எல்லாவற்றையும் துற என்று ஒரு குரு சொல்லக்கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தானாம். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க ‘எலி’ என்று பதில் சொன்னானாம் துறந்தவன். அதற்காக ஒரே ஒரு பூனை வளர் என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியை கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார் ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே என்று பசு மாட்டை தானமாக அளித்தார்கள். மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக நிலத்தைக் கொடுத்தார்கள். நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம்.. குரு மறுபடி சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று.. குரு வினவினார், “எதற்காக அப்பனே இதெல்லாம்?” என்றார். “சுவாமி எல்லாம் ஒரு கோவணத்துக்காக, என்றான் சிஷ்யன்...
பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை.
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
தூங்கும் முன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
கதைகேட்ட
குழந்தைக்கு
கதை முடிந்ததும்
நீதியைச்
சொல்ல ஆரம்பித்தேன்
தூக்க சுவாரஸ்யமோ
போதனையின் அசுவாரஸ்யமோ
உன் கதையை நீயே வைத்துக்கொள் போ
திரும்பிப் படுத்துக்கொண்டது
சொன்னபின்
யாருக்குச் சொந்தம் கதை?
திரும்பவாங்கிப்
புலனுக்குள் பூட்டக்
கதைசொல்லிக்கு
முடியுமோ?
--கலாப்ரியா (வனம் புகுதல்)
==============================
புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது நீயும் வாயேன்.
*******
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன் அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கிவிழுகிறது
அதிக நேரம் ஆகாது நீயும் வாயேன்
- ராபர்ட் ஃப்ராஸ்ட்.. தமிழில் சுஜாதா
============================
கனத்த
படிம ஆடை
அணி அலங்கார
ஒப்பனைகளுடன்
அரங்கேறிய உங்கள்
அடையாளம் தெரியவில்லை
எனக்கு
மேடையின் பின்னே
ஒப்பனை அறையின்
எளிய வாயிலில்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க
- கவிஞர் புவியரசு
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை
- சி. மணி(யின் மொழிபெயர்ப்பு)
&*&*&*&*&*&*&*&
சமவெளியில்
பசுவின் உதடுகளில்
புல்லின் ஈரம்
- சுஜாதா
&*&*&*&*&*&*&*&
குட்டையில் சிறுநீர்
கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்!
- வீ. இராஜசேகரன் சேலம்.
&*&*&*&*&*&&*&*&*&*
பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில் இருக்கும்
கண்ணாடி ஜன்னல்!
- ஜே.பி. அன்பு சிவம், அரசூர்
&*&*&*&*&*&*&*&*&*&
பிக்னிக் மேஜை விரிப்பின்
கறுப்பு சதுரத்துள்
எறும்பு மறைகிறது
- கனடா தேசத்துப் ப்ரெஞ்சு ஹைக்கூ
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
மேற்கண்ட கதை, கவிதை மற்றும் ஹைக்கூ அனைத்தும் சுஜாதாவின் ‘ கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’ தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.
Wednesday, July 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)





56 comments:
me first....
me first.........
//பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில் இருக்கும்
கண்ணாடி ஜன்னல்!//
வர்க்க போராட்டத்தினை விளக்கும் அருமையான கவிதை
//பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை.//
வலைப்பூ ஆரம்பித்த கதை மாதிரியே இருக்கே...,
பல்லி பூச்சி கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..:)
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில் இருக்கும்
கண்ணாடி ஜன்னல்!//
வர்க்க போராட்டத்தினை விளக்கும் அருமையான கவிதை//
:-))
அப்படில்லாம் இல்லைண்ணே. இது ஹைக்கூ. படிக்கும்போது சட்டுன்னு மனசுல ஒட்டிக்குச்சு. அதான் இடுகையாக்கிட்டேன்.
என்னண்ணே இந்த கும்மு கும்மறீங்க :)))
// முத்துலெட்சுமி/muthuletchumi said...
பல்லி பூச்சி கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..:)//
நன்றி அக்கா!
கலக்கல் பதிவு தலை.. கோவணக் கதையை மிகவும் ரசித்தேன்
கவிதைகள் அருமை..
// ச.செந்தில்வேலன் said...
கலக்கல் பதிவு தலை.. கோவணக் கதையை மிகவும் ரசித்தேன்
கவிதைகள் அருமை..//
நன்றி செந்தில்!
சுஜாதா மற்றும் - ஜே.பி. அன்பு சிவம், அரசூர் ஹைகூ செம டச்... நல்ல ரசனை பாஸ் உங்களுக்கு...
கணையாழியில் சுஜாதா பத்திரிக்கையில் வந்த ஜோசியத்தை பற்றி சொல்லி இருப்பாரு... சிறுகதை மாதிரி அடிச்சி தூள் கிளப்பி இருப்பாங்க... :)
ம்ம்..என்னமோ சொல்றீங்க..!
கேட்டுக்குறேன்.
@ விக்கி..
தொகுப்பு முழுமையும் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் தொகுத்ததுதான். :))))))
நன்றி விக்கி!
//டக்ளஸ்... said...
ம்ம்..என்னமோ சொல்றீங்க..!
கேட்டுக்குறேன்.//
:))))
சுஜாதா சொன்னதைத்தான் எடுத்து இடுகையாக்கி இருக்கேன் டக்ளஸ்!
படிச்சிருக்கேன்.மீண்டும் ஒருமுறை
படிப்பது ஒரு சுகம்.
பல்லி பூச்சி ஹைகூ சூப்பர்.
நல்ல தொகுப்பு சென்ஷி! :-)
ஒரு வாரம் வால்பையன் சொல்லி இங்கு வந்து பார்த்தேன்.
உங்கள் பழைய பதிவுகளை கொஞ்சம் படித்தேன். நேரமில்லாமல் தொடரவில்லை.
இன்று உங்கள் புதுப் பதிவை படிக்கலாம் என்றால், எல்லாம் ஏற்கனவே படித்தது :(
நீங்களே எழுதுங்களேன்!
இப்பொழுதுதான் கடைசிப் பக்கங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி சென்ஷி..
சென்ஷி,
கலாப்ரியாவும் வலையில் எழுதுகிறார். படித்திருக்கிறீர்களா?
http://kalapria.blogspot.com/2009/07/blog-post_18.html
நன்றாக இருக்கிறது சென்ஷி. குறிப்பாக அந்த கதை சொல்லி.
//திரும்பவாங்கிப்
புலனுக்குள் பூட்டக்
கதைசொல்லிக்கு
முடியுமோ?//
// கே.ரவிஷங்கர் said...
படிச்சிருக்கேன்.மீண்டும் ஒருமுறை
படிப்பது ஒரு சுகம்.
பல்லி பூச்சி ஹைகூ சூப்பர்.//
:-)
உண்மைதான். அதேபோல வாத்யாரின் ஹைக்கூவும் அசத்தல் ரகம்!
//சந்தனமுல்லை said...
நல்ல தொகுப்பு சென்ஷி! :-)//
நன்றிங்க சந்தன முல்லை!
/ Vidhoosh said...
ஒரு வாரம் வால்பையன் சொல்லி இங்கு வந்து பார்த்தேன்.
உங்கள் பழைய பதிவுகளை கொஞ்சம் படித்தேன். நேரமில்லாமல் தொடரவில்லை.
இன்று உங்கள் புதுப் பதிவை படிக்கலாம் என்றால், எல்லாம் ஏற்கனவே படித்தது :(
நீங்களே எழுதுங்களேன்!/
வருகைக்கு மிக்க நன்றி விதூஷ். விரைவில் தொடர்கிறேன்!
அதிசயம் ஆனால் உண்மை. எல்லா கவிதையும் கொஞ்சம் புரியுது தல
// மதன் said...
இப்பொழுதுதான் கடைசிப் பக்கங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி சென்ஷி..//
வருகைக்கு நன்றி மதன்!
அருமை, நன்று. வாழ்த்துக்கள் சென்ஷி.
//வடகரை வேலன் said...
சென்ஷி,
கலாப்ரியாவும் வலையில் எழுதுகிறார். படித்திருக்கிறீர்களா?
http://kalapria.blogspot.com/2009/07/blog-post_18.html//
வா. மணிகண்டன் பதிவுல இணைப்பு கொடுத்திருந்தார் அண்ணாச்சி. அவர் பதிவுல இன்னும் தொடர் வாசிப்பு செய்ய ஆரம்பிக்கலை :((
பகிர்ந்ததற்கு நன்றிங்க அண்ணா..
எல்லாமே அருமை சென்ஷி. வாத்தியார் செலக்சன் கேக்கணுமா?
பகிர்வுக்கு நன்றி. (ஆமா, ரொம்ப நாளாச்சே ஒரு பி.ந.கதை/ கட்டுரை எழுதி! :))
அனுஜன்யா
கதை, கவிதைகள் ரொம்ப நல்லா இருந்துச்சு
எங்க பாஸ் 1 வாரமா ஆளையே கானாம்?
என் ஓட்ட ஜட்டிய காப்பாத்துன கதை மாதிரியே இருக்கு. :-)
ஹைக்கூ எல்லாம்.. மனசுல "பச்சக்"
// நாணல் said...
பகிர்ந்ததற்கு நன்றிங்க அண்ணா..//
பின்னூட்டத்திற்கு நன்றிங்க நாணல்!
// அனுஜன்யா said...
எல்லாமே அருமை சென்ஷி. வாத்தியார் செலக்சன் கேக்கணுமா?
பகிர்வுக்கு நன்றி. (ஆமா, ரொம்ப நாளாச்சே ஒரு பி.ந.கதை/ கட்டுரை எழுதி! :))
அனுஜன்யா//
படிச்சதை பகிரலாமேன்னு ஒரு ஆசைதான் :)
//அமிர்தவர்ஷினி அம்மா said...
கதை, கவிதைகள் ரொம்ப நல்லா இருந்துச்சு//
நன்றி அமித்து அம்மா!
//கலையரசன் said...
எங்க பாஸ் 1 வாரமா ஆளையே கானாம்?
என் ஓட்ட ஜட்டிய காப்பாத்துன கதை மாதிரியே இருக்கு. :-)
ஹைக்கூ எல்லாம்.. மனசுல "பச்சக்"//
வா மக்கா. சவுக்கியமா இருக்கியா.. நெட் கட் ஆகியிருந்தது ஒரு வாரம். நேத்துதான் சரியானது. இன்னைக்கு இடுகையாக்கியாச்சு :)
சென்ஷி
உங்களிடமிருந்து வரும் எழுத்துக்கள் வீர்யம் மிக்கவை
மீள்வாசிப்புக்கு உதவ நிறைய பேர் இருக்கிறார்கள்
தயவு செய்து எழுதுங்களேன்
:)
இப்படி மொத்தமா எழுதினா எதப் பத்தி கமண்டுறது?
எல்லாம் நல்லாருக்கு, அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்.
:-)))
மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை]]
மிகவும் இரசித்தேன் ...
//சுவாமி எல்லாம் ஒரு கோவணத்துக்காக, என்றான் சிஷ்யன்...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
//பிக்னிக் மேஜை விரிப்பின்
கறுப்பு சதுரத்துள்
எறும்பு மறைகிறது//
இதற்கு என்ன அர்த்தம்?
அண்ணே, என் கவுஜைக் களஞ்சியத்தை மறந்திடாதீங்க:):):)
கோவணத்துக்கு மட்டுமா, ஈகோவுக்காகவும் பலமுறை எத்தனை ஆர்ப்பாட்டங்கள்?!
அண்ணே, ஹைக்கூ எல்லாமே சூப்பர்!
நாலுநாள் ரெஸ்ட் எடுத்து அண்ணன் ரொம்பப் படிச்சிருக்காருப்பா!!!
;))
நல்லாயிருக்கு..
:))
சுஜாதா
ஒரு சல்லடை,
கழிசடை போக
மீதியை தான்
தேர்ந்தெடுப்பார்!
எல்லா ஹைக்கூவும் அருமை. பகிர்வுக்கு நன்றி சென்ஷி.
/* சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது நீயும் வாயேன்.
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கிவிழுகிறது
அதிக நேரம் ஆகாது நீயும் வாயேன் */
இதை படிச்சுட்டு தான், பொல்லாதவன் படத்துல மச்சான் நீ கேளேன்.. மச்சான் நீ கேளேன்.. காமெடி எழுதினாய்ங்களோ?
//சுஜாதாவின் ‘ கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’//
படிச்சிருக்கேன் மாப்பி...
பகிர்வுக்கு நன்றி.
அத்தனையும் அருமை..ஒருசேர அழகிய கவிதைகள் படிக்கும் வாய்ப்பு ..ரசிக்க வைத்த நல்ல தருணங்கள்..
நல்ல கருத்துக்கள் நன்றி :-))
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
புத்தகத்தில் ஒரு இடத்தில.. இத நீங்க படிச்சீங்கன்னா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும், வியாபார பலிதம் உண்டு, வெளிநாட்டு பயண வாய்ப்பு.. அப்படின்னு வரும். நம்ம வலைப்பூவும் அந்த மாதிரிதான்! (புக்கு கைவசம் இல்ல - முடிஞ்சா அந்த வரிகளை இங்கு வெளியிடவும்)
தலைவரே நண்பர்கள் தின வாழ்த்துகள்
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
கவிதை அருமை. கதையும் அருமை பகிர்வுக்கு நன்றி சென்ஷி.
கவிதைகள் அருமை..கலக்கல்
Post a Comment