Tuesday, June 16, 2009

32


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வலைப்பதியணும்னு நினைச்சு புனைப்பெயர் யோசிச்சப்ப நாகேஷ், சார்லி இது ரெண்டுதான் என்னோட முதல் விருப்பமா இருந்த்து. இந்த வலைப்பதிவுல நண்பன் செந்திலையும் பங்கெடுத்துக்க வைக்கணும்ங்கற விருப்பத்துல அவனோட பெயரையும் சேர்த்து சென்ஷின்னு வைச்சேன். இந்த பெயர் மற்றும் குருவின் புகைப்படத்தால் நிறைய்ய நண்பர்கள் கிடைச்சதால இந்தப் பெயரும் பிடிக்கும்.

என்னோட உண்மையான பெயர் பல பழைய பதிவர் நண்பர்களுக்கு தெரியும். என்னோட பெயர் ஷேக் ஜபருல்லாஹ்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டு வாரங்களுக்கு முன்பு.. ஹோட்டல் ருவாண்டா திரைப்படம் பார்த்துட்டு இருந்தப்ப. சட்டுன்னு உடையறதும் பின்ன மறுபடி கோர்த்து எடுக்கறதும் எனக்கு வழக்கமாகிடுச்சு.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ம். பல சமயங்கள்ல இது எனக்கு கை கொடுத்திருக்குது. கவிதைங்கற பேர்ல முன்னே நோட்ல எதை கிறுக்கிக்கொடுத்தாலும் நல்லாயிருக்குன்னு சொன்ன தோழி ‘கையெழுத்த சொன்னேன்டா’ன்னு கலாய்க்கற அளவுக்கு எழுதி எழுதி கொடுமை செஞ்சிருக்கேன். அப்புறம் சென்னையில வேலையில்லாம இருந்தப்ப ஒரு திரைப்பட நிறுவனத்துக்கு அவங்க கலந்தாலோசிக்கற திரைக்கதை, வசனத்தை தெளிவா புரியறா மாதிரி பேப்பர்ல எழுதி கொடுத்துட்டு இருந்ததுக்கும் கையெழுத்து நல்லாயிருந்ததுதான் காரணம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

4. பிடித்த மதிய உணவு என்ன?

வீட்டில் சமைத்துக் கொடுக்கும் அசைவ உணவு எல்லாமே.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம். என்னுடைய நட்பு உடனே கிடைக்கும். ஆனால் அதைவிட வெகு சீக்கிரமாவே முறிஞ்சும் போயிடும். என்னோட சுபாவம் அப்படி. அதனால நட்பு கிடைப்பதை பற்றியோ அது இழப்பதை பற்றியோ இப்போதெல்லாம் கவலைப்படுவது இல்லை. பழகி விட்டது அவ்வளவுதான்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கிணறுடன் இணைக்கப்பட்ட மோட்டார் பம்புதான் எனது முதல் சாய்ஸ்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

பொதுவா யாரா இருந்தாலும் முகத்தை பார்த்துப்பேசித்தான் பழக்கம். முகத்துல எதை பார்ப்பீங்கன்னா மூக்கைதான் பார்ப்பேன்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் எதையும் மனசுல வச்சுக்காம பேசிடறதுதான்.

பிடிக்காத விஷயம் சோம்பேறித்தனம். அதுவும் அதிகமாகி இப்ப அலட்சியப்போக்கா மாறிடுச்சு.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்வி திருமணம் ஆனவர்களுக்காக. அதனால இதுக்கு நான் பதில் தரப் போறதில்லை. திருமணம் ஆகியிருந்தாலும் தந்திருக்க மாட்டேன்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அதிகம் தனிமை விரும்பியா இருக்கறதால அப்படி யாரும் இல்லாம போறதுக்கு வருந்தலை.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பு நிற டீ சர்ட், கிரீம் கலர் பேண்ட்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அலுவலகத்தில் இருக்கேன். சில பதிவுகளை, தமிழ்மணத்தைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

14. பிடித்த மணம்?

சந்தனம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1. மோனி புவன் அம்மா - 2. நான் ஆதவன் - 3. சோம்பேறி - மூவருமே நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்பதுதான்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

1. ரங்கன் - தன்னம்பிக்கை பதிவுகள். பட்டாம்பூச்சி சொல்லித்தந்தது
2. நாணல் - பல கவிதைகள்
3. ஸ்ரீதர் நாராயணன் - வித்தியாசமான கதைகள். ரொம்பப் பிடித்தது இப்ப சமீபத்தில் சங்கமம் பரிசு பெற்ற “எரணைக்கல் மோதிரம்”

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

17. பிடித்த விளையாட்டு?

கேரம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எல்லாப்படத்தையும் பார்க்கும் வழக்கம் உண்டு. நகைச்சுவைப்படங்கள் ரொம்ப ரசித்துப் பார்ப்பது உண்டு. சில படங்கள் மொக்கையாவே இருக்குன்னு விமர்சனம் படிச்சாலும், பார்த்துட்டு ஆமாம்ய்யா படு மொக்கைன்னு சொல்லத்தான் ரொம்பப் பிடிக்கும்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

20. கடைசியாகப் பார்த்த படம்?

தினமும் ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி டிவிடியில ஏதாவது படம் பார்க்குற பழக்கம் உண்டு. அந்த வகையில இந்த கேள்வி, பதில்ல மொக்கைப்படம் பேரு வந்துடக்கூடாதுன்னு நேத்து பார்த்தது சார்லி சாப்ளினின் “ தி சர்க்கஸ்” மற்றும் “தி கிட்” (The Circus & The Kid). இரண்டு படங்களும் சுவாரஸ்யமானவை.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

21. பிடித்த பருவ காலம் எது?

ஊரில் இருக்கும்போது மே மாதம் தவிர எல்லாமே. அமீரகத்தில் குளிர்காலம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அலுவலகத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் “யாமம்”. அறையில் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதும் மாற்றுவதில்லை. பிடித்தமான பூனையின் படம்தான் எப்போதும் இருக்கும்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தைகள் போடும் எல்லா சத்தமும் பிடிக்கும்.

வாகன இரைச்சல் பிடிக்காது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தமிழ்நாட்டில் - ஹோசூர்
இந்தியாவில் - டெல்லி
வெளிநாடுகளில் - இப்போதைக்கு ஷார்ஜா

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ம். இருக்கிறது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அட்வைஸ் செய்யறது.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

குடந்தை மகாமகக்குளம்

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே இருந்தால் போதும்ன்னு தான் எப்பவுமே தோணும்.

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ப்ச்ச்ச்ச்ச்ச்...

%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்.

48 comments:

rapp on Tuesday, June 16, 2009 12:24:00 PM said...

me the first

கார்க்கி on Tuesday, June 16, 2009 12:31:00 PM said...

வாழ்வைப் பற்றிய பதில்.. நச்...

rapp on Tuesday, June 16, 2009 12:31:00 PM said...

//
அலுவலகத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் //

//
அலுவலகத்தில் இருக்கேன். சில பதிவுகளை, தமிழ்மணத்தைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இதுக்குத்தான் நான் வேலை கொடுங்கய்யான்னு கேக்குறேன், பாவிங்க கொடுக்க மாட்றாங்க. வீட்ல இருந்தா அது இது லொட்டு லொசுக்குன்னு நிம்மதியா தமிழ்மணம் பாக்க முடியுதா, புக்ஸ் படிக்க முடியுதா:):):)

கே.ரவிஷங்கர் on Tuesday, June 16, 2009 12:33:00 PM said...

சலாம் அலே கும். ப்ஹுத் அச்சா ஹை!

rapp on Tuesday, June 16, 2009 12:34:00 PM said...

//
வாகன இரைச்சல் பிடிக்காது.//

நாங்கெல்லாம் பாட்டு பாடி கேட்டதில்லையே:):):)

♫சோம்பேறி♫ on Tuesday, June 16, 2009 12:35:00 PM said...

/* கவிதைங்கற பேர்ல முன்னே நோட்ல எதை கிறுக்கிக்கொடுத்தாலும் நல்லாயிருக்குன்னு சொன்ன தோழி ‘கையெழுத்த சொன்னேன்டா’ன்னு கலாய்க்கற அளவுக்கு எழுதி எழுதி கொடுமை செஞ்சிருக்கேன். */

கலாய்க்கவில்லை அய்யனே! உண்மையை உரைத்திருக்கிறார்.

சந்தனமுல்லை on Tuesday, June 16, 2009 12:36:00 PM said...

//எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எல்லாப்படத்தையும் பார்க்கும் வழக்கம் உண்டு. நகைச்சுவைப்படங்கள் ரொம்ப ரசித்துப் பார்ப்பது உண்டு. சில படங்கள் மொக்கையாவே இருக்குன்னு விமர்சனம் படிச்சாலும், பார்த்துட்டு ஆமாம்ய்யா படு மொக்கைன்னு சொல்லத்தான் ரொம்பப் பிடிக்கும்.//

:-)

திகழ்மிளிர் on Tuesday, June 16, 2009 12:36:00 PM said...

தலைப்பே சுருக்கமாய
கடைசி வரியே
/32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்./

நச்சென்று உள்ளது

அன்புடன்
திகழ்

நாடோடி இலக்கியன் on Tuesday, June 16, 2009 12:37:00 PM said...

//சில படங்கள் மொக்கையாவே இருக்குன்னு விமர்சனம் படிச்சாலும், பார்த்துட்டு ஆமாம்ய்யா படு மொக்கைன்னு சொல்லத்தான் ரொம்பப் பிடிக்கும்.
//

ஹா ஹா...

ஆயில்யன் on Tuesday, June 16, 2009 12:45:00 PM said...

//கிணறுடன் இணைக்கப்பட்ட மோட்டார் பம்புதான் எனது முதல் சாய்ஸ்./

செம ஜில்லுன்னு பீச்சியடிக்கும் தண்ணீரில் குளிப்பதில் இருக்கும் ஆனந்தம் :)))))))

அமிர்தவர்ஷினி அம்மா on Tuesday, June 16, 2009 12:52:00 PM said...

வாழ்க்கையைப் பற்றி சொன்ன வாக்கியம் அருமை.

உங்க புனைப் பெயர் + உண்மைப் பெயர் ஆச்சரியம் தந்தது.

அமிர்தவர்ஷினி அம்மா on Tuesday, June 16, 2009 12:53:00 PM said...

கடைசியாக அழுதது எப்பொழுது?

இரண்டு வாரங்களுக்கு முன்பு.. ஹோட்டல் ருவாண்டா திரைப்படம் பார்த்துட்டு இருந்தப்ப. சட்டுன்னு உடையறதும் பின்ன மறுபடி கோர்த்து எடுக்கறதும் எனக்கு வழக்கமாகிடுச்சு.

ஒடஞ்சு ஒடஞ்சு வெளாடினீங்களா பாஸ் :)-

மயாதி on Tuesday, June 16, 2009 1:00:00 PM said...

அண்ணே என்னட்டையும் நாணல் கேட்டு இருக்கா...
நீங்க முந்திட்டீங்க தல,
வாழ்த்துக்கள் நல்ல பதில்கள்...
ஒரு ஓட்டு போடுறன் , என்ன செய்யுற ஒண்டுதானே எலும்?

வால்பையன் on Tuesday, June 16, 2009 1:06:00 PM said...

இது இன்னும் முடியலையா!

நட்புடன் ஜமால் on Tuesday, June 16, 2009 1:16:00 PM said...

உங்கள் பெயர் இதுவரை அறியாததே!

வாழ்வு பற்றி சொன்னது நல்ல தெளிவு

நான் ஆதவன் on Tuesday, June 16, 2009 1:21:00 PM said...

கோர்த்து விட்டுட்டயே தலைவா...ஓகே உங்க பேச்சுக்கு மறு பேச்சு எப்ப பேசியிருக்கேன். நாளைக்கே போட்றேன்

மாதவராஜ் on Tuesday, June 16, 2009 1:26:00 PM said...

ரசித்தேன்....

பைத்தியக்காரன் on Tuesday, June 16, 2009 1:40:00 PM said...

இயல்பா இருக்கு சென்ஷி :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கோபிநாத் on Tuesday, June 16, 2009 1:55:00 PM said...

நல்லாயிருக்கு மாப்பி ;)

தமிழன்-கறுப்பி... on Tuesday, June 16, 2009 2:05:00 PM said...

அசால்டா அசத்துற மாப்பி...!

தமிழன்-கறுப்பி... on Tuesday, June 16, 2009 2:07:00 PM said...

\\
சில படங்கள் மொக்கையாவே இருக்குன்னு விமர்சனம் படிச்சாலும், பார்த்துட்டு ஆமாம்ய்யா படு மொக்கைன்னு சொல்லத்தான் ரொம்பப் பிடிக்கும்.//
\\\

அடங்க மாட்டேங்கிறியே :))

தமிழன்-கறுப்பி... on Tuesday, June 16, 2009 2:10:00 PM said...

\\
எப்போதும் மாற்றுவதில்லை. பிடித்தமான பூனையின் படம்தான் எப்போதும் இருக்கும்.
\\
பொய்தானே?!
மீராஜாஸ்மின் படம்தானே வச்சிருக்க..

;))

வித்யா on Tuesday, June 16, 2009 2:17:00 PM said...

:)

மோனிபுவன் அம்மா on Tuesday, June 16, 2009 2:39:00 PM said...

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்.

வாழ்வைப் பற்றி சொன்ன பதில் அருமையோ அருமை

மோனிபுவன் அம்மா on Tuesday, June 16, 2009 2:39:00 PM said...

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்.

வாழ்வைப் பற்றி சொன்ன பதில் அருமையோ அருமை

மோனிபுவன் அம்மா on Tuesday, June 16, 2009 2:43:00 PM said...

சில படங்கள் மொக்கையாவே இருக்குன்னு விமர்சனம் படிச்சாலும், பார்த்துட்டு ஆமாம்ய்யா படு மொக்கைன்னு சொல்லத்தான் ரொம்பப் பிடிக்கும்.//


அட தம்பி நான் கூட இப்படிதான் சொல்வேன்

நாணல் on Tuesday, June 16, 2009 2:45:00 PM said...

உங்க பெயர் காரணம் பிடித்திருக்கிறது... வாழ்க்கை பற்றி ஒரு வரியில நச்சுன்னு சொல்லி இருக்கீங்க....

தமிழ் பிரியன் on Tuesday, June 16, 2009 2:59:00 PM said...

சிம்பிளா எலலாத்துக்கும் பதில் சொல்லிட்டீங்க..:)

கார்த்திக் on Tuesday, June 16, 2009 4:28:00 PM said...

இத்தன நாளும் உங்க பேரு சென்ஷினுதான் நெனச்சேன் :-((

Karthik on Tuesday, June 16, 2009 5:32:00 PM said...

//இத்தன நாளும் உங்க பேரு சென்ஷினுதான் நெனச்சேன் :-((

Repeat. :)

//வாழ்வைப் பற்றிய பதில்.. நச்...

Repeat. :)

Karthik on Tuesday, June 16, 2009 5:32:00 PM said...

nalla irunthathunga ella pathilkalum! :)

Karthik on Tuesday, June 16, 2009 5:33:00 PM said...

me the 32. :)

எம்.ரிஷான் ஷெரீப் on Tuesday, June 16, 2009 6:07:00 PM said...

அப்ப முகப்பில போட்டிருக்கிற படம் உங்களுடையது இல்லையா? நான் சத்தியமா 'என்னடா இவர் நடிகர் நாகேஷ் மாதிரியே இருக்கார்'னு நெனச்சிட்டிருந்தேன்.. இப்பதான் தெளிவாகிட்டேன் :)

மயாதி on Tuesday, June 16, 2009 6:41:00 PM said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
அப்ப முகப்பில போட்டிருக்கிற படம் உங்களுடையது இல்லையா? நான் சத்தியமா 'என்னடா இவர் நடிகர் நாகேஷ் மாதிரியே இருக்கார்'னு நெனச்சிட்டிருந்தேன்.. இப்பதான் தெளிவாகிட்டேன் :)

i too
haaaaahaaaaaaaahaaa

Mahesh on Tuesday, June 16, 2009 7:44:00 PM said...

ரொம்ப சீரீசா எடுத்துக்கிட்டு நேர்மையான பதிலகளைச் சொல்லியிருக்கீங்க !! என்னய மாதிரி கீமடி பண்ணாம !!

சுரேஷ் கண்ணன் on Tuesday, June 16, 2009 8:02:00 PM said...

//பதில்ல மொக்கைப்படம் பேரு வந்துடக்கூடாதுன்னு//

:-))

ayanulagam on Tuesday, June 16, 2009 9:28:00 PM said...

//அலுவலகத்தில் இருக்கேன். சில பதிவுகளை, தமிழ்மணத்தைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்//

அட இந்தியால தான் அப்படின்னு பார்த்தா ஷார்ஜால கூடவா?

Sridhar Narayanan on Tuesday, June 16, 2009 9:33:00 PM said...

அலுவலகத்துல ஒரு புக்கு வீட்டுல ஒரு புக்கா? பயனத்துல எதுவும் படிக்கிறதில்லையா? :)

சென்ஷி - பெயர்க் காரணம் நல்லா இருக்கு. :) கலக்குங்க தல.

starjan on Wednesday, June 17, 2009 1:30:00 AM said...

உங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி...


வாங்க நம்ம வீட்டுக்கு...


http://ensaaral.blogspot.com/

ச.பிரேம்குமார் on Wednesday, June 17, 2009 3:15:00 AM said...

//31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ப்ச்ச்ச்ச்ச்ச்...//

யாருக்கு தல இந்த முத்தம்?

புதியவன் on Wednesday, June 17, 2009 7:20:00 AM said...

அனைத்தும் யதார்த்தமான பதில்கள்...

//ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்.//

இது அருமை...

புதியவன் on Wednesday, June 17, 2009 7:21:00 AM said...

//ச.பிரேம்குமார் said...
//31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ப்ச்ச்ச்ச்ச்ச்...//

யாருக்கு தல இந்த முத்தம்?//

இது கலக்கல்...

goma on Wednesday, June 17, 2009 9:49:00 AM said...

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்


நல்ல பதில்

யாழினி on Wednesday, June 17, 2009 7:15:00 PM said...

//12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அலுவலகத்தில் இருக்கேன். சில பதிவுகளை, தமிழ்மணத்தைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.//

//22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அலுவலகத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் “யாமம்”. அறையில் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”.//


அப்போ அலுவலகத்தில் வேலையே செய்யிறதில்லையா? (ச்சும்மா...)

வழிப்போக்கன் on Wednesday, June 17, 2009 8:23:00 PM said...

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அட்வைஸ் செய்யறது.
//

அட நம்மளாலயும் தானுங்கோ....
:)))

வழிப்போக்கன் on Wednesday, June 17, 2009 8:23:00 PM said...

அருமையான பதில்கள்...

ஆதிமூலகிருஷ்ணன் on Thursday, June 18, 2009 6:54:00 PM said...

32

cheena (சீனா) on Wednesday, July 01, 2009 8:22:00 AM said...

அன்பின் சென்ஷி

புனைப்பெயர் - செந்தைலில் உள்ள செ தவிர மற்றவை புரியவில்லை - சென்ஷி என்பது நாகேஷினையோ சார்லியினையோ நினைவுறுத்துகிறதா ??

அப்புறம் - அஸ்ஸலாமாலேகும் - பகூத் பகூத் அச்சா பதில்கள் - நல்லாவே மனந்திறந்து பேசி இருக்கீங்க

நல்லாருங்கப்பா

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com