Sunday, April 12, 2009

குறியீட்டமர்வியல்



கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

படம் உதவி : முத்துலெட்சுமி கயல்விழி

19 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி on Sunday, April 12, 2009 12:49:00 PM said...

அருமை..

முத்துலெட்சுமி-கயல்விழி on Sunday, April 12, 2009 12:51:00 PM said...

அறிவியல் புவியியல் மாதிரி இந்த அமர்வியலை இலக்கிய பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோருகிறேன்.. :)

குசும்பன் on Sunday, April 12, 2009 1:14:00 PM said...

பின் நவினத்துவம் என்று சொல்ல இருக்க வேண்டிய குறியும் பூனையும் இதில் வந்துவிட்டதால் இது பின் நவினத்துவம் வகைப்படும்!

//கவிதைக்கான குறியீடை//
//கொண்டது பூனை//


ஆகவே மீ தி எஸ்கேப்பு!!!

மாதவராஜ் on Sunday, April 12, 2009 1:42:00 PM said...

நல்லா வந்திருக்கு. பூனை கண்ணை மூடிக் கொண்டிருப்பதையும் வரிகளாக்கியிருக்கலாமே...

ஆயில்யன் on Sunday, April 12, 2009 2:24:00 PM said...

வாவ்....!!

கலக்கல்

ச.முத்துவேல் on Sunday, April 12, 2009 3:22:00 PM said...

அட்டகாசம்.
( நவீன விருட்சத்துக்கு அனுப்புங்க, விரும்பினால். கட்டாயம்தேர்வாகும். பூனை பற்றிய கவிதைகள் தொகுப்பு திரட்டி வருவதை அறிந்திருக்கலாம்)

தீப்பெட்டி on Sunday, April 12, 2009 3:49:00 PM said...

ஏதோ புரியுற மாதிரி இருக்கு.....
ஆனாலும்......

கோபிநாத் on Sunday, April 12, 2009 3:52:00 PM said...

நல்லாயிருக்குங்க மாப்பி சார் ;)

கே.ரவிஷங்கர் on Sunday, April 12, 2009 4:08:00 PM said...

நல்லா வந்து இருக்கு சென்ஷி. வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா on Sunday, April 12, 2009 7:15:00 PM said...

//குறியீட்டமர்வியல்"//
ஒரு புது வார்த்தை படித்து விட்டேன்!!!
அன்புடன் அருணா

வடகரை வேலன் on Sunday, April 12, 2009 8:33:00 PM said...

நல்லா இருக்கு சென்ஷி.

மின்னல் on Sunday, April 12, 2009 10:24:00 PM said...

//தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து
//

க‌விதை அருமை. அழ‌கான‌ சொல்லாட‌ல்

தமிழன்-கறுப்பி... on Sunday, April 12, 2009 11:11:00 PM said...

\\
சென்ஷி said...
டேய் மாப்ள...

ஒத்துக்கறேண்டா நீ இப்ப உண்மையிலேயே எளக்கியவாதிதான்.
\\

நானும்... :)

நல்லாருக்கு மாப்பி..!

அனுஜன்யா on Monday, April 13, 2009 10:07:00 AM said...

பூனை, கவிதை, குறியீடு - வேறென்ன, நீங்களும் இ.வாதி தான். நல்லா இருக்கு சென்ஷி

அனுஜன்யா

சென்ஷி on Monday, April 13, 2009 5:07:00 PM said...

@ முத்துக்கா..

நன்றிகள் பூனையின் பிரதிக்கும் :-)

@ குசும்பன்

:-))

@ மாதவராஜ்

நன்றிகள் பல..

@ ஆயில்யன்..

தேங்க்ஸ் ஆயில்ஸ் பாஸ் :)

சென்ஷி on Monday, April 13, 2009 5:08:00 PM said...

@ முத்துவேல்..

நன்றி முத்துவேல்

@ தீப்பெட்டி..

அது அப்படித்தான் :-) நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் தீப்பெட்டி

@கோபிநாத்

நன்றிகள்

@கே. ரவிஷங்கர்

நன்றிகள் ரவிஷங்கர்

சென்ஷி on Monday, April 13, 2009 5:09:00 PM said...

@ அன்புடன் அருணா..

நன்றி அருணா

@வடகரை வேலன்.

நன்றி அண்ணாச்சி :-)

@ மின்னல்

நன்றிகள் பல மின்னல்

@ தமிழன் - கறுப்பி

:-)) நன்றி மாப்பி

@ அனுஜன்யா..

அவ்வ்வ் :-)). நன்றி தலைவா

D.R.Ashok on Monday, April 13, 2009 10:49:00 PM said...

ஹஹ்ஹஹ் ஹஹ்ஹஹ்
இது தான் பின்நவினத்துவ கவிதையோ?

Saravana Kumar MSK on Tuesday, April 14, 2009 12:38:00 AM said...

செம கலக்கல்.. :)

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com