படம் பார்த்துவிட்டு வந்தவுடன் அதே மனநிலையுடன் எழுதும் பதிவு இது..!
பெனாத்தலார் இதை விரிவாக அலசி விட்டாலும் அதன் ஈரம் காயும் முன் வரும் படத்தை பற்றிய ஒரு விமர்சனம்...!
இதுவரை குழந்தைகளுக்கு பயம் என்பதை அடுத்த வீட்டு மீசை அங்கிளை காட்டி சாப்பாடு ஊட்டுவதும், பேய் பயம் காட்டி தூங்க வைப்பதும் என்றுதான் நினைத்திருந்தேன். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத குழந்தைகளை அவர்களின் எதிர்காலம் என்ற ஒற்றைசொல்லிற்காக அடித்து அனுப்பியவர்க்கும் இந்த படம் சரியான பாடமாக அமைகின்றது...!
எளிமையாக ஆரம்பிக்கிறது கதை. எல்லா பாடத்திலும் பெயிலாகும் தம்பி, எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்கும் அண்ணன்... இரு குழந்தை வளர்ப்பிலும் வேறுபாடு காண முடியாத பெற்றோர். சிறியவனின் பாடத்தின் மேல் கவனமில்லா தன்மைக்கு காரணம் தேட இயலாமல் அவனையே காரணமாக்கி கண்டிப்பான ஹாஸ்டலில் சேர்க்கின்றனர். அதன் காரணத்தை அந்த பள்ளிக்கு வரும் தற்காலிக ஓவிய ஆசிரியரான அமீர்கான் கண்டறிந்து அவனைப்பற்றி அவனுக்கும், மற்றவர்க்கும் காட்டி ஜெயிக்க வைப்பதே கதை.
குழந்தைகள் யாரிடமாவது கண்டிப்புடன் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் கெட்டுவிடுவார்கள் என்று நினைவில் மண்ணள்ளி போட்டு மூடி வைக்கிறது. குழந்தைகளது எதிர்காலத்தை பற்றிய அச்சத்தை குழந்தைகளின் மேல் திணிக்க முயலும் அத்தனை பேரையும் செருப்பால் அடித்ததைப்போன்ற உணர்வு. சரியா படிக்காட்டி மூட்டைதான் தூக்கணும். பெயிலானா மாடு மேய்க்கத்தான் போகனும் என்ற வசவுகளை குழந்தைகள் மேல் திணிக்கும்போது அவர்களின் கற்பனை எங்கு சென்றிருக்கும்.. படத்தில் சிறுவனின் மேல் ஏறும் கணித பூச்சிகளும் ஆங்கில பூச்சிகளும் நம்மையும் சேர்த்து பயப்பட வைக்கின்றன. அவன் ஒரு பூச்சியை அடித்து கொல்லும்போது அந்த இடத்தில் சந்தோஷம் வருகிறது. ஆனால் அதன் பிறகு...!
தங்களின் அச்சங்களை சரிவர சொல்லத்தெரியாத பிஞ்சுகளின் மீது தமது கற்பனை சுமைகளை ஏற்றி வைக்கும் பெற்றோர்கள்.. ப்ளீஸ் கண்டிப்பாக இந்த படத்தை பார்த்துடுங்க.. மொழி புரிவதில் நேரும் சிக்கல்கள் என்பதில் கடினமிருப்பதாக எனக்கு தோணவில்லை. ஏனெனில் எல்லா வர்க்கத்துக்கும் குழந்தைகளை பற்றிய படத்தின் மொழி நன்றாக புரியும் வகையில் தெளிவாக இருக்கின்றது.
படத்தின் சிறுவனி(ரி)ன் நடிப்பு அபாரம் என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது. சில குப்பைகளுக்கு நடுவில் ஒரு பெரிய வைரம் சிறுவனி(ரி)ன் ரூபத்தில் ஜொலிக்கின்றது. காற்றடிக்கும் வேகத்தில் குப்பைகள் மலையின் மீது அமர்ந்திருக்கலாம். ஆனாலும் இந்த வைரம் ஒரு நாள் கிரீடத்தில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
அமீர்கானின் தைரியத்திற்கு ஒரு ராயல் சல்யூட். குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் என்றில்லாமல் குழந்தைகளுக்காக பெற்றோர் காண வேண்டிய படம் என்று அடித்து சொல்ல வைத்திருக்கிறார். உண்மை சுடும் என தெரிந்தும் தைரியமாக எல்லோருக்கும் சூடு வைத்திருக்கும் கான் கலக்கல்தான். லகானின் கமர்ஷியல் வெற்றியில் கொஞ்சமும் பங்கு போடாமல் மிகச்சிறப்பான முயற்சியில் ஜெயித்து நிற்கின்றார் ஒரு இயக்குநராகவும்..!
படத்தில் ஊனமுற்ற நண்பனாக வருபவரும், அண்ணனாக வருபவரும் சிறந்த தேர்வு.. எந்த காட்சியையும் வீணாக்காமல் நம்மையும் மகிழ்ச்சியூட்டி பயமுறுத்தி விளையாடியிருக்கிறது படத்தின் பிண்ணனி இசை. அமீர்கானைத்தவிர தெரிந்த முகங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் அத்தனை கதாபாத்திரங்களையும் எங்கேயோ கண்ட முகமாக தோண வைக்கின்றது திரைக்கதை. அதிலும் அந்த இறுதிகாட்சி.. சிறுவன் ஓவிய போட்டியில் வரைந்து விட்டு அதை அமீர்கானிடம் காட்ட வருவதும், அமீர்கான் என்ன வரைந்தார் என்று பார்த்துவிட்டு கண்கலங்குவதும் வர்ணிக்க வார்த்தைகள் போதாது..
படத்தின் இடையே வருகிற பாடல்களில் சிறுவனை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு பெற்றோர் திரும்பும்போது வருகிற பாடல் முக்கியமான ஒன்று. இந்த பாடலின் சாயலில் நம் பதிவர் ஒருவர் ஏற்கனவே பதிவாக்கியிருப்பது சந்தோஷமான ஒன்று.. அந்த கவிதை வரிகள்..
தேன் என்றால் தண்ணீ,
மம் என்றால் சாப்பாடு ,
இத்தனை பெரிதாகியும்
இது அறியாத தீதீ(அக்கா)
மேக்கு என்றால் எனக்கு ,
ஸார் என்றால் ஸ்டார்,
ஊன் என்றால் மூன்,
இது தெரியாத மேம்.
ஒன்றும் தெரியாதவங்களுக்கு
மத்தியில் நான்.
அம்மா நீ எங்கே?
அந்த பதிவர் இவர்தான்..
கவிதையை பதிவுல தேடாதீங்க.. பின்னூட்டத்தில் பாருங்க..
ஆனாலும் படம் பார்த்தபின் எழுந்த இரு உறுத்தல்களில் ஒன்று கோபி எழுப்பி வைத்தது. நல்லபடம் யார் நடித்தாலும் ஜெயிக்கும் என்பது என் வாதம். ஆனால் அமீர்கானின் படம் என்பதாலேயே இலவச விளம்பரத்தில் படம் ஜெயிக்கிறது என்பது அவன் வாதம்.
இரண்டாவது.. தன் பையன் சரிவர படிக்க மாட்டேன் என்கிறான் இது அந்த வியாதிதான் போல என்று நினைத்து மனநல மருத்துவரிடம் எந்த பெற்றோரும் முன் அனுமதி வாங்கிவிடுவார்களோ என்றுதான்..!
Saturday, December 29, 2007
Wednesday, December 19, 2007
சதுரங்கக் குதிரை

இயல்பாக நடக்கின்ற விஷயங்கள் முரண்பட்டு போகும்போது அதன் காரணங்களை தேடாமல் இயைந்து செல்பவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் எந்த காரணமும் என் மனதிற்கு பிடித்ததாய் இல்லாமல் போவதுதான். மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு வியாழன் இரவு, ஷார்ஜாவில் மாப்பி.கோபியை சந்தித்து திரும்பும்போது, தம்பி.கதிர் சிலாகித்து கூறியிருந்த நாஞ்சில் நாடனின் சதுரங்கக் குதிரையை தந்தான். கூடவே ஒரு எச்சரிக்கையையும் சேர்த்திருந்தான்.
"முடிஞ்சா இத முழுசா படிக்காம இருக்க டிரை பண்ணு!"
இல்லாமை, இயலாமை, வறுமை இந்த மூன்றுமே கொடுமைதான். அதனினும் சுமையாய் தலைமையில் நரைமையை தடவி, தன் முதுமை அருகில் வரும்போது ஆதரவாக முதுகு தொடும் பெண்மை நாடாதவனின் தனிமை பயணப்போக்குதான் இந்த கதை. (ரொம்ப ஓவராயிருக்கோ!). எளிமையாக கூறுவதென்றால் இது ஒரு பிரம்மச்சாரியின் கதை. :))
சமூகத்தில் திருமணமாகா பெண்கள் நிலையை அதிகம் அறியப்பட்ட மனதில், ஒரு ஆண் திருமணமாகாமல் இருக்கும்போது நிகழ்பவைகளை அருகில் சென்று பார்க்கும்படியாக படிப்பவர்களை வசப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இதில் முக்கியமான ஒன்று நாயகன் காதல் வசப்பட்டவனோ, அல்லது காதலில் தோற்றவனோ அல்ல..
நாராயணன் என்ற ஒற்றை மனிதனின் வாழ்வோட்டங்களே கதை. மும்பை என்று இப்பொழுது கூறப்படும் பம்பாயில் தனியனாக நெருங்கிய நட்புகளின்றி வாழ்க்கையை அதன் போக்கில் ஓடவிட்டு அதன்போக்கிலேயே வெளிவட்டத்தை வேடிக்கை பார்க்கும் நாயகன். தாயின் மரணத்திற்கு செல்ல இயலாமல், உறவினர்களின் பேச்சுக்களை தாங்கிக்கொண்டு தன் வறுமையை எண்ணி நொந்து போகிறான். திருமணம் வேண்டாமென எண்ணாமல் சில பெண்பார்க்கும் நிகழ்விலும் கலந்து அனுபவங்கள் பெறுகிறான். திருமணம் செய்யாததால் இவனை வேறெப்படியும் யோசிக்க விடாமல் தன் கற்பை சில நேரம் கெடுத்தும் வைக்கின்றான். இந்த கதையின் முடிவை படித்து முடித்தபின் எல்லோருக்குமே சொல்லாமல் வைத்திருக்கும் அன்பினையோ காதலையோ சொல்லிவிட தூண்டும். எனக்கும் தூண்டியது. ஆனால் இன்னும் சொல்லவில்லை!
கதையில் நாராயணன் பயணம் போகும் காட்சிகளும் வர்ணனைகளும் அற்புதம். ரயில் பயண அனுபவம் பெற்றவராயிருப்பின் (எனக்கு அதிகம்!) இந்த வர்ணனைகள் அதிக சுகம் தரும். ஏதோ பழகிய நண்பனுடன் பிரயாணிப்பது போன்ற உணர்வு வந்தது. நாராயணனுடன் வேலை செய்யும் குட்டினோ கதாபாத்திரத்தை தழுவி சமீபத்தில் வெளியான ஹிட்டான ஒரு ஹிந்தி படத்தில் காண நேர்ந்த ஞாபகம் வந்தது.
கதையில் நாராயணன் சந்திக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் துணைக்கு ஏங்கும் வகையில் அமைகின்றனர். சிலருக்கு வாழ்க்கைத்துணை சரிவர அமைவதில்லை. சிலருக்கு பேச்சுத்துணை அமைவதில்லை. ஆயினும் இறுதிவரை நாராயணனுக்கு துணையாக அவனுக்கு பிடித்த சிகரெட்களும் ஒரு மதுபுட்டியும் கிடைக்கட்டுமென ஆண்டவனை வேண்டுவோம். ஏனெனில் நாம் அனைவருமே ஒரு வகையில் நாராயணனாயிருப்பவர்கள் தான்.
சதுரங்கத்தில் குதிரையின் ஆட்டமுறை சற்று வித்தியாசமானது. இரண்டு கட்டம் நேரே சென்று ஒரு கட்டத்தில் வளைந்து விடும். அந்த வளையும் கட்டமும் எந்த பக்கத்திலும் திரும்பும். குதிரைக்கு முன்னே பின்னே வேறு காய்கள் இருந்தாலும் அதற்கு எந்த இடையூறுகளும் கிடையாது. நாராயணனின் மனப்போக்கிற்கு ஏற்ற மிகச்சிறந்த தலைப்பு.
திருமணமானவர்கள் இந்த கதையை படிக்கலாம்.. நல்ல கதை..
திருமணமாகாதவர்கள் கண்டிப்பாக படியுங்கள்.. ரொம்ப நல்ல கதை..
புத்தகம் : சதுரங்கக் குதிரை
ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி, கோயம்புத்தூர் 641 001
டிஸ்கி:
இப்புத்தகம் ஆசிப் அண்ணாச்சியிடமிருந்து அய்யனார் வழியாக தம்பியை கடந்து கோபி, என்னிடம் கொடுத்தது.

Thursday, December 13, 2007
Wednesday, December 12, 2007
ஐ மிஸ் யூ?
அது எப்படின்னு தெரியல. பத்மனை பாத்ததுமே பத்மினிக்கு புடிச்சுப்போச்சு. பத்மனுக்கும் அப்படித்தான்னாலும் மனசுக்குள்ள இன்னும் அவளை லவ் பண்றானான்னு தீர்மானிக்கல. காரணம்...!
எதேச்சையா நடந்த செயல்கள்ன்னு சொன்னாலும் பத்மினி மட்டும் தீர்மானமா இருந்தா. எதிர் வீட்ல குடிபோனது, ஒரே பையன்.. ஒரே பொண்ணு, பொருத்தமான பேரு, அழகான ஜோடி... மேட் ஃபார் ஈச் அதர்ங்கற மாதிரி...
ஆனா பத்மனுக்கு இதுதான் பிரசினை. பொருத்தமான ஜோடிங்கறதுல இல்ல. அத நான் இங்கிலீஷ்ல சொன்னேன்ல அதான். பையனுக்கு வதக்கிப்போட்டாலும் (எத்தனை நாள்தான் சுட்டுப்போடுறது) இங்கிலீஷ் வராது. இவனுக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்த ஆங்கிலம். அதனாலேயே கற்றது தமிழ் படத்த இன்ட்ரஸ்டிங்கா... சாரி... அய்யோ மன்னிச்சுக்குங்க.. விருப்பத்தோட பார்த்தான்.
ஆனா அம்மணி பத்மினி, பீட்டர் பார்ட்டி.. சும்மா இல்லீங்க.. ஊட்டி கான்வென்ட்ல படிச்ச தக்காளி.. இவன் முன்னாடி சும்மாங்காச்சும் பீட்டர் வுடுற சமயம் "அவளா நீ"ன்னு சொல்லி பையன் ஒதுங்கிட்டான். ஆனாலும் பொண்ணு மனசு கேக்கல.
ஒரு நா.. பிரண்டு கல்யாணத்துல பத்மன சைட் வுட்டுக்கிட்டு இருந்தவ, பத்த வைக்காம இருந்தா அரிசி பொங்காதுன்னு தெரிஞ்சுகிட்டு பையன் கிட்டக்க வந்ததுமே, "ஹாய்.. அயாம் பத்மினி"ன்னு சொல்லி எச்சிக்கைய நீட்டுனா. பத்மனுக்கு கூவத்துல குளிச்சுட்டு எந்திரிச்சு வந்ததைவிட கேவலமா இவளை லுக்கு விட்டுட்டு ரசத்த ஊத்தாம வேகமா போயிட்டான். பின்ன... கேள்வி புரிஞ்சாதானே பதில் சொல்றதுக்கு. இவன் மனசு மாதிரி அப்பளம் நொறுங்கற சத்தம் அவன் பின்னாடி கேட்டது.
நைட்டு பிரண்டு வாங்கி குடுத்த ஓசி பீர அடிச்சு மல்லாக்கப்படுத்து யோசிக்கையில இவ நமக்கில்லைன்னா வாழுறதே வீண்னு சொல்லிட்டு அவளை மடிக்கறத பத்தி ஐடியா தேட ஆரம்பிச்சான்.
அசிங்கப்பட்டத நிவர்த்தி செஞ்சுக்கவாவது இங்கிலீஷ் கத்துக்கணும்னு ஒத்தக்கால்ல நின்னு அவங்க தெரு தாண்டி மூணாவது தெருவுல இருக்கற கோச்சிங் சென்டர்ல தினம் சாயங்காலம் 5 மணிக்கு போக ஆரம்பிச்சுட்டான்.
கொஞ்சங்கொஞ்சமா 'நீ'ங்கறதுக்கு, 'நான்'ங்கறதுக்கு என்ன சொல்றதுன்னு கத்துக்கிட்டான். ஆனா அவனுக்கு ரொம்ப பெருமை கையில ஒரு நோட்ட தூக்கிட்டு டெய்லி அந்த பக்கம் ரூட் வுடறதுதான்.
பத்மினிக்கோ இவனை பாக்காம இவன்கூட பேசாம பொழுது போக மாட்டேங்குது. மனசுக்குள்ள காதல் வீடு கட்டி இவன அதுல வாடக வாங்காம தங்க வச்சுட்டா. சரி மறுக்கா ஒருதபா டிரை செய்வோம்ன்னு ஒரு நா அவன் வர்றப்ப முன்னாடி போய் நின்னா.
மொதோ தடவையா பத்மினிக்கு வெக்கம்ன்னா என்னன்னு புரிய ஆரம்பிச்சது.
அவன் முகத்த நிமிர்ந்து கூட பாக்க முடியல. மெல்ல மென்னு முழுங்கிட்டு பொறுமையா, "ஐ மிஸ் யூ"ன்னு சொல்லிட்டு அமைதியா நின்னா..
அவன் இப்ப தைரியமா அவ கண்ண பார்த்தான். அவ கிட்டக்க வந்தான். அவனுக்குள்ள ஒரு தைரியம் வந்துடுச்சு. பத்மினிக்கு இதயம் வெடிச்சுடும் போல வேகமா துடிச்சது.
கடைசியா சொல்லிட்டான்.
"மிஸ்டர்!"

Friday, December 07, 2007
"வீக் என்ட் ஜொள்ளு" தம்பிக்காக
வாழ்த்துன்னு வாயால சொல்றதவிட
வாயத்தொறன்னு கேக்கு ஊட்டுறதவிட
வாங்கிக்கடான்னு கிஃப்ட்டு தரதவிட
வந்து பாருன்னு பதிவு போடுறதவிட
என்ன செஞ்சா உனக்கு புடிக்கும்ன்னு எங்களுக்கு தெரியாதா தம்பி :)))
சீக்கிரமே கல்யாணம் பிராப்திரஸ்த்து..... (எல்லோருக்கும்தான் தலைவா...)
டிஸ்கி : இந்த வார வீக் என்ட் ஜொள்ளு தம்பிக்கு மட்டும்...

Thursday, December 06, 2007
பாசக்கார குடும்பத்தினரின் கும்மிப்பாட்டு-நிறைவுப்பகுதி
முதல் பாகம் இங்கே......
இம்சை அரசியை சுற்றி எல்லோரும் அமர்ந்திருக்க, படு சுவாரசியமாய் கதையை சொல்லிக்கொண்டிருந்தார் இம்சை.
"அந்த பாட்டி சுட்டதோ ஒரே ஒரு வடை. அந்த வடைய ஹீரோ காக்கா தூக்கிட்டு பறந்து போய் ஒரு மரத்துல உக்காந்துடுது. அந்த வடைய, பசி மயக்கத்துல இருந்த தன்னோட தங்கச்சிக்கு வாங்கிட்டு போறதுக்காக காத்திருக்குற அபி அப்பா ஹீரோ காக்கா மேல கோபமாயிடுறாரு. ஹீரோ காக்கா எடுத்துட்டுப் போன வடை தவறி பாவனா மேல விழ, பாவனா மயக்கத்துக்கு போயிடுறாங்க. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கண் விழிக்கற பாவனா பழசெல்லாம் மறந்து போயி நான் யாருன்னு கேக்க, ஹீரோ காக்காவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. பழக்க தோஷத்துல காக்கான்னு கத்த, பாவனா ஓ நாமளும் காக்கா போலருக்கு நினைச்சுக்குறாங்க. ஹீரோவுக்கு சோறு வைக்கறது, தங்கியிருக்கற மரத்துக்கு கீழ கோலம் போடுறதுன்னு காக்கா மனச டச் பண்ணிடுறாங்க.
ஒரு கட்டத்துல ஹீரோவும் பாவனாவ லவ் பண்ண ஆரம்பிக்க, அப்பத்தான் தெரியுது பாவனாவோட அண்ணன் அபி அப்பான்னு. அப்புறமா ஒரு நாள் மூன்றாம் பிறை படத்த அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவர்ல உக்காந்து பாக்கறப்ப ஹீரோவுக்கு தெரியுது. பாவனாவுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்தா நாம மறந்து போயிடுவோம்ன்னு. ஆனாலும் காக்காவுக்கு பாவனா மேல காதல்ங்கறது ஓவர்ங்கற நினைப்புல பாவனாவ அவங்க அண்ணன் கிட்ட சேத்து வைக்க பறந்து போகுது"
இம்சை உணர்ச்சி பூர்வமாக கதை கட்ட ஆரம்பித்திருந்தார்.
மறுநாள்...
தளர்ந்த நடையுடன் மங்கை அக்கா மெல்ல டாக்டரின் அருகில் சென்று தழுதழுத்த குரலில், "டாக்டர்! நீங்களாச்சும் உண்மைய சொல்லுங்க. இங்க என்னைய வச்சு யாரும் காமடி, கீமடி பண்ணலையே!"
டாக்டர், "சேச்சே.. அப்படில்லாம் நடக்க விட்ருவோமா? இங்க பாரு, எல்லோரும் ஷூட்டிங்க்கு ரெடியாகிட்டாங்க. நீ டைரக்டர். எல்லோரையும் அதட்டி உருட்டி வேலை வாங்க வேண்டியவ, நீயே இப்படி உக்கார்ந்திருந்தா எப்படி.. எழுந்திரு"
அந்த பக்கமாக வந்த கோபியிடம் டாக்டர், "என்ன கோபி, ஹீரோ எங்க? ரெடியாகிட்டாரா இல்லையா"
"நேத்துலேந்து முத்துக்கா எழுதி கொடுத்த வசனத்துல பாதிதான் படிச்சுருக்கான். முழுசா படிச்சு முடிக்க எப்படியும் ரெண்டு நாளாச்சும் ஆகும் போலருக்கு"
மங்கை அலுப்பாக, "தம்பி என்ன படத்துக்கான மொத்த டயலாக்கையுமா ஒரே நேரத்துல பேசப்போகுது. இன்னைக்கு என்ன சீனோ அதுக்கான டயலாக்கை மட்டும் படிச்சுட்டு அந்த பேப்பரை எடுத்துட்டு வர சொல்லு."
கோபி பாவமாக, "அவன் படிக்கறதே ஒரு சீனுக்கான டயலாக்குதான்."
மங்கை, "ஆண்டவா.. ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கறே! நீ போய் தம்பிய கூட்டிட்டு வா"
விவரம் தெரிந்து அனைவரும் அங்கு கூடி விட, சிவந்த கண்களுடன் வருகிறார் தம்பி.
தம்பி கையில் வைத்திருக்கும் மொத்த பேப்பரிலிருந்து ஒற்றைப் பேப்பரை உருவி படிக்கிறார் கண்மணி.
"காகா..கா..காகாகா... கக்கககககா...."
டாக்டர் அடுத்த பேப்பரை உருவி படிக்க, அதிலும் அதுவே இருப்பதை கண்டு வாழ்க்கை வெறுத்துப்போகும் டாக்டர், முத்துலட்சுமியிடம், "ஏம்மா! தம்பி, பாவனா கூட நடிக்க ஆசைப்பட்டது தப்பா! இந்த மாதிரி காகாவ தவிர இதுல எதையுமே காணோம். எல்லா பேப்பர்லயும் இதுதான் இருக்குது"
முத்துலட்சுமி, "நீங்க தப்பா நினைச்சுட்டீங்க. போடுறது காக்கா வேஷமா இருந்துட்டு அதுல வள் வள்ன்னு குலைக்கறா மாதிரி வசனம் எழுதுனா ஒரு கேரக்டர் இன்வால்வ்மென்ட் இருக்காது. அதனாலதான் இத்தனை காக்கா. அதுமட்டுமில்லாம காக்காவுக்கு பஞ்ச் டயலாக்கெல்லாம் கூட இருக்குது. தம்பி அந்த பஞ்ச் டயலாக்க பேசிக்காட்டு"
தம்பி தலைநிமிர முடியாமல் நிமிர்ந்து, "காக்கா காகா கா காககா காகாகா"
முத்துலட்சுமி, "என்ன புரியலையா!? தம்பி இன்னும் சரியா மாடுலேஷன புடிக்கல."
குசும்பன் தன் பங்கிற்கு, "ஓ இதுல மாட வேற பிடிக்கணுமா!"
முத்துலட்சுமி, "மாடு பிடிக்கறது இல்ல. மாடுலேஷன். அதாவது, 'நான் ஒரு காக்கா காகான்னு கத்துனா 100 காக்கா காகான்னு கத்துனா மாதிரி' எப்படி!"
குசும்பன் மின்னலிடம் ரகசியமாக, "சிங்கத்தையே சிம்கார்டு லெவல்ல சாச்சு படுக்க வச்சிட்டாங்களேய்யா.."
கண்மணி முத்துலட்சுமியிடம் மெல்லிய குரலில், "நேத்து நைட்டுதானே நான் உனக்கு சீனே சொன்னேன். அதுக்குள்ள 400 பேப்பரும் எழுதிட்டியா!"
முத்துலட்சுமி, "நான் எழுதுனது என்னமோ ஒரு பக்கம்தான். ஆனா அத அப்படியே ஜெராக்ஸ் எடுத்து தம்பிகிட்ட 'நீ பாவனாகிட்ட பேசப்போற ஹெல்த்தி டயலாக் இது. இதுல தான் உன் கேரக்டரே நிக்குதுன்னு சொன்னேன்' பாவம்! தம்பியும் நம்பி படிச்சுட்டு இருக்குது."
கண்மணி டீச்சர், "நாம எடுக்கறது பாசக்கார குடும்ப படம். இதுல பஞ்ச் டயலாக் என்னத்துக்கு... சென்ட்டிமென்ட்ல அடிக்கணும்"
"இருக்கே! அதுக்கும் டயலாக் வச்சிருக்கேன்." குரலை சற்று தேம்பியபடி மாற்றிக்கொண்டு, "'தங்கச்சி! ஆடு வளத்தா, கோழி வளத்தா, நாய கூட வளத்தா.. ஆனா ஒரு காக்காவ வளக்காம விட்டுட்டா'ன்னு சொல்லி அபி அப்பா ஓன்னு அழுவாரு"
அபி அப்பா கண்களிலிருந்து ரத்தக்கண்ணீர் வருகிறது.
ஆயில்யன் செல்போனில் பேசியபடியே வந்து, "என்னது பாவனா மேடம் கிளம்பிட்டாங்களா.. வீட்லேந்து வெளியில வந்துட்டாங்களா.. கார்ல ஏறிட்டாங்களா.. என்ன முதல்ல வலது கால வச்சுத்தான் ஏறுனாங்களா.. அட இடது காலயும் கார்க்குள்ல வச்சுட்டாங்களா.. அய்.. கார் கிளம்பிடுச்சா.."
கோபி டென்ஷனாகி, "ஏய் இன்னா... இப்போ அண்ணி (கவனிக்க :அண்ணி) கிளம்பியாச்சு. அண்ணன் ரெடியாகனும் அதானே. நிமிஷத்துல தலைவர் ரெடியாகிடுவாரு. நீ வா மாமு" என்றபடி தம்பியை கைத்தாங்கலாக அழைத்து செல்ல, அங்கு ஓடி வரும் காயத்ரி, "டீச்சர். நாம ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டோம்!"
கண்மணி, "இல்லைம்மா. நான் தான் இன்னிக்கு யார்க்கும் சிக்கன் வேணாம்ன்னு சொன்னேன். இன்னிக்கு எல்லோருக்கும் சைவம்தான்"
காயத்ரி, "அய்யோ! அது இல்ல டீச்சர். நம்ம குரூப்ல மேக்கப்மென் யாரும் இல்ல. இப்ப தம்பிக்கு, அபி அப்பாவுக்கு யாரு மேக்கப் செஞ்சு விடறது"
சற்று யோசிக்கும் மங்கை, "பேசாம தருமி சார எல்லோருக்கும் மேக்கப் போட்டு விட சொல்லு. அவருக்கு நாடக எக்ஸ்பீரியன்ஸ் நிறைய இருக்கு. இதுக்கு அவர்தான் கரெக்ட்"
"பாவனாகிட்ட ரெகமண்ட் செஞ்சிருக்கோம். கொஞ்சம்கூட கவலைப்படாம மேக்கப் பொட்டிய கைல கொடுத்துட்டாங்க" தனக்குத்தானே புலம்பியபடி அமர்ந்திருக்கும் தருமி, தம்பியை கண்டதும் அலறுகிறார்.
அங்கே தம்பி முழு மலையாள சேட்டனாக உரு மாறி தலையில் கொண்டையிட்டு வடக்கன் வீரகதா மம்முட்டி போல் நிற்க, "நோ...நோ... இது காக்கா கதை. இதுல மலையாள பட மேக்கப்புக்கு வேலை இல்ல.. சேஞ்ச் த காஸ்ட்யூம்!"
"மலையாள கரையோரத்து காக்கான்னு கேரக்டர நாம வேணா டெவலப் செஞ்சிக்கலாமே" தம்பிக்காக பரிந்து கொண்டு வருகிறார் அபி அப்பா.
தருமி, "முடியாது. தம்பியோட கேரக்டருக்காக அசல் காக்காவுல செஞ்ச டிரஸ்ஸ இறக்கைய செஞ்சுட்டு வந்திருக்கோம். நீ இப்படி நிக்கக்கூடாது" என்று சொல்லிவிட்டு தம்பிக்கு மேக்கப் போடுகிறார்.
"ஆக்சுவலி, உனக்கு காக்கா வேஷம் கரெக்டா இல்ல. உன் சைஸூக்கு இந்த ரெக்கைய வச்சா கழுகு மாதிரி இருக்கே.. நோ பிராப்ளம்.. கவலைப்படாம போய் நடி"
"இந்த வேஷத்துல பாவனாவுக்கு நான் ஜோடியா! இது பாவனாவுக்கே அடுக்காது"
குசும்பன் ஆறுதல்படுத்தும் விதமாக தம்பியிடம், "நீ கவலைப்படாத தம்பி, கிராபிக்ஸ்ல பாவனாவயும் காக்காவா மாத்திடுவோம்"
தம்பி கலங்கிய கண்களுடன், "டேய் வேணாம்டா. நல்லதுக்கில்ல. அவ்வளவுதான் சொல்லுவேன்" என்றபடி நகர்கிறார்.
இதை திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கும் அபி அப்பா நேரே இம்சையிடம் ஓடுகிறார்.
"தங்கச்சி, நீ இந்த அண்ணன் மேல வச்சிருக்கற பாசம் உண்மைன்னா சத்தியமா சொல்லு. படத்துல ஒரே ஒரு காக்கா ரோல் தானே. இல்ல பழிவாங்குற நரி ரோல்ல நான் வர்றேனா."
இம்சை அரசி, "என்னண்ணா நீ... உன் தங்கச்சி நான். உனக்குப்போய் அப்படி செய்வேனா! உனக்கு தீபா வெங்கட் கூடவே வர்றா மாதிரி ஒரு அசத்தல் கேரக்டர். தெரிஞ்சுக்கோ" என்று சொல்லிவிட்டு நகர, அபி அப்பா மயிலாடுதுறை கோவிலில் எக்ஸ்ட்ரா மொட்டைக்கு குரங்கு ராதாவை தயார் செய்யனும் என்று மனதில் எண்ணியபடி நகர்ந்தார்.
அந்த இடத்தில் கண்மணியும் மங்கையும் காரசாரமாக பேசியபடி வந்தனர்.
"அதெப்படி முடியும். அபி அப்பா இன்னிக்கு பச்சை கலர் வீட்டுல இருக்கறா மாதிரி படம் புடிங்க. அடுத்த சீன்ல மஞ்ச கலர் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்ல இருக்கணும். இல்லாட்டி விட மாட்டேன் நானு" தனது ஆர்ட் டைரக்ஷன் திறமையை மங்கை அக்காவிடம் நிரூபித்து கொண்டிருந்தார் கண்மணி டீச்சர்.
மைபிரண்டுக்கும் அய்யனாருக்கும் வாக்குவாதம் நடப்பதை கண்டு அங்கு விரைகின்றனர் மங்கை அக்கா, கண்மணி டீச்சர், முத்துலட்சுமி மற்றும் டாக்டர்.
கண்மணி, "இங்க என்னம்மா பிரசினை?"
மைபிரண்டு, "பாருங்க டீச்சர். நான் பாட்டு எழுதனும். டியூன் போடுங்கன்னு அய்யனார்ட்ட சொன்னா அமைதியா நின்னுக்கிட்டு இருந்துட்டு என்கிட்டேந்து அமைதிதான் இசையா கிடைக்கும்ன்னு வம்பு பண்றாரு"
மங்கை, "என்ன அய்யனார், நீங்களுமா இப்படி?"
அய்யனார் அமைதியாய் கண்களை மூடி கைகளை அகல விரித்தபடி, "எனக்கு தனிமைதான் இசை. என்னில் இசைத்தேன் தனிமையை. அமைதியின் சப்தத்தை நீங்கள் உணர்ந்ததுண்டா. வெற்றில் சூனியத்தில் நிலவும் அந்த அமைதியின் ஓசையை விட சிறந்த ஒலி உலகத்தில் ஏது? சொல்லிக்கொள்ளலாம். அந்த அழுக்கான பாரில் கேட்கும் கண்ணாடி டம்ளர் பாட்டிலில் இடிபடும் சப்தம் எந்த பாட்டில் நமக்கு கிடைத்துவிடும். என் மனதிற்கு பிடித்ததால் இந்த நிகழ்விற்கு இசைந்தேன். ஆயினும் நான் தனிமையைத்தான் இசைப்பேன். இந்த பின்நவீனத்துவ வாதியின்..."
நொடிக்கும் குறைவான நேரத்தில் அனைவரும் காணாமல் போகின்றனர்.
அந்த சமயத்தில் பாவனாவின் கார் உள்ளே நுழைய, இன்ப அதிர்ச்சியாக பாவனாவுடன் தீபா வெங்கட்டும் இறங்குகிறார்.
ஷூட்டிங் முடித்த பின் பாவனாவிடம் பேட்டி எடுத்து அதை ஜனவரி மாத பதிவுக்கு ஒப்பேத்திட முடிவு செய்து கோபி பாவனாவிடம் தன் வழக்கமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். "இந்த படத்துல நடிக்கறத பத்தி உங்க கருத்து என்ன?"
"எனக்கு இந்த படத்தோட கேரக்டர் ரொம்ப புடிச்சிருந்தது. கடைசியில நானும் காக்காவாவே இருந்துடக்கூடாதான்னு ஏக்கம் எனக்குள்ள இருக்கு"
சைக்கிள் கேப்பில் ராக்கெட் விடும் அவசரத்தில் கோபி, "அவ்வளவு வருத்தப்பட தேவையில்லைங்க. ஏன்னா உங்க கூட நடிச்சதுகூட காக்கா இல்ல... நம்ம தம்பிதான்" என்று சொல்லி தம்பியின் காக்கா வேடத்தை கலைத்தான்.
தம்பியை கண்டதும் பாவனா வெட்கப்பட ஆரம்பிக்க, தம்பி மனசுக்குள் காக்கா கூட்டம் பறந்தது.
இந்த நிகழ்வுகளின் பிண்ணனி தெரியாமல் அபி அப்பா கையில் ஒரு ரோஜாப்பூவை வைத்துக்கொண்டு தீபா வெங்கட்டுக்காக தேவுடு காத்துக்கொண்டிருந்தார்.
அனைவரிடமும் பேசி சிரித்துவிட்டு அபி அப்பாவின் அருகில் தீபா வெங்கட் வர, அபி அப்பாவின் இதயதுடிப்பு ஏறுக்கு மாறாய் ஆனது.
தருமி, "இதுதான் அபி அப்பா" என அறிமுகப்படுத்தி விட்டு நகர்கிறார்.
தீபா வெங்கட், "சித்தப்பா" எண்று கூறி வணக்கம் வைக்க, (தமிழ் பண்பாடு) அபி அப்பா அவசரமாக திருத்துகிறார். "இல்லை. நான் அபி அப்பா"
"ஐ நோ. பட் இந்த பிலிம்ல நீங்கதானே எனக்கு சித்தப்பா. உங்கள பாக்கவும் எங்க சித்தப்பா மாதிரியே இருக்கீங்க. சேம் லைக் யூ" என்று சிரித்துவிட்டு தீபா வெங்கட் நகர்கின்றார். அபி அப்பா கையில் வைத்திருந்த ரோஜா கீழே விழுந்தது.
"கவுத்திட்டாடா" என்று அலறி சாய்கிறார்.
சில இன்றியமையா பின் குறிப்புகள்:
1. கோபி எதை எடிட் செய்வது என்று தெரியாமல் மின்னல் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் நிகழ்ந்த கலாட்டாவை படம் எடுத்து வைத்திருந்ததால் அதையே சினிமா கதையாய் மாற்றி விட்டான்.
2. இன்னும் தம்பி காதில் காகா என்ற வார்த்தை மாத்திரம் கேட்டுக்கொண்டிருப்பதால் டாக்டரிடம் சரி செய்ய சென்றபோது அவர் ஒரு வாக்மேனில் நாய், பூனை, மாடு, தவளை ஆகியவற்றின் சப்தங்களையும் சேர்த்து பதிவு செய்து தந்தார்.
தம்பி, "இதை டெய்லி கேட்டா சரியாயிடுமா டாக்டர்
டாக்டர், "மொதோ ஒரு வாரத்துக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்."
தம்பி, "அப்புறம்..."டாக்டர், "
இதுவே பழகிடும்.." என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
3. தீபா வெங்கட் தன்னை சித்தப்பா என்றழைத்தது குடும்பத்தாரின் சதி என்று இப்போது வத்தி வைத்துக்கொண்டிருக்கின்றார் தீபா வெங்கட்டின் பாசமிகு சித்தப்பா அபி அப்பா.
4. எனினும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத பாசக்கார குடும்ப உறுப்பினர்கள் சினிமா முயற்சி குறிப்பிடதகுந்த வெற்றியடையாவிட்டாலும் அடுத்து ஒரு மெகா சீரியல் எடுக்கலாமென்று பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
5. மை பிரண்டு எழுதி ஷ்ரேயா கோஷல் பாடாமல் போன ஒரு பாட்டு பறந்து வந்து மானிட்டரில் விழுந்தது. அந்த பாடல் ரொம்ப பெருசா போனதால் முடிஞ்சா அடுத்த பதிவுல வரும். ஆனா இந்த பதிவுல இந்த தொடர்(!) முடிவடையறதால அந்த பாட்ட அவங்க டிவியில மெகா சீரியலுக்கு டைட்டில் சாங்கா உபயோகப்படுத்த முடிவு செஞ்சிருக்காங்க.
இப்படிக்கு
சென்ஷி :)

Tuesday, December 04, 2007
பாசக்கார குடும்பத்தினரின் கும்மிப்பாட்டு
அறையில் கண்மணி, முத்துலட்சுமி, டெல்பின் மூவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி யோசனையில் அமர்ந்திருக்க, "என் இனிய தமிழ்மண சொந்தங்களே... உங்கள் பாசத்துக்குரிய மங்கை அக்கா இன்று மீண்டும் உங்கள் முன்..! ......" மங்கை விடாமல் கையில் வைத்திருந்த பேப்பரை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்.
முத்துலட்சுமி சலிப்பாக, "அக்கா.. விடுக்கா.. திருப்பி திருப்பி இதையே பேசிக்கிட்டிருந்தா எல்லோருமே டென்ஷன் ஆகிடுவாங்க. தமிழ்மணத்துல ஒரு வருஷம் முடிஞ்சாலே சீனியர்ன்னு சொல்லி புதுசா வர்றவங்க ஒதுக்கி வச்சிடுவாங்களோன்னு நான் பயந்துட்டு இருக்கேன். இந்த சமயத்துல நீங்க வேற ஓட்டுன ரீலையே ஓட்டுறீங்களே. அந்த பக்கம் பினாத்தல் அடிச்சு ஆடுறாரு. வவாச மறுபடியும் வந்துடுச்சு. கச்சேரி ஃபிலிம்ஸ்ன்னு பேர கூட வச்சுட்டாங்க. கும்மில நாம மட்டும் எதுவுமே இல்லாம ஈ ஓட்டுறா மாதிரி ஒரு ஃபீலிங்க் வருது."
கண்மணி ஆர்வமாக, "செய்யறோம்.. புதுசா செய்யறோம். யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு பெருசா ஒரு திட்டம் என்கிட்ட இருக்குது"
முத்துலட்சுமி, "ஸ்டார்ட்டிங் என்னமோ ஸ்பீடாதான் போகுது. ஆனா போகப்போகத்தான் எல்லோரோட தாவுமே தீருது"
டெல்பின், "முத்துலட்சுமி, நீ கொஞ்ச நேரம் பேசாம இரும்மா, கண்மணி உன் திட்டம்தான் என்ன?"
"பாசக்கார குடும்பத்தின் சார்பா ஒரு சினிமா எடுக்கறோம். எல்லா வேலையையும் நாமளே செய்யறோம், கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, பாட்டு, எல்லாமே நாம மட்டும் தான்"
டெல்பின் குழப்பமாக, "அப்போ அத பாக்குறதும் நாம மட்டும்தானா?"
கண்மணி முறைப்புடன், "என்ன ஜோக்கடிக்கறதா நினைப்பா? மொக்க பதிவு போடுறப்பயே மைபிரண்டு தனியா 200 பின்னூட்டம் போடுவா. படம் எடுத்தா, விடாம எல்லா ஷோவும் 400, 500 தடவ பாத்துடமாட்டா, அதுவுமில்லாம இப்பல்லாம் ஆயில்யனும் கரெக்டா வந்துடறாரு. அவரையும் தனியா படம் பார்க்க விடாம, ஆளுங்கள கூட்டிட்டு வர அனுப்பிட்டா போச்சு"
டாக்டர், "ஓ! இதுக்குபேரு தான் ஐடியாவா, மேடம்...! இதுக்கு பேரு பாசம் இல்ல, பழிவாங்குறது!"
சினிமா என்ற வார்த்தை காதில் விழுந்ததும் மங்கை, "யெஸ்.. திஸ் இஸ் எ குட் ஐடியா.. பட் ஹு இஸ் த ப்ரொட்யூசர்? இங்கே இத தயாரிக்கறது யாரு.. அது எனக்கு முதல்ல தெரிஞ்சாகணும்."
முத்துலட்சுமி, "ப்ளீஸ்க்கா, நான் யாரையும் பேசாதீங்கன்னு சொன்னது கிடையாது. ஆனா இந்த பாரதிராஜா மாதிரி கடிச்சு மட்டும் பேசாதேக்கா. கஷ்டமாயிருக்குது"
டெல்பின், "ஏதாச்சும் நல்ல டாக்டர் கதையா எடுக்கலாமா?"
மங்கை, "ஏன், மிச்சமிருக்கற டாக்டர் ஜோக்க எல்லாம் இதுல யூஸ் பண்ணிக்கலாம்ன்னு ஐடியாவா!"
கண்மணி, "ஏதாவது ஐடியா கேக்கலாம்ன்னு தருமி சாரை கூட்டி வர மைபிரண்டையும், கோபியையும் அனுப்பியிருக்கேன். அவரு வந்துடட்டும். நாம என்ன படம் எடுக்கலாம், அதுல யார் என்னவா நடிக்கறதுன்னு முடிவு செய்வோம். நம்ம ப்ரொஜெக்ட்ல அவர்தான் நாட்டாம"
டெல்பின், "நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு நான் கத்தாம இருந்தா சரி"
பதட்டத்துடன் உள்ளே நுழையும் தருமியை தொடர்ந்து உள்ளே வருகின்றனர் கோபியும்,
மைபிரண்டும்.. தருமியை கண்டதும் அனைவரும் எழுந்து நின்று வரவேற்கின்றனர்.
கண்மணி பேச ஆரம்பிக்குமுன் தருமி அவசரமாக, "இல்லை. மன்னிக்கனும். இப்ப சாலமன் பாப்பையாவே பட்டிமன்றம் தாண்டிப்போய் சிவாஜி புகழ் பேனர மாட்டிக்கிட்டார். இந்த சமயத்துல என்னை நீங்க மறுபடியும் பட்டிமன்றம்ங்கற சின்ன போர்வைய பொன்னாடையா போர்த்தறது தப்பு!"
டெல்பின், "இல்ல தருமி சார், இந்த தடவ நாங்க விவாஜி, பாகச புரொடக்ஷன்ஸ், கச்சேரி பிலிம்ஸூக்கு சவால் விடறா மாதிரி பெரிய லெவல்ல சினிமாவுல இறங்கலாம்ன்னு முடிவு செஞ்சிருக்கோம். வைஃபாலஜி காலேஜூக்கு போற அத்தனை பேரும் பிளாக்ல டிக்கெட் வாங்கித்தான் நம்ம படத்தை பார்க்கனும்."
கோபி, "டாக்டர், அவங்கல்லாம் பெரிய இடமாச்சே, அவங்க ரேஞ்ச் எங்க, நாம எங்க"
மங்கை, "எடுக்கறோம், நாம விக்ரமன் ஸ்டைல்ல நம்ம குடும்பத்து பாசத்தை செல்லுலாய்ட்ல உருக்கி ஊத்தறோம்"
தருமி, "ஆக்சுவலி «¦¿ðŒîùôýõøìˆ‹ìîð¦À¡þ¯ö¦Ãó·«óì‹/* அப்படின்னு ஒரு பதிவு எழுதப்போறேன். அதுல 'கச்சேரி பிலிம்ஸ்' கதையப்பத்தி ஒரு பதிவு போடலாம்ன்னு இருக்கறதால நான் அதைப்பத்தி இங்க பேசுனா அது நல்லாயிருக்காது. வேணும்னா வழக்கம்போல காயத்ரி, "காஞ்சிப்போன மகன்"ங்கற தலைப்புல அந்த படத்தைப்பத்தி ஒரு விமர்சனம் எழுதட்டுமே... "
கோபி, காயத்ரியை முறைக்க, அவசரமாக காயத்ரி, "நான் எந்த படத்தையும் பாக்கறதில்லைன்னு மனசுக்குள்ள மலேசியன் மாரியாத்தா முன்னாடி சத்தியம் பண்ணிட்டேன். ஆனாலும் இது நம்ம குடும்ப படம். இதுல நான் என்ன வேலை செய்யணும்?"
மைபிரண்டு கிண்டலாக, "நடிக்கற எல்லோருக்கும் கிளிசரின் சப்ளை நீதான் தாயே!"
தருமி தொண்டையை செருமியபடி, "சரி. எல்லோரையும் வரசொல்லுங்க. யாரார் என்னென்ன வேலை செய்யறது முடிவு செஞ்சுக்கலாம்."
மறுநாள்....
அபி அப்பா தலைமையில் அமீரக பாசக்கார படையில் தம்பி, குசும்பன், அய்யனார், மின்னல் மற்றும் கோபி அணிவகுத்து நிற்க, பொறுமையாக இம்சை அரசியும் வந்து சேர்கிறார்.
தருமி, "டைரக்டர்ன்னா அது மங்கைதான்னு ஆகிபோச்சு. அதனால இந்த விஷயத்துல யாரும் போட்டி போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். துபாய்ல ஆளாளுக்கு ஆப்பு வாங்குனத ரொம்ப சூப்பரா படம் புடிச்ச மின்னல் நம்ம படத்தோட ஒளிப்பதிவ கவனிச்சுப்பாரு. நம்ம குடும்பத்தோட ஆஸ்தான கதாசிரியை இம்சை அரசி கதைங்கற இம்சைய எடுத்துக்கட்டும். காயத்ரி கேட்டரிங் சர்வீஸ் கவனமா பார்த்துப்பாங்கன்னு நம்பறேன். நம்ம படத்துல ஒரு முக்கியமான ரோல்ல நடிக்கறதோட மட்டுமில்லாம சைடுல ஊர்கதைய விடுற திரைக்கதை வேலைய அபி அப்பா பாத்துக்குவாரு.
அங்கங்க வெட்டி ஒட்டி எல்லாத்தையும் புரிய வைக்குற எடிட்டிங் கோபிக்கு, இப்பல்லாம் காதுலயே விழாத புரியாத இசைக்குத்தான் வேல்யூன்னு ஆகிப்போச்சு. புரிஞ்சுக்க முடியாத கவிஞர்ன்னு எல்லோராலயும் பாராட்டப்படுற அய்யனார் மியூசிக்க கவனிச்சுப்பாரு. கிராபிக்ஸ் வேலைக்கு குசும்பன் இருக்காரு.. தேன் கிண்ணத்துல இருக்கற பழைய பாட்டு வரிய எல்லாம் சரியா எடுத்து கை வலிக்க டைப் பண்றதால மைபிரண்டு நம்ம படத்தோட பாட்டு எழுதுவாங்க.
ஒவ்வொரு நாளும் டிசைன் டிசைனா டெம்ப்ளேட் மாத்தற கண்மணி டீச்சர் நம்ம படத்துல ஆர்ட் டைரக்ஷன எடுத்துப்பாங்க. இப்பல்லாம் கதையில்லாத படம் கூட வருது. ஆனா அதுல ஹீரோ இல்லாம இருக்கறதில்ல. பாவனா, பாவனான்னு ஹீரோயின சுத்தி வர்ற தம்பிதான் நம்ம படத்தோட ஹீரோ.. இதுல ஒரு சிறப்பு என்னன்னா பாவனாவும், தம்பியோட நடிக்க ஒத்துக்கிட்டு பேட்டி கொடுத்துருக்கறதுதான்.."
எல்லோரும் கைதட்ட, கோபி, தம்பிக்கு கை கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றான்.
"அபி அப்பா எப்ப பார்த்தாலும் தீபா வெங்கட் பேர ஜொள்ளிக்கிட்டே இருக்கறதால தீபா வெங்கட்டும் நம்ம படத்துல நடிக்கறாங்கன்னு சொல்லிக்கிறேன். நம்ம படத்த பார்த்துட்டு யாருக்காச்சும் உடம்பு சரியில்லாம போனா, டாக்டர் அவங்களுக்கு ஃப்ரீயா ட்ரீட்மென்ட் எடுப்பாங்க. முக்கியமான விஷயம் நம்ம படத்துல வில்லன்னு யாரும் கிடையாது. அதே மாதிரி காமெடிக்குன்னும் தனியா யாரையும் போடப்போறதில்ல."
சொல்லிவிட்டு தருமி பெருமூச்சு விட, தயக்கத்துடன் அபி அப்பா தருமியை நோக்கி, "முத்துலட்சுமிக்கு என்ன வேலைன்னு நீங்க சொல்லலையே"
"அதுக்காகத்தான் நான் இப்ப மூச்ச கொஞ்சம் விட்டுக்கிட்டேன். அவங்க தான் இந்த படத்துல வசனம்" சொல்லி முடித்ததும் படாரென சமத்தம் கேட்டது. திடுக்கிட்டு அனைவரும் திரும்பி பார்க்க அங்கே மங்கை அக்கா மயக்கமாகியிருந்தார்.
மெல்ல மங்கை அக்கா கண்விழித்த பிறகு தருமி, "இம்சை, நீங்க இப்ப ஒரு கதை சொல்லுங்க. கேப்போம்"
இம்சை அரசி, "கதையா.. அது.. ம்ம்ம்.. ஹாங்.. ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தாங்களாம். அப்ப அந்த வடைய ஒரு காக்கா பாட்டிக்கு தெரியாம தூக்கிட்டு போயிடுச்சாம்.."
தம்பி கடுப்பான குரலில், "இந்த படத்துக்கு நான் ஹீரோவா! என்ன காக்கா ரோலா..இதுல காக்கா ஜோடி யாரு பாவனாவா? இதுக்கு ஒரு கொல விழும். ஆனா அது தற்கொலையாத்தான் இருக்கும். ஜாக்கிரத" என்று அதிர்ச்சி தருகிறார். கதையை கேட்ட மங்கை மீண்டும் மயக்கத்திற்கு போகிறார்.
கண்மணி, "சரி. கதைய விடுங்க. இன்னிக்கே நம்ம படத்துக்கு பூஜை. மைபிரண்டு ஒரு பாட்டு எழுது."
சொன்னதும் மைபிரண்டு பாட்டு எழுதி தருகிறார். இசை: அய்யனார்
படம் : வானத்தைப் போல..
பாடல் : எங்கள் வீட்டில் எல்லா நாளும்...
மெட்டு : அதே பாட்டு மெட்டுதான்
எங்கள் குடும்பம் பாசக்கார குடும்பம்தான்
நாங்க அடிப்போம் டெய்லி டெய்லி கும்மிதான்
மொக்க பதிவு போல் பார்க்கத்தோணுமே
இது மொக்க இல்லீங்க கலக்கல் தானுங்க.. (எங்கள்)
பின்னூட்டத்தில் விளையாடி
செஞ்சுரி நாங்க அடிக்கிறோம்
போலி இங்கு யாருமில்லை
போதனைகள் தேவையில்லை
பின்னூட்ட உயர்வெல்லை எங்களை ஒன்றும் செய்யாது
பின்னூட்டம் போடாட்டி தூக்கமும் கிட்ட வாராது
மொக்க பதிவு போல்
மொக்க இல்லீங்க சூப்பர் தானுங்க.. (எங்கள்)
புரியா கவிதை அய்யனார்
அழுகாச்சி காயத்ரி
மீ த ஃபர்ஸ்டு மைபிரண்டு
ஊசி போட டாக்டரு
அபிஅப்பா முத்தக்கா கண்மணி கோபி குசும்பனும்
மின்னலு இம்சையுடன் குட்டிபிசாசும் சேர்ந்ததே..
மொக்க பதிவு போல் பார்க்கத்தோணுமே
இது மொக்க இல்லீங்க ஜோக்கா இருக்குமுங்க.. (எங்கள்)
அடுத்த பதிவில் நிறைவடையும்.... :)

Subscribe to:
Posts (Atom)