Friday, May 15, 2009

மேலும் சில கவுஜ மழைகள்!!!




எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!
%%%%%%%%%%%%%%%%%%%%

மெலிதாய்
இதழ் விரிக்கத்தொடங்கி
சப்த சிரிப்புகளில்
சுத்தமாய் மறைந்திருந்தது
குவளைப்பூ போன்றதொரு
மழையின் துளியும்


%%%%%%%%%%%%%%%%%%%%

எத்தனை உயரத்திலிருந்து
விழுந்தாலும்
குழந்தையை சிரிக்க வைத்த பின்பே
மறைகிறது
தூறல் பொம்மைகள்
%%%%%%%%%%%%%%%%%%%%

குறிப்பார்த்து விழுந்த கல்லாக
நீர்த்துளி பட்டு
சிதறிய தண்ணீர்
நீ துளி பார்த்ததும்
சிதறும் நானாய்
%%%%%%%%%%%%%%%%%%%%

பாதச்சுவடு படாமல்
குதிகாலை தூக்கி
கால் விரல்களால்
நடந்து போகிறாய்
கோலம் போட்டுக்கொண்டுள்ளது
தண்ணீர்
%%%%%%%%%%%%%%%%%%%%

ஒரு மழைக்கால இரவின்
ஆரம்பத்தில்
கொடுத்த முத்தம்
தீராமல்
தன் தடயங்களை பத்திரப்படுத்தியுள்ளது
நீ சென்ற பிறகும்
%%%%%%%%%%%%%%%%%%%%
மழையுடன் உறவாடுதல்
எளிதாகி விட்டது
அரிதாகக் கிடைத்திருக்கும்
உன் பிரிவுக்காலத்தில்
%%%%%%%%%%%%%%%%%%%%
தண்ணீர்ப்பூக்களில்
மழைத்துளி தூவும்
காதல் தோல்வி கோலங்கள்

%%%%%%%%%%%%%%%%%%%%

சஞ்சய் படப்பதிவுக்காக எழுதிய கவுஜைகள்.. மேலும் சில நல்ல கவிதைகள் வாசிக்க இங்க போங்க....

தனியே பதிப்பிக்க அனுமதித்த சஞ்சய்க்கும், பிடித்ததில் சிலவற்றை தேர்ந்தெடுத்த தங்கைக்கும், பிரிய நண்பன் தமிழன் - கறுப்பிக்கும் இப்பதிவை சமர்ப்பிக்கின்றேன்.

தமிழன் - கறுப்பியின் கவிதையில் பிடித்த ஒன்று மாத்திரம் இங்கு.. அவனிடம் கேட்காமல்...

எப்பொழுதாவது
ரசிக்கக் கிடைக்கிற
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது
உன் முகம்
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?

47 comments:

சுபா on Friday, May 15, 2009 1:34:00 PM said...

நல்ல முயற்சி..தொடருங்க உங்க சேவையை! :)

தமிழன்-கறுப்பி... on Friday, May 15, 2009 1:48:00 PM said...

கலக்கல் சென்ஷி!

தமிழன்-கறுப்பி... on Friday, May 15, 2009 1:48:00 PM said...

அதெப்படியோ அவசரமா கவிதை அடிக்கிற கலை உங்களுக்கு நல்லாவே வருது...

என் கூட பேசிக்கிட்டே எப்படிய்யா அத்தனையும் டைப்பண்ணின.. எனக்கு மற்ற வரிகளை அடிக்கறதுக்கு ரொம்ப நேரம் போயிடுச்சு . :)

முத்துலெட்சுமி/muthuletchumi on Friday, May 15, 2009 2:16:00 PM said...

அடித்து துவைத்து பெய்யாமல் (எங்களை குழப்பாமல்)
சாரல்போல கவிதை ..நல்லா இருக்கு..

கே.ரவிஷங்கர் on Friday, May 15, 2009 2:24:00 PM said...

அண்ணே அட்டகாசம்!

மோனிபுவன் அம்மா on Friday, May 15, 2009 2:26:00 PM said...

எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!

கவிதை அருமை
கலக்கல் சென்ஷி!

வால்பையன் on Friday, May 15, 2009 2:31:00 PM said...

தயவுசெய்து கவுஜ என்ற வார்த்தையை கொச்சைபடுத்தாதீர்கள்!

இவைகள் கவுஜ அல்ல!


கவிதைகள்!

Nundhaa on Friday, May 15, 2009 2:33:00 PM said...

இந்த தொகுதியில் சில கவிதைகள் தேறாது எனினும் பல கவிதைகள் நன்றாகவே இருக்கின்றன ...

கோபிநாத் on Friday, May 15, 2009 3:05:00 PM said...

குழந்தைகளையும் மழையும் மையப்படுத்தி எழுதியது அருமை ;))

ஆயில்யன் on Friday, May 15, 2009 3:21:00 PM said...

உங்கள் இருவரின் கவிதை எனக்குள்ளும் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தியது! :)


சூப்பர்:)))

அமுதா on Friday, May 15, 2009 3:42:00 PM said...

தொடர்ந்து கலக்குங்க...

வேத்தியன் on Friday, May 15, 2009 4:37:00 PM said...

அருமையான வரிகள்..


சிறந்த கவிதைகள்...

லவ்டேல் மேடி on Friday, May 15, 2009 4:37:00 PM said...

கவிதைகள் எழிய நடையில் அருமையா இருக்கு தலைவரே......

ஸ்ரீமதி on Friday, May 15, 2009 5:01:00 PM said...

கவிதைகள் வழமை போலவே அழகு, சூப்பர், நல்லா இருக்கு.. :)) ஆனால், கவிஞர் எந்த தங்கை தேர்ந்தெடுத்தா இந்த கவிதைகள??

கார்க்கி on Friday, May 15, 2009 5:07:00 PM said...

//ஸ்ரீமதி said...
கவிதைகள் வழமை போலவே அழகு//

இலக்கியவாதி ஸ்ரீமதி வாழ்க..

sakthi on Friday, May 15, 2009 7:45:00 PM said...

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் சென்ஷி!

repeatuuuuuuuuuu

sakthi on Friday, May 15, 2009 7:45:00 PM said...

வால்பையன் said...

தயவுசெய்து கவுஜ என்ற வார்த்தையை கொச்சைபடுத்தாதீர்கள்!

இவைகள் கவுஜ அல்ல!


கவிதைகள்!

agreed

sakthi on Friday, May 15, 2009 7:48:00 PM said...

மழையுடன் உறவாடுதல்எளிதாகி விட்டதுஅரிதாகக் கிடைத்திருக்கும்உன் பிரிவுக்காலத்தில்

arumai

Mrs.Menagasathia on Friday, May 15, 2009 8:26:00 PM said...

//தண்ணீர்ப்பூக்களில்
மழைத்துளி தூவும்
காதல் தோல்வி கோலங்கள்//
இந்த வரிகள் என்னை மிகவும் பிடித்திருக்கு.

உங்க கவிதைகள் அருமை சென்ஷி!!

Muniappan Pakkangal on Friday, May 15, 2009 10:46:00 PM said...

Kavithai thulihal mazhaineer pola arumai.

நசரேயன் on Saturday, May 16, 2009 12:20:00 AM said...

இது கவுஜ அல்ல கவிதை

Suresh on Saturday, May 16, 2009 2:03:00 AM said...

உங்களால மட்டும் தான் இப்படி கலக்க முடியும் சென்ஷி

முரளிகண்ணன் on Saturday, May 16, 2009 6:52:00 AM said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

reena on Saturday, May 16, 2009 9:54:00 AM said...

//குறிப்பார்த்து விழுந்த கல்லாகநீர்த்துளி பட்டுசிதறிய தண்ணீர்நீ துளி பார்த்ததும்சிதறும் நானாய்//


எப்படிங்க இதெல்லாம்??? மிக அழகான கவிதைகள் சென்ஷி:))

குடந்தைஅன்புமணி on Saturday, May 16, 2009 10:23:00 AM said...

எல்லாமே நல்லா இருக்கு...

ஆதவா on Saturday, May 16, 2009 4:06:00 PM said...

மழை பற்றிய கவிதை.... தூறலில் நனைந்ததைப் போன்றே வெகு அழகாக இருந்தது... என்னை வெகுவாக கவர்ந்த கவிதை வரிகள் ::

குழந்தையை சிரிக்க வைக்கும் தூறல் பொம்மைகள்
கோலம் போடும் தண்ணீர்
மழைக்கால இரவின் முத்தம்....

பிரமாதம்!!!


ஒரு இணைப்பின் மூலம் இங்கே வந்தேன். உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன்!!! நன்றி என் தளம் வந்து பதிவிட்டமைக்கு!!!

சென்ஷி on Saturday, May 16, 2009 10:38:00 PM said...

@ சுபா

வருகைக்கு நன்றி சுபா

@ தமிழன் - கறுப்பி

நன்றி மாப்பி

@ முத்துக்கா

நன்றி அக்கா

@ கே. ரவிசங்கர்

நன்றி தலைவா

@மோனி புவன் அம்மா

நன்றி அக்கா

@ வால் பையன்

நன்றி வாலு

@நந்தா

நன்றி நந்தா

@கோபிநாத்

நன்றி மச்சி

@ ஆயில்யன்

நன்றி ஆயில்யா

@அமுதா

நன்றி அமுதா

@ வேத்தியன்

நன்றி தலைவா

@ லவ்டேல் மேடி

நன்றி மேடி

@ ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீமதி

@கார்க்கி

நன்றி கார்க்கி

@ சக்தி

நன்றி சக்தி

சென்ஷி on Saturday, May 16, 2009 10:40:00 PM said...

@ திருமதி. மேனகாசத்யா

வருகைக்கு நன்றி அக்கா

@ முனியப்பன் பக்கங்கள்

நன்றி தலைவா

@ நசரேசயன்

நன்றி நசரேயன்

@ சுரேஷ்

நன்றி சுரேஷ்

@ முரளி கண்ணன்

நன்றி முரளி சார்

@ ரீனா

நன்றி ரீனா

@ குடந்தை அன்புமணி

வருகைக்கு நன்றி தலைவா

@ ஆதவா

வருகைக்கு நன்றி ஆதவா

ச.முத்துவேல் on Saturday, May 16, 2009 10:45:00 PM said...

அடா! அடா! தமிழன் கறுப்பியின் கவிதைகளுக்கும் சேர்த்துத்தான் அடா, அடா!

சென்ஷி on Saturday, May 16, 2009 10:56:00 PM said...

@ முத்துவேல்..

ஏண்ணே.. இத்தனை பேருக்கு நன்றி சொன்னேன்ல கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அங்கயே நன்றிய கொடுத்திருப்பேன். இப்ப தனியா நன்றி சொல்ல வச்சுட்டியே :))

Poornima Saravana kumar on Sunday, May 17, 2009 12:42:00 AM said...

நான் சஞ்சய் அண்ணா பதிவிலேயே எல்லாத்தையும் படிச்சிட்டேன்:)

எல்லாமே கலக்கலா இருக்குண்ணா:))

thevanmayam on Sunday, May 17, 2009 9:51:00 AM said...

எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!///

கலக்கல் கவிதைகள்!! நல்ல முயற்சி..தொடருங்க உங்க சேவையை!///

யட்சன்... on Sunday, May 17, 2009 10:18:00 AM said...

எப்படி இதெல்லாம்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

யட்சன்... on Sunday, May 17, 2009 10:19:00 AM said...

எல்லாமே புரியுது ...ஹி..ஹி..

நெல்லைத்தமிழ் on Sunday, May 17, 2009 10:58:00 AM said...

எத்தனை உயரத்திலிருந்து
விழுந்தாலும்
குழந்தையை சிரிக்க வைத்த பின்பே
மறைகிறது
தூறல் பொம்மைகள்|||||

||||| அழகான கவிதை|||||

வண்ணத்துபூச்சியார் on Monday, May 18, 2009 12:00:00 AM said...

அருமை நண்பரே..

வாழ்த்துகள்.

என் தேர்தல் கணிப்புகளை பற்றி வாழ்த்தியதற்கும் நன்றி.

GOWRIPRIYA on Monday, May 18, 2009 10:41:00 AM said...

எளிமையான, மிக மிக அழகான சொல்லாடல்..
வாழ்த்துக்கள் சென்ஷி

அமிர்தவர்ஷினி அம்மா on Monday, May 18, 2009 11:12:00 AM said...

மழையின் மெல்லிய சாரல் போன்ற கவிதைகள்

எழுதியது நீங்க இல்லியோ???

அமிர்தவர்ஷினி அம்மா on Monday, May 18, 2009 11:13:00 AM said...

ஆயில்யன் said...
உங்கள் இருவரின் கவிதை எனக்குள்ளும் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தியது! :)


அப்பிடியா
அய்யய்யோ ஆயில்ஸ் அண்ணன் இன்னேரம் கவிதை பதிவு போட்டுட்டு இருப்பாரே.?????
கடவுளே இப்ப என்ன செய்யறது...

ஆயில்யன் on Monday, May 18, 2009 12:01:00 PM said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன்
உங்கள் இருவரின் கவிதை எனக்குள்ளும் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தியது! :)


அப்பிடியா
அய்யய்யோ ஆயில்ஸ் அண்ணன் இன்னேரம் கவிதை பதிவு போட்டுட்டு இருப்பாரே.?????
கடவுளே இப்ப என்ன செய்யறது...///

கடவுள் said...
படிச்சுத்தான் ஆகணும்

தேனீ - சுந்தர் on Monday, May 18, 2009 4:02:00 PM said...

//நீர்த்துளி பட்டு
சிதறிய தண்ணீர்
நீ துளி பார்த்ததும்
சிதறும் நானாய்//
கலக்கல் வரிகள்....,

சென்ஷி on Monday, May 18, 2009 9:48:00 PM said...

@ பூர்ணிமா சரவணகுமார்

நன்றி தங்கச்சி

@ தேவன்மயம்

நன்றி தேவன்மயம் சார்

@ யட்சன்

நன்றி யட்சன்

@ நெல்லைத்தமிழ்

நன்றி நெல்லைத்தமிழ்

@ வண்ணத்துப்பூச்சி

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

@ கௌரிபிரியா

நன்றி கௌரிபிரியா

@ அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி அமித்துஅம்மா

@ ஆயில்யன்

நன்றி கடவுளே

@ தேனி - சுந்தர்

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சுந்தர்

vinoth gowtham on Saturday, May 23, 2009 8:57:00 PM said...

தல கவிதை பின்னி இருக்கீங்க..

UAEல எங்க இருக்கீங்க..

தமிழர்ஸ் - Tamilers on Monday, May 25, 2009 10:20:00 PM said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

சென்ஷி on Tuesday, May 26, 2009 1:41:00 PM said...

@ வினோத் கவுதம்..

ஷார்ஜாவில் தான் வினோத்..

@ தமிழர்ஸ் இணையத்தளம்..

தகவலுக்கு நன்றிங்க!

விக்னேஷ்வரி on Thursday, May 28, 2009 1:19:00 PM said...

எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்! //

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

எல்லா கவிதைகளும் அட்டகாசம்.

Kanna on Sunday, May 31, 2009 11:08:00 AM said...

//தண்ணீர்ப்பூக்களில்
மழைத்துளி தூவும்
காதல் தோல்வி கோலங்கள்//

அருமை...

இவைகள் கவுஜ அல்ல....கவிதைகள்..

அடிக்கடி எழுதுங்கள்.

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com