Friday, May 08, 2009

எனக்குப் பிடித்த கவிதைகளில் சில - 3


கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்

மௌனத் துரு

சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்

எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது

பதட்டம்

தோற்றத்தில் இனம்பிரித்துக்
காட்டாத குழந்தையின்
நனைந்த உள்ளாடை விலக்க எத்தனிக்கையில்
கூசிச் சிரித்துக் கைபொத்தித்
திகிலூட்டும் குழந்தை

கருணையின் ஊற்று

திறந்திருக்கும் கார் கண்ணாடி வழியே
தேய்வுற்றுக் கரைந்த
ரோகக் கை நீட்டி
இரைஞ்சும் கிழவிக்கில்லை
என் கருணையின் ஊற்றைத்
திறப்பதற்கான
துளிப் பிரயாசையும்

ஒரு பூ மலர

முன்பு
ஒரே ஒரு முறை
சந்தித்திருப்பின்
மொத்த வாழ்வையும்கூடப்
பணயம்வைக்காதிருந்திருக்கலாம்

கண நேரப் பொறுமை
இந்த மோசமான வார்த்தையை
விழுங்கிச் செரித்திருக்கும்

உரிய கவனமோ அக்கறையோ
இருந்திருந்தால்
சிதறியிருக்காது
இந்த நட்பு

சுவையற்ற நீண்ட காலம்
ஸ்தம்பிக்கிறது
கண நேர அவகாசங்களில்

இப்பூ மலர
ஒரு கணம் தாமத்திருந்தால்
இப்படி கனன்றுகொண்டிருக்காது
இல்லையா?

வன்மம்

வஞ்சம் படர்ந்த
நகரத்தின் தெருக்களில்
வெப்பம் மிதந்தலையும்
பேருந்தில்
வியர்த்து வழியும் உடல்களினூடே
எங்கோ துளிர்த்துப் பெருகிய வன்மமென
என்மீது நீளும்
ஓர் ஆண்குறி

உயிர்ப்பின் வெம்மை

முன் எப்போதோ
தன் பறத்தலிலிருந்து
நிலம் மீண்ட மயிலிறகு
ஒளிந்திருக்கிறது
என் குழந்தையின் புத்தக இடைவெளிக்குள்

தன் உயிர்ப்பின் வெம்மையோடு
அவனது கனவுகளை அடைகாத்தபடி

நீக்கமுடியாத வரிகள்

நீ அருகிலிருந்த வேளை
நிலைக்கண்ணாடிப் பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்

என் நினைவுகளில்
உன்னைப் பற்றிய வரிகளை
நீக்கிவிடச் சொல்லி மன்றாடுகிறாய்

உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மைகளை

இந்த மாலை

வேறெந்தப் பொழுதுகளையும்விடச்
சுமக்கவே இயலாதபடிக்கு
எப்படி இவ்வளவு கனத்துவிடுகிறது
இந்த மாலை
மாதவிடாய் ஈரம் நிரம்பிக்
கனக்கிற பஞ்சைப்போல

மெழுகுச்சுடர்

நீங்களில்லாத பொழுதில்
உங்களைப் பற்றிய வருத்தங்களோடு
ஓரிடம் தேடிப்போவேன்
நானில்லாத சமயங்களில்
நீங்களும் அப்படித்தான்
நாமிருவர் பேசிக்கொள்கையில் மட்டும்
கூச்சமின்றி வளர்த்தெடுக்கின்றோம்
பிரியங்களால் மெழுகிய ஒரு சுடரை


கவிதைகளின் மூலம் : பச்சை தேவதை (கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர் : சல்மா
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

மேலும் சில எனக்குப் பிடித்த கவிதைகள் காண

முதல் தொகுப்பு
இரண்டாம் தொகுப்பு

42 comments:

வால்பையன் on Friday, May 08, 2009 3:48:00 PM said...

தல எல்லாமே அருமையா இருக்கு!

இரண்டு பதிவா இட்டிருந்தால், இன்னும் சுவைத்து மகிழ்ந்திருப்பேன்!

ஆயில்யன் on Friday, May 08, 2009 3:55:00 PM said...

அண்ணே டக்கராக்கீது எல்லா கவிதையும் !

:)

எனக்கு பிடிச்சது

எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது

கவிதை காதலன் on Friday, May 08, 2009 4:03:00 PM said...

வெளவால் பற்றிய கவிதை சூப்பர்

கோபிநாத் on Friday, May 08, 2009 4:19:00 PM said...

அனைத்ததும் அருமை ;)

தமிழன்-கறுப்பி... on Friday, May 08, 2009 4:26:00 PM said...

மாப்பி எல்லாமே நல்லாருக்கு! எங்கயிருந்து படிக்கிற எல்லாத்தையும் புத்தகங்களை எனக்கும் கொடுய்யா...

தமிழன்-கறுப்பி... on Friday, May 08, 2009 4:29:00 PM said...

\\
மௌனத் துரு

சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்

எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது
\\

இதன் சாயல்களில் என்னிடமும் இருக்கிறது சில வரிகள்...

வனம் on Friday, May 08, 2009 4:30:00 PM said...

வணக்கம்

சல்மா ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருந்த கவிதாயினி

நீங்கள் பதிந்திருக்கும் எல்லா கவிதைகளும் அட !.... பொடவைக்கின்றன

\\திறந்திருக்கும் கார் கண்ணாடி வழியே
தேய்வுற்றுக் கரைந்த
ரோகக் கை நீட்டி
இரைஞ்சும் கிழவிக்கில்லை
என் கருணையின் ஊற்றைத்
திறப்பதற்கான
துளிப் பிரயாசையும்\\

அப்படியே என்னை எழுதியது மாதிரி இருக்கின்றது.

நன்றி
இராஜராஜன்

வேத்தியன் on Friday, May 08, 2009 4:35:00 PM said...

எல்லாம் நன்றாக உள்ளது...
முதலாவது தான் எனக்கு மிகவும் பிடித்தது...
பகிர்வுக்கு நன்றி நண்பா...

அனுஜன்யா on Friday, May 08, 2009 4:49:00 PM said...

எல்லாமே நல்லா இருக்கு சென்ஷி. ஆனால், ஒரு ஐந்து கவிதைகளுக்கு மேல் ஒரே சமயம் படிக்க முடிவதில்லை என்னால். நல்ல கவிதை சோடா இல்லாத .... என்ன நினைத்தாய்? தண்ணீர் போல. ஐந்து கிளாசுக்கு மேல் ஒரே சமயம் குடிக்க முடியாது :)

நன்றி சகா.

அனுஜன்யா

சென்ஷி on Friday, May 08, 2009 5:13:00 PM said...

@ வால் பையன்

இரண்டு பதிவாக போடுவது வசதிப்படுமென்றாலும் எதைவிடுவது என்ற ஆதங்கத்திலேயே எழுத வேண்டியதாகி விட்டது. இன்னும் சில பெரிய்ய கவிதைகளை மனம் கனக்கச்செய்து விட வேண்டியதாகி விட்டது :-)

அமுதா on Friday, May 08, 2009 5:15:00 PM said...

கோணம் , மெளனத்துரு மிக நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி

சென்ஷி on Friday, May 08, 2009 5:16:00 PM said...

நன்றி ஆயில்யன் :-))

சென்ஷி on Friday, May 08, 2009 5:16:00 PM said...

:-)) முதல் வருகைக்கு நன்றி கவிதை காதலரே!

சென்ஷி on Friday, May 08, 2009 5:17:00 PM said...

நன்றி கோபிநாத்..

சென்ஷி on Friday, May 08, 2009 5:18:00 PM said...

@ தமிழன் கறுப்பி

சர்வம் அய்யனார் மயம் :-))

உனது கவிதைகளையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

சென்ஷி on Friday, May 08, 2009 5:18:00 PM said...

முதல் வருகையென நினைக்கின்றேன் நன்றி இராஜராஜன் :-))

சென்ஷி on Friday, May 08, 2009 5:19:00 PM said...

//வேத்தியன் said...
எல்லாம் நன்றாக உள்ளது...
முதலாவது தான் எனக்கு மிகவும் பிடித்தது...
பகிர்வுக்கு நன்றி நண்பா...
//

தங்களின் வாழ்த்துக்கள் வழியே சல்மாவுக்கு முழு பாராட்டுதல்களும் சேரட்டும் :))

சென்ஷி on Friday, May 08, 2009 5:21:00 PM said...

@ அனுஜன்யா...

சில நல்ல கவிதைகளை வாசிக்கும்போது எதை விடுவது என்ற குழப்பத்திலேயே எல்லாவற்றையும் ஏற்றும் மனப்பாங்கு வந்து விடுகின்றது.

போதை எப்படி ஏறினாலென்ன.. எப்படியும் தெளியத்தெளிய தண்ணீர் ஊற்றிக்கொள்ளத்தான் வேண்டுவது :))

சென்ஷி on Friday, May 08, 2009 5:21:00 PM said...

// அமுதா said...
கோணம் , மெளனத்துரு மிக நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி
//

நன்றி அமுதா...

கயல்விழி நடனம் on Friday, May 08, 2009 5:24:00 PM said...

அத்தனையும் அழகு...சற்றே மனம் கனக்கிறது சில வரிகளை படிக்கும் போது..

லவ்டேல் மேடி on Friday, May 08, 2009 5:25:00 PM said...

நெம்ப அருமையான கவிதைகளுங்கோ ...!!! நெம்ப சூப்பர்...!! ஆனா நானு ஒன்னுதான் படுச்செனுங்கோவ் ..!!! எனக்கு அவ்ளோதான் கெப்பாசிட்டி....!!! கைவசம் நெம்ப கவிதை வெச்சிருப்பீங்கலாட்ட .....??? ஒட்டுக்காலும் அஞ்சு கவிதைய போட்டு தாக்கீடீன்களே....???

எப்புடியோ .... கஷ்ட்டப்பட்டு எல்லா கவிதையும் நா இன்னைக்கே படுசிட்டு வந்து .... உங்ககிட்ட டவுட்டு கேக்குறேன்....!!!


வாழ்த்துக்கள்....!! வாழ்க வளமுடன்....!!!!

சென்ஷி on Friday, May 08, 2009 5:32:00 PM said...

வருகைக்கு நன்றி கயல்விழி நடனம்!
ஆம்///


பின்னூட்டக் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா... இது சல்மா என்ற பெண்கவிஞரின் பச்சை தேவதை என்ற தொகுப்பிலிருந்து எடுத்து எழுதப்பட்டது,

தங்களின் சந்தேகத்தை கண்டிப்பாய் கேட்கலாம். எனக்கும் தெரிந்திருந்தால் கண்டிப்பாய் கூறுவேன் :))

தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் on Friday, May 08, 2009 8:17:00 PM said...

அருமையான தொகுப்பு சென்ஷி. நீங்கள் ஒரு சபரிக் கிழவி

சென்ஷி on Friday, May 08, 2009 8:37:00 PM said...

//முரளிகண்ணன் said...
அருமையான தொகுப்பு சென்ஷி. நீங்கள் ஒரு சபரிக் கிழவி
//

நன்றி முரளி...

அதென்னது சபரிக்கிழவி??? சுத்தமா புரியலை :-((

Kavi kilavan on Friday, May 08, 2009 11:49:00 PM said...

சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்

Muniappan Pakkangal on Saturday, May 09, 2009 6:51:00 AM said...

Ungalukku piditha kavithaihal nalla irukku-konam & vavvaal super.

முரளிகண்ணன் on Saturday, May 09, 2009 10:16:00 AM said...

சென்ஷி,

ராமாயணத்திலே ஒரு காட்சி.

ராமன் வனவாசம் இருக்கும்போது, அந்த காட்டில் ஒரு கிழவி இருந்தாள்.அவள் பெயர் சபரி.

ஒருமுறை ராமனுக்கு அவள் நாவல்கனிகளைக் கொடுக்கவந்தாளாம்.

எந்த கனி கொடுப்பதாக இருந்தாலும் ஒரு முறை கடித்து, சுவைத்து பார்த்து பின் ராம்னிடம் கொடுப்பாளாம்.

காரணம், நம் ராமனுக்கு நல்லதே கொடுக்க வேண்டுமென.

அதுபோல நீங்களும் சுவைத்து நன்றாக இருப்பவற்றை மட்டும் வாசகர்களுக்கு பரிமாறுகிறீர்கள்.

மூன்று பகுதியும் அருமையான கவிதைகள்.

அதனால்தான் உங்களை சபரிக்கிழவி என விளித்தேன்.

இது நம்ம ஆளு on Saturday, May 09, 2009 12:55:00 PM said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

அரவிந்தன் on Saturday, May 09, 2009 5:32:00 PM said...

உங்களுக்கு பிடித்த இந்த கவிதைகள் எனக்கும் பிடித்தன !!!

Mrs.Menagasathia on Saturday, May 09, 2009 7:25:00 PM said...

அனைத்து கவிதைகளுமே சூப்பர்,பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி சென்ஷி!!

ஸ்ரீமதி on Monday, May 11, 2009 10:05:00 AM said...

//ஆயில்யன் said...
அண்ணே டக்கராக்கீது எல்லா கவிதையும் !

:)

எனக்கு பிடிச்சது

எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது//

Repeatuuuuuuuuuuu... :)))))))))))))

சென்ஷி on Tuesday, May 12, 2009 10:34:00 PM said...

//Kavi kilavan said...
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
//

:-))

முதல் பின்னூட்ட வருகை.. நன்றி கவிநிலவன். அழகானபெயர்!

சென்ஷி on Tuesday, May 12, 2009 10:37:00 PM said...

//Muniappan Pakkangal said...
Ungalukku piditha kavithaihal nalla irukku-konam & vavvaal super.
//

:-))

சரியான கிவ் அன் டேக் பாலிசி யூஸ் பண்றீங்க தலைவரே!!!

சென்ஷி on Tuesday, May 12, 2009 10:39:00 PM said...

@ முரளி கண்ணன்..

கண்கள் பனிக்கிறது.. நெஞ்சம் நெகிழ்கிறது.. டைப்படிக்கிறது அவ்ளோ பெரிய நல்ல விசயமா இப்பத்தான் உங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் உங்க வாழ்த்தை ஏத்துக்கிறேன். அடுத்த கவிதைகள் உங்களுக்காக சிறப்பு பதிவா தரப்படும் :-))

சென்ஷி on Tuesday, May 12, 2009 10:40:00 PM said...

//இது நம்ம ஆளு said...
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
//

நீங்க கமெண்ட் போட்ட அன்னிக்கே வந்து பார்த்தேன். கடைய தொறக்காம வச்சிருந்தீங்க. இப்ப மறுக்கா வந்து பார்க்குறேன் தலைவா. நன்றிகள் பல :-))

சென்ஷி on Tuesday, May 12, 2009 10:41:00 PM said...

//அரவிந்தன் said...
உங்களுக்கு பிடித்த இந்த கவிதைகள் எனக்கும் பிடித்தன !!!
//

ரொம்ப நன்றி அண்ணா. முதல் வருகைன்னு நினைக்குறேன். :)

சென்ஷி on Tuesday, May 12, 2009 10:43:00 PM said...

//Mrs.Menagasathia said...
அனைத்து கவிதைகளுமே சூப்பர்,பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி சென்ஷி!!
//

நன்றிங்க.. சமையல் குறிப்புகளை அழகா புகைப்படத்தோட தர்ற ஒரே ஆளு இப்போதைக்கு நீங்கதான் :)

அதற்கும் என் நன்றிகள்!

சென்ஷி on Tuesday, May 12, 2009 10:44:00 PM said...

//ஸ்ரீமதி said...
//ஆயில்யன் said...
அண்ணே டக்கராக்கீது எல்லா கவிதையும் !

:)

எனக்கு பிடிச்சது

எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும்
மௌனத்தை பற்றிக்கொள்வது//

Repeatuuuuuuuuuuu... :)))))))))))))
//

நன்றி ஸ்ரீமதி.. வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் :))

Poornima Saravana kumar on Tuesday, May 12, 2009 11:42:00 PM said...

அண்ணா அனைத்தும் அருமை!

Poornima Saravana kumar on Tuesday, May 12, 2009 11:43:00 PM said...

முதல் கவிதை பிரமாதம்:)

Poornima Saravana kumar on Tuesday, May 12, 2009 11:44:00 PM said...

நல்ல பகிர்வு... இது போல் நிறைய தாருங்கள்..

thevanmayam on Thursday, May 14, 2009 8:38:00 AM said...

நீங்க எழுதியது போலவே இருந்தது!!
கடைசியில் சல்மா?

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com