



சென்ற பதிவில் பாகச பொறுப்பை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு தலையின் கவிக்கூக்களை இட்டதன் வெற்றி புதியவர்களை பாகசவின் பக்கம் ஈர்த்து திருப்பியுள்ளது..
அந்த வெற்றி முரசின் அடையாளமாகவும் அடுத்த கட்டமாகவும்..
அந்த இதயத்தில் இன்னும் கவி(ஹை)க்கூக்களை மொத்தமாக தரவிறக்கி படித்து மகிழ இணைப்பு இதோ
மேலும் சில கவுஜ மாதிரிகள் தலயின் புகழை பரப்ப மாத்திரம் என்பதை அழுத்திச் சொல்லிக்கொள்கின்றேன் :)
உனக்கான
காத்திருப்புக்களிலெல்லாம்
ஏறிவிடும்
மனதின்வயது
உன்னை பார்த்தநிமிடத்திலேயே
குழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.
****
உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீஊதிக்கொடுத்த பலூன்
ஒரு இடத்தில் நிற்கமாட்டாமல்
அறையெங்கும் தள்ளாடியபடியே
வலம் வருகிறது.
***
சத்தமிடாமல்முத்தமிடத்தெரியாதா
என்று கோபப்படத்தெரிகிறது
உனக்கு
நம்ப மறுக்கும்காதுகளுக்கு
சத்தத்தைமட்டுமே
கொடுக்கத்தெரிந்திருக்கிறது எனக்கு.
***
இரவு நேரங்களில்
மொட்டைமாடிக்குவராதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
நட்சத்திரங்கள்
வெட்கித்தற்கொலை
செய்துகொள்கின்றன.
***
இலக்கணமாக நீ
இருக்கும் தைரியத்தில் தான்
உனைபேசும்கவிதைகள்
மரபுடைக்கின்றன.
*****
இந்த மாதிரி கவுஜைகளையும் தல எழுதிக்கொண்டு தான் இருந்தார். போதாத நேரத்தில் மூத்தப்பதிவராகிப்போன காரணங்களினால் கவுஜைகள் குறைந்து விட்டது. விதி வலியது!
இந்த இணைப்பில் இருக்கும் தல கவுஜைகள் படித்து தனியே பதிவெழுதி கலாய்ப்பவருக்கு உடனே பாகசவின் ஏதாவது ஒரு மாகாணத்தின் அல்லது மாநிலத்தின் தலைமைப்பொறுப்பு மற்றவரிடமிருந்து பிடுங்கியாவது தரப்படுமென்று இங்கு உறுதியளிக்கின்றேன்.
நன்றாக இருக்கிறது என்ற ஒற்றை வார்த்தையில் கலாய்த்துச்செல்பவருக்கு தலைக்கு அணிவிக்கப்பட்ட கோயிந்து கிரீடத்தில் உங்கள் முத்திரையையும் இடலாம்.
இப்படிக்கு
சென்ஷி
பாகச செயலாளர்
ஷார்ஜா, அமீரகம்




36 comments:
கவிதைகள்லாம் அழகா இருக்கு..
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!
///
ஒகே ஒகே i will follow :)
நமீ இங்க நான்தான் பஸ்ட்டு..
உனக்கான
பாதிசரக்கில்
ஏறிவிடும்
போதையானது
என் பங்கு சரக்கை
பார்த்து ஏளனம் செய்கிறது!
தாடி கவிதை சூப்பர்
உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீவாங்கி கொடுத்த
சரக்கைவிட நீ அடித்த
சரக்கு காஸ்ட்லியென்று
தெரிந்து கொண்டேன்.
வாந்திஎடுக்காமல்
சரக்கடிக்கதெரியாதா
என்று கோபப்படத்தெரிகிறது
உனக்கு
நம்ப மறுக்கும்கூமுட்டைகளுக்கு
வாந்தியை மட்டுமே
காட்டமுடிகிறது
நான் மப்பில் இருக்கிறேனென்று.
//அதிஷா said...
கவிதைகள்லாம் அழகா இருக்கு..//
அப்படியா!
தல எந்த ஃபாண்ட் யூஸ் செஞ்சுருப்பாருன்னு தெரியலையே :)
வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.
சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.
தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க
http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html
நண்பரே !!
உங்கள் தளத்தை( பிழை ஒன்றும் இல்லையே !!!) இது நமக்கு ஆகாது போல ... ஏன் அறிவிக்கு ஏதும் எட்ட வில்லை .. பிறகு நான் எதுவும் எழுத அது உங்கள் உண்மையான பதிவுக்கு உரியதாக இல்லாமல் போகுமோ என்று அஞ்சுகிறேன் ...
மற்றபடி மாங்காய் பச்சடி சூப்பர் !!!!!
நண்பரே !!
உங்கள் தளத்தை( பிழை ஒன்றும் இல்லையே !!!) பார்வை இட்டேன் ! இது நமக்கு ஆகாது போல ... ஏன் அறிவிக்கு ஏதும் எட்ட வில்லை .. பிறகு நான் எதுவும் எழுத அது உங்கள் உண்மையான பதிவுக்கு உரியதாக இல்லாமல் போகுமோ என்று அஞ்சுகிறேன் ...
மற்றபடி மாங்காய் பச்சடி சூப்பர் !!!!!
again one mistake in my comment :(
வால் பையனின் மப்பு சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர் :)
அதிஷா said...
நமீ இங்க நான்தான் பஸ்ட்டு..
//
கண்ணா யாரு மொதல வர்ராங்கனு முக்கியம் இல்லை என்ன சொல்லுறாங்க அதுதான் மேட்டரே... :)
//நமிதா..! said...
கண்ணா யாரு மொதல வர்ராங்கனு முக்கியம் இல்லை என்ன சொல்லுறாங்க அதுதான் மேட்டரே... :)//
நமீதாக்கா....உங்கள் சண்டைக்கு நடுவில் என் பெயரை வீணாக இழுக்க வேண்டாம். வீட்டில் குழப்பம் வருகிறது..
நமீதாக்கா....உங்கள் சண்டைக்கு நடுவில் என் பெயரை வீணாக இழுக்க வேண்டாம். வீட்டில் குழப்பம் வருகிறது..
//
விடு மச்சான் வீட்டுக்கு உண்மை ஒரு நாள் தெரியாமலா போயிட போகுது.. :)
\\ கண்ணா யாரு மொதல வர்ராங்கனு முக்கியம் இல்லை என்ன சொல்லுறாங்க அதுதான் மேட்டரே... :) \\
ஆமாமா அதான் மேட்டரு...
அப்புறம் நீங்க ஏன் நமீ என்னை பாலோயிங் நோ
அப்புறம் நீங்க ஏன் நமீ என்னை பாலோயிங் நோ
//
ஒகே ஒகே :)
நான் அங்கிட்டும் வரும் :)
இந்த வயசிலயும் என்னமா யோசிக்கிறீங்கப்பா...
சூப்பர்.
ஹி ஹி ஹி ஹி ....
எல்லா கவிதைகளும் நச்னு இருக்கு,சூப்பர்!!
:)
உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீஊதிக்கொடுத்த பலூன்
ஒரு இடத்தில் நிற்கமாட்டாமல்
அறையெங்கும் தள்ளாடியபடியே
வலம் வருகிறது.
***////
தள்ளாட்டம் சூப்பர்!!
சென்ஷி மே ஐ கம் இன் ?
:)
நாள் முழுவதும்
பிட்டிங் செய்கிறேன்
கட்டிங்குக்காக.
வாந்தி
காட்டிகொடுத்தது
மிக்ஸ்சிங்கில்
இலக்கண பிழை.
சரக்கடிப்பதன்
தீமைகளை
என்மனவியிடம் கேளுங்கள்
நன்மைகளை
என்னிடம் கேளுங்கள்.
அடிப்பது நீங்கள்
அழிவது நீங்கள்
திட்டுவது மட்டும்
என்னை
சரக்கு
குடிகாரன் பேச்சி
விடிந்தால் போச்சி
விடிவதற்கு முன்னே
சரக்கு அழைக்கிறது
அவப்பெயர் கூடாதென்று
-போதையுடன் பித்தன்
எல்லாமே அழகு.. நான் கவிதையை சொன்னேன்
எல்லா கவிதையும் அழகு..
/*நன்றாக இருக்கிறது என்ற ஒற்றை வார்த்தையில் கலாய்த்துச்செல்பவருக்கு */
எங்க ஊரில் 'நன்றாக இருக்கிறது' என்பது இரண்டு வார்த்தைகள் பினாவானா கவிஞர் சென்ஷி அவர்களே!
எனிவே நன்றாக இருக்கிறது.. :-)
குய்...குய்...குய்ய்ய்.
விசிலடிக்கரமுங்னோவ்..
சுட்டிக்கு நன்றி மாப்பி ;)
எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு
அழகுக் கவிதைகள்,
s u p e r
:)
Post a Comment