இந்தக்கணம் முடிவதற்குள்
ஏதோவொரு கையில்
சிக்கியிருக்கக்கூடும்
மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு
இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன
சில நிமிட இடைவெளிகள்
போதும் நமக்கு
உன்னிடமும் வந்து சேரக்கூடும்
தொட்டுப்பார்..அனுபவி..சுவாசி..
பின்னர் காற்றை பறக்கவிடு
விரவுதல்களில் பற்றிப்பிடித்து
இடைவெளிகளின் மீதியில்
தப்பிப்பிழைத்து
மிதக்கின்ற காற்றுக்கும்
இருக்கின்றது ஏதோவொரு காரணம்