
செந்தழல் ரவி ஆரம்பித்த சுவாரஸ்ய பதிவருக்கான விருதுத் தொடர் எனக்கும் ராப் அக்கா மூலம் கிடைத்துள்ளது. நன்றி ராப் அக்கா. இதன்மூலம் நானும் சுவாரஸ்யமான(!) பதிவர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இதுக்கு முன்னே எப்பவாச்சு! அப்ப என்னவாச்சுன்னுல்லாம் கேக்கப்படாது?!
விருதுகள் கிடைக்கும் சந்தோசத்தை விட அதைப் பகிர்வதில் அதிக மகிழ்ச்சி கிடைப்பதில் முதல் காரணம் எனக்கு பிடித்த பதிவர்களிடமிருந்து பெறப்போகும் புதிய இடுகைகளும், அவர்களைக் கவர்ந்த பதிவர் பற்றிய குறிப்புகளும்.
அவ்வகையில் என் மனம் கவர்ந்த பதிவர்களில் சிலரை மாத்திரம்தான் இங்கு தேர்ந்தெடுக்க முடிவது சற்று வருத்தம் தந்தாலும் இவர்கள் மூலமும் சங்கிலித்தொடர் நீளும் என்று நம்புகிறேன்.
1. பாலபாரதி : செல்லமாய் தல. வலையுலகில் எனது முதல் நண்பர், அண்ணன், வழிகாட்டி எல்லாமுமாய் இருப்பவர். இவருக்குப் பிடித்தமான பதிவுகளைப்பற்றிய அறிமுகம் வேண்டியும், பதிவர்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் இவருக்கு இவ்விருதினை அளிக்கின்றேன். இவரது பதிவில் உடனுக்குடன் அத்தனை இடுகைகளையும் படித்து விட்டாலும் விடுபட்டவைகள் என்ற தொகுப்பில் கிடைக்கும் செய்திகளின் நேர்த்திக்கு நான் ரசிகன்.
2. இளவஞ்சி: எந்த விசயமா இருந்தாலும் படிக்குறவன் பொடனியில செல்லமா தட்டி கைப்பிடிச்சு கூட்டிட்டு போவணும்ங்கறா மாதிரி இவரோட பதிவுகள் இரண்டு வரி படித்துவிட்டு பத்தி தாண்டிவிட முடியாத ஒரு வசீகரிப்பு தன்மை கொண்டவை. செல்லமாய் வலையுலக வாத்தி. இப்ப அதிகம் எழுதறதில்லை. வேலைப்பளு அதிகம் அப்படின்னு சொன்னாலும், வாத்தி மறுபடியும் பழைய்ய உற்சாகத்தோட எழுத ஆரம்பிக்கணும். அதுக்கு இந்த விருது ஒரு தொடக்கப்புள்ளியா இருந்தா அதை விட சந்தோசம் வேற எதுவும் கிடையாது எனக்கு. இவரது க.க. தொடர் படித்ததுண்டா!? ரங்கமணிகளாய் ப்ரமோசன் வாங்குவது எப்படி என்று விளக்கிச் சொல்லியிருப்பார். இந்த சமயங்களில்
3. அய்யனார்: இவரது எழுத்துக்களை விமர்சிக்க, ஆராதிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. வன்மமும் குரூரமும் சோகமும் குதூகுலமும் எதுவாயினும் அந்த சூழலை நமக்குள் கொண்டுவந்து நம்மை மிரளச்செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரது குறிப்பிடத்தகுந்த நண்பர்களின் பதிவுகளை நிச்சயம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இன்னுமொரு ரசிகன். இவரது உரையாடலினி இடுகை மீண்டும் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் உண்டு. உங்களை சுவாரஸ்யப்படுத்தும் எழுத்துக்களை எங்களுடன் பகிருங்கள் அய்யனார்.
4. வா. மணிகண்டன்: இலக்கியவாதி. வார்த்தைகளுடன் ரசனையையும் கோர்ப்பதில் வித்தகர். கவிதைப்பித்தர். நல்ல கவிதைகளை தேடித்தேடி படிப்பதும், எழுதுவதுமாக பதிவினை கொண்டு செல்பவர். சமூகக்கட்டுரை எழுதுவதிலும் வித்தகர். இவர் வாசிக்கும் சுவாரஸ்ய பதிவுகளை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைகிறது எனக்கு.
5. கே. ரவிஷங்கர்: கவிதை, கதை, ஹைக்கூ என்ற பலபடி பரிணாமங்கள் கொண்ட பதிவு கொண்டாலும் இவரது விமர்சனங்கள் பலராலும் விரும்பப்படுபவை. கிளிஷேத்தனங்களை கிழித்து விட்டு விமர்சிப்பது எனக்கு பிடித்திருந்தது. விமர்சனங்களில் சுட்டிக்காட்டும் குறிப்புகள் நிச்சயம் எனக்கு உபயோகமாய் இருக்கிறது. ஹைக்கூவிற்கு எழுதிய கட்டுரை போன்று கவிதைக்கும் காட்சிப்பொருள் அமைப்பதற்கும் ஒரு கட்டுரை எழுதினால் பயன் தரும்.
6. சங்கா: புதியவர். மோட்டு வளையை பார்த்து கிடைக்கும் மொக்கைகளை தொகுத்து ஏற்றுபவர். சுவாரஸ்யம் குன்றாமல் கதையையும் அனுபவங்களையும் கோர்த்து தருபவர். இவரது இசை விருப்பப்பாடல்கள் நல்ல தேர்வு. ரெகுலர் கஸ்டமர் என்ற பெயரில் என்னையும் ஜெகனாதனையும் விடாமல் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டிருப்பவர். பல பதிவுகளை தேடித்தேடி படித்து பின்னூட்டும் இனிய நண்பர்.




48 comments:
மீ தி கம்மிங்கு ஆப்டர் படிச்சிட்டு:):):)
இலக்கியவாதி, சமூக கட்டுரை எழுதவதில் வித்தகர் இது எல்லாம் கரெக்ட் தான். ஆனா நான் அடிக்கடி இப்ப கவிதை எழுதறது இல்ல :)-
Anyways, i thank you. :)-
டெரரான பதிவர்களை, பிரபல பதிவர்களை அழைத்திருக்கீங்க...
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி...!!!
வாழ்த்துக்கள் பிரபல பதிவரே...
@ ராப் அக்கா..
நன்றி முதல் வருகைக்கும் விருதுக்கும்!
@ மணிகண்டன்..
வா. மணிகண்டன் அப்படின்னதும் கரெக்டா வந்துட்டீங்க மணிகண்டன். நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.
தவறாய் எண்ண வேண்டாம். இது ”பேசலாம்” என்ற பதிவின் தலைப்பின் கீழ் எழுதும் என்னுடைய இன்னொரு நண்பருக்கான அழைப்பாக அமைந்துவிட்டது. நீங்களும் எழுதுங்களேன். பின்னூட்டத்தை சுவாரஸ்யப்படுத்துவதில் உங்களுக்கு நிகராய் இன்னொருவரை இனிமேல்தான் தேட வேண்டும் :))
@ செந்தழல் ரவி...
பிரபல பதிவர்கள்ன்னு யாரும் இருக்காங்களான்னு தெரியலை. எல்லாரும் இப்ப எழுதறதை குறைச்சுக்கிட்டு இருந்தாங்க. அதனால மறுக்கா அவங்களை கூப்பிடலாமுன்னுதான்.
நன்றி செந்தழல் விருதுக்கான வடிவமைப்பிற்கும் செயல்திட்டத்திற்கும்
@ பீர்..
நன்றி பிரபல பதிவரே..! :))
வாழ்த்துக்கள் சென்ஷி
இத்தகைய விருதுகள் வாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு தருபவைகளாய் இருப்பது
மகிழ்வுக்குரிய விடயம்
கொடுத்தவருக்கும் நீங்கள் கொடுப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்பாலிக்கா ரம்மு, ஜின்னு, விஸ்கி, பிராந்தி பேர்ல ஐடி ஓப்பன் செஞ்சுக்கிட்டு இருக்குற அனானியாவும் அலைஞ்சுட்டு இருக்கற நண்பர்களுக்கு...!
ஞாபகம் வச்சுக்கிட்டு இல்லை சேமிப்புல வச்சுருக்கறதுக்கு சந்தோசம்.. :)))
@ நேசமித்திரன்..
நன்றி தலைவா.. உங்களுடைய கவிதைகள் தனியாய் நிற்கும் அசத்தல் ரகம். :))
முதல் விருதை தலைக்கு கொடுத்து பா.க.ச வின் ஆயுட்கால உறுப்பினர் ஆகிட்டிங்களே தல!
எல்லாம் பெருந்தலைகளுக்கு விருது கொடுத்து இருக்கீங்க.. ;-))
// வால்பையன் said...
முதல் விருதை தலைக்கு கொடுத்து பா.க.ச வின் ஆயுட்கால உறுப்பினர் ஆகிட்டிங்களே தல!//
:)))
இல்லியா பின்ன... :)
நன்றி வால் அண்ணே!
//தமிழ் பிரியன் said...
எல்லாம் பெருந்தலைகளுக்கு விருது கொடுத்து இருக்கீங்க.. ;-))//
பெருந்தலைகளுக்கு விருது அயிட்டமெல்லாம் பொருந்தாதுங்க.. இது நட்பு ரீதியான சுழல். அம்புட்டுத்தேன் :))
நன்றிண்ணே!
அழகா பதிவர்களின் விவரங்கள் சேத்திருக்கே சென்ஷி..
வாழ்த்துக்கள்..குடுப்பது சந்தோசம் அதை அழகா செய்திருக்கிறாய்..
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அழகா பதிவர்களின் விவரங்கள் சேத்திருக்கே சென்ஷி..
வாழ்த்துக்கள்..குடுப்பது சந்தோசம் அதை அழகா செய்திருக்கிறாய்..//
நன்றி முத்தக்கா.. பிடிச்ச பதிவர்கள் பத்தி எழுதறது அவ்வளவு கஷ்டம் கிடையாதுன்னு தோணுச்சு :)
அவ்வ்வ்வ் நீங்களும் போட்டுட்டீங்களா???????
நான் தான் பாக்கி. சீக்கிரம் போட்டுறேன்.
பெரிய பெரிய தலைங்கல கூப்பிட்டுயிருக்கீங்க போல....
// ☀நான் ஆதவன்☀ said...
அவ்வ்வ்வ் நீங்களும் போட்டுட்டீங்களா???????
நான் தான் பாக்கி. சீக்கிரம் போட்டுறேன்.
பெரிய பெரிய தலைங்கல கூப்பிட்டுயிருக்கீங்க போல....//
வருகைக்கு நன்றி ஆதவா.. எல்லாம் பெரிய தலைங்க.. அவங்க என்ன விரும்பி படிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு ஒரு ஆசைதான் காரணம்..
யாரும் ரஜினியை கூப்பிட்டியா நீயின்னு சொல்லாம இருந்தா சரிதான் :))
சரி மாப்பி..!
குட் காம்பினேசன்.. :)
***
நீங்களும் எழுதுங்களேன். பின்னூட்டத்தை சுவாரஸ்யப்படுத்துவதில் உங்களுக்கு நிகராய் இன்னொருவரை இனிமேல்தான் தேட வேண்டும்
***
இவ்வளவு டிப்லமாடிக்கா பதிவு கேவலமா எழுதறேன்னு சொல்லி இருக்கவேண்டாம்:)-
தவறா எண்ணுவதற்கு என்ன இருக்கு ?
உங்க சாய்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. இந்த மணிகண்டன் பதிவு இப்ப தான் முதல்முறையா பார்க்கறேன். nice.
விருது கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள் சென்ஷி.
வாழ்த்துக்கள்... நானும் முதல்ல உங்களோட ஒரு பின் நவீனத்துவப் பதிவைப் படிச்சிட்டு பின்னங்கால் பிடரியில பட ஓடிட்டேன்.
நீங்க விருது கொடுத்தவங்கள்ல பாலபாரதி,அய்யனார்,ரவி சார் மட்டுமே பரிச்சயம்,,, மற்றவர்களைப் படிக்க வேண்டும்...
வாழ்த்துகள் தங்களுக்கும்
பெற்ற மற்றவருக்கும்.
வாழ்த்துக்கள்
விருது பெற்ற அனைவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்
விருது பெற்ற நண்பர்களுக்கும்
தங்களுக்கும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஒரு சந்தேகம். மணிகண்டன் இப்டி ஒரு பிளாக் வெச்சிருக்காரா???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........அதுவே தெரியாதே.
வாழ்த்துகள் சென்ஷி! தங்களிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! :-)
//இதன்மூலம் நானும் சுவாரஸ்யமான(!) பதிவர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது//
சொன்னதோட நிறுத்திக்காம, அடர்மௌனம் மாதிரி வார்த்தைகள் ஜாஸ்தி இல்லாத ஒரு ஜாலி பதிவ அப்பப்போ போடணும். எப்புடி:):):)
விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்:):):)
//
அவ்வகையில் என் மனம் கவர்ந்த பதிவர்களில் சிலரை மாத்திரம்தான் இங்கு தேர்ந்தெடுக்க முடிவது சற்று வருத்தம் தந்தாலும் இவர்கள் மூலமும் சங்கிலித்தொடர் நீளும் என்று நம்புகிறேன்//
இல்லைன்னா புதுசா இன்னொரு சங்கிலித் தொடர் ஆரம்பிச்சிடலாம் நோ கவலை:):):)
விருது பெற்ற பதிவுகளை மிக அழகாக சொல்லியிருக்கீங்க...:-)
//ரங்கமணிகளாய் ப்ரமோசன் வாங்குவது எப்படி என்று விளக்கிச் சொல்லியிருப்பார். இந்த சமயங்களில்//
அப்போ பொண்ணு பாத்தாச்சா? :):):)
//முதல் விருதை தலைக்கு கொடுத்து பா.க.ச வின் ஆயுட்கால உறுப்பினர் ஆகிட்டிங்களே தல!//
:):):)
என்கிட்டருந்து வாங்குனவங்கலத் தவிர மத்தவங்கல்லாம் பாக்கியசாலிங்க. பின்ன எல்லாரும் சூப்பரா சொல்றீங்க அவங்களப் பத்தி, நான் மட்டும்தான் இதுலயும் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆக்கிட்டேன்.
விருது கொடுத்த உங்களுக்கும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உங்களுக்கும்
விருது பெற்றவர்களை வாழ்த்த முடியாது, வணங்கத்தான் முடியும் பின்ன இம்புட்டு பெரிய தலைங்களையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் விருது கொடுத்து அசத்தியிருக்கீங்களே !!!!
நெஜமாகவே நீங்க சுவாரஸ்யம்.
அப்படிபோடு அருவாள!!! வாழ்த்துக்கள் சென்ஷி! உங்களுது interesting blog மட்டுமில்ல outstanding blog also! அண்ணன் சங்கா வேற இந்த ஆட்டத்திலயா? ஆஹா... இன்னொருபேட்டிரெடி பண்ணனும்போலிருக்கே??
நீங்க விருது கொடுத்திருக்கிற பாலபாரதி, இளவஞ்சி, அய்யனார், வா. மணிகண்டன், கே. ரவிஷங்கர், அண்ணன் சங்கா அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! முனியாண்டி விலாஸ்-ல சாப்பிட்ட எபெக்ட்லசொல்றேன்: உங்க செலக்ஷன் அற்புதமாதான் இருக்கும். இந்த விருது மூலமா இவங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
சென்ஷி,
விருதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
குங்குமம் பத்திரிக்கையில்
உங்கள் பதிவு பார்த்தீர்களா!
குங்குமம் (16-7-09) உங்க ப்ளாக் பத்திவந்திருக்கு.(senshikathalan.blogspot)விஷயம்:வெட்டிச்சிந்தனைகள்/பித்தளை
குங்குமம் பத்திரிக்கையில் வந்த சுவாரஸ்ய பதிவர் வாழ்க...........
அன்பர் சென்ஷி, நன்றி, மற்றும் வாழ்த்துகள் விருதுக்கும் குங்குமத்தில் வந்ததுக்கும்! சுவாரசியமான விருது பதிவு போட்டுட்டேன்! படிச்சுப் பாத்து சொல்லுங்க!
சென்ஷி,
நான் எயிதறத நிப்பாட்டுன ஒரே காரணத்துக்காக என் பதிவு சுவாரசியம்னு சொல்லி இப்புடி மானத்த வாங்கப்பிடாது!
ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றின்னேன்... :)
வாழ்த்துக்கள் சென்ஷி மற்றும் விருது பெற்ற அனைத்து பதிவர்களுக்கும்...
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
// செல்லமாய் வலையுலக வாத்தி. இப்ப அதிகம் எழுதறதில்லை.//
அதிகமா இல்ல தல
சுத்தமாவே எழுதுரதில்லை
// வேலைப்பளு அதிகம் அப்படின்னு சொன்னாலும், வாத்தி மறுபடியும் பழைய்ய உற்சாகத்தோட எழுத ஆரம்பிக்கணும்.//
இதுக்கு ஒரு ரிப்பீட்டு
@ தமிழன் கறுப்பி..
நன்றி மாப்பி!
@ நாகா
நன்றி நாகா
@ மணிகண்டன்.
சில பதிவுகள்ல உங்க பின்னூட்டம் படிச்சுட்டுத்தான் உங்க பதிவு பக்கமே நான் வந்தேன் நண்பா.. கோச்சுக்காதீங்க :)
@ சுசி..
மிக்க நன்றி சுசி
@ தமிழ்ப்பறவை..
அவ்வ்வ் போட வைக்கறீங்களே தலைவா.. எல்லோரும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாதவர்கள்தான் :)
@ அன்புடன் ஜமால்
நன்றி ஜமால்
@ ஆபிரகாம்..
நன்றி நண்பரே.
@ பிரியமுடன்.. வசந்த்.
நன்றி நண்பரே..
@ முனைவர் இரா. குணசீலன்..
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா..
@ கோபிநாத்..
நன்றி மாப்பி!
@ ராப்..
சுவாரசியமான கவிதைகள் நிறைய்ய கிடைக்கும் அங்கு..
@ சந்தனமுல்லை..
நன்றி சந்தனமுல்லை.
@ நவாசுதீன்
நன்றி நவாஸ்..
@ அமித்து அம்மா
நன்றிகள் அமித்து அம்மா
@ ஜெகனாதன்..
தங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழா..
@குடந்தை அன்புமணி
நன்றி நண்பரே..
@ கே.ரவிஷங்கர்..
இனிமையான செய்திகள் அண்ணே.. வாழ்த்திற்கு நன்றி.. உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் அன்றே படித்தேன். ஆனால் மறுமொழியிட முடியவில்லை. வேலைப்பளு அதிகம் :(
உங்கள் பதிவினை எதிர்பார்க்கின்றேன்.
@ செந்தழலார்..
அவ்வ்வ்வ்வ்வ்வ் :))) கவுக்குறியே தலைவா!
@ சங்கா..
:)))))) உங்களுக்கும் வாழ்த்துக்கள் சங்கா..
@ இளவஞ்சி..
ஆசானே! என்ன இது கொடுமை. நீங்க மறுக்கா எழுதி எங்களை இன்பக்கடல்ல மூழ்கடிக்கணும்னு கெஞ்சிக்கேட்டுக்கிட்டுருக்கோம் இப்படி சால்ஜாப்பு சொல்றீங்களே :)
@ திருமதி. மேனகா சத்யா
நன்றி திருமதி மேனகா சத்யா
@ உழவன்..
நன்றி அண்ணே
@ கார்த்தி..
உண்மைதான் கார்த்தி. வாத்தி மறுபடி எழுத ஆரம்பிச்சாகணும் :)
Post a Comment