தல, அண்ணாச்சியின் அறிவை வியந்தபோது எடுத்த படம்!
இனி அண்ணாச்சி கி.பி. 2006ல் எழுதிய ஒரு பதிவிலிருந்து மீள்பதிவாக்கப்படும் ஒரு இலக்கிய மொக்கை!
@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$@#$
நட்சத்திரங்கள் கண்சிமிட்டுகின்றன - இது குறிப்பாக என்ன உணர்த்துகிறது? நிறைய விசயங்களை உணர்த்தினாலும் அடிப்படையாகக் காலத்தை அது பூடகமாகப் பதிவு செய்கிறது எந்த வகையில்? நட்சத்திரங்களை நாம் பகலில் பார்க்க முடிவதில்லை. எனவே காட்சி நடப்பது இரவில் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
காலத்தின் இருப்பை உறுதி செய்ததும், இன்னொரு விசயம் புலப்படுகிறது. அதுவும் காலம் சார்ந்த சூழல்தான். அதாவது நட்சத்திரங்கள் தென்படுகிறதென்றால், மேக மூட்டமில்லாத தெளிவான வானம் அந்த இரவுக்கு. இன்னமும் நுட்பமாக ஆராய்ந்தால், முழுநிலவற்ற தினமாக இருந்தால்தான் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதை தெளிவாக உணரமுடியும்.
பாருங்கள்!! இதுதான் அஞ்சல் நவீனத்துவத்தின் அருமை. ஒரு வரி எத்தனை விசயங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிற்து.அஞ்சல் அலுவலகத்தில் கடிதங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் காட்சியோடு ஒப்பிடும்போது அஞ்சல் நவீனத்துவம் எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது உங்களுக்கு எளிதாகப் புரிந்து விடும்.
ஆனால், இதோடு மட்டுமே காட்சி முடிவடைவதில்லை.
யாரோ ஒருவன் வானத்தைப் பார்க்கும்போதுதான் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதைப் பார்க்கிறான். அவன் எதற்காகப் பார்க்க வேண்டும்? இரவு நேரம் என்பதை ஏற்கெனவே உணர்ந்திருக்கிறோம். ஆக, இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றித்தான் கவிதை பேசுகிறது. ஏன் அது ஒருத்தியாக இருக்கக் கூடாதென்று கேட்டால் உங்களைப் பற்றி நான் என்ன சொல்வது நண்பரே?! ஒருத்தி என்றால் 'செல்வி' 'அரசி'வகையறாக்களைப் பார்ப்பதற்கே நேரமிருக்காதே..வானத்தைப் பார்க்க எங்கே நேரமிருக்கும். ஆகவே அது ஒருவன் தான் என்று உறுதியாக நம்புங்கள்.('ஆணாதிக்கவாதி' என்று எழும் குரல்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அடுத்த பத்திக்கு ஓடி வந்து விடுங்கள்)
இதோடு முடிந்து விடவில்லை. அவன் வானத்தை எங்கிருந்து பார்த்தான்? வீட்டின் சன்னல் வழியாகப் பார்த்திருப்பானா? அல்லது கதவு வழியாகப் பார்த்திருப்பானா? அல்லது மொட்டை மாடியில் இருந்து பார்த்திருப்பானா? இத்தனைக் கேள்விகளையும் ஒரே நேரத்தில் எழுப்புவதிலிருந்தே இந்தக் கவிதையின் படிமக் கட்டுமானம் இந்நேரத்துக்கு உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இத்தனை கேள்விகள் எழுந்தாலும், நுணுக்கமாக ஆராயும்போது இதில் முதலிரண்டு கேள்விகளுக்கும் சாத்தியமில்லை என்பது புலனாகிவிடும். வானத்து நட்சத்திரத்தை அவதானிக்கிற மனநிலையில் இருப்பவன் வீட்டிற்குள்ளிருந்து அதைச் செய்ய முடியுமா? வீட்டின் பிடுங்கல்களிலிருந்து வெளிவரும் மனிதனால்தான் வானம் என்று ஒன்றிருப்பதையே உணர முடியும். அவனால்தான் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க முடியும். (பாருங்கள். இங்கும் கூட பூடகமான வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு எளிய படிமமாகக் கவிதை உங்களையறியாமல் உங்களுக்குச் சொல்லி விடுகிறது)
ஆக, அந்த ஒருத்தன் வானத்தை நேரடியாகப் பார்க்கும் நிலையில் திறந்த வெளியொன்றில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதில் தடையில்லை. சரி, அந்தத் திறந்தவெளி மொட்டை மாடியாகத்தான் இருக்க வேண்டுமா? ஏன் ஒரு திறந்த சத்திரமாக இருக்கக் கூடாது?
(கேள்விகள்..கேள்விகள்.. கேள்விகள் - இதுதான் அ.ந வில் இலக்கை நோக்கிய பயணம்)
னில் நட்
சத்திரங்கள்
என்ற வார்த்தையை இங்கே அவதானித்தீர்களென்றால் கவிஞன் உங்களுக்கு அற்புதமான குறிப்பொன்றை நுட்ப வாசகன் மோப்பம் பிடித்து உணர்ந்து கொள்வதற்காக விட்டுச் சென்றிருப்பதை உணர முடியும் .ஆக, கவிதையின் இந்த வரிகளிலிருந்து சத்திரத்தில் இருக்கும் ஒரு மனிதனைத்தான் கவிதை குறிப்பால் உணர்த்துகிறதென்பதை உணர முடிகிறதல்லவா?
அப்படியானால், நாம் இதுவரை என்ன அறிந்திருக்கிறோம்?
இரவு நேரம்
அதிக
நிலவொளியில்லாத வானம்
திறந்த சத்திரத்தில்
படுத்திருக்கிறான்
ஒருவன்
வானம் பார்த்தவாறு.
என்று கவிதைக்குள் அடங்கிக் கிடக்கும் கவிதையை உணர்ந்து கொள்ள முடிகிறதா உங்களால்?! நாலு வரிகளில் இந்தக் கவிதை இதை மட்டும்தானா சொல்கிறது என்றால்.... இல்லை. இன்னமும் இருக்கிறது.
சத்திரத்தில் படுத்திருக்கும் ஒருவன் என்றால் அவன் எத்தகையவனாக இருக்கக் கூடும் என்ற உபகேள்வியை உங்களுக்குள் விதைக்கச் சொல்கிறது இந்தக் கவிதை - அஞ்சல் நவீனத்துவத்தின் இன்னொரு முகம்தான் இந்த உபகேள்விகள்.
ஆம். புத்திசாலிதான் நீங்கள். சத்திரத்தில் தங்குகிறவன் என்பதால் அவன் நிச்சயம் ஒரு பிச்சைக்காரனாகத்தான் இருக்கக் கூடும். பிச்சைக்காரன் வானத்து நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதை கவனிக்க நேரமிருக்கிறதென்றால் அவனுக்கு அன்று வயிறு நிறைந்திருக்கிறது என்றுதானே பொருள்? ஆக, வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுகின்றன என்ற ஒரே வாக்கியத்திலிருந்து வயிறார சாப்பிட்ட ஒரு பிச்சைக்காரனின் சித்திரத்தை அழகியலோடு படிம உத்தியால் சொல்லி, வாசகனை அவனது நுட்ப உணர்வுகளால் உந்தித்தள்ளி வானத்து நட்சத்திரத்தோடு முடிச்சு போடுவதில் விளிம்புநிலை மனிதர்கள் வயிறார சாப்பிடும்போதுதான் ஆகாயத்தில் விண்மீன்கள் கூட ஆனந்தமாய் கண்சிமிட்ட முடியுமென்ற சகோதரத்துவம் நிறைந்த சிந்தையை, மனிதம் தளும்பும் உணர்வை வெளிப்படுத்துகிறார் கவிஞர். இங்கேதான் அஞ்சல் நவீனத்துவம் அழகாய் தலைதூக்கி நிறகிறது.
ஆனால், இதோடு மட்டுமே நிறைவதில்லை இந்தக் கவிதை.
இன்னமும் உபகேள்விகளால் உந்தித் தள்ளப்படுவீர்களேயானால், கவிதை இன்னமும் உங்களைப் புதிய திசைகளுக்குள் அழைத்துச் செல்லும். புரியாத மனிதமனங்களின் பல்வேறு அடுக்குகளுக்குள் உங்களை அடுக்கி வைக்கும்.
எம்மாதிரி கேள்விகள் என திகைக்க அவசியமேயில்லை.
சத்திரம் என்றுதானே கவிதை கோடி காட்டியிருக்கிறது. எம்மாதிரியான சத்திரம் என்பது குறித்த எந்தக் குறிப்பையும் கவிதை வாசகனுக்கு ஊட்டவில்லை. எனவே, அது சிதிலமடைந்த கட்டிடமா அல்லது மேற்கூரை மட்டும் காலியான இடமா என்பது குறித்த ஊகங்களை வாசகனே அறிந்து கொள்ளலாம். வயிறு நிறைய சாப்பிட்டான் பிச்சைக்காரன் என்ற முடிவு மட்டுமே கவிதையால் உணர்த்தப்படுகிறது. எங்கே சாப்பிட்டிருப்பான், ஒரு இடத்திலா அல்லது பல இடங்களீல் சேர்த்த பிச்சையா என்ற உப கேள்விகள இன்னமும் எச்சமில்லாமல் மிச்சமிருக்கின்றன.
அடிப்படை சிந்தையும், அழகியல் உணர்வும், வார்த்தை நுணுக்கமும், உணர்த்தும் படிமங்களும், உணர்த்தாமல் விடும் செய்திகளும் தொக்கி நிற்கும் கவிதைகள் தாமாகவே அஞ்சல் நவீனத்துவத்தில் அழியா இடம் பெற்று விடுகின்றன. அத்தகைய ஒரு கவிதைதான் மேலே நான் சிலாகித்தது. அதுசரி!! இவ்வளவு சொல்லியும் இந்தக் கவிதையை எழுதிய மகாகவிஞன் யாராயிருக்கும் என்று சொல்லவேயில்லையே என்கிறீர்களா?
இவ்வளவு 'வெட்டி'யாக எழுதவும் சிந்திக்கவும் கவிம்டத்தலைவனை விட்டால் வேறு யார் இருக்க முடியும் இந்த உலகத்தில்? அடியேனின் அற்புத படைப்புதான் அடியேனே சிலாகித்த அந்தக் கவிதை.
இம்மாதிரி புதிய இசங்களை அறிமுகப்'படுத்து'கிறவர்களுக்கு 'ஏலாதி' விருது கிடைக்காவிட்டாலும், 'ஆவலாதி' விருதாவது கிடைக்குமா?
--- ஆசிப் மீரான் (அண்ணாச்சி)




31 comments:
:))
சிவராம் அண்ணா நேற்று சுந்தர் அண்ணா கவிதைக்கு...இன்று நீங்கள்.. எதிர் வினை?
பாகச மாதிரி அகச வும் ஆரம்பிச்சாச்சா? எதா இருந்தாலும் என்னையும் ஆட்டைல சேர்த்துகோங்க...
புரோபைல் போட்டோ மாத்தியாச்சு போல....
எனக்கு அந்த பழைய போட்டோதான் இதைவிடவும் நல்லா இருக்குன்னு தோணுது....
அன்பின் சென்ஷி,
:-)
பின்னிட்டீங்க. முடியல...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
”நீட்சி’யோ எதுவோ ஒண்ணு சொல்லுவாங்களே அதுவா இது?
அதாவது பைத்தியக்காரனின் சுந்தர்
பதிவின் நீட்ஷேவா...சாரி நீட்சியா?
தவறாத முதல் வருகைக்கு நன்றி ஆயில்யன் :)
#$#$#$#$#
இல்லை ஷரவ்.. சிவராம் பதிவு எழுதும் முன்பே நான் அண்ணாச்சியிடம் இப்பதிவை மீள் பதிவாக்க அனுமதி பெற்றிருந்தேன். :)
#$#$#$#$#
நீங்க இல்லாமலா கண்ணா.. நீ எங்கும் உண்டு எதிலும் உண்டு :)
புரோஃபைல் போட்டோ நாளை மறுநாள் மீண்டும் மாற்றிவிடுகிறேன் :)
#$#$#$#$#
அன்பின் சிவராம் அண்ணா! நீங்க எதுக்கு டென்சனாகி இருக்கீங்க. இப்ப கோவப்படுறதுக்கு :))
#$#$#$#$#
இல்லை ரவிஜி.. இது மூலம் :) கிபி 2006ல சும்மா கலாய்ச்சு அண்ணாச்சியால எழுதப்பட்டது. நேத்து வலையேத்த நினைச்சு வேணாமுன்னு விட்டு இன்னிக்கு ஏத்திடலாமுன்னு ஏத்திட்டேன்.
எல்லாத்திலயும் கட்டுடைப்பு இருக்கணுமுல்ல. என்ன நான் சொல்றது :)
//எல்லாத்திலயும் கட்டுடைப்பு இருக்கணுமுல்ல. என்ன நான் சொல்றது :)///
கட்டுடைப்பு கட்டுடைப்புன்னு சொல்லுறீங்களே அண்ணே அது எந்தவிதமான டைப்பு?
அல்லது ரொம்ப ஸ்ப்பீடா டைப்பு அடிக்கிற விசயமா????
தெரிந்துக்கொண்டே ஆகவேண்டுமென்ற ஆர்வத்தோடு,
ஆயில்யன்
//
கட்டுடைப்பு கட்டுடைப்புன்னு சொல்லுறீங்களே அண்ணே அது எந்தவிதமான டைப்பு?
அல்லது ரொம்ப ஸ்ப்பீடா டைப்பு அடிக்கிற விசயமா????//
இல்ல ஆயிலண்ணே. அது கேரள ஷ்பெசல் பீடி, கம்பெனி பேரு டைப்பு..
அதோட கட்ட உடைக்க போராடிக்கிட்டு இருக்கோம். ஒரு கை குறையுது வர்றீங்களா :)
//சென்ஷி said...
//
கட்டுடைப்பு கட்டுடைப்புன்னு சொல்லுறீங்களே அண்ணே அது எந்தவிதமான டைப்பு?
அல்லது ரொம்ப ஸ்ப்பீடா டைப்பு அடிக்கிற விசயமா????//
இல்ல ஆயிலண்ணே. அது கேரள ஷ்பெசல் பீடி, கம்பெனி பேரு டைப்பு..
அதோட கட்ட உடைக்க போராடிக்கிட்டு இருக்கோம். ஒரு கை குறையுது வர்றீங்களா :)///
வாரேன் கேரளவுக்கு! ஆனா பீடி கட்டு உடைக்க இல்ல :))))
இதுதான் அஞ்சல் நவீனத்துவமா...?
அண்ணாச்சி கலக்கிட்டீங்க...
அதுல பாருங்க... கேள்விகளை மனசுல அடுக்கிகிட்டே போனா இன்னும் ஒன்னும் தெளிவாகும்...
இன்றைக்கு நாம பார்க்குற நட்சத்திரம் பல கோடி வருஷங்களுக்கு முன்னால் மின்னிக் கொண்டிருப்பது. நாம் பார்க்கும் தருணத்தில் அது செத்துகூட போயிருக்கும். அதை அந்த பிச்சக்காரன் இப்போ பார்க்குறான்னு சொல்லும்போது அவன் முன்பொரு காலத்துல வாழ்க்கைல மின்னிகிட்டு இருந்தத நினைக்குறான்னு கூட எடுத்தக்கலாம் இல்லை...
எப்படி புதுசு புதுசா அர்த்தத்தை கண்டுபிடிப்போமில்லை....
ஹி.. ஹி...
சென்ஷிக்கு வாழ்த்துகள்
முடியல.
என்ன எழுதுவது என்றே புரியவில்லை!...
:)
அஞ்சல் நவினத்துல ஒரு பின் நவினத்துவம் பின்னிட்டீங்க
நல்ல படைப்பு
வாங்க இங்கே
http://ensaaral.blogspot.com/
//வாரேன் கேரளவுக்கு! ஆனா பீடி கட்டு உடைக்க இல்ல :))))//
சரி! அப்ப நீ விறகு உடைங்க சாமி :)
@ அயன் உலகம்
வாங்க மாப்ள! என்ன இந்த வருசத்துல ஸ்நேகாவுக்கு எத்தனை படம் கண்டிப்பா ரிலீசாகும்ன்னு கண்டுபிடிச்சியா இல்லையா.. ஏன்னா அவிங்களும் நட்சத்திரம்தானப்பூ :)
@ முரளிகண்ணன்.
அண்ணாச்சி எப்பவுமே இப்படித்தான். முடியற வேலைய செய்யவே மாட்டாரு!
நம்ம பதிவை மீள்பதிவு செய்யறத விட இப்படி மத்தவங்க பதிவை மீள்பதிவு செஞ்சா நல்லாவே இருக்குதுல்ல :))
// thevanmayam said...
என்ன எழுதுவது என்றே புரியவில்லை!...//
நல்லவேளை டாக்டர் சார்! இதையாவது எழுதிட்டீங்க. நான் முன்னாடி படிச்சுட்டு இதையே எழுதிடலாமுன்னு எழுதிட்டேன் :)
@ பாரி. அரசு..
நன்றி பாரி. அரசு ஜி ;))
@#@#@#@#@#@#@#@#@#@#@#@#
//தொடர்பவன் said...
அஞ்சல் நவினத்துல ஒரு பின் நவினத்துவம் பின்னிட்டீங்க//
இதோட முழுப்பாராட்டும் ஆசிப் அண்ணாச்சிக்கே உரித்தானது. ;)))
@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#
@ starjan
வந்து கண்டு பின்னூட்டிவிட்டேன் நண்பரே :)
இப்பவே கண்ண கட்டுதே :-)
// " உழவன் " " Uzhavan " said...
இப்பவே கண்ண கட்டுதே :-)//
:-)))
இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே!
:))
அதானே பாத்தேன் எங்க எளக்கிய வாதியாகி எங்களை காய விட்டுடுவிங்களோன்னு நினைச்சேன்.. :)
இல்ல இன்னும் அந்த சென்ஷி உசிரோடதான் இருக்குது...
hahahahahhaha... :))
@ தமிழன் கறுப்பி
எலேய் மாப்பி! இது அண்ணாச்சியோடதுலேய்.. மேலேந்து சரியா படிச்சு பாரு :)
அண்ணாச்சிக்கு ஓலை அனுப்பிட்டியா!!..மகனே உனக்கு சங்கு தான் ;))
யய்யா இங்க வந்தா யாரும் உயிரோட தப்பிச்சு போகமுடியாது போல இருக்கே...
:)
நல்லதொரு படைப்புக்குள் தெள்ளத்தெளிவான கட்டுரை யுத்தி கலந்திருப்பது படிப்பவரை கவர்ந்திழுக்கிறது. பாராட்டுக்கள்
Post a Comment