கலந்து கொண்டவர்கள்
1. ஆசிப் மீரான் - ஷார்ஜா
2. கீழை ராசா - துபாய்
3. கிளியனூர் இஸ்மத் - துபாய்
4. சந்திரசேகரன் - துபாய்
5. லியோசுரேஷ் - ஷார்ஜா
6. ஆசாத் - துபாய்
7. சுல்தான் - ஷார்ஜா
8. முகவை முகில் - துபாய்
9. நான் ஆதவன் - ஷார்ஜா
10. கோபிநாத் - ஷார்ஜா
11. ஹக்கீம் - துபாய்
12. கமால்கான் - துபாய்
13. செந்தில்வேலன் - ஷார்ஜா
14. கலையரசன் - ஷார்ஜா
15. கார்த்திக்கேயன் - ஷார்ஜா
16. நாஞ்சில் பிரதாப் - பர்துபாய்
17. சென்ஷி - ஷார்ஜா
ஓட்டுனர் - நவாஸ்கான்
பர்துபாயிலிருந்து பிரதாப்பை ஏற்றிகொண்டு கிளம்பிய பேருந்து துபாயில் ஷார்ஜாவாசிகளைத் தவிர்த்த மற்ற அனைவரையும் பிரியாணி சகிதமாய் கூட்டிக் கொண்டு வந்தது. பிரியாணித் தயாராக 20 நிமிடம் ஆகுமென்று தகவல் கூறியதால் பிரியாணி இல்லாமல் பயணம் கிளம்புவதில்லை என்ற உறுதியும் இருந்ததால் காத்திருந்து ஷார்ஜாவில் வண்டி ஏறினோம்.
முன்கூட்டியே நிகழ்வுகளை உடனுக்குடன் படம் பிடித்து ஏற்றுவதாய் முடிவு செய்திருந்ததால் ஆசிப் அண்ணாச்சியின் மொபைல் இண்டர்நெட் கனெக்சனும் கூடவே கார்த்திக்கேயனின் மடிக்கணிணியும் செந்தில் வேலனின் பிளாக்பெர்ரி மொபைலும் பதிவுகள் இட பேருதவியாய் இருந்தது. வீடியோ ஃபைலை உடனே பதிவில் ஏற்ற சிரமம் இருந்ததால் அதனை தனியாக யு டியுபில் ஏற்ற முடிவு செய்தோம்.
ஷார்ஜாவில் பஸ் ஏறியபின் பதிவர் குழுமம்

பதிவர் பெயர்கள் : இடமிருந்து வலமாக
நாஞ்சில் பிரதாப், சந்திரசேகரன், லியோசுரேஷ், செந்தில்வேலன், (பின்னால்) சுல்தான், கலையரசன், நான் ஆதவன், கார்த்திக்கேயன், சென்ஷி (மடிக்கணிணியுடன்), கோபி, ஆசிப்மீரான், கமால்கான், கிளியனூர் இஸ்மத், கீழை ராசா, முகவை முகில்

இதில் நாஞ்சில் பிரதாப்பிற்கு முன்னால் தொப்பியுடன் அமர்ந்திருப்பது ஹக்கீம்

ஷார்ஜாவிலிருந்து ஒரு மணிநேர பயண தூரத்தில் இருந்த ஃபிரைடே மார்க்கெட் என்ற இடத்தில் குளிர்பானம், டீ அருந்த நிறுத்தியபோது எடுத்த படம்.
கோர்ஃபக்கான் சேரும் முன்பே தொழுகைக்கான நேரம் நெருங்கியதால் இடையில் ஃபுஜைரா என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி, தொழுகைக் கடமையை முடித்துவிட்டு கோர்ஃபக்கானை அடைந்ததும் முதல் வேலையாய் பிரியாணி உண்பதற்காக ஒரு நல்ல இடத்தை முடிவு செய்துக்கொண்டு பிரியாணி சாப்பிட ஆரம்பித்தோம்.

பிரியாணியை அளவில்லா சந்தோசத்துடன் பகிர்ந்தளிப்பது கிளியனூர் இஸ்மத்
இடையில் வினோத் கவுதம் அல் அய்னிலிருந்து ஃபுஜைராவுக்கு வந்துவிடுவதாய் தொலைபேசியிருந்தும் சரிவர வாகன வசதி அமையாததால் எங்களுடன் வந்து சேர இயலாத வருத்தம் இருந்தது.
பிரியாணி உண்ட களைப்பால் (எம்மாம் பெரிய சட்டி நிறைய பிரியாணி) பத்து நிமிடங்கள் ஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் போட்டி விளையாட முடிவு செய்யப்பட்டது.

ரெஸ்ட்டு எடுக்கறவங்க கார்த்திக், ஆசாத், லியோசுரேஷ்
கீழைராசா ஒரு அணியாகவும், அண்ணாச்சி இன்னொரு அணியிலும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது.
வெற்றி தோல்வியெல்லாம் வீரனுக்கு ஜகசம் என்ற சொல் இருப்பதால் வெற்றியை அண்ணாச்சிக்கு விட்டுக் கொடுத்து கீழை ராசா அணியினர் வீரமானவர்கள் என்ற பட்டத்தை தட்டிச் சென்றது.

வெற்றிகரமான பதிவர் கிரிக்கெட் போட்டிக்குப் பின் படகுச் சுற்றுலா செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படகு சுற்றுலா செல்லத் தொடங்கியது.

லைஃப் ஜாக்கெட் மேல் தோளில் சிவப்புத் துண்டு போட்ட ஆசிப் அண்ணாச்சியுடன் செந்தில்வேலன்
படகு சவாரிக்குப் பிறகு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அலைகள் இல்லாத அந்த கடலில் இறங்கி குதியாட்டம் போட்டுக் கொண்டாடினர். அந்த புகைப்படம் மற்றப் பதிவர்களின் மனநலம் கருதி பதிவேற்றுதல் தடை செய்யப்பட்டு விட்டது.
குளித்து கரையேறி பேசி சிரித்து அமர்ந்து கொண்டாட்டம் போட்டு கூட்டத்தை வேடிக்கைப் பார்த்து தனியே அம்மாவைத் தேடி சுற்றிக் கொண்டிருந்த குழந்தையை பத்திரமாய் அம்மாவிடம் சேர்த்துவிட்டு (கலை மற்றும் கோபி) மீண்டும் இருட்டுவதற்குள் கிளம்பியாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் பேருந்தில் மனமின்றி ஏறியமர்ந்தோம்.

பேருந்தில் திரும்பியபோது எல்லோரும் பாட ஆரம்பித்து பின் எதிர்ப்பாட்டு என களை கட்ட ஆரம்பித்தது. அண்ணாச்சியின் குரலினிமையை மிக அற்புதமாக ரசிக்க முடிந்தது. இனிமையான குரலுடன் இணைந்த முகில், ஆசாத், சந்திரசேகரன் என கும்பல் களைகட்ட இவர்களுக்கான எதிர்பாட்டில் மிக சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருந்தனர் கலை, கோபி, ஆதவன் மற்றும் கார்த்திக். யாரும் எதிர்பாராத வகையில் காதல் ஓவியம் படத்திலிருந்து ஒரு பாடலை முழுமையாக சுல்தான் பாடி அசத்தினார்.
மற்றவர்களும் பதிவிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் பதிவு பெரிதாகிக் கொண்டே போவதாலும் பேருந்தில் செல்லும்போது நடந்த பாட்டுக்குப் பாட்டு, பதிவர் ஜெசிலா பயணம் இனிமையாக வாழ்த்து கூறியது, திரும்பும்போது பினாத்தல் சுரேஷ் போன் செய்தது, பிரியாணியுடன் கிடைத்த கத்தரிக்காய் பச்சடி, படகை பேருந்து போல தண்ணீரில் இறங்கி தள்ளிய அனுபவம், கிரிக்கெட் போட்டியில் உடம்பை ஸ்டம்பாக்கி அடி வாங்கிய அனுபவம், முன்னால் போட வேண்டிய பந்தை வேகமாக ஓடிவந்து தனக்கு பின்னால் பவுலிங்கிய பதிவர், எளிமையாய் எல்லாப் பந்தையும் அடித்து ஆடி மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கியவர் பற்றிய விவரம், முகிலின் அட்டகாச மோனோ ஆக்டிங்க் மற்றும் மிமிக்ரி கும்மி, யுகபாரதியுடனான ஆசாத்தின் அனுபவம் பற்றிய பகிர்வு மற்றும் அதிகமாய் கைதட்டல் வாங்கிய கெட்ட வார்த்தைக் கதைகள் பற்றிய குறிப்புகளை இங்கு பகிராமல் விடுகின்றேன்.
.
.




44 comments:
//பேருந்தில் செல்லும்போது நடந்த பாட்டுக்குப் பாட்டு, பதிவர் ஜெசிலா பயணம் இனிமையாக வாழ்த்து கூறியது, திரும்பும்போது பினாத்தல் சுரேஷ் போன் செய்தது, பிரியாணியுடன் கிடைத்த கத்தரிக்காய் பச்சடி, படகை பேருந்து போல தண்ணீரில் இறங்கி தள்ளிய அனுபவம், கிரிக்கெட் போட்டியில் உடம்பை ஸ்டம்பாக்கி அடி வாங்கிய அனுபவம், முன்னால் போட வேண்டிய பந்தை வேகமாக ஓடிவந்து தனக்கு பின்னால் பவுலிங்கிய பதிவர், எளிமையாய் எல்லாப் பந்தையும் அடித்து ஆடி மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கியவர் பற்றிய விவரம், முகிலின் அட்டகாச மோனோ ஆக்டிங்க் மற்றும் மிமிக்ரி கும்மி, யுகபாரதியுடனான ஆசாத்தின் அனுபவம் பற்றிய பகிர்வு மற்றும் அதிகமாய் கைதட்டல் வாங்கிய கெட்ட வார்த்தைக் கதைகள் பற்றிய குறிப்புகளை இங்கு பகிராமல் விடுகின்றேன்...//
இதை எழுதாம என்ன பதிவு போடுறியோ?? நல்லா இரு மச்சி..
அருமையான விவரிப்பு சென்ஷி. கலக்கல் :)
எனக்கு உண்மையில் ரொம்ப வருத்தமா இருக்கு இப்படி ஒரு அற்புதமான பயணத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு..:(
பிரியாணி சாப்பிட்டவங்களுக்கு.. என் சாபம் பலிச்சதா???
பாவிகளா.. இப்படி ஒரு க்ரூப்பா இருந்துகிட்டு... கூத்தடிக்கறீங்களே.
நான் மட்டும் ஃப்ளோரிடாவில்.. தனி ஆளு! :( :(
கலக்கல் லைவ் கமென்டரி மாதிரி இருந்தது.....
இதுக்கு மேல நாங்க வேற தனியா பதிவுபோடனுமா...?
பிரதாப்,
அப்பிடி எல்லாம் விட்டுடாதீங்க தல! யாராவது எதையாவது மறந்திருப்பீங்க.
எல்லோரும் எழுதுங்க. படிச்சாவது.. மனசை தேத்திக்கிறோம்.
வாவ்!எல்லோரையும் முகம் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செஞ்சதுக்கு நன்றி பாஸ்.பச்சை புள்ளையா நீங்க?எழுத்து எவ்வளவு முதிர்ச்சி!
///வாவ்!எல்லோரையும் முகம் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செஞ்சதுக்கு நன்றி பாஸ்.பச்சை புள்ளையா நீங்க?எழுத்து எவ்வளவு முதிர்ச்சி!//
ஆமாங்க ராஜாராம். நான் கூட.. எதோ.. டைனோஸர் மாதிரி இருப்பார்ன்னு நினைச்சேன்.
இது புள்ள பூச்சி! :) :)
ரொம்ப சந்தோஷமா இருக்கு... நாங்க வரலேன்னாலும் உங்க சந்தோஷத்தில பங்கெடுத்துக்கிட்டா மாதிரி இருந்துது படங்கள் + விபரங்கள்.
நன்றி சென்ஷி. ஆமா நீங்களா இப்டீல்லாம் எழுதுறதுன்னு கேக்க கூடாதுன்னு நினைச்சேன் ஆனா முடியல.... ஆமா நிஜமாவே நீங்கதானா எழுதறீங்க???
//பத்திரமாய் அம்மாவிடம் சேர்த்துவிட்டு (கலை மற்றும் கோபி)//
அம்மா எப்டி அழகா இருந்தாங்களா? எனக்கென்னமோ கடத்தினதே என் தம்பிங்கதானோன்னு லைட்டா ஒரு டவுட்டு...
//இங்கு பகிராமல் விடுகின்றேன்...//
கிர்ர்ர்ர்ர்ர்................
டேய் மாப்பி
செம கலக்கல் பதிவுட,என்ன வேகம்?
இன்னிக்கு மட்டும் நீ அஞ்சு பதிவு போட்டிருக்கடா?கண்ணுபடப்போகுது/
நல்ல உழைப்புடா மாப்பி.
ஓட்டுக்கள் போட்டாச்சு, நானும் என் கடமைக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்.
ஆண்களாய் இருப்பதில் ஒரு சாதகம் இதுதான். நினைச்ச மாதிரி கிளம்பி போயிட்டே இருக்கலாம். ஹீம்
என்ஜாய்:)!
உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்கிற காட்சிகள்.நிறைய பேரின் முகங்களைப் பார்க்க முடிந்தது.பகிர்வுக்கு நன்றி.
//பச்சை புள்ளையா நீங்க?எழுத்து எவ்வளவு முதிர்ச்சி//
ராஜாராமை வழிமொழிகிறேன்!!!!
கலக்குறிங்க..
நானே கலந்து கொண்டது போல் உணர்தேன்....நன்றி
எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கல்லூரி வாழ்க்கைக்கு அப்புறம் அமையவே செய்யாது! என்ஜாய்!
@ அகமது சுபைர்...
அண்ணாச்சி, ஆசாத், ஆதவன், கலை, பிரதாப், கீழைராசான்னு இன்னும் பெரிய கையெல்லாம் எழுதப்போகுதுங்கற ஆர்வத்துல உன்னைய உக்கார வைப்போமுன்னுதான் :)
@ செந்தில் வேலன்..
நன்றி செந்தில்வேலன்.. உங்க பதிவையும் சீக்கிரம் எழுதுங்க
@ வினோத் கவுதம்...
:(
தங்களை மிகவும் அலைச்சலுக்கு உள்ளாக்கிவிட்டதை நினைத்து சற்று வருத்தமாக உள்ளது. அடுத்த சுற்றுலாவில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து ஷார்ஜாவில் டேரா அடித்து விட உறுதி எடுத்துக் கொள்ளவும்.
@ ஹாலி பாலி..
சாபம் கொடுத்தீங்களா.. நல்லவங்க கொடுக்கற சாபமெல்லாம் வரமா மாறுமாமே அது உண்மையாகிடுச்சோ என்னமோ :)
ஹி..ஹி.. பிரியாணி கிடக்குதுங்க பிரியாணி. சும்மா மட்டன் கறி மசாலாவை புரட்டி எடுத்துக் கொடுத்து கூட சிக்கன் சிக்ஸ்டிஃபைவ் வச்சு கொடுத்தாங்க. ஆனாலும் அந்த கத்தரிக்காய் பச்சடிங்கற ஒரு வஸ்து அந்த பிரியாணியை எம்புட்டு ருசியா மாத்துச்சுன்னு சொன்னா இப்ப எனக்கு மறுபடி பிரியாணி பசி எடுக்கும். :))
ஊருக்கு வரும்போது சொல்லுங்க தலைவா.. ஜமாய்க்க டைம் பாத்துடுவோம்.
@ நாஞ்சில் பிரதாப்..
என்ன இருந்தாலும் பர்துபாயிலிருந்து சிங்கிளா கெளம்பின சிங்கம் இப்படில்லாம் சொல்லக்கூடாது. நீங்க கண்டிப்பா பதிவு போட்டுத்தான் ஆகணும். இல்லைன்னா அண்ணாச்சி அழுவாரு.
@ பா.ராஜாராம்..
ஆமாங்க.. எல்லோருமே சொன்னாங்க பால் வடியுற முகம்ன்னு. டிகாசனுக்கு உபயோகிக்கனும்னு சொல்லிடுவாங்களோன்னு கொஞ்சம் பயந்துட்டேதான் போனேன் :)
/ ஹாலிவுட் பாலா said...
///வாவ்!எல்லோரையும் முகம் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செஞ்சதுக்கு நன்றி பாஸ்.பச்சை புள்ளையா நீங்க?எழுத்து எவ்வளவு முதிர்ச்சி!//
ஆமாங்க ராஜாராம். நான் கூட.. எதோ.. டைனோஸர் மாதிரி இருப்பார்ன்னு நினைச்சேன்.
இது புள்ள பூச்சி! :) :)//
ஏனுங்க ஹாலி சார்... பொம்மை படத்தையெல்லாம் ஒரு படம் வுடாம பார்க்குறேன் என்னையப் போய் டைனோசர்ன்னு நினைச்சுட்டீங்களே..
@ சுசி...
சத்தியமாய் சென்ஷியாகிய நான் தான் எழுதினேன். சொல்லுவதற்கு முன் தரையில் துண்டு போட்டு தாண்டியாச்சு..
உங்க தம்பிங்க மேல லைட்டா ஒரு சந்தேகம் இப்ப வர ஆரம்பிச்சுடுச்சு. குழந்தை அழுததா வேற சொன்னானுங்க. பாவிப்பயலுங்க கிள்ளிவுட்டு அழ வைச்சுருப்பானுங்களோ :(
@ கார்த்திக்கேயன்...
உன்னோட கானா குத்துப்பாடல் ஞாபக சக்தியும் பிசிறடிக்காம பாடின தன்மையும் என்னால மறக்க முடியலை.. நன்றி மாப்பி!
@ சின்ன அம்மிணி..
அடப்போங்கக்கா நீங்க வேற.. இதையே போகலாம் போகலாம்ன்னு ஆறுமாசமா வெறும் பேச்சுலயே கழிஞ்சு இப்பத்தான் கெளம்பியிருக்கோம். வர வர பேச்சிலர் பசங்களும் சரியா வாழ்க்கைய கொண்டாட முடியலை..
@ ராமலக்ஷ்மி..
மகிழ்ந்தேன்.. நன்றி அம்மா...!
@ மாதவராஜ்..
ஆஹா.. எல்லோருமே நம்ம இமேஜ்லதான் குறியா இருக்காங்க போலருக்குதே :)))
@ கிஷோர்..
நன்றி கிஷோர்... மகிழ்ந்தேன்! :)
@ தண்டோரா..
இந்தப் பக்கம் கிளம்பி வாங்க. உங்க பேர சொல்லி இன்னொரு டூரை ப்ளான் செஞ்சுப்புடலாம்.. :)
@ நாஸியா..
என்னங்க இப்படி சொல்லிப்புட்டீங்க.. இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் பதிவர்களின் குடும்ப சுற்றுலா ப்ளான் செஞ்சுட்டு இருக்காங்க. நீங்க விருப்பப்பட்டா அதுலயும் நிச்சயம் கலந்துக்கலாமே! மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள பதிவர் ஜெசிலா அக்கா..
வாழ்த்துக்கள். ரெம்ப சந்தொசம்.
படமும் , அனுபவுமும் சூப்பர்.... நிஜமாகவே மிஸ் பண்ணிட்டேன் .... அடுத்த முறை பார்க்கலாம்
வாவ்.. கலக்கி இருக்கிங்க போல.. வயித்தெரிச்சல் ட்ரிப்.. ஹ்ம்ம்ம்.. எல்லாரும் நல்லா இருங்கடே.. :)
குசும்பன் இல்லாத சமயத்தில் சுற்றுலா போனதன் நுண்ணரசியல் என்னவோ?
( வந்த வேலை முடிஞ்சது... வர்ட்டா? )
கடைசி போட்டோவுல ரவுண்டா உக்காந்துக்கிட்டிருக்கிறதுல எல்லாரு பேரும் போட்டது சூப்பரூ ஈசியா அடையாளம் கண்டுக்கமுடிஞ்சுது
[அமுக்கிப்பார்த்தா படம் பெருசா வர்றமாதிரி கொஞ்சம் பெரிய படமா போடுங்க பாஸு]
:)
சுற்றுலா சென்று வந்த அனைவருக்கும் வாழ்த்துகள்! உங்கள் பதிவைப் படிக்கும் போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
இன்பச் சுற்றுலா இனிதாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது
என்பதை எல்லோரும் உணர்ந்து விட்டார்கள் உங்களைப் பார்த்து சென்ஷி.
வாழ்த்துக்கள்.
மற்றவர்கள் அவர்கள் பயண அனுபவத்தை எழுதுவதை படிக்க ஆவல்.
சென்ஷி...உங்க சுறுசுறுப்பு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு....
வெயிலுக்கு முந்தியே ஒட்டுபோட்டாச்சு...
கலக்குறீங்க...
இங்கயும் கிரிக்கெட்டுன்னு யாரோ பேச்ச எடுத்தாங்க, அதுக்கு அப்றம் ஒன்னுமே நடக்கல.
ஆதவன் ஏன் எப்பவுமே மறஞ்சே இருக்குது?
ஏங்க வைத்துவிட்டீர்கள்.
"செம்பவழ மொட்டுகளே..." ன்னு ஒரு பாட்டு கார்த்தி பாடுனானே, அதைப்பத்தி எழுதவேயில்ல மாப்பி!?
நல்ல பகிர்வு நன்றி மற்றும் பிரியாணி சாப்பிட்டவங்களுக்கு என் வாழ்த்துக்கள் (சாபம்) .
\\கலையரசன் on Sunday, November 08, 2009 9:28:00 AM said...
"செம்பவழ மொட்டுகளே..." ன்னு ஒரு பாட்டு கார்த்தி பாடுனானே, அதைப்பத்தி எழுதவேயில்ல மாப்பி!?
\\
அய்யோ...மச்சி இப்போ நினைச்சாலும் சிரிப்பை அடக்க முடியல...;;))))))
கலக்கலா இருக்கு ;)
தம்பீ..!
இன்பச் சுற்றுலாவில் இலக்கியமெல்லாம் பேசவில்லையா..?
'ஒண்ணுமே' நடக்காம 'சப்'புன்னு இருக்கு..!
நல்லாருக்கு
:-D
எங்களுக்கும் சிரிக்கத் தெரியும்ல...
குசும்பன் இங்க அழுதுகிட்டு உட்கார்ந்திருக்கார்!
பதிவர்களை புகைப்படத்துடன் அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி.
சென்ஷி, கொஞ்சம் குண்டாகிட்டீங்க போல ? :-)
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீ..!
இன்பச் சுற்றுலாவில் இலக்கியமெல்லாம் பேசவில்லையா..?
'ஒண்ணுமே' நடக்காம 'சப்'புன்னு இருக்கு..!
// :-))
இந்த
mega mall மாதிரி
இல்லன்னாலும் ஒரு
பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
நான்,
ஒரு முட்டு சந்து ஓரமா
புதுசா கட விரிச்சிருக்கேன்.
http://vaarththai.wordpress.com/
அப்டியே
அந்தான்ட…இந்தான்ட
போறசொல
நம்ம கடையான்ட வந்து
எட்டி பாருங்கோ… Senior
Post a Comment