Thursday, July 01, 2010

வால்பையன் மற்றும் ராஜனுக்கு...


வால் பையன் மற்றும் ராஜனுக்கு,

நீங்கள் உங்கள் இடுகைகளில் செய்கின்ற செய்துகொண்டிருக்கின்ற விபரீதங்கள் பற்றி உங்களுக்குத் தெரிகிறதா இல்லையா..? உங்களின் மத துவேஷம் என்பது மனிதத்தன்மை தாண்டியுள்ளது. மதசகிப்புத்தன்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்தான் உங்களின் சமீபத்திய இடுகை உள்ளது. உணர்ந்து எழுதுகிறீர்களா இல்லை வழக்கம்போல வாந்தி எடுக்கிறீர்களா என்று தெரியவில்லை.  உங்களுடைய பதிவு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் நண்பர்கள் மூலமாக உங்கள் பதிவை படித்து அதிர்ச்சியடைந்தேன். பின்னூட்டங்களிலும் வழக்கமான உங்கள் வக்கிரபுத்திதான் ஓடிக்கொண்டிருக்குமென்று நம்புகிறேன். கடவுளை நம்புபவர் நம்பாதவர் என்ற கொள்கை ரீதியான அல்லது தத்துவ ரீதியான உரையாடல் விவாதங்களைத் தாண்டி உங்களின் சொல்லாடல்கள் அனைவரையும் துன்புறுத்தும் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்களது சமீபத்திய இடுகையை எடுத்துவிடுங்கள். மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். எச்சரிக்கையாக அல்ல.... அன்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.

என் கெண்டை காலு மசுரும் மன்னிப்பு கேட்காது. என் கு-சு முடியும் நிக்காது அப்படியென்ற வழமையான சொலவடைகள் மாத்திரமே உங்களிடமிருந்து கிடைக்குமெனில் மன்னிக்க...!  நீங்கள் உணர்ந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றது. இதுவும் எச்சரிக்கை அல்ல வால்பையன் என்ற நபரின் மீது நான் வைத்திருக்கும் மரியாதை மாத்திரமே.

27 comments:

தமிழ் பிரியன் on Thursday, July 01, 2010 4:47:00 PM said...

Me too..

அரபுத்தமிழன் on Thursday, July 01, 2010 5:14:00 PM said...

கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. உண்மையை அறிவதற்கு
ஒழுக்கம்,தியாகம்,முயற்சி இப்படி நல்ல விசயங்கள்தாம் தேவை. சும்மா
சாக்கடைத் தண்ணீரை வருவோர்,போவோர் மீது வீசுவதால் நல்லவர்களை விட்டும் நன்மை பயக்கும் நல்ல விசயங்களை விட்டும் ரொம்ப தூரமாகிப்
போவோம். வலைப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளதால் படிக்க வில்லை.
உங்கள் பதிவு கண்டு 'உணர' முடிகிறது. நன்றி சென்ஷி.

♠ யெஸ்.பாலபாரதி ♠ on Thursday, July 01, 2010 5:19:00 PM said...

//கடவுளை நம்புபவர் நம்பாதவர் என்ற கொள்கை ரீதியான அல்லது தத்துவ ரீதியான உரையாடல் விவாதங்களைத் தாண்டி உங்களின் சொல்லாடல்கள் அனைவரையும் துன்புறுத்தும் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.//

நியாயமான கருத்து. ஆமோதிக்கிறேன்.

--

பின்னூட்டங்களில் கவனமாக இருங்கள் சென்ஷி!

rouse on Thursday, July 01, 2010 5:33:00 PM said...

வால்பையன் -உங்கள் கருத்தும்,செயலும் (சாதிசன்றிதல் தர மறுத்தது -உங்கள் மகள் பள்ளி சேர்கைன் போது) வரவேற்க கூடியது என்றாலும்

மற்றவர்களின் (மதத்தை தீவீரமாக நம்புவர்களை )மனதை புண்படுத்தாமல் எழுதுமாறு கேட்டு கொள்கீரன்

-tsekar

நாஞ்சில் பிரதாப் on Thursday, July 01, 2010 6:17:00 PM said...

சென்ஷீ. இதெல்லாம் வெறும் அதிமேதாவித்தனம் மட்டுமே வேறொன்றுமில்லை...

குறைகுடம் தழும்பத்தான் செய்யும்... ஒண்ணும் பண்ணமுடியாது...

வால்பையன் on Thursday, July 01, 2010 6:23:00 PM said...

http://valpaiyan.blogspot.com/2010/07/blog-post.html


பதில் போட்டுட்டேன் தோழரே!

சரியா இருக்கா பார்த்து சொல்லுங்க!

கோவி.கண்ணன் on Thursday, July 01, 2010 6:54:00 PM said...

//உங்களுடைய பதிவு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. //

தமிழ் முஸ்லிம்கள் எதையெல்லாம் படிக்கலாம் என்கிற கட்டுப்பாடு அரபுநாடுகளில் வழியுறுத்தப்படுகிறதா ? பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இது போன்ற கட்டுபாடுகளை அவ்வரசு விதிக்கிறதா ?

சென்ஷி விளக்கவும்.

அரபு நாடுகளில் அல்கொய்தாவின் தகவல்களையெல்லாம் யாரும் இணையம் வழியாக படிப்பதே இல்லையா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி on Thursday, July 01, 2010 7:19:00 PM said...

வாதம், பிரதிவாதம்
கருத்து, மாற்றுக்கருத்து
விமர்சனம், விமர்சனத்துக்கான பதில்
விவாதம் என்கிற வகையில் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்

அதை விடுத்து வெறும் பதிவுகளையும் வெறும் எதிர்பதிவுகளையும் இட நேருமாயின் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் சூடான இடகைகளை எடுத்து விடும்!
சூடு தேவைக்கு அதிகமாக போய்விடுவதால்!

பீர் | Peer on Thursday, July 01, 2010 7:56:00 PM said...

நானும் அன்பாகவே கேட்டுக்கொள்கிறேன், வால்.

நிறுத்திவிடுங்கள்.

தேவகோட்டை ஹக்கீம் on Thursday, July 01, 2010 7:58:00 PM said...

'வால்பையன் மற்றும் ராஜனுக்கு' எனது கடுமையான கண்டனங்கள்.உங்கள் பதிவுக்கு நன்றி.

சென்ஷி on Thursday, July 01, 2010 7:59:00 PM said...

//ஆரூரன் விசுவநாதன் has left a new comment on your post "வால்பையன் மற்றும் ராஜனுக்கு...":

//உங்களின் மத துவேஷம் என்பது மனிதத்தன்மை தாண்டியுள்ளது. மதசகிப்புத்தன்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்தான் உங்களின் சமீபத்திய இடுகை உள்ளது. உணர்ந்து எழுதுகிறீர்களா இல்லை வழக்கம்போல வாந்தி எடுக்கிறீர்களா என்று தெரியவில்லை//


இதே கேள்வியை தமிழ் ஓவியாவிடமும், வினவு விடமும் இதற்கு முன் கேட்டிருக்கிறீர்களா? சென்ஷி..........

போங்கய்யா....நீங்களும் உங்க சகிப்புத்தண்மையும்.....வெங்காயமும்
//

ஆருரன்.. மற்ற சில பின்னூட்டங்களை மட்டுறுத்தியபொழுது உங்கள் பின்னூட்டம் அழிந்துவிட்டது. மன்னிக்க.. அதனால் காப்பி செய்துள்ளேன்.

வவ்வால்..

நீங்கள் உங்கள் கருத்துகளை என் மீது சுமத்துங்கள். பதிவிற்கு சம்பந்தமில்லாத மற்றவர்மீது குற்றங்கூறுதலை நான் ஆதரிப்பதில்லை. நன்றி

கோவி கண்ணன்..

வால்பையன் மற்றும் ராஜன் இணைந்து எழுதும் ஆல் இன் ஆல் பதிவு சில வாரங்களாக அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. நான் இதை வால் பையனிடமும் குறிப்பிட்டிருக்கின்றேன். மற்றபடி அமீரக இணைய சட்டவிதிகளைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. யாரிடமேனும் விசாரித்து சொல்கின்றேன். நன்றி

சென்ஷி on Thursday, July 01, 2010 8:01:00 PM said...

சில பின்னூட்டங்கள் பப்ளிஷ் செய்தும் ஆகவில்லை. ப்ளாக்கர் தொல்லை செய்கிறது.. வால்பையனின் பதிவிலும் ஒரு பின்னூட்டமிட்டு அழிந்துவிட்டது. மீண்டுமொருமுறை முயற்சிக்கின்றேன்.

சென்ஷி on Thursday, July 01, 2010 8:02:00 PM said...

@ கோவி கண்ணன்..

//
அரபு நாடுகளில் அல்கொய்தாவின் தகவல்களையெல்லாம் யாரும் இணையம் வழியாக படிப்பதே இல்லையா ?//

மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை. நான் தமிழ்மணத்தைப் பார்த்துத்தான் அல்கொய்தாவினைப் பற்றிய செய்திகளை தெரிந்துக்கொள்கின்றேன். மற்றபடி தினத்தந்தி, தினமலரிலும் விவரமாக வந்துவிடுகிறது. நன்றி.

மார்கண்டேயன் on Thursday, July 01, 2010 8:27:00 PM said...

உங்களின் மத துவேஷம் என்பது மனிதத்தன்மை தாண்டியுள்ளது. மதசகிப்புத்தன்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்தான் உங்களின் சமீபத்திய இடுகை உள்ளது. உணர்ந்து எழுதுகிறீர்களா இல்லை வழக்கம்போல வாந்தி எடுக்கிறீர்களா என்று தெரியவில்லை. உங்களுடைய பதிவு அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் நண்பர்கள் மூலமாக உங்கள் பதிவை படித்து அதிர்ச்சியடைந்தேன்.

"இதே போன்ற அதிர்ச்சி வேறு நம்பிக்கைகளை பற்றி எழுதும் பொழுது ஏற்படாதது ஆச்சரியமே . . . "

கோவி.கண்ணன் on Thursday, July 01, 2010 8:38:00 PM said...

//"இதே போன்ற அதிர்ச்சி வேறு நம்பிக்கைகளை பற்றி எழுதும் பொழுது ஏற்படாதது ஆச்சரியமே . .//

ரிப்பீட்டு

கோவி.கண்ணன் on Thursday, July 01, 2010 8:38:00 PM said...

உங்களுக்கு தொடர்பில்லாத சர்சைகளில் நீங்கள் அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்வதன் காரணம் புரியவில்லை. அவரது இடுகைகளை தடை செய்தவர்களின் சார்பாக நீங்கள் அவரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறீர்களா ?

புதசெவி.

வெண்பூ on Thursday, July 01, 2010 10:31:00 PM said...

கோவி.க‌ண்ண‌ன், அந்த‌ ப‌திவை விட‌ மிகுந்த‌ அதிர்ச்சியை உங்கள் பின்னூட்ட‌ம் த‌ருகிற‌து. க‌ருத்து சுத‌ந்திர‌ம் என்று நீங்க‌ள் சொல்ல‌க்கூடும், க‌ண்ட‌ங்க‌ள் தெரிவிக்க‌ என‌க்கும் அதே சுத‌ந்திர‌ம் இருப்ப‌தால் உங்க‌ளுக்கு என் க‌ண்ட‌ன‌ங்க‌ள்... :(

smart on Friday, July 02, 2010 5:26:00 AM said...

இஸ்லாத்தைப் பற்றி எழுதிய அந்த இடுகைக்கு எனது கண்டனங்கள் + நீங்கள் எழுதியதால் இந்தப் பதிவுக்கும் எனது கண்டனங்கள். மாற்று மதத்தவர்களை திட்டும் போது நீங்களும் ஜால்ரா தட்டியவர் என்கிற காரணாத்தால்.

smart on Friday, July 02, 2010 5:28:00 AM said...

ஆதாரங்கள் கேட்டால் பதிவிட முடியும். முதலில் உங்களைப் போன்றவர்களால் தான் தூய இஸ்லாம் மாசுபடுகிறது.

கிருஷ்ணமூர்த்தி on Friday, July 02, 2010 12:09:00 PM said...

திரு சென்ஷி,

வால்பையனது பதிவுகள் கொஞ்சம் எல்லை மீறிய வார்த்தைகளோடு இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்! அந்த சொல்லாடல்களைத் தவிர்த்து விடும்படி வால் பையன், ராஜன் இவையும் உங்களோடு சேர்ந்து நானும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் அதற்கு அடுத்தாற்போல சொல்லியிருக்கிற வரிகள்.......

/உங்களின் மத துவேஷம் என்பது மனிதத்தன்மை தாண்டியுள்ளது./

/மதசகிப்புத்தன்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில்../

கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?

இந்தப் பதிவே, சகிப்புத் தன்மையுள்ள ஒரு நாட்டின் இறையாண்மையை அசைத்துப் பார்க்கும், அதனால் அமீரகத்தில் தடை செய்யப் படும் என்றால் இதை விடப் பெரிய நகைச் சுவை, முரண்பாடு வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஜெய்லானி on Friday, July 02, 2010 12:57:00 PM said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

கோவி.கண்ணன் on Friday, July 02, 2010 1:07:00 PM said...

//வெண்பூ said...

கோவி.க‌ண்ண‌ன், அந்த‌ ப‌திவை விட‌ மிகுந்த‌ அதிர்ச்சியை உங்கள் பின்னூட்ட‌ம் த‌ருகிற‌து. //

வெண்பூ,

ரெஸ்ட் எடுங்க.....டயர்டானால் திரும்பவும் ரெஸ்ட் எடுங்க.
:)

நான் கேட்டது தமிழ் இஸ்லாமியர்கள் மீது அரபு நாடுகள் இவ்வளவு அன்பு செலுத்துவது குறித்தது மட்டுமே. இதில் நீங்கள் அயர்சி அடைய என்ன இருக்கிறது என்றே தெரியல

எம்.எம்.அப்துல்லா on Friday, July 02, 2010 7:37:00 PM said...

கோவி அண்ணா,

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரபு முஸ்லீம்கள் எங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. மற்றும் அரபு நாட்டு முஸ்லீம்கள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் வந்து தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டு பின்ன்ர் வால்பையனின் தளத்தில் வந்ததை படித்து அறிந்துகொள்ளவில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட யாரோ ஒரு இஸ்லாமியர்தான் அதைப் படித்து அந்தத் தளத்தைத் தடை செய்யச் சொல்லி இருக்கக்கூடும்.ஆக தடை செய்யச் சொல்லிப் பரிந்துரைத்து இருப்பதும் கண்டிப்பாக ஒரு தமிழ் இஸ்லாமியராகத்தான் இருக்கக்கூடும்.

வெண்பூ on Saturday, July 03, 2010 6:52:00 AM said...

கோவி.க‌ண்ண‌ன்,

ரெஸ்ட் எடுத்து ட‌ய‌ர்டாகி ரெஸ்ட் எடுக்க‌ நான் என்ன‌ கொட‌நாட்டுல‌யா இருக்கேன்? ரெஸ்ட் எடுங்க‌ என்ற‌ வார்த்தையில் உள்ள‌ உள்குத்து என‌க்கு உண்மையில் புரிய‌வே இல்லை.

என்னை அதிர்ச்சியாக்கிய‌து நீங்க‌ள் அல் கொய்தா ப‌ற்றி பேசிய‌தே. நீங்க‌ள் இங்கே போட்டிருக்கும் இதே பின்னூட்ட‌ம் வால்பைய‌னின் ப‌திவிலும் உள்ள‌து, ஆனால் இங்கே ம‌ட்டுமே அல்கொய்தா பற்றிய‌ கேள்வியை எழுப்பியிருக்கிறீர்க‌ள்.

நேர‌டியாக‌வே கேட்கிறேன். ஒரு இஸ்லாமிய‌னுட‌ன் வாத‌ம் புரியும்போது ம‌ட்டும் உங்க‌ளுக்கு அல் கொய்தா நினைவில் வ‌ருவ‌து எத‌ற்காக‌? What are you trying to prove?

வ‌லைப்ப‌திவுக‌ளில் இவ்வ‌ள‌வு த‌ர்ம‌நியாய‌ங்க‌ள் பேசும் நாமே அடுத்த‌வ‌ரை காய‌ப்ப‌டுத்தும் இப்ப‌டியான‌ பொது புத்தியினை வெளிப்ப‌டுத்துவ‌து என‌க்கு வ‌ருத்த‌மாக‌ இருக்கிற‌து.

மை நேம் ஈஸ் கான் ப‌ட‌ம் பாத்திங்க‌ளா கோவி?

அத்திவெட்டி ஜோதிபாரதி on Saturday, July 03, 2010 9:03:00 AM said...

மை நேம் ஈஸ் கான் ப‌ட‌ம் பாத்திங்க‌ளா கோவி?//

கிந்தி தெரியாம கிந்திப் படத்தப் பாத்து என்ன பண்றது?
அதுக்கு ஒரு மொழி பெயர்ப்பாளரை வேறத் தேடனும்.
ஆவுற காரியமா?

சென்ஷி on Saturday, July 03, 2010 9:19:00 AM said...

@ SMART

ஸ்மார்ட்,

நீங்க யாரு என்னன்னு எனக்குத் தெரியாது. உங்க கொள்கை, பதிவு, இழவு, இத்யாதி எதையும் நான் படிச்சதும் இல்லை.

மத நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்களில் நானும் பலமுறை கலந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய கடவுள் உசத்தி உன்னுடையது உசத்தி என்ற பேச்செல்லாம் என்னிடம் எடுபடுவதில்லை.

கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை பிரச்சாரம் என்பதெல்லாம் நல்ல விசயங்கள். அவற்றை செய்வதாகச் சொல்லி விசம் போல ஆபாசக் கருத்துக்களை எழுதுபவர்களைப் பற்றித்தான் நான் இடுகையிட்டுள்ளேன். மற்றபடி என்னைப்பற்றின உங்கள் கருத்து மிகச்சரியானதுதான். நான் முஸ்லீம் என்று சொல்லிக்கொண்டு எங்கும் பெருமைப்பட்டதுமில்லை. மாற்று மதத்தவரை பார்த்து தூஷித்ததுமில்லை.

சுல்தான் on Thursday, July 08, 2010 12:35:00 PM said...

மேலும் சில விளக்கங்கள் என் பதிவில்
http://islamicfold.blogspot.com/2010/07/blog-post.html

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com