Thursday, May 13, 2010

காக்கிச்சட்டை போட்ட மச்சான்


”ஹலோ.. சென்ஷியா... என் பேரு கார்த்திக். பாலபாரதி உங்க போன் நம்பர் கொடுத்தாரு.. இன்னிக்கு மீட்டிங்க் இருக்குன்னு சொன்னாரு. எந்த இடத்துல.. எத்தனை மணிக்கு வரணும்?”

பதிவர் அயன் உலகம் கார்த்திக் என்னுடன் பேசிய முதல் பேச்சு இதுதான்.

பதிவர் சந்திப்பு என்பது சென்னை அல்லது அமெரிக்காவில் மாத்திரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதுகளில் டெல்லியில் இருக்கும் சொற்ப பதிவர்களைக் கொண்டு பதிவர் சந்திப்பு நிகழ்த்த திட்டமிட்ட தினத்தில், கார்த்திக்கிடமிருந்து இந்த தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. கார்த்திக்கை இடம் கூறி வரச்சொல்லிவிட்டு பின்பு பதிவர் மங்கை அக்காவிடம் கார்த்திக் என்னும் பதிவரும் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததை அறிவித்துவிட்டு சந்திப்பிற்கு சென்றேன். ஆனால் அன்றைய சந்திப்பிற்கு கார்த்தியால் வர இயலவில்லை. அதற்காக போன் செய்து வருத்தம் தெரிவித்துக்கொண்டு விரைவில் மற்றொரு சந்திப்பில் கலந்து கொள்வோம் என்று உறுதியும் அளித்தார்.

ஆனாலும் விடாமல் தொலைபேசியில் முகந்தெரியாமலே எங்கள் உரையாடல் நட்பை வளர்த்துக்கொண்டிருந்தோம். அப்போது புதிதாய் வெளிவந்திருந்த திரைப்படமான ‘டிராஃபிக் சிக்னல்’ திரைப்படத்தை சிலாகித்த கார்த்திக்கின் விமர்சனம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டது. சில மாதங்கள் கழித்து பதிவர்சந்திப்பில் சந்திக்கும்பொழுது எங்களின் தொலைபேசி உரையாடல் முகம் தெரியாத நட்பை நேரில் பார்க்கும்பொழுது சகஜப்படுத்தியிருந்தது. அதிகம் மொக்கைகளாய் பேசினாலும், அவ்வப்பொழுது மகாபாரதத்தை பின்னவீனத்துவமாய் அணுகுதல் பற்றி கார்த்திக் பேச ஆரம்பித்தபொழுது மற்ற பதிவர்கள் தலைதெறிக்க வேண்டியதாயிற்று.. ஆனாலும் விடாமல் மகாபாரதத்தின் உட்கூறுகளை கட்டமைத்த விதம் குறித்தும் அதை பின்னவீனத்துவமயா அணுகுதல் குறித்த பார்வைகள் பற்றியும் விடாமல் பேச ஆரம்பித்திருந்தார். மத்தியக் குடிமைப்  பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்விற்காக டெல்லியில் தங்கியிருப்பதாகவும், தேர்விற்கு மாணவர்களை தயார் செய்கின்ற பணியை செய்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

விரைவில் இந்திய ஆட்சிப் பணி, காவல் மற்றும் மத்தியக் குடிமைப்  பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்வில் வெல்லவேண்டும் என்ற தீவிரத்துடன் இருந்தவரை அவரது சூழல் கருதி அதிகம் தொல்லை செய்ததில்லை (மொக்கை போட்டதில்லை). பதிவுலகிலும் அவர் அதிகம் எழுதாது போனதற்கான காரணமும் கடும் பணிகளின் நடுவில் இருப்பதாகவேக் கூறினார். ஆயினும் அவ்வப்போது இளைப்பாறலாக வாசித்த சிறுகதைகள் பற்றியும் கவிதைகளைப் பற்றியும் கேட்டு உற்சாகப்படுத்திக் கொள்வதுண்டு. விடுப்பில் சென்னைக்கு வரும்பொழுது நிச்சயம் வா.. உன்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று (அவர் வீடு கண்காட்சி நடந்த இடத்திற்கு பின்புறம்தானாம்!) அவரை சந்திக்க இயலாமல் தப்பித்தது தனிக்கதை.


கடந்தமுறை ஐபிஎஸ் தேர்வில் வென்ற நண்பர் அன்டோவுடன் கார்த்தி (வலதுபுறம் நிற்பவர்)

மகாபாரதத்தை பின்னவீனத்துவமாய் அணுக சொல்லிக்கொண்டிருந்த கார்த்திக், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட கார்த்திக், என்னைப் போன்ற கடும் மொக்கைகளையும் உரையாடியிலும் போனிலும் தாங்கிக்கொண்டு சிறுகதைக்கூறுகளை பகிர்ந்து கொண்ட கார்த்திக், அயன் உலகம் என்ற பதிவு எழுதும் வலையுலக மூத்த மற்றும் அல்மோஸ்ட் ரிட்டயர்ட் பதிவராகவும் இருக்கும் கார்த்திக்,

தற்சமயம் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். அவருக்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.. விரைவில் பதிவுலகில் மற்றொரு கிரிவலம் வர வேண்டிய விண்ணப்பத்தையும் திரு. கார்த்திக், ஐபிஎஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

25 comments:

விழியன் on Thursday, May 13, 2010 12:13:00 PM said...

வாழ்த்துக்கள் கார்திக். சந்தோஷமா இருக்கு..

♠ யெஸ்.பாலபாரதி ♠ on Thursday, May 13, 2010 12:13:00 PM said...

நானே எழுத நினைத்திருந்தேன்... வாழ்த்துகள் கார்த்தி, பதிவு போட்ட சென்ஷிக்கு நன்றிகள்!! :))

நம்மாளும் ஒருத்தர் ஐபிஎஸ் ஆகிட்டார்.. :)

ஜெய்லானி on Thursday, May 13, 2010 12:28:00 PM said...

சந்தோஷமான விஷயம்.

ஆயில்யன் on Thursday, May 13, 2010 12:29:00 PM said...

வாழ்த்துக்கள் கார்த்தி ஐ.பி.எஸ் :))

தமிழ் அமுதன் (ஜீவன்) on Thursday, May 13, 2010 12:31:00 PM said...

வாழ்த்துக்கள் கார்த்தி ஐ.பி.எஸ் :))

ஆயில்யன் on Thursday, May 13, 2010 12:33:00 PM said...

ஹலோ.. சென்ஷியா... என் பேரு ஆயில்யன் - பேசியிருக்கேன் பார்ப்போம் எனக்கு எப்படி நடக்குதுன்னு ? :)

க.பாலாசி on Thursday, May 13, 2010 12:40:00 PM said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் on Thursday, May 13, 2010 1:08:00 PM said...

வாழ்த்துகள் கார்த்தி

ச.செந்தில்வேலன் on Thursday, May 13, 2010 1:09:00 PM said...

வாழ்த்துகள்!!

அஷீதா on Thursday, May 13, 2010 1:15:00 PM said...
This comment has been removed by the author.
அஷீதா on Thursday, May 13, 2010 1:16:00 PM said...

என்னைப் போன்ற கடும் மொக்கைகளையும் உரையாடியிலும் போனிலும் தாங்கிக்கொண்டு சிறுகதைக்கூறுகளை பகிர்ந்து கொண்ட கார்த்திக்//

இதுக்காகவே கார்த்திக்கை பாராட்டலாம்...பாராட்டு என்ன விழாவே நடத்தலாம் . உங்க மொக்கை தாங்கறது லேசு பட்ட விஷயமா என்ன. யாரு பெத்த புள்ளையோ :(
anyways கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

☀நான் ஆதவன்☀ on Thursday, May 13, 2010 2:51:00 PM said...

நண்பர் கார்த்தி ஐபிஎஸ்’க்கு வாழ்த்துகள் :)

திருஞானசம்பத்.மா. on Thursday, May 13, 2010 4:14:00 PM said...

வாழ்த்துகள் கார்த்திக் ஐபிஎஸ்..

நேசமித்ரன் on Thursday, May 13, 2010 5:35:00 PM said...

வாழ்த்துக்கள் கார்த்தி ஐ.பி.எஸ்

இராமசாமி கண்ணண் on Thursday, May 13, 2010 8:25:00 PM said...

வாழ்த்துக்கள் கார்த்தி ஐ.பி.எஸ்

சுசி on Thursday, May 13, 2010 10:12:00 PM said...

வாழ்த்துக்கள் கார்த்திக்.

பகிர்ந்து கொண்ட சென்ஷிக்கு நன்றிகள்.

தமிழ் பிரியன் on Thursday, May 13, 2010 10:20:00 PM said...

வாழ்த்துக்கள் கார்த்தி! என்னோட நெருங்கிய நண்பர் ஒருவரும் சில வருடங்களாக இதற்கான முயற்சியில் இருக்கின்றார்.. கார்த்தி வழியில் அவரும் வெற்றியடைய வேண்டும்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi on Thursday, May 13, 2010 10:40:00 PM said...

வாழ்த்துக்கள் கார்த்தி

செ.சரவணக்குமார் on Thursday, May 13, 2010 11:12:00 PM said...

நல்ல பகிர்வு சென்ஷி. வாழ்த்துக்கள் கார்த்தி ஐ.பி.எஸ்

பா.ராஜாராம் on Friday, May 14, 2010 3:31:00 AM said...

வாழ்த்துகள் கார்த்திக்!

சென்ஷியை எழுத சொல்லுங்க கார்த்திக்!

ராஜ நடராஜன் on Friday, May 14, 2010 3:40:00 AM said...

வாழ்த்துக்கள் I.P.S! வாழ்த்துக்கள் சென்ஷி!மகிழ்ச்சியாக இருக்கிறது.

ச.பிரேம்குமார் on Friday, May 14, 2010 8:08:00 AM said...

நெசமாத்தான் சொல்றீயா மாப்பி?!!! ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு ... வாழ்த்துகள் கார்த்தி :)

www.thalaivan.com on Saturday, May 29, 2010 6:13:00 PM said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

cheena (சீனா) on Saturday, May 29, 2010 8:18:00 PM said...

நல்வாழ்த்துகள் கார்த்தி ஐபிஎஸ் - பகிர்வினிற்கு நன்றி சென்ஷி

நட்புடன் சீனா

cheena (சீனா) on Saturday, May 29, 2010 8:18:00 PM said...

நான் பெரிய மனுசன்

நல்வாழ்த்துகள் சென்ஷி
நட்புடன் சீனா

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com