Wednesday, June 24, 2009

எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.. - 5


எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

===============================

செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகுநேரம் நின்று வாங்கிய
ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.
தம்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்து கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.
தோழிகளற்ற
பின்வரிசையி லமர்ந்து
தெரியாமல் அழுவேன்.
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.

=====================================

யோனிகளின் வீரியம்

பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்.

====================================

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்ப்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கைநழுவிப் போகின்றன.

====================================

மெல்லிய
புலால் நாற்றம் வீசுகின்ற
நானும்
தசைகளை முற்றாகப்
பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்
என் வீடும்
கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி
பறையொலி பழகும்
விடலைகள் நிறைந்த
என் தெருவும்
ஊரின் கடைசியில் இருப்பதாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
முதலில் இருப்பதாக.

====================================

ஏவாளின் கனியும் ஆதாமின் அறுவடையும்

திருப்தியான கூடலின் லயத்தோடு
பறவைகள் சதா சப்தித்துக் கொண்டிருந்தன
பருவப்பீய்ச்சல்களிலும் உறுப்புகளின் இச்சையற்று
விலங்குகள் அலைந்து திரிந்தன.
அழைக்கப்படாத மரங்களின் காம்புகள்தோறும்
தளர்ந்த முலையின் சாயலையொத்த பழங்கள்.
வெளிச்சத்தின் நிழலில் ஒளி அமர்ந்திருந்த
அவ்விடம் மிகவசீகரமாய் விளங்கிற்று.
அதனை நிர்மாணித்தவன்
சுனைகளின் அடைப்பைச் சரிசெய்யப் போயிருந்தான்.
நஞ்சுக்கொடியின் முதல்சுவையை அலகிலேந்தி
அவளை ரகசியமாய் சமீபித்தது
வேறு எப்படியும் உருக்கொள்ள இயலாத ஸர்ப்பம்.
விரகத்தின் வேர்வை அவனுள் அரும்பத்தொடங்க
அவனுக்குப் பழக்கினாள்
தன்கனிகளைச் சுவைக்கும் உடல்நுட்பம்
அதன்பின் காமத்திற்கான அறுவடை
அவனுக்கென்றாகிப் போனது.

=================================

ஆசிரியர் : சுகிர்தராணி
தொகுப்பு : இரவு மிருகம்
காலச்சுவடு பதிப்பகம்

=================================

மேலும் சில, எனக்குப்பிடித்த கவிதைகள் வாசிக்க..

எனக்குப் பிடித்த கவிதைகள் - 1
எனக்குப் பிடித்த கவிதைகள் - 2
எனக்குப் பிடித்த கவிதைகள் - 3
எனக்குப் பிடித்த கவிதைகள் - 4

41 comments:

கண்ணா.. on Wednesday, June 24, 2009 9:34:00 AM said...

//தம்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்து கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.
தோழிகளற்ற
பின்வரிசையி லமர்ந்து
தெரியாமல் அழுவேன்.
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.//

அருமை...

சுகிர்தராணியின் மற்ற கவிதைகளையும் பதிவிடுங்கள்..

:))

ஆயில்யன் on Wednesday, June 24, 2009 9:46:00 AM said...

/கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்ப்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கைநழுவிப் போகின்றன.//


அழகு!

☀நான் ஆதவன்☀ on Wednesday, June 24, 2009 9:46:00 AM said...

வழக்கம் போல பாதி புரியல தல..புரிஞ்சது எல்லாம் சூப்பர்

சங்கா on Wednesday, June 24, 2009 10:20:00 AM said...

நண்பரே,
வழக்கமா கவிதைகள் என்னை ஈர்த்ததில்லை. (வைரமுத்து, சொல்ற ’கவிதைகள்’ தவிர :) )
இருந்தாலும், கவிதை செலக்‌ஷனில் நீங்கள் ஒரு connoisseur தான்!, Excellent.

வால்பையன் on Wednesday, June 24, 2009 10:24:00 AM said...

நெக்ஸ்டு மீட் பண்றேன்!

ஜ்யோவ்ராம் சுந்தர் on Wednesday, June 24, 2009 10:34:00 AM said...

பகிர்வுக்கு நன்றி.

மோனிபுவன் அம்மா on Wednesday, June 24, 2009 11:29:00 AM said...

எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

வர வர கவிதை எழுத எனக்கே ஆசை வருகிறது


வரிகள் அருமை தம்பி

மோனிபுவன் அம்மா on Wednesday, June 24, 2009 11:33:00 AM said...

தம்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்து கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.
தோழிகளற்ற
பின்வரிசையி லமர்ந்து
தெரியாமல் அழுவேன்.
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.


வரிகள் என் மனதை மிகவும் தொட்டுவிட்டது

கபிலன் on Wednesday, June 24, 2009 1:14:00 PM said...

அருமையான கவிதைகள்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Starjan ( ஸ்டார்ஜன் ) on Wednesday, June 24, 2009 1:41:00 PM said...

சூப்பரா இருக்கு

gils on Wednesday, June 24, 2009 2:08:00 PM said...

elarum sonna mathiiri naanum oru reeepeeta potukaren..sila kavithai pudichirunthathu..silatu purila..over kashtamaana varthaigal

ஆதிமூலகிருஷ்ணன் on Wednesday, June 24, 2009 4:50:00 PM said...

ஏர்கனவே வாசித்திருக்கிறேன். சில புரியவில்லை எனினும், பிற.. வலி மிகுந்தவை.!

அமிர்தவர்ஷினி அம்மா on Wednesday, June 24, 2009 4:51:00 PM said...

தேர்ந்தெடுத்த கவிதைகள்

பகிர்வுக்கு நன்றி.

ஆனால் இவரின் நிறைய கவிதைகள் எனக்கு புரியாது

நசரேயன் on Wednesday, June 24, 2009 8:06:00 PM said...

பினவினத்துவ கவிதை.. பாதிக்கு பதிதான் புரியுது

வழிப்போக்கன் on Wednesday, June 24, 2009 9:03:00 PM said...

கவிதைகள் ரசிக்க வைத்தன...
பகிர்வுக்கு நன்றி....

சென்ஷி on Wednesday, June 24, 2009 9:43:00 PM said...

வருகைக்கு நன்றி கண்ணா.. மற்ற கவிதைகளை வலையேற்றுவதில் சிரமமில்லை. ஆயினும் தொகுப்பாய் படித்தல் இன்னும் நலமாயிருக்கும். நேரில் சந்திக்கும் சமயம் கொண்டு வருகிறேன்.

சென்ஷி on Wednesday, June 24, 2009 9:45:00 PM said...

வருகைக்கு நன்றி ஆயில்யா.. இது ஒன்றுதான் அழகான கவிதையாகத் தோணும். மற்றது அனைத்தும் பயங்கர சூடு! படித்துவிட்டு சற்று அதிர்ச்சியில் அமர்ந்திருந்தேன்.

சென்ஷி on Wednesday, June 24, 2009 9:51:00 PM said...

@ ஆதவன்..

நேரில் சந்திக்கும்போது கவிதைகளைப் பற்றி பேசலாம் ஆதவா. உனக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

@ சங்கா

வருகைக்கு நன்றி நண்பரே.. நீங்கள் சொல்வது போல் ஒன்றும் நான் அவ்வளவு கவிதைகளில் சிறப்பானவன் இல்லை. மனதிற்கு நெருக்கமாகி படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது மீண்டும் வலைப்பக்கத்தை திறந்து வாசிக்க எனக்கு சற்று வசதியாக அமைந்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த தொகுப்பின் அத்தனை கவிதைகளையும் ஏற்றத்தான் நான் மிகவும் ஆசைப்பட்டேன்! ஆனால் அது மனதிற்கிசைந்ததாக இல்லாததால் விட வேண்டியதாகி விட்டது :(

சென்ஷி on Wednesday, June 24, 2009 9:53:00 PM said...

@ வால்பையன்..

:)) கண்டிப்பாக.

@ ஜியோவ்ராம் சுந்தர்..

வருகைக்கு நன்றி தலைவா!

சென்ஷி on Wednesday, June 24, 2009 9:55:00 PM said...

@ மோனிபுவன் அம்மா...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!

@ கபிலன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கபிலன்

@ ஸ்டார்ஜன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா!

சென்ஷி on Wednesday, June 24, 2009 10:01:00 PM said...

@ கில்ஸ்...

:) முதல் வருகைன்னு நினைக்குறேன். தொடருவீங்கன்னு நம்புறேன். அவ்வளவு கஷ்டமான வரிகளாவா இருக்குது கவிதையில.. !

@ ஆதி

ம்ம்.. இந்த கவித்தொகுப்பு கொஞ்சம் அதிகமான பாதிப்பைத்தான் எனக்கு ஏற்படுத்தியது!

@ அமித்து அம்மா..

அப்படியா! சுகிர்தராணியின் கவிதைத்தொகுப்பில் நான் வாசித்த முதல் தொகுப்பு இதுதான். மற்ற கவிதைகளையும் வாசிக்க விரும்பியுள்ளேன்.

@ நசரேயன்..

பின்னவீனத்துவ கவிதையா?! வேணாம் அழுதுடுவேன்.. அப்படி இங்க நான் அழலைன்னா யாராச்சும் வந்து திட்டுவாங்க :)

@ வழிப்போக்கன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வழிப்போக்கரே!

பிரியமுடன்.........வசந்த் on Wednesday, June 24, 2009 10:31:00 PM said...

//கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்ப்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கைநழுவிப் போகின்றன.//

தங்களுக்கு பிடித்தவை எனக்கும் பிடித்தது

மயாதி on Wednesday, June 24, 2009 10:38:00 PM said...

கேள்விப் படாத ஒருவரின் கவிதைகளையும் அவரையும் கேள்விப் பட வைத்ததுக்கு நன்றிகள்...

யாத்ரா on Thursday, June 25, 2009 12:43:00 AM said...

பகிர்வுக்கு நன்றி.

பட்டிக்காட்டான்.. on Thursday, June 25, 2009 3:52:00 AM said...

அனைத்தும் அருமை..

முதலாவது மட்டும் படித்த ஞாபகம்..

சங்கா on Thursday, June 25, 2009 8:01:00 AM said...

என்னைய்யா?, அநியாயத்துக்கு எல்லோரும் அடக்கமா இருக்கீங்க!, ரியலி, உங்கள் ரசனை அற்புதம்.கவிதையோட என்னோட அனுபவத்த எழுதலாம்னு முடிவு பண்ணீட்டேன். ஆனா அந்தப் பதிவுல ஒரு கவிதையும் இருக்காது!!!

SUMAZLA/சுமஜ்லா on Thursday, June 25, 2009 10:53:00 AM said...

பெண்மையின் அழகை ரசனையோடு அதே சமயம் விரசமில்லாமல் படம் பிடித்திருப்பது அழகு!

முரளிகண்ணன் on Thursday, June 25, 2009 11:18:00 AM said...

கலக்கல் தொகுப்பு சென்ஷி

கோபிநாத் on Thursday, June 25, 2009 6:05:00 PM said...

நல்ல பகிர்வு ;)

பாலாஜி on Thursday, June 25, 2009 6:55:00 PM said...

//ஏவாளின் கனியும் ஆதாமின் அறுவடையும்//


அழகு, வேறென்ன சொல்ல...

இங்கிலீஷ்காரன் on Thursday, June 25, 2009 7:11:00 PM said...

வெகுநேரம் நின்று வாங்கிய
ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.//

Good Lines Boss

இங்கிலீஷ்காரன் on Thursday, June 25, 2009 7:12:00 PM said...

அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.
தோழிகளற்ற
பின்வரிசையி லமர்ந்து
தெரியாமல் அழுவேன்.//

அருமையான சிந்தனை...

சென்ஷி on Thursday, June 25, 2009 11:04:00 PM said...

@ பிரியமுடன் வசந்த்...

:)

மிக்க நன்றி வசந்த்.. உங்களுக்கும் பிடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது!

@ மயாதி...

தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்படும் பெயர்களுள் இவருடையதும் உண்டு மயாதி!

@ யாத்ரா..

நன்றி யாத்ரா!

@ பட்டிக்காட்டான்..

நன்றி நண்பரே! அப்படியா. நான் இப்பொழுதுதான் தொகுப்பிலிருந்து வாசித்தேன்!

சென்ஷி on Thursday, June 25, 2009 11:07:00 PM said...

@ சங்கா..

உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன் நண்பரே!

@ சுமஜ்லா..

நன்றி திருமதி. சுமஜ்லா

@ முரளிகண்ணன்

நன்றி முரளிஜி!

@ கோபிநாத்

நன்றி மாப்பி!

@ பாலாஜி..

நன்றி நண்பரே!

@ இங்கிலீஷ்காரன்..

ஆம். வலிக்க வைக்கும் வரிகள்!

மகேஷ் on Friday, June 26, 2009 12:04:00 AM said...

சாட்டைக் வரிகள். பகிர்ந்தமைக்கு நன்றி... :)

சங்கா on Friday, June 26, 2009 11:02:00 AM said...

நண்பரே, முந்தைய பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி கவிதையுடன் என் அனுவத்தைப் பத்தி எழுதிட்டேன். படிச்சுப் பார்த்துக் கருத்து சொல்லுங்க. பதிவு @ http://wimpystar.blogspot.com/2009/06/blog-post_25.html
நன்றி!!!

சென்ஷி on Sunday, June 28, 2009 8:08:00 PM said...

@ மகேஷ்..

நன்றி மகேஷ்..

@ சங்கா..

நன்றி சங்கா.. தங்கள் பதிவை படித்தேன். :)

S.A. நவாஸுதீன் on Monday, June 29, 2009 2:32:00 PM said...

நல்ல பகிர்தல். எல்லாமே நல்லா இருக்கு சென்ஷி

குறிப்பாக இரண்டாவதும் நான்காவதும் ரொம்ப பிடிச்சிருந்தது

நேசமித்ரன் on Monday, June 29, 2009 7:51:00 PM said...

நல்ல பகிர்வு..
மீள்வாசிப்புக்கு தூண்டியதற்கு நன்றி !

SUMAZLA/சுமஜ்லா on Tuesday, June 30, 2009 1:31:00 PM said...

www.shenshe.tk மூலமாக வந்தேன்.
ஏற்கனவே பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

cheena (சீனா) on Wednesday, July 01, 2009 8:14:00 AM said...

அன்பின் சென்ஷி

கவிதைகள் வலிய கருத்துகளுடன் எழுதப்பட்டிருக்கின்றன. படிப்பவர் முகத்தில் / மனதில் பளீரென அறைகின்றன. மொத்தத்தில் நன்றாய் இருக்கிறது.

பல்கவிதைகளும் பல முத்தங்களும் காணாமல் போவது இயற்கை.

தெரு கடைசியிலா - முதலிலா - அவரவர் மனதினைப் பொறுத்தது.

சுகிர்த ராணியின் இரவு மிருகம் - இன்னும் படிக்க வில்லை - முயற்சிக்கிறேன்.

பகிர்ந்தமைக்கு நன்றி

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com