பெயர் : ஆடியபாதம்
வகுப்பு: 1 அ
சிறப்பு: உயிரெழுத்து, மெய்யெழுத்து முதல் எண்களை எழுதுதல் வரைக் கற்றுக்கொடுத்தவர். யாரையும் அடித்துப் பார்த்தது இல்லை. ஆனால் தவறாது ஆசிரியருக்குரியவராக ஒரு பிரம்பு எப்பொழுதும் மேசையில் இருக்கும். இவர் உறங்கும் சமயங்கள் எங்களுக்கு சற்று பொழுது போகக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
இவரது மகள் வள்ளி டீச்சரிடம் மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றது சிறப்பான ஒன்று.
}{
பெயர்: மாணிக்கம்
வகுப்பு: 2 அ
சிறப்பு: மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிறுசேமிப்பு அட்டையை உருவாக்கியிருந்தார். 105 கட்டங்கள் கொண்ட சீட்டு அது. குறைந்த பட்ச கட்டணம் பத்து பைசா. 100 கட்டங்களுக்குள்ள பணமாக பத்து ரூபாய் கிடைக்கும். சீட்டு தொலைந்து போனால் அதற்கு தனியாக 50 பைசா கொடுத்து சீட்டின் நகல் கொண்டு புது சீட்டு பெற்றுக்கொள்ளலாம். நான் படித்த 5 வருடத்தில் நான்கு முறை இவரிடம் சீட்டு கட்டியதுண்டு. இரண்டு முறை சீட்டு தொலைந்த அனுபவமும் இருக்கிறது.
தண்டனை முறை: வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலின் இடையே மொத்தமான அவரது இங்க் பேனாவை வைத்து விரல்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு மாவாட்டுவது போல பேனாவை அசைப்பார். வலி உயிர் போகும். முதன்முதலில் குச்சியால் அடிக்காமல் வன்முறை அல்லது வலியை வேறு விதத்தில் அறியச்செய்தவர்.
குற்றம்: பள்ளிக்கூட பாடங்களை ஒழுங்காக செய்யாதது முதல் நண்பர்களுடன் விளையாட்டுச் சண்டை இழுப்பது வரையிலான குற்றங்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைத்திருக்கிறது.
}{
பெயர்: தண்டாயுதபாணி
வகுப்பு: 3 அ
சிறப்பு: சிரித்த முகம். எப்பொழுது இவரது நினைவுகள் வந்தாலும் இவரது புன்னகை மாத்திரம்தான் மனதில் பசுமையாய் தங்கியிருக்கிறது. மாணவர்கள் எத்தனை சிரமம் கொடுத்தாலும் மூங்கில் பிரம்பை மேசையில் தட்டுவதை மாத்திரமே பழக்கமாய் கொண்டவர். மாணவர்களை அடிக்காமல் இருந்ததாலேயே மனதில் நெருக்கமாகியவர்.
பள்ளியில் பணி புரிந்த நினைவாய் பிரிவுபசாரத்தில் பள்ளிக்காக இவர் வழங்கிய மணி அடிக்கும் கனமான வெண்கல(?!)த் தட்டு எங்களுக்கு பிடித்தமான ஒன்று. அதற்கு பின்பு தண்டவாள இரும்பு பாளத்தில் டொங்கு டொங்கென்ன்ற சத்தம் தீர்ந்து போய் இனிமையான இசையாக இருந்தது.
}{
பெயர்: கண்ணன்
வகுப்பு: 4 அ
சிறப்பு: இவரும் சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். மாணிக்கம் வாத்தியார் சிறு அளவில் என்றால் இவரது அதை விட சற்றுப் பெரிது. குறைந்த பட்சம் 50 பைசா. ஆஜானுபாகுவான உடலமைப்பு கொண்ட இவரை கண்டு நிறைய்ய பயந்தது உண்டு.
தண்டனை முறை: பள்ளிக்கூடத்தின் கூரையை தாங்கிக்கொண்டிருக்கும் மூங்கில் சாரத்தில் தொங்க விட்டு கோடு போட பயன்படுத்தப்படும் கறுப்பு ரூலர் தடியால் முட்டிக்கு பின் பக்கம் ஆடுகால் சதையில் அடிப்பார். இது பள்ளிக்கூடத்தில் நான் வாங்கிய அதிக பட்ச தண்டனை.
குற்றம்: பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு நாகப்பழம், எலந்த பழம் தேடிச் செல்வது. மற்றவரின் தோட்டத்தில் அனுமதியின்றி புகுந்து பழங்களை பறித்து ஓடியது. பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் வாய்க்காலில் மீன் பிடிக்க சென்றது. வகுப்புகளை முற்றிலுமாய் புறக்கணித்தது. தனியே சுற்றுவதில் இன்பமில்லையென்று துணைக்கு ஜாகிரையும் ரமேஷையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சுற்றியது. வீட்டில் தண்டித்தலில் திருந்தாத ஜென்மமென்று முடிவு செய்ததால் கிடைத்த தண்டனை இது.
o0o
பெயர்: சரஸ்வதி
வகுப்பு: 4 ஆ
சிறப்பு: என்னுடைய இன்னொரு அம்மா.
ஸார், டீச்சர்ன்னாலே அடிப்பாங்கங்கற நினைப்பை அடிக்காம மாத்தினவங்க. வகுப்பு முடியும் அரைமணி நேரம் முன்னாடி மாணவர்களை ஏதும் கதை சொல்ல சொல்லி அதை எல்லோரையும் கேக்க வைப்பாங்க. பெரும்பாலும் தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகளை சிறுவர் மலரில் படிச்சுடறதால அதை அப்படியே ஒப்பிச்சுட்டு போயிருக்கேன். எங்க குழுமத்துல இருந்த ஏழு நண்பர்களை அறுந்த வால்கள்ன்னு பட்டம் வைச்சு கூப்பிட்டிருக்காங்க.
அரசு பணி காரணமா கண்ணன் சார் அதிகமா சுற்றுலா போயிடுறதால ரெண்டு வகுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய சூழல் வந்தது. அது எங்களோட பொற்காலம்.
’ஏண்டா என் உயிரை வாங்குறீங்க!’ பிள்ளைகள் ஏதேனும் அதிகம் சப்தம், சச்சரவு போடும்போது சொல்லும் வார்த்தைகள். படிக்கின்ற அத்தனை பேரையும் ஆசிரியர்கள் பொறுப்பில் வைத்துக்கொள்வதாக நினைக்கும் பெற்றோரிடையே இன்னொரு தாயாக அத்தனை பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக பாடம் சொல்லிக்கொடுத்து வளர்த்தவர்.
பள்ளி முடிந்த பிறகும் தெருவில் படித்த மாணவ, மாணவிகளை கண்டால் நின்று இரண்டு வார்த்தை நலம் விசாரிக்கும் பழக்கம் இன்னும் இவரிடமிருந்து விடுபடவில்லை.
தனிப்பட்ட விதத்தில் என்னை ஒவ்வொரு இடத்திலும் நேர்த்தியாக்க நினைத்தவர். அவர் விருப்பப்பட்ட விதத்தில் நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய எல்லா உயரங்களிலும் இவருடைய ஆசிகளும் இணைந்துதான் வருகிறது. என்னிடம் சின்னச்சின்ன விசயங்களில் உணர்ச்சி வசப்படக்கூடிய பழக்கம் மாத்திரம் இவரால் மாற்ற முடியவில்லை.
நான் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களுள் மிக முக்கியமானவர் சரஸ்வதி டீச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர். குடும்பத்தில் ஒருவனாக நினைத்து பழகியவர்களை அத்தனை சீக்கிரம் என்னால் மறக்க இயலாது. இப்பொழுது வலையுலகம் விரிந்து விட்ட சூழலில் எங்கேனும் இதை அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ வாசித்தால் அவரது ஆசிர்வாதங்களுக்காக இன்னும் ஒரு மாணவன் இருக்கின்றான் என்பதை தெரியப்படுத்தி விடுங்கள்.
}{
பெயர்: நமச்சிவாயம் (தலைமை ஆசிரியர்)
வகுப்பு: 5 அ
சிறப்பு: வீட்டுப் பாடங்களை பள்ளியில் அமர்ந்து உடனுக்குடன் செய்வதில் விருப்பமற்றவர். வீட்டில் சென்று பொறுமையாக அமர்ந்து எழுத வேண்டும் என்ற அறிவுரை எங்களுக்கு எப்பொழுதும் எட்டியதில்லை. தலைமையாசிரியரின் வகுப்பில் படித்ததால் மற்றவர்களுக்கு இல்லாத சில சிறப்புகள் மாணவர்களாய் எங்களுக்கு கிடைத்தது. தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழையலாம். அறையை ஒட்டியுள்ள மாடிப்படியின் அறையின் சாவி எங்களிடம் இருந்தது. எங்களது பொழுது போக்கவும், அலங்காரப்பொருட்கள் சேகரிக்கும் களஞ்சியமாக அது இருந்தது.
தண்டனை: காதை பிடித்து திருகுவது மாத்திரமே. அதிகம் கோபம் கொண்டால் தோப்புக்கரணம் அல்லது முட்டி போட சொல்வது உண்டு.
குற்றம்: பக்கத்து வகுப்புப் பெண்களை கேலி செய்தல், சில்லுக்கோடு எனப்படும் விளையாட்டில் குறுக்கில் புகுந்து கோட்டை அழித்தல் அல்லது சில்லுக்கல்லை தூக்கி ஓடி விடுதல்.
}{
பள்ளிக்கூடத்தில் சமையல் மேற்பார்வையாளராக இருந்தவரின் பெயர் ஞாபகம் வரவில்லை.
எனது நண்பனான கிருஷ்ணனை தினமும் மதியம் பாட்டு பாடச்சொல்லி ரசிப்பார். அதிக முறை கேட்டு ரசித்த பாடல் என்றெல்லாம் இல்லை. ஒரே பாடல்தான் பாட சொல்லி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பார். அது “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே”
}{
நினைவுகள் சேகரித்து வைத்திருப்பதில் என்ன சந்தோசமென்று தெரியவில்லை. இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது.
தொடர்பதிவாக இதை எழுத அழைத்த நண்பர் தமிழ்பிரியனுக்கு என் நன்றிகள்.
எனது வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்தமைக்காக தனியாக இவரை நன்றி கூற நினைத்திருந்தேன். நன்றி கூறுதலையும் இந்த இடுகையில் சேர்த்துக்கொள்கின்றேன். மிக்க நன்றி நண்பா!
Tuesday, July 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)




43 comments:
பால்யத்தின் வீதிகளில் மீண்டும் ஒரு உலா வர உதவினீர்கள்
மிக்க நன்றி
நினைவின் தாழ்வாரங்களில் சாரல் வரச் செய்கிறது சில வரிகள் கிளர்த்தும்
முகங்கள்
கலக்கிவிட்டீர்கள் குருவே.
எப்படி?நல்ல எழுத்து ஆளுமை.
வாழ்த்துக்கள்.
ஒட்டு போட்டாச்சு.
போதுமாங்க இல்லை வேறு யாராவது மீதி இருக்கிறார்களா..:))
இருந்தாலும் எல்லோரையும் நியாபகம் வச்சி சொல்லி இருக்கீங்க பாருங்க அங்க தான் நீங்க நிக்குறிங்க தல..
//பால்யத்தின் வீதிகளில் மீண்டும் ஒரு உலா வர உதவினீர்கள்
மிக்க நன்றி
நினைவின் தாழ்வாரங்களில் சாரல் வரச் செய்கிறது சில வரிகள் கிளர்த்தும்
முகங்கள்//
பாருங்க இப்டிப்பட்ட நல்ல வார்த்தைகளால் புகழுற அளவுல இருக்கு உங்க நினைவுகள்:):):)
//முதன்முதலில் குச்சியால் அடிக்காமல் வன்முறை அல்லது வலியை வேறு விதத்தில் அறியச்செய்தவர்//
எங்க ஸ்கூல்ல இதைவிட கொடூரமா ஒரு மிஸ் தண்டிப்பாங்க. அது என்னன்னா, வகுப்பறை மேடையில் ஏத்திவிட்டு இங்கிலிபீஸ்ல டாக்க சொல்றது, இல்லைன்னா எங்கள பாடவிட்டு எங்களையே கேக்கவேச்சு சாவடிக்குறதுன்னு செம டெர்ரரான தண்டனைகளா கொடுப்பாங்க:):):)
சைனாவுல கொடுக்குற நூதன தண்டனைகளைப் பட்டியல் போடுறதாட்டம் சூப்பரா ஒவ்வொரு ஆசிரியரையும் அவர்தம் தண்டனை முறைகளையும் வரிசைப்படுத்திருக்கீங்க:):):)
கலக்கல் நினைவுகள்:):):)
சீக்கிரமே சரஸ்வதி டீச்சரிடம் நேரில் ஆசி வாங்க வாழ்த்துக்கள்:):):)
அசத்தல் சென்ஷி.
//நினைவுகள் சேகரித்து வைத்திருப்பதில் என்ன சந்தோசமென்று தெரியவில்லை. இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது.//
இத மறுபடி மறுபடி படிக்க வச்சிட்டீங்க.
அருமையான எழுத்து நடை , என் பள்ளி ஞாபகங்களை கிளறி விட்டீர்கள்.
;)))
அழகுடன் கூடிய அருமையான மலரும் நினைவுகள்....!!! நல்ல பதிவு....!!!
ஆனா.... !! 5 வதுக்கு மேல தான சேட்டையே ஆரம்பிக்கும்...!! அதையும் எழுதுங்க தலைவரே....!!!!
ஆவலுடன்....
லவ்டேல் மேடி........
ஆடுதுறையா --- நான் குத்தாலத்தில் தான் இருந்தேன். படித்தது மயிலையில்(லும்).
நல்ல ஞாபங்கள். படிக்கையில் மனம் தானா தேடுகிறது ஞாபக சில்களில் ஏதேனும் பெயர்கள் தென்படுகிறதாவென்று.
அருமை நண்பரே!
பள்ளி நினைவுகள் அருமை. எனக்கு என் தொடக்கப் பள்ளி நினைவுகள் இருக்கிறதா தெரியலை. நிரடிப் பார்க்கணும். தண்டனை முறைகளைப் படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. இது என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பில் நடந்தது. ஆசிரியர் ஒரு பாதிரியார். சுலபத்துல கோபப்படமாட்டார். பட்டுட்டாருன்னா, அவரோட முறை இரண்டு விரல்களை(பெருவிரல், ஆட்காட்டி விரல்) வைத்துக் காது நுனியை அழுத்துவது. முதல்ல வலிக்”காது”. வலி கொஞ்சம் கொஞ்சமா கூட... 16 17 வயசுங்கறதால அழ முடியாம அது மிகப்பெரிய பெரிய வலி!
மத்தபடி சில ஆசிரியர்கள் என்னோட போர்ட்ரெய்ட்ல வருவாங்க!
பள்ளி நினைவுகளென்றாலே இனிக்கும் விஷயம்தானே.. ஒவ்வொரு ஆசிரியரையும் நினைவு கூர்ந்த விதம் அருமை..
ஆசிரியர்களென்பவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் நீங்காமல் இடம் பெறுபவரென்பது இப்போதிருக்கும் ஆசிரியர்களுக்குப் புரிய மாட்டேனென்கிறது..
அந்நாளைய ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவே வாழ்ந்தார்கள். இப்போதெல்லாம் வெறும் ஆசிரியர்களாக வேலை தான் பார்க்கிறார்கள்..
அருமை ..ரொம்ப நல்லா எழுதிஇருக்கீங்க... வாழ்த்துக்கள்
//சுசி on Wednesday, July 22, 2009 1:44:00 AM said...
அசத்தல் சென்ஷி.
//நினைவுகள் சேகரித்து வைத்திருப்பதில் என்ன சந்தோசமென்று தெரியவில்லை. இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது.//
இத மறுபடி மறுபடி படிக்க வச்சிட்டீங்//
ஏன் புரியலையா?
நல்லாயிருக்கு தல :))
:-))))))
//பெயர்: சரஸ்வதி
வகுப்பு: 4 ஆ
சிறப்பு: என்னுடைய இன்னொரு அம்மா.//
இங்க தான் சென்ஷியோட சிறப்பு தெரியுது!
இத்தனை சேட்டையா சென்ஷி :))
அழகானதொரு தொகுப்பு சென்ஷி!!
டெம்ப்ளேட் நல்லாருக்கு! :-)
@ நேசமித்ரன்...
தொடர்ந்த வாசிப்பிற்கும் தவறாத கருத்துக்கும் நன்றி நேச மித்ரா!
பின்னூட்டத்திலும் கவித்துவத்தை மிளிரச்செய்யும் பாங்கு அசத்த வைக்கிறது.
@ அன்பின் சென்ஷி
நெகிழ்ச்சியா இருக்கு நண்பா. வார்த்தைகள்ல நினைவுகள் மிதக்குது :-)
@ அன்பின் தமிழ்பிரியன்
டெம்பிளேட் அழகா, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு, சென்ஷி மாதிரியே...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
@ கார்த்திக்கேயன்..
நன்றி கார்த்திக்கேயன்.
@ வினோத் கவுதம்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொண்டாடும் நாயகருக்கு நன்றிகள்
@ ராப்..
அவர் எழுத்தில் வடிக்கும்போது வார்த்தைகளும் சிறப்பாய் இருப்பது தனித்து தெரிகிறது. நன்றி அக்கா!
@ சுசி..
மிக்க நன்றி சுசி..
@ சின்ன அம்மிணி..
நன்றி அக்கா. நீங்களும் தொடரலாமே!
@ கோபிநாத்..
நன்றி கோபி!
@ லவ்டேல் மேடி..
:)) சரி தலைவா!
@ நட்புடன் ஜமால்..
:)) தங்களின் ஞாபகப்படிமங்களையும் எழுத்தில் காண ஆசை நண்பரே!
@ சங்கா..
:) போர்ட்ரெய்டை எதிர்பார்க்கும் ரெகுலர் கஸ்டமரில் ஒருவன்
@ சீமாச்சு..
நீங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். எனக்கு பள்ளியில் ஆசிரியர்களிடம் பழக்கம் இருந்த அளவுக்கு கல்லூரியில் இல்லை. அதிகம் வளர்ந்து விட்டதாலோ என்னமோ :)
நல்ல பகிர்வு சென்ஷி! எல்லாரையும் நினைவு வெச்சு எழுதியிருக்கீங்க பாருங்க, அதுக்கே ஆசிரிய சமுதாயம் உங்களுக்கு கடமை பட்டிருக்கு! கடவுளும் ஆசிரியரும் ஒண்ணுங்கிறது உண்மைதான் போலிருக்கு! உங்க ஆசிரியர்கள் பெயர் எல்லாமே (மாணிக்கம் கூட)கடவுள் பெயர்களா அமைஞ்சிருக்கிறது ஆச்சர்யம்!!! உங்கள் குற்றப்பத்திரிக்கை என் பால்யத்தை நினைவூட்டுகிறது. நன்றியும் வாழ்த்துக்களும்!
இவ்வளவு நடந்திருக்கிரதே....
@ சுந்தர்ஜி..
மிக்க நன்றி அண்ணா..
@ நான் ஆதவன்..
நன்றி ஆதவன்..
@ ஸ்ரீமதி..
நன்றி ஸ்ரீமதி!
@ வால்பையன்.
நன்றி தலைவரே!
@ முத்துக்கா..
உங்கள் பதிவிற்காகவும் காத்திருக்கிறேன்!
@ சந்தனமுல்லை..
நன்றி சந்தனமுல்லை. தமிழ்பிரியனுக்கு வாழ்த்துக்கள் உரியதாகிறது.
@ பைத்தியக்காரன்..
மிக்க நன்றி சிவராம் அண்ணா..
@ ஜெகநாதன்..
நன்றி தலைவா! நீங்கள் குறிப்பிட்டபிறகுதான் அந்த ஒற்றுமையை கண்டேன்.
@ சந்ரு..
:)) ஆம் நண்பா!
கெய்யால.. கைய்ய குடுய்யா முதல்ல.
டைப் பண்ணியிருக்க பாரு, அதுக்குதான்!
பள்ளி நினைவுகளை, வாத்தியார் நினைவுகளாகிட்ட..
அருமைய்யா.. அரும..
ஆகா... பள்ளிக்கூட வயசுல இப்படித்தான் இருக்கனும், இருந்திருக்கனும். இல்லன்னா அந்த பால்யம் என்பது வேஸ்ட். யு ஆர் ய பெஸ்ட்.
ஆமா, நீங்க குத்தாலமா. நான் மயிலாடுதுறை.
உங்கள் பள்ளி அனுபவம் ரொம்ப சூப்பர்
ரொம்பவும் நெகிழ்ச்சியா இருந்தது இந்தப் பதிவை படித்தபின்பு
எவ்வளவு அழகாக ஞாபகங்களை வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள்.
நினைவுகள் சேகரித்து வைத்திருப்பதில் என்ன சந்தோசமென்று தெரியவில்லை. இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது. //
நிஜம் நிஜம் நிஜம்
சூப்பர் தல..!
You studied in KGS? I studied in KGS Hr. Sec school till +12 till 1989. Interesting.
பழச மறக்காத மனசு......வாழ்த்துக்கள்
//பெயர்: சரஸ்வதி
வகுப்பு: 4 ஆ
//
பெயர் சொல்கிறதே... கல்வி கடவுள் என்று.
அருமை.
---
ஆசிரியரின் பெயர்களைக் கூட ஞாபகம் வைத்திருப்பது வியப்பாய் உள்ளது. எனக்குஅந்த அளவுக்கு ஞாபகம் இல்லை தொடக்கப்பள்ளி பற்றி.
---
இந்த டெம்ப்லேட் சூப்பர். மேலே இருக்கும் மெனு கூட அருமையாய் அமைக்கப்பட்டுப்பது ஆச்சர்யம்.
---
கலக்குங்க.
@ கலையரசன்..
மிக்க நன்றி மாப்ள!
@ பாலாஜி..
இல்லை நான் ஆடுதுறை. தங்கள் மறுமொழி கண்டதில் ஆனந்தம்.
@ ஸ்டார்ஜன்..
ரொம்ப நன்றி தலைவா!
@ அமித்து அம்மா..
மறுமொழிக்கு மிக்க நன்றி அமித்து அம்மா
@ நாகா..
நன்றி மாம்ஸ்!
@ சௌரி..
நீங்க எனக்கு சூப்பர் சூப்பர் சீனியர் போல :)
நான் 1989 ல நாலாப்பு தான் படிச்சுட்டு இருந்தேன் :)
@ இஸ்மத்..
நன்றி அண்ணே!
@ சங்கர் தியாகராஜன்.
உண்மைதான் சங்கர். என்னைப் பொறுத்தவரை அவர் கல்விக்கடவுள்தான்.
@ எவனோ ஒருவன்.
எல்லா ஆசிரியரையும் தினமும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருந்தது. சட்டென்று ஏதேனும் ஒரு விதத்தில் இவர்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு அதிகம் எனக்கு கிடைத்தது.
டெம்ப்ளேட் வடிவமைப்பில் முழுமையான பாராட்டும் தமிழ் பிரியனைத்தான் சேரும். முழுக்க முழுக்க அவரது கை வண்ணம் தான் :)
மாப்பி இவ்வளவு விசயங்களை நினைவுல வச்சிருக்கிறதே பெரிய விசயம்..
எனக்கிந்த பதிவு பிடிச்சிருக்கு!
//இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது.//
ம்ம்ம்...
\\
தமிழ்பிரியனுக்கு என் நன்றிகள்.
எனது வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்தமைக்காக தனியாக இவரை நன்றி கூற நினைத்திருந்தேன்.
\\
இவர்தான் தொழில் நுட்ப வல்லுநர் ஆச்சே.. :)
Hi, Which year y r study in K.G.S. I'm also K.G.S student.
Najim
சரஸ்வதி டீச்சர்ப் பற்றிய நினைவுகள்
மனதை நெகிழ செய்த்தது.
சரஸ்வதி டீச்சரின் ஆசிர்வாதம்
நிச்சியம் உண்டு.
பள்ளிப் பருவம் மறுபடியும்
வருமாஎன்று எல்லோருக்கும் ஒரு
ஏக்கம் இருக்கும்,இந்த வாக்கியம் அதை
நினைவுபடுத்தும்.
//சந்தோசமும் இப்போதைய வாழ்வுபற்றிய அலுப்பும் மாத்திரம் தான்
மிஞ்சுகிறது.//
நானும் ஆடுதுறை ஸ்கூலில்தான் முஉன்றாம் வகுப்பு வரை படிச்சேன். எனக்கு கண்ணன் ஆசிரியர் மட்டும் தெரியும். வுங்கள் பெயர் என்ன.
Post a Comment