வான் தொடும் தூரத்தில்
கிடைத்த மேகத்தின்
உச்சியில் மிச்சமிருக்கிறது
உச்சியில் மிச்சமிருக்கிறது
ஒரு சொட்டு நீர்
இரண்டு நெடுங்கோடுகளுக்கு
இடைப்பட்ட பள்ளத்தில்
தனக்கான தேக்கங்களில்
நிறைத்துக்கொண்டு
சென்றது ரயில் வண்டியின் பெட்டிகள்
நாளை பொம்மை கிடைக்கும்
என்ற நிம்மதியில்
உறங்குகிறது ஒரு குழந்தை
நனைந்து விடக்கூடாதென்று
மழையை வேடிக்கை பார்த்து
ஒதுங்கி நிற்கிறேன்
இன்னமும் விடாத தூறலை ரசித்தபடி..
0 comments:
Post a Comment