஷ்டைலு...

ஆனா மூனாவது ஜொள்ளுக்குத்தான் பயங்கர மருவாதி போலருக்குது தலைவா ;-)

ஸ்ரீமதி on Thursday, April 09, 2009 2:17:00 PM said...

47

ஸ்ரீமதி on Thursday, April 09, 2009 2:18:00 PM said...

48

ஸ்ரீமதி on Thursday, April 09, 2009 2:18:00 PM said...

49

ஸ்ரீமதி on Thursday, April 09, 2009 2:18:00 PM said...

50

ஸ்ரீமதி on Thursday, April 09, 2009 2:19:00 PM said...

POttuttomla 50?? ;))

வால்பையன் on Thursday, April 09, 2009 2:31:00 PM said...

//குவாட்டர் பாட்டிலும்
கூட கொஞ்சம் சோடாவும்
இடைவெளி விட்டிருந்த
புகை நாற்றமும்
அறை முழுக்க நட்பின் சியர்ஸ்களும்
அடுத்த ஃபிகருக்கான ரூட்டுக்களும்
எல்லாமே பழகி விட்டது
உன்னுடனான எனது
மூன்றாம்
காதல் தோல்விக்குப்பின்//

தலை எனக்கே வேட்டு வைக்கிற பார்த்திங்களா?
இதெல்லாம் என் பக்கம்!
நீங்க ஒன்லி புரியாத கவிதை மட்டும் தான் எழுதனும்!
ஆனாலும் கவிதை டாப்பு

மூன்றாவது கவிதை டாப்போ டாப்பு!

முத்துலெட்சுமி-கயல்விழி on Thursday, April 09, 2009 2:36:00 PM said...

தீராமல் இரவு
மூடாத விழிகளுக்காய்.. //
அருமையான வார்த்தைகள்..

முத்துலெட்சுமி-கயல்விழி on Thursday, April 09, 2009 2:39:00 PM said...

மூன்றாவது கவிதை வேறெங்கோ இருந்து காப்பி பேஸ்ட் கவிதை..:)

முத்துலெட்சுமி-கயல்விழி on Thursday, April 09, 2009 2:40:00 PM said...

2 வது கவிதையில் ரூட் என்று வந்ததால் இனி வரும் காதலுக்கும் ஒரு வேட்டு.. :)

அதிஷா on Thursday, April 09, 2009 2:41:00 PM said...

தல வழ கல கல..

சாருநிவேதிதா,ஜெயமோகனுக்கு அடுத்து சென்ஷிதான்.

(அண்ணே நீங்க சொல்ல சொன்ன மாதிரி பின்னூட்டம் போட்டாச்சு வெஸ்டர் யூனியன்ல மணி டிராபரிருங்க)

அதிஷா on Thursday, April 09, 2009 2:43:00 PM said...

மூணாவது கவிதைய பாக்கத்தான் முடியுமா.. வாசிக்க முடியாதா..

குடந்தைஅன்புமணி on Thursday, April 09, 2009 2:43:00 PM said...

முதலிரண்டு கவிதை உங்களுக்கு சொந்தம். மூணாவது கவிதை யாருக்கு சொந்தம்?

அதிஷா on Thursday, April 09, 2009 2:44:00 PM said...

\\ பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..! \\

தல இந்த கவிதை ரொம்ப நல்லாருக்கு.

புனிதா on Thursday, April 09, 2009 2:49:00 PM said...

1.விழிகள் மூடினால் இரவு தீர்ந்துவிடும் என்ற தயக்கமா? விடியா இரவே தொலையா பகலா இது?

2.இரண்டாவது கவிதை பிடிச்சிருக்கு சென்ஷி டச் :-)

3. கவிதையெதுவும் கண்ணுக்கு தெரியலப்பா ;-)

வந்துட்டு சும்மா போக மனது லேது..அதான் பெரிய மனசு பண்ணி இந்த பின்னூட்டம் :-))

Jeeves on Thursday, April 09, 2009 2:51:00 PM said...

படத்தில் வசனங்கள் இல்லை
கதாநாயகி அழகாக இருக்கிறார்
நல்ல முடிவு.

மொத்தத்தில் அழகு.

தொடரவும்

சின்ன அம்மிணி on Thursday, April 09, 2009 3:07:00 PM said...

முதல் கவிதை ஒரு நாள் எனக்குப்புரியும். அதாவது குசும்பன் ஒரு எதிர்கவிதை போடுவார் பாருங்க. அன்னைக்கு

ரங்கன் on Thursday, April 09, 2009 4:37:00 PM said...

அட,,
என்னங்க இப்படி பண்ணிட்டீங்க.
மூணாவது கவிதை பாதில நிக்குது.

முழுசா முடிங்க.

ஆழ்ந்த வருத்ததோடு
ரங்கன்

கானா பிரபா on Thursday, April 09, 2009 5:40:00 PM said...

மூணாவது கவிதையைத் தந்ததுக்கே உமக்கு கவிப்பேரரசு பட்டம் குடுக்கலாம்யா :)

ஆயில்யன் on Thursday, April 09, 2009 6:00:00 PM said...

3வது கவிதை

கவிதை சொல்கின்ற கண்கள்
இளம் மனதில் எத்தனை ராகம்

பாஸ் என்னிய மன்னிச்சுடுங்க!

திரும்ப ஒரு தபா வந்து மூணாவது கவிதை ரசிச்சுப்புட்டேன் :))))))

பரிசல்காரன் on Thursday, April 09, 2009 10:22:00 PM said...

மூணாவது கவிதை சரியா அப்லோடு ஆகல. முழுசா அப்லோடு பண்ணவும்.

அரசூரான் on Friday, April 10, 2009 2:33:00 AM said...

கவிப் பேரரசு கண்டிருந்தால் இப்படி சொல்லியிருப்பாரோ...

சென்ஷி, மூன்று காதலும்
முத்தான காதல்

முதலாமவது மிச்ச காதல்
இரவு சங்கமிச்ச காதல்

இரண்டாமவது பட்ட காதல்
அனுபவப் பட்ட காதல்

மூன்றாவது சுட்ட காதல்
கண்களால் சுட்ட காதல்

பிரேம்குமார் on Friday, April 10, 2009 4:39:00 AM said...

ரெண்டாவது கவுஜ நல்ல எதிர்கவுஜ :)

ச.முத்துவேல் on Friday, April 10, 2009 10:21:00 AM said...

3 ஆவது கவிதைதான் நீங்க எழுதியிருக்கிறதுலேயே(!) ரொம்ப சிம்பிளா புரியுது. மத்த ரெண்டும் புரிஞ்சுடுச்சே(!). அப்படின்னா இன்னும் கொஞ்சம் பின் நவீனம் ஆக்குங்க.:)

கவிதைகள் நல்லாருக்கு.

பாச மலர் on Friday, April 10, 2009 11:45:00 AM said...

கவிதைகள் நன்று சென்ஷி..மூன்றாவது கவிதையை விட அதைக் கவிதை என்று அறிமுகப்படுத்தியதுதான் கவிதை..

சென்ஷி on Saturday, April 11, 2009 11:46:00 AM said...

@ வால்பையன்..

உங்க வியுவ எழுதறதுக்கு பயந்துக்கிட்டேதான் அந்த கவுஜயை எழுதுனேன் :-))

சென்ஷி on Saturday, April 11, 2009 11:49:00 AM said...

@ முத்துக்கா...

//தீராமல் இரவு
மூடாத விழிகளுக்காய்.. //
அருமையான வார்த்தைகள்..//

நன்றி அக்கா..

மூணாவது கவிதை காப்பி பேஸ்ட்ன்னு கரெக்டா கண்டுபிடிச்சதுக்கு ஒரு கிர்ர்ர்ர்ர்ர் :-))

சென்ஷி on Saturday, April 11, 2009 11:51:00 AM said...

//அதிஷா said...

தல வழ கல கல..

சாருநிவேதிதா,ஜெயமோகனுக்கு அடுத்து சென்ஷிதான்.

(அண்ணே நீங்க சொல்ல சொன்ன மாதிரி பின்னூட்டம் போட்டாச்சு வெஸ்டர் யூனியன்ல மணி டிராபரிருங்க)//

சொல்ற வேலைய கரெக்டா செய்யறதுக்கு அதிஷாவை விட்டா வேற யாரு இருக்கா. என் கையெழுத்து கூட போடாம ப்ளாங்க் செக் அனுப்பி வச்சிருக்கேன். கிடைச்சதும் ஃபில் பண்ணிக்குங்க. இதுக்கெல்லாம் ஓவரா ஃபீல் ஆகப்படாது

(அதிஷாண்ணே நீங்க சொன்னா மாதிரியே 2 இடத்துலயும் ரிப்பீட்டே போட்டிருக்கேன். அதுக்கு பேமண்ட் எப்ப செட்டில் செய்வீங்க :) )

சென்ஷி on Saturday, April 11, 2009 11:53:00 AM said...

//குடந்தைஅன்புமணி said...

முதலிரண்டு கவிதை உங்களுக்கு சொந்தம். மூணாவது கவிதை யாருக்கு சொந்தம்?//

இதான் கும்பகோணம் குசும்புங்கறதா.. அதுவும் என்கிட்டயேவா :-))

எந்த கவிதையும் எனக்கு சொந்தம் கிடையாதுங்க. எழுதி முடிச்சதுமே ஆசிரியன், பிரதி, நகல் எல்லாமே டெத் பெட்ல கிடக்கும். வாசகர்கள் பார்த்து உசுரு கொடுத்தாத்தான் அடுத்தது கிடைக்குமாம் :-)

அதனால நானும் இப்ப வேடிக்கை பார்க்குற கட்சிதான்!!

சென்ஷி on Saturday, April 11, 2009 11:54:00 AM said...

மீ த 75 :))

(பொங்கலுக்கே வெடி வெடிக்குறவய்ங்க நாம. தீபாவளிக்கு தோசையையா சுடுவோம்)

சென்ஷி on Saturday, April 11, 2009 11:54:00 AM said...

//அதிஷா said...

\\ பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..! \\

தல இந்த கவிதை ரொம்ப நல்லாருக்கு./

இதுக்கு தனியா அக்கவுண்ட் பேமண்ட் அனுப்பி வைக்க்குறேன் அதிஷா :))

சென்ஷி on Saturday, April 11, 2009 11:55:00 AM said...

//புனிதா said...

1.விழிகள் மூடினால் இரவு தீர்ந்துவிடும் என்ற தயக்கமா? விடியா இரவே தொலையா பகலா இது?

2.இரண்டாவது கவிதை பிடிச்சிருக்கு சென்ஷி டச் :-)

3. கவிதையெதுவும் கண்ணுக்கு தெரியலப்பா ;-)

வந்துட்டு சும்மா போக மனது லேது..அதான் பெரிய மனசு பண்ணி இந்த பின்னூட்டம் :-))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புனிதா :)

சென்ஷி on Saturday, April 11, 2009 11:56:00 AM said...

//Jeeves said...

படத்தில் வசனங்கள் இல்லை
கதாநாயகி அழகாக இருக்கிறார்
நல்ல முடிவு.

மொத்தத்தில் அழகு.

தொடரவும்//

மூணாவது கவிதையையா ஜீவ்ஸ் :)

சென்ஷி on Saturday, April 11, 2009 11:57:00 AM said...

// சின்ன அம்மிணி said...

முதல் கவிதை ஒரு நாள் எனக்குப்புரியும். அதாவது குசும்பன் ஒரு எதிர்கவிதை போடுவார் பாருங்க. அன்னைக்கு//

நல்ல வேளை சின்ன அம்மிணி.. நாங்களும் என்னைத்தெரியுமான்னு உங்ககிட்ட கேக்குறதுக்கு முன்னாடியே கமெண்டு போட்டுட்டீங்க.. :))

சென்ஷி on Saturday, April 11, 2009 11:58:00 AM said...

//ரங்கன் said...

அட,,
என்னங்க இப்படி பண்ணிட்டீங்க.
மூணாவது கவிதை பாதில நிக்குது.

முழுசா முடிங்க.

ஆழ்ந்த வருத்ததோடு
ரங்கன்//

முழுசா முடிஞ்சுடுச்சுன்னா அதுக்கு பேரு கவிதை இல்லைப்பா. வாக்கியம் :)

சென்ஷி on Saturday, April 11, 2009 11:59:00 AM said...

// கானா பிரபா said...

மூணாவது கவிதையைத் தந்ததுக்கே உமக்கு கவிப்பேரரசு பட்டம் குடுக்கலாம்யா :)/

கானா, மூணாவதை காவியம், பேரிலக்கியம், சிற்றிலக்கியம்ன்னு பெருசு பெருசாத்தான் வகைப்படுத்த நினைச்சேன். ஆனா பாவம் ரசிகர்கள் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு கவிதையாக்கிட்டேன் :))

சென்ஷி on Saturday, April 11, 2009 12:00:00 PM said...

/ ஆயில்யன் said...

3வது கவிதை

கவிதை சொல்கின்ற கண்கள்
இளம் மனதில் எத்தனை ராகம்

பாஸ் என்னிய மன்னிச்சுடுங்க!

திரும்ப ஒரு தபா வந்து மூணாவது கவிதை ரசிச்சுப்புட்டேன் :))))))//

பரவாயில்லையே.. இதை நீ பின்னூட்டம் போட்டு சொல்ற அளவுக்கு ரொம்ப நல்லவனா இருக்கியே பாசு :)

சென்ஷி on Saturday, April 11, 2009 12:01:00 PM said...

//பரிசல்காரன் said...

மூணாவது கவிதை சரியா அப்லோடு ஆகல. முழுசா அப்லோடு பண்ணவும்.//

ம்ஹூம் இது சரியில்ல பரிசல். அப்புறம் அண்ணிக்கிட்ட சொல்லி அனுப்ப வேண்டி வரும்.. சாக்கிரத :)

சென்ஷி on Saturday, April 11, 2009 12:02:00 PM said...

//அரசூரான் said...

கவிப் பேரரசு கண்டிருந்தால் இப்படி சொல்லியிருப்பாரோ...

சென்ஷி, மூன்று காதலும்
முத்தான காதல்

முதலாமவது மிச்ச காதல்
இரவு சங்கமிச்ச காதல்

இரண்டாமவது பட்ட காதல்
அனுபவப் பட்ட காதல்

மூன்றாவது சுட்ட காதல்
கண்களால் சுட்ட காதல்//

சிம்பிளா சொல்லணும்னா கலக்கல் அரசூராரே :))

ரொம்ப ரசிச்சேன் உங்க கவித்துவத்தை..

முதல் வருகைன்னு நினைக்குறேன். நன்றிகள்!!!

சென்ஷி on Saturday, April 11, 2009 12:03:00 PM said...

// பிரேம்குமார் said...

ரெண்டாவது கவுஜ நல்ல எதிர்கவுஜ :)//

வாங்க மாப்பி! மூணாவது கவிதைக்கு கமெண்ட காணோம். வூட்ல பயம்மா?! :))

சென்ஷி on Saturday, April 11, 2009 12:05:00 PM said...

// ச.முத்துவேல் said...

3 ஆவது கவிதைதான் நீங்க எழுதியிருக்கிறதுலேயே(!) ரொம்ப சிம்பிளா புரியுது. மத்த ரெண்டும் புரிஞ்சுடுச்சே(!). அப்படின்னா இன்னும் கொஞ்சம் பின் நவீனம் ஆக்குங்க.:)

கவிதைகள் நல்லாருக்கு.//

ஜீன்ஸ், டிசர்ட்ல இருக்குற நவீன கவிதை ஒண்ணு பான்பராக் போட்டுட்டு கையில பின் வச்சு இருக்குற மாதிரி வலையேத்திடுவோமா :))

சென்ஷி on Saturday, April 11, 2009 12:05:00 PM said...

//பாச மலர் said...

கவிதைகள் நன்று சென்ஷி..மூன்றாவது கவிதையை விட அதைக் கவிதை என்று அறிமுகப்படுத்தியதுதான் கவிதை./

ஆஹா.. புல்லரிக்க வைக்குறீங்களே அக்கா..

ஆக மொத்தத்துல நாமளும் கவிதை ஆயாச்சு. நன்றி :-))

தமிழன்-கறுப்பி... on Sunday, April 12, 2009 11:19:00 PM said...

மாப்பி என்ன இருந்தாலும் உன்னை மாதரி முடியாதுப்பா... ;)



ஆனாலும் அந்த மூன்றாவது கவிதை இப்ப விசயகாந்தோட நடிக்கிறதுல எனக்கு ரொம்பவே வருத்தம்... ;)

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com