
கீழே உள்ள சில கேள்விகளுக்கு மாப்பி. கோபி சொன்ன பதில்கள். அதுக்கு கீழ நீல நிறத்துல இருக்குறது அவரு சொல்ல நினைச்சு சொல்லாம விட்ட பதில்கள்.
இன்னிக்கு (03-07-2009)பொறந்த நாளும் அதுவுமா பதிவுலகத்துக்கு அவரைப்பத்தின உண்மைய சொல்லலாமுன்னு யோசிச்சதால இந்த விளைவு இல்லைன்னா இடுகை எப்படி வேண்ணா வச்சுக்குங்க
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன்.
நல்லவேளை தாத்தா வாயில அந்த சமயத்துல வேற ஏதும் வராம (யு மீன் வாந்தி?!) போனதே.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும் கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும்.
டீக்கு அன்னிக்கு காசு கொடுறான்னு என்னைப் பார்த்துச் சொன்னதுக்கு ஓன்னு ஒப்பாரி வச்சதை மாப்பி சொல்லிடுவானோ?!
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்..
என்கிட்ட ஃபிரண்ட் ஷிப் வச்சிருக்குறவங்களையெல்லாம் கோவில் கட்டி கும்பிடத்தோணும். என்கிட்டல்லாம் நட்பாயிருக்காங்களேன்னு!
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)
குளிக்கப் பிடிக்குமான்னு கேள்வி கேட்டிருந்தா தெரிஞ்சுருக்கும் என்னைப் பத்தி..!!!!
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.
ஹார்ட்லதான் கொஞ்சம் ப்ராப்ளம். ஒரு பொண்ணுக்கிட்ட சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன். ரிட்டர்ன் என்ன வரும்ன்னு தான் தெரியலை?
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
அப்படி வரைமுறை எல்லாம் இல்ல
ஆமாம். அய்யனார், நான் ஆதவன், சென்ஷி எந்த படம் வாங்கி வச்சிருந்தாலும் வரைமுறை இல்லாம எடுத்துட்டு போறது வழக்கம்.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது ; எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல
காறித்துப்பும் போது எச்சில் மேல படலைன்னா ’க்க்க்க்காத்த்தூங்கற’ அந்த சத்தம் கூட பிடிக்கும்.
பிடிக்காதது : அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது
எச்சில் மேல பட்டுட்டா பிடிக்காது
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏமாற்றுவதை
ஆனா இப்பல்லாம் எவனுமே ஏமாற மாட்டேங்குறானுங்க.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.
இதுக்குத்தான் சரியா பதில் சொல்லியிருக்கேன். சாத்தான்தான்னு. பேய்ன்னு சொல்லியிருந்தா ஒழுங்கா இருந்திருக்குமோ. அவ பிசாசாச்சே.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்குறவன் நான்.
ஆபிஸ் போனாலும் அதையேத்தான் செய்யறேன்
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
பயணம்
ஆனா எந்த ஸ்டாப்பிங்க்ல அந்த பொண்ணு ஏறும்ன்னுதான் தெரியலை
பொறந்த நாள் வாழ்த்துக்கள்டா மாப்பி!
((புகைப்படத்தை உருவேற்றித்தந்த ஆயில்யனுக்கு கோடானு கோடி நன்றிகள்!!!))
அவனுக்காக ராஜாவின் இசையில ஒரு அதிரடி நட்புப்பாடல்.. பார்த்து மகிழுங்கள்.
....




51 comments:
பிறந்த நாள் வாழ்த்துகள் கோபி.
பிறந்தநாள் வாழ்த்துகள் கோபி :))))))))
பிறந்தநாள் வாழ்த்துகள் :))
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கோபி :))))))))))))))))
//இன்னிக்கு (03-07-2009)பொறந்த நாளும் அதுவுமா பதிவுலகத்துக்கு அவரைப்பத்தின உண்மைய சொல்லலாமுன்னு யோசிச்சதால இந்த விளைவு///
விளைவுகள் கலக்கல் :))
என்னம்மா யோசிச்சிறிக்கீங்க :)))))
கோபி மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கோபி!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி..
போட்டோ சூப்பர்...
(புள்ள என்ன பவ்யமா நிக்குது... அவ்வ்வ்வ்வ் !! இம்புட்டு நல்ல புள்ளையா..?!! அட அட அட..!! )
பொறந்த நாளும் அதுவுமா, பச்சப்புள்ளய இப்பிடித்தான் கலாய்க்கணும். பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எங்கண்ணன் என்னமா சோக்கா இருக்காரு பாருங்க. :-)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.
இந்த பதிவை போட்ட சென்ஷிண்ணனுக்கும் ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன். :-)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி!
கேள்வி பதில் நல்லாயிருக்கு...
கோபியண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துகள் கோபி :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
Great.. :))
Ingayum vaazththu sollikkaren... :))
இங்கயும் என்னோட வாழ்த்தை பதிவு செஞ்சுக்கறேன் கோபி.
எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைபிராத்திக்கறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//ஹார்ட்லதான் கொஞ்சம் ப்ராப்ளம். ஒரு பொண்ணுக்கிட்ட சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன். ரிட்டர்ன் என்ன வரும்ன்னு தான் தெரியலை?//
இதான் விஷயமா?? நல்ல இருங்க
புள்ள என்ன பவ்யமா நிக்குது... அவ்வ்வ்வ்வ் !! இம்புட்டு நல்ல புள்ளையா..?!! அட அட அட..!!
பிறந்த நாள் அதுவுமா பிள்ளைய இப்படியா கலாய்கிறது....
ஹேப்பி பர்த் டே தல
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி தங்கம்
பிறந்த நாள் வாழ்த்துகள் மாப்பி.... :)
:))
கோபி அண்ணே,
இனிய
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் கோபி!!
//32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
பயணம்
ஆனா எந்த ஸ்டாப்பிங்க்ல அந்த பொண்ணு ஏறும்ன்னுதான் தெரியலை//
;-))
கலக்கல் இடுகையிட்ட சென்ஷிக்கும் வாழ்த்துகள்!
பிறந்தநாள் கொண்டாடும் கோபிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
பிறந்தநாள் வாழ்த்தை வித்தியாசமாக வெளிப்படுத்திய சென்ஷிக்கு பாராட்டுக்ள்!
ha ha ha:):):) vilaivukal onnonnum summa nachunnu irukku:):):) supero super:):):)
happy birthday gopi anne:):):)
//டீக்கு அன்னிக்கு காசு கொடுறான்னு என்னைப் பார்த்துச் சொன்னதுக்கு ஓன்னு ஒப்பாரி வச்சதை மாப்பி சொல்லிடுவானோ?!//
//பிடித்தது ; எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல
காறித்துப்பும் போது எச்சில் மேல படலைன்னா ’க்க்க்க்காத்த்தூங்கற’ அந்த சத்தம் கூட பிடிக்கும்.
பிடிக்காதது : அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது
எச்சில் மேல பட்டுட்டா பிடிக்காது//
ha ha ha:):):) chancey illai:):):) supero super:):):)
பிறந்த நாள் வாழ்த்துகள் கோபி.
பிறந்தநாள்
கலாய்த்தல் நாளாயிருச்சே!
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
மாப்பி....நல்லாயிருடா ;))
வாழ்த்திய அனைவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;))
\\((புகைப்படத்தை உருவேற்றித்தந்த ஆயில்யனுக்கு கோடானு கோடி நன்றிகள்!!!))\\
ஆகா...அண்ணே...பின்னிட்டிங்க.. ஒரு நிமிஷம் பக்குன்னு இருந்துச்சி எனக்கு!!!! ;))
அந்த புகைப்படம்!!!!!
ஒன்னும் சொல்லிக்க முடியல...எதுவும் அடிக்க முடியமால் செய்திட்டிங்க மக்கா!! ;))
அது நிஜமாக இசை தெய்வத்தை பிராத்திக்கிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபிநாத்..
-ஆடுதுறையான்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கோபி!!!
அடடா ஒரு நிமிசம் அசந்து போயிட்டேன் கோபியா அது.. என்னா ஹைட் என்னா ஹைட்.. :)))
என்னா அடக்கம்.. :)
அம்மாட்ட சொன்னா நேரா பொண்ணுவீட்டுக்கு கொண்டுபோய் பஸ்ஸை நிறுத்திடுவாங்கப்போய்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி!!
அன்பின் கோபி
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
திரு கோபிநாத், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
தோழர் கோபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!!
வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு......!!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ;)
\\முத்துலெட்சுமி/muthuletchumi said...
அம்மாட்ட சொன்னா நேரா பொண்ணுவீட்டுக்கு கொண்டுபோய் பஸ்ஸை நிறுத்திடுவாங்கப்போய்..
\\
;;))))))))
கோபிக்கு வாழ்த்துகள்.!
எங்கலே என் பின்னூட்டம்?
தட்ஸ் ஓக்கே..
ஒன்ஸ் அகெய்ன் வாழ்த்துகள் கோபி..
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் கோபி. இன்னும் பல நல்லாண்டுகள் நல் வாழ்வு கண்டு வளமோடு வாழ
இறைவனை
வேண்டிக் கொள்ளுகிறேன்.
Thanks Senshi:)
வாழ்த்துக்கள் கோபி.
உங்கள் நட்புக்கு வாழ்த்துக்கள் ஷென்ஷி.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி!!!
(ரொம்ப லேட்ட்...டா விஷ் பண்றேனோ? ஆனாலும் அடுத்த பர்த் டேக்கு முன்னாடி வாழ்த்திட்டேங்க)
அழ வச்சிட்டீங்க சென்ஷி (கோபியையும்) நான் சிரிச்ச சிரிப்பில ஆபீஸ்ல கலீக்ஸ் ஏன் சூஷீ (இப்டித்தான் என் பேர கொல்லுவாங்க) வரும்போது கூட நல்லாதானே இருந்தேங்கிரா மாதிரி லுக்கு விடறாங்க.
ஆயில்யனையும் கண்டிப்பா பாராட்டியே ஆகணும்ங்க.
நண்பர் கோபிநாத்திற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இசைஞானிக்கு அருகில் இருப்பது தான் கோபியா?
இசை ஞானியை சந்தித்த அனுபவம் குறித்து பதிவு போட்டால் ரொம்ப நன்றாக இருக்கும்.
நான் போன விடுமுறையில் அவர் வீட்டுக்கு போய் இசைஞானி ஊருக்கு போனதால் வீட்டாரை மட்டும் பார்த்து வந்தேன்.அவர் வசிக்கும் இடமும் ஒரு கோவில் போன்றே இருந்தது.நல்ல போட்டோ
நண்பர் சென்ஷி நானும் ஷார்ஜாதான்.
நட்புக்கரம் கொடுப்போம்.
Post a Comment