கண்கள் திறந்து கிளம்பிய விலங்கு
சப்தமேற்படுத்தாத பாத அச்சுக்களால்
கூரிய பார்வையால்
வட்டம் போட்டு சுற்றியது
பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்
தேடித்தேடி தேடித்தேடி தேடலின் முடிவில்
கிடைத்த ஒன்றின் முதுகைத்
தொட்டு குதூகலித்த இரண்டாம் நிமிடம்
இரையான விலங்கொன்று
இரையைத் தேடிக்கிளம்பும்முன்
கண்கள் பொத்திப் பாடிக்கொண்டிருந்தது
கண்ணாமூச்சி ரே ரே
.
.
.
Thursday, August 06, 2009
Subscribe to:
Post Comments (Atom)





30 comments:
புரிஞ்ச மாதிரி(யும்) இருக்கு ...
அட! அட? அடடா!
//பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்//
படிக்கும் போதே பயம் கொடுக்கிறது.
--வித்யா
கவித
கவித
பிரமாதம்.!!!!!!!1
உன் புத்திய காட்டிட்டல்ல...!! ;))
பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்//
அப்படியே தான் இருக்கும். :))கண்ணாமூச்சி..
நல்லா இருக்கு.. ஆமா ஊரு ஞாபகமா?
சூப்பருண்ணே...
@ நட்புடன் ஜமால், விதூஷ் வித்யா, முனைவன் இரா. குணசீலன், கோபிநாத்(!?), முத்துக்கா, எவனோ ஒருவன்...
மிக்க நன்றிகள்!
தேடலில்தான் தேடப்படுவது கிடைக்கிறது....
முயற்சி திருவினயாக்கும்...!என்பதை
நல்லாதான் சொல்லிருக்கீங்க
வாழ்த்துக்கள்
வரிகள் அருமை.அண்ணா எதைப்பற்றிய கவிதை.
:-) ரசித்தேன்! உங்களுக்கும் 'நினைவுகளா'?!!
//அக்பர் said...
வரிகள் அருமை.அண்ணா எதைப்பற்றிய கவிதை.//
சென்ஷிய வசி காமிடி கீமிடி பண்ணலியே?
சென்ஷி அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டீங்க.
:)
நல்லா இருக்கு.
புரியிறமாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு தல...போன் பண்ணி கேட்டுக்கிறேன்
கவித கவித ...
படி படி ....
இன்னொரு முற சொல்லுங்க...
:-)))
நல்லா இருக்குங்க சென்ஷி இதன் பின் புலத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன்
கடைசி வரி கவிதையின் போக்கை தீர்மானிப்பதோடு அல்லாமல் மீண்டும் ஒரு வாசிப்புக்கு பணிக்கிறது.அருமை
//நட்புடன் ஜமால் said...
புரிஞ்ச மாதிரி(யும்) இருக்கு ... //
repeattu..
nalla irukku rasiththeen
விளங்கியது என் கோணத்தில் படித்த போது விளங்கவில்லை நீங்கள் எந்த கோணத்தில் எழுதினீர்களோ...
இப்படி எழுத திறமை தேவை எழுத எனச்சொல்கிறது கவிதை.....ம்ம்ம் நானும் முயற்சிக்கிறேன் முயற்சிக்கிறேன் முயன்றுக் கொண்டேயிருக்கிறேன்...
சரியான தலைப்பு!
தலைப்புகேற்ற கவிதை!
கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி ரே ரே..
சரியான தலைப்பு!
தலைப்புகேற்ற கவிதை!
picture perfect
ஏனுங் தலைவரே.... இந்த கவிதையில ஆராதனா ( ஜோதிகா) பேரையே கானாமுங்கோ ....???
சூப்பர்ன்னு ஒற்றை வரி பின்னூட்டம் போட்டா நம்பவா போறீங்க...?
ஆமா லேபிலே கவிதைன்னு இருக்கு அது எப்ப போடுவீங்க...?
(இதை மனசுலே வச்சிக்கிட்டு அடுத்து வந்து கொலைவெறி தாக்குதல் பண்ணக்கூடாது ஆமா...)
மிகவும் ரசித்தேன், அருமை சென்ஷி.
இப்பவே கண்ணா கட்டுதே..
சிறுகதை புரியலேனு இங்க வந்தா.. அதுக்கும் மேல..??!!
இப்டில்லாம் கவுஜ எழுதி, நினைவுகள் போட்டா மட்டும் போதாது, அடுத்த ஜூன் மாசம் பிரியாணி விருந்தும் ரெடி பண்ணனும், ஆமா:):):)
சரி மாப்பி...
நான் கவிதையில இன்னமும் விவரம் பத்தாத சின்ன பிள்ளை என்று புரிகிறது...
//பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்//இரையான விலங்கொன்று இரையை தேடி கிளம்பும் முன் கண்கள் பொத்திப் பாடிக்கொண்டிருந்தது//மிரட்டல்..சென்ஷி.
கிளியனூர் இஸ்மத், அக்பர், சந்தனமுல்லை (ம்..), மீண்டும் எவனோ ஒருவன்( :)) ), கே. ரவிஷங்கர், நான் ஆதவன், ஸ்டார்ஜன், நேசமித்ரன், மண்குதிரை, தமிழரசி, வால்பையன், கார்த்திக், கார்த்திக்கேயன், கீழை ராஸா, பட்டிக்காட்டான், ராப் ( :)) ), தமிழன் கறுப்பி, குடந்தை அன்புமணி, பா. ராஜாராம்.
தங்களின் அன்பிற்கும் கருத்திலும் மிகவும் மகிழ்கின்றேன். நன்றிகள் பலப்பல!
Post a Comment