Sunday, April 19, 2009

உன்னை எனக்குப் பிடிச்சுருக்கு - 2

68 comments
உன்னை எனக்குப் பிடிச்சுருக்கு முதல் பகுதி பார்க்க








மீண்டும் ஒரு மீள்பதிவு. போன பதிவின் அபரிமித வரவேற்பினை கண்டதால் வந்த சோதனை உங்களுக்கு :-)

Friday, April 17, 2009

உன்னை எனக்கு பிடிச்சிருக்கு!!

65 comments













மீண்டும் ஒரு மீள்பதிவுதான். முன்பே படித்துவிட்டு பின்னூட்டதவர்களுக்காக இந்த தண்டனை :-)

Thursday, April 16, 2009

அய்யனாரும் குசும்பனாரும் பின்ன எல்லோரோட வாழ்த்தும்!!!

75 comments





















ஒருவன் அனைத்தையும் கேள்விக்குறியாய் காணச்சொல்லிக்கொண்டிருப்பான்
மற்றொருவன் அனைவரையும் தன்முன் ஆச்சரியக்குறியாக்கிக் கொண்டிருப்பான்

ஒருவனிடம் புனைவிலக்கியத்தின் டப்பா டான்ஸ் ஆடும்
மற்றொருவனிடம் செய்திகள் டரியல் டக்ளஸ் ஆகும்

ஒருவன் கதையெழுதி பெயர் பெற்ற இலக்கியவாதி
மற்றொருவன் காமெடியில் மற்றவர் மனம் இளக்கியவாதி

தனிமையின் இசையில் காதல் கொள்வது இவன் சிறப்பு
குசும்பாய் போன் செய்து கலாய்ப்பதே மற்றவன் பொழப்பு

புரியாத மொழியில் பார்க்கும் படத்துக்கெல்லாம் எழுதுறான் விமர்சனம்
அதுல ஃபிகரை பார்க்க மொழி தேவையில்லைன்னு சொல்றான் நிதர்சனம்

எழுதுறது புரியலைன்னு சொல்லாதே அது பின்நவீனத்துவம்
கும்மி அடிக்காதேன்னு சொல்லாதே அது இவன் தனித்துவம்

தொகை வினை சொல்லி குறியீட்டை கத்துக்கொடுத்தான் அய்யனார்
எதிர்வினைன்னு சொன்னா என் பேர சொல்லுன்னு சொன்னான் குசும்பனார்

ஒரேநாள்ல திருமண கொண்டாட்டங்களை கொண்டாடுற உங்க ரெண்டு பேருக்கும் அமீரக நண்பர்களோட வாழ்த்துக்கள்..

Wednesday, April 15, 2009

எனக்குப் பிடித்த கவிதைகளில் சில.. (2)

32 comments
இப்பதிவை பரிசலுக்கு சமர்ப்பிக்கிறேன். காரணம்..........!

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன‌
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

-------------------இரா.பூபாலன்

'குமரிப்பெண்' 'வினிதா'
'மும்தாஜ்' 'மருதம்'
'ஜாலி' 'கன்னி'
'இர‌வுப் ப‌ற‌வை' 'கும்த‌ல‌க்கா'
'உங்க‌ள் வ‌ச‌ந்தி' 'குளிர்கால‌ சுந்த‌ரி'
என்று ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ளைப்
ப‌டித்த‌ பின்ன‌ரும்
ப‌ள்ளிக்கூட‌த்திலிருந்து
திரும்பிவ‌ரும் வ‌ழியில்
ர‌யில் த‌ண்ட‌வாள‌த்தில் கிட‌ந்த‌,
அட்டையில்லாத‌
கிழிந்த‌ புத்த‌க‌ம் போல் ஒன்று
ப‌டிக்க‌க் கிடைக்க‌வில்லை இன்னும்.
அப்ப‌டி என்ன‌ விசேஷ‌ம்
அதில் என்று சொல்ல‌
அந்த‌ப் புத்த‌க‌ம்
என்னிட‌ம் இல்லை இப்போது
அந்த‌ வ‌ய‌தும்!

--------------முகுந்த் நாக‌ராஜ்


க‌டைசிப் ப‌க்க‌ங்க‌ள்
கிழிந்துபோன‌
துப்ப‌றியும் ந‌வீன‌த்தை
தெரியாம‌ல் எடுத்துப்
ப‌டித்திருக்கிறீர்க‌ளா?
அதுதான் வாழ்க்கை!

---------------அப்துல் ர‌குமான்

அமைதி வெறியும் ச‌ம‌ர் வெறியும்
ஒருவ‌கையில் ஒன்றுதான்
ச‌மாதான‌க் கொடியும் ச‌ட‌ல‌த்தைப் போர்த்துவ‌தும்
வெள்ளைத் துணிதான்!

---------------கும‌ர‌ விருச்சிக‌ன்

அப்பா சொன்னாரென‌
ப‌ள்ளிக்குச் சென்றேன்
த‌லை சீவினேன்
சில‌ ந‌ண்ப‌ர்க‌ளைத் த‌விர்த்தேன்
ச‌ட்டை போட்டுக்கொண்டேன்
ப‌ல் துல‌க்கினேன் வ‌ழிப‌ட்டேன்
க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வ‌ருமென்று

--------------க‌னிமொழி

யாருக்கும்
நான் யாரென்று
தெரிய‌வில்லை
சொல்லிவிட்டேன்
நான்தான்
போப்பாண்ட‌வ‌ரென‌
புர‌ட்சி செய்கிற‌வ‌ன்
போப்பாண்ட‌வ‌ராய்
இருக்க‌
முடியாதென்றார்க‌ள்!

---------கோசின்ரா (என் க‌ட‌வுளும் என்னைப் போல் க‌றுப்பு)

நான் எழுதாது செல்லும்
என் க‌விதையை
எழுதுங்க‌ளேன்
எழுந்து வ‌ர‌ முடிய‌வில்லை
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்ப‌தால்!

---------வான‌தி

பித்த‌ளைச் ச‌ட்டிக‌ளுக்குப்
புளிச்ச‌க்கை
சில்வ‌ர் த‌ட்டுக‌ளுக்கு
விம் ப‌வுட‌ர்
வெள்ளிப் பாத்திர‌ங்க‌ளுக்கு
விபூதி ம‌ட்டும்
ப‌ள‌ப‌ள‌வென‌
விள‌க்கிவைக்கும்
அம்மாவால்
க‌டைசிவ‌ரை
விள‌க்க‌வே முடிய‌வில்லை
அப்பாவிட‌ம் த‌ன் ம‌ன‌சை!

---------ஜீவி

க‌டைசி ம‌ட‌ல் என்று
க‌ன‌விலும் நினையாதே
மீள‌
வித்தாய் விழுத‌லும்
வீரிய‌மாய் விழுத‌லும்
பூவும் பிஞ்சும் க‌னியும் தாங்கிப்
போராட‌ வ‌ருத‌லும்
எவ்வாறு க‌டைசியாகும்?

------------ச‌ஞ்சுத‌ன் (சிறையிலிருந்து ம‌ட‌ல்க‌ள்)

ஒருத‌ர‌ம் காத‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒருத‌ர‌ம் புல்லாங்குழ‌ல்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
ஒரு வ‌ண்ண‌த்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் த‌ந்த‌து
நான்தான் அடிக்க‌டி
தொலைந்துவிடுகிறேன்!

---------பூமா ஈஸ்வ‌ர‌மூர்த்தி

அடிமுட்டாள்
அயோக்கிய‌ன்
அதிபுத்திசாலி
ஒரு ஞானி
அனைவ‌ரும்
குள‌த்தில் குதித்த‌ன‌ர்
ஒரே மாதிரிதான்
வ‌ட்ட‌ வ‌ட்ட‌மாக‌ வ‌ந்த‌து!

-------தென்ற‌ல் (நீல‌ இற‌கு)

இப்போதெல்லாம்
நாம் ச‌ந்தித்த‌ இட‌ங்க‌ளில்
யாருமே அம‌ர்வ‌தில்லை
வெறும் ம‌ஞ்ச‌ள் பூக்க‌ளே
சித‌றிக்கிட‌க்கின்ற‌ன்

--------அட்லாண்டா சீனிவாச‌ன்

சொல்லாம‌ல் விட‌ப்ப‌ட்ட‌ காத‌லை
ம‌ர‌க்க‌ன்று ஒன்றை ந‌டுவ‌த‌ன் மூல‌ம்
சொல்லிவிட‌ முடியாத‌துதான் என்றாலும்
இதுநாள் வ‌ரை நீருற்றிக் காத்துவ‌ந்த‌
வாகைம‌ர‌ம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய‌ பூக்க‌ளின் நெடி
உன்னை நோக்கி நீள‌
ஏதாவ‌து விருட்ச‌த்தின் அடியில்
நீயும் நின்றிருக்க‌லாம்
நிராக‌ரிப்பின் ஒற்றை சாட்சியாய்!

--------சுகிர்த‌ராணி (தொகுப்பு: அவ‌ளை மொழிபெய‌ர்த்த‌ல்)

அன்புருவ‌மாய்
அமைதிப் பூங்காவாய்
க‌ருணைக் க‌ட‌லாய்
ப‌ண்புப் பெட்ட‌க‌மாய்
தியாக‌ச் சுட‌ராய்
அழ‌குச் சிலையா
போக‌ப் பொருளாய்
வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ அடையாள‌ங்க‌ளில்
தொலைந்தே போன‌து
எம் ஆதி அடையாள‌ம்!

-------கிருட்டிண‌ம்மாள் (ந‌ன்றி: ந‌வீன‌ விருட்ச‌ம்)

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
ம‌ர‌ப்ப‌டிக‌ளில் இற‌ங்கி
வ‌ந்துகொண்டிருக்கிறாள்
அவ‌ளுக்கு
அது ஒரு பிர‌ச்னையே இல்லை

அவ‌ளாக‌க் க‌ற்பித்துக்கொண்ட‌
இந்த‌ உல‌கின் ஒழுங்கில்
ஏழாவ‌து ப‌டிக்குப் பிற‌கு
ஒன்ப‌தாவ‌து ப‌டி
வ‌ராத‌வ‌ரை

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
நிதான‌மாக‌வே ப‌டிக‌ளில்
இற‌ங்கிக்கொண்டிருக்கிறாள்

---------ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் (தொகுப்பு: க‌ட‌வுளுட‌ன் பிரார்த்தித்த‌ல்)

ப‌ழைய‌ ம‌ன்னருட‌ன் ந‌க‌ர்வ‌ல‌ம்
வ‌ந்த‌தாய்ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌
பாக‌ன‌ற்ற‌ கிழ‌ யானை
ப‌ட்ட‌த்து ஒப்ப‌னையோடும்
ஓசைய‌ற்ற‌ ச‌ல‌ங்கையோடும்
தெருவில் இற‌ந்து கிட‌ந்த‌து

------யாத்ரீக‌ன் - முனிய‌ப்ப‌ராஜ்

ப‌த்து வ‌ருஷ‌மாச்சு
வ‌யித்துல‌ இன்னும்
ஒரு புழு பூச்சிக்கு
வ‌ழி இல்லைன்னு
ம‌ரும‌க‌ளை வெளித்த‌ள்ளும்
அம்மாவே -
என் மேல்
எவ்வ‌ள‌வு ந‌ம்பிக்கை உன‌க்கு!

-------ப‌.சுப்பிர‌ம‌ணி, முக‌ம் தேடும் முக‌ங்க‌ள் (தொகுப்பு: வ‌ல‌ம்புரி லேனா)

க‌ண்ண‌னைக் காத‌லிப்ப‌தாக‌
ந‌டன‌ அர‌ங்கேற்ற‌த்துக்கு
ஏற்பாடு செய்து
ஊரை அழைத்த‌வ‌ர்க‌ள்தாம்
ந‌ம‌து காத‌லை
அர‌ங்கேற‌விடாம‌ல்
த‌டுக்கிறார்க‌ள்.

----நெல்லை க‌ண்ண‌ன் (காத‌ல் செய்யாத‌வ‌ர்க‌ள் க‌ல்லெறியுங்க‌ள்)

குழ‌ந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரை ஆக‌
வேண்டியிருக்கிற‌து.
இம்ம‌ண்ணில்
என்னைச் ச‌வாரியாக்கி
கைகொட்டி சிரிக்க‌,
குழ‌ந்தைக்குமா ஆன‌ந்த‌ம்?

-----எஸ். வைதீஸ்வ‌ர‌ன்

உன் க‌விதையை நீ எழுது
எழுது உன் காத‌ல்க‌ள் ப‌ற்றி கோப‌ங்க‌ள் ப‌ற்றி
எழுது உன் ர‌க‌சிய‌ ஆசைக‌ள் ப‌ற்றி
நீ அர்ப்ப‌ணித்துக்கொள்ள‌ விரும்பும் புர‌ட்சி ப‌ற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புர‌ட்சியாள‌ர்க‌ள் ப‌ற்றி எழுது
சொல்லும் செயலும் முய‌ங்கி நிற்கும் அழ‌கு ப‌ற்றி எழுது
நீ போடும் இர‌ட்டை வேட‌ம் ப‌ற்றி எழுது
எல்லோரிட‌மும் காட்ட‌ விரும்பும் அன்பைப் ப‌ற்றி எழுது
எவ‌ரிட‌மும் அதைக் காட்ட‌ முடியாம‌லிருக்கும்
த‌த்த‌ளிப்பைப் ப‌ற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அத‌ற்கு உன‌க்கு வ‌க்கில்லை என்றால் ஒன்று செய்
உன் க‌விதையை நான் ஏன் எழுத‌வில்லை என்று
என்னைக் கேட்காம‌லேனும் இரு.

-------ப‌சுவ‌ய்யா

க‌ண்ணீரைப் ப‌டைத்த‌து
க‌ட‌வுளின் த‌வ‌றா
ஆன‌ந்த‌ப்ப‌ட்டு
அதை வ‌டிக்காம‌ல்
அழுது வ‌டிக்கும்
ம‌னித‌னின் த‌வ‌றா?

--------நீல‌ம‌ணி (ஃ சிற்றித‌ழ்)

என் இனிய ந‌ண்ப‌னே
என்னை அறிந்த‌தாக‌க் கூறினாய்
எப்ப‌டி என்றேன்; ஆத்திர‌ப்ப‌ட்டாய்
உன்னிட‌த்தில் என்னை ச‌ம‌ப்ப‌டுத்தி
பார்த்தாய்
பின் ப‌ர‌வாயில்லை புத்திசாலி என்றாய்
அறிவென்றாய். கூட‌வே அழ‌கென்றாய்
அதை எத‌ற்காக‌ச் சொன்னாய்
இல்லை
உன்னால் என்னை அறிய‌ முடிய‌வில்லை.

-------ற‌ஞ்ச‌னி (ற‌ஞ்ச‌னி க‌விதைக‌ள்)

மேலே தொகுக்கப்பட்டுள்ள அத்தனைக் கவிதைகளும் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' தொகுப்பில் எ.பி.க.விலிருந்து எடுக்கப்பட்டது.

தந்துதவியதற்கு நன்றிகள் விக்னேஷ்வரன்

Tuesday, April 14, 2009

கருத்துக்கணிப்பு

29 comments
தேர்தல் ஜூரம் வந்துட்டாலே மலேரிய ஜூரத்துக்கு கார்ப்பரேசன்ல கொசு மருந்து அடிக்குற கணக்கா கருத்துக்கணிப்பு நடத்த ஆரம்பிச்சுடுவாங்க. இந்தியான்னு இல்லாம உலகத்துல எல்லா நாட்டுலயும் கருத்துக்கணிப்புக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்காங்க.

இந்தியாவுல கருத்துக்கணிப்பு, எதிர்கணிப்பு, மறுகணிப்பு, நான் சொல்றேன், நீ சொன்னதுங்கற ரேஞ்சுல ஏகப்பட்ட கருத்து(க்கணிப்பு)க்கள் வீதியுலா வந்துட்டு இருக்கும். சிலதுல உசுரு போகும். சிலதுல ம.. விடுங்க. எதுவும் கூட போகாது.

கிராமத்துல பஞ்சாயத்து யூனியன்ல கவுன்சிலர்க்கு நிக்குறதுக்கு இந்த கருத்து கணிப்பு பிரச்சினை வந்தது கிடையாது. டவுசர் பசங்கள்லாம் சேர்ந்துக்கிட்டு "அண்ணனுக்கு ஜே!" போட்டுக்கிட்டு ஓட்டுக்காக சுத்திட்டு இருப்பானுங்க. இருக்குற 12 வார்ட தெருத்தெருவா பிரிச்சு ஒரு தெரு ஒரு கவுன்சிலருக்குன்னு ஓட்டு கேக்கப்போறப்ப அங்க தெருவாசிகள் கேக்குற கேள்விக்கு பதில் கொடுத்துட்டா அவங்க ஜெயிச்சுட்டதா நினைச்சுக்கலாம்.

கேள்வில்லாம் ரொம்ப ஈசின்னு நினைக்காதீங்க. 'எங்க வூட்டுக்கு கவுருமெண்டு தண்ணி வரணும்னு எழுதி வச்சு எத்தினி நாளாச்சு. இதுவரைக்கும் வரலை'ன்னு அங்க சரசுவதி அக்காவோட கேள்வியிலேந்து தெருமுனையில வெளிப்பார்த்த ஒத்த அறையில இருக்கற பாட்டி கேக்குற பிளாஸ்டிக் குடம் வரலையேப்பா வரைக்கும் ஓக்கே சொல்லி தலையாட்டிட்டு வந்தாகணும். இதையெல்லாம் ஏதாச்சும் பத்திரிக்கை பார்த்தா லஞ்சம், ஊழல்ன்னு தேர்தலை தடை விதிச்சுடுவாங்க. ஆனா எதிர்கட்சி மாத்திரம் கண்டுக்காது. ஏன்னா இவங்க செஞ்சதை விட டபுளா செய்யனுங்கறதுல அவனுங்க குறியா இருப்பாங்க. பிளாஸ்டிக் குடம் எதுக்கு, எவர்சில்வர் வச்சுக்கோல ஆரம்பிச்சு கைக்காசு போட்டு தண்ணிக்குழாய் போட்டு குடுக்கற வரைக்கும் அதகளம்தான்!!

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் மேல அதீத நம்பிக்கை வோட்டு கேக்கப்போகும் போது வர்றது கிடையாது. விரல்ல கருப்பு மை தடவிட்டு வெளில வந்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போவானுங்க சிலபேரு. அதுக்கு என்ன அர்த்தமா இருக்கும்ன்னு தெரியாம கொலவெறியோட இருப்பானுங்க. அவனுங்க ஜெயிச்சுட்டா சிரிச்சவனுக்கு எந்த பிரச்சினையும் இல்ல. தோத்துட்டானுங்கன்னு வைங்க.. அவ்ளோதான்! மப்புல அவன் முகம் ஞாபகம் வந்துடுச்சுன்னா அவன் அப்பவே நக்கலா சிரிச்சான்டான்னு பக்கத்துல எடுபிடிக்கிட்ட கொலவெறியில சொல்ல ஆரம்பிச்சு அவனை நைட்டோட நைட்டா தேடி உதைச்சுட்டுத்தான் அடுத்த ரவுண்டு போகும். அதுக்கப்புறம் இவனுங்க தீவிர அரசியல்ல ஈடுபட்டு நானும் ஜெயிலுக்கு போனேங்கற ரேஞ்சுல செய்யற அலும்பெல்லாம் தனியா பார்த்துக்கலாம்.

இப்ப நம்ம பதிவு மேட்டருக்கு வருவோம்.

ஒரு நாள் பதிவர் நான் ஆதவன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது என்னைய கேட்டாரு.. 'என்ன சென்ஷி! நாம ஒரு கருத்துக்கணிப்பு நடத்துனா என்ன'ன்னு.

நம்ம கருத்துக்கணிப்புக்கு மருவாதி கொடுத்து யாருப்பா இங்க வந்து பார்க்கப்போறா.. இல்லை நாம சொல்றவன் ஜெயிச்சுட்டா தோத்தவனோட பழி பாவம்ல்லாம் வந்து சேரும்யா விட்டுத்தள்ளு. நீ ஏன் வவாசவுல அடுத்த பதிவு போடலைன்னு நாட்டுக்குத் தேவையான கேள்விய கேக்குறேன். விடமாட்டேங்குறாரு.

சரின்னு சொல்லி நடத்துறோம்டா நாங்களும் கருத்துக்கணிப்புன்னு சொல்லி களத்துல இறங்கியாச்சு..

ஆதவன் கிட்ட என்ன செய்யறதுன்னு சொல்லி வாய் மூடலை. அதுக்குள்ள ரெடி செஞ்சுட்டாரு. என்னத்த சொல்ல. பய படு ஃபாஸ்ட்டாத்தான் இருக்குது. :-)

அப்புறம் எங்களோட கருத்துக்கணிப்பு கீழ நடக்குது. பார்த்து கருத்து சொல்லிட்டு போங்க.


ss1

Monday, April 13, 2009

அடர்கானகப்புலிக்கு பொறந்த நாளுங்கோ!!!

26 comments
இன்று (13-04-2009) பிறந்தநாள் காணும்
எங்கள் அடர்கானகப் புலி
அமீரக சிங்கம்
பின்நவீனத்துவ கரடி
முன்நவீனத்துவ நரி
(மொத்தத்துல மனுசன்ல சேர்த்தியே கிடையாதாய்யா அந்த ஆளு..).......

உரையாடலினியின் ரகசிய சிநேகிதன் (பதிவர்கள்கிட்ட பகிரங்க தோழன்னு ஜொள்ளிக்கிறார்ப்பா)

அய்யனாருக்கு படையல் விஷஸ்... ஓ சாரி!
பர்த்டே விஷஸ் சொல்லிக்கொள்வது

ஐக்கிய அமீரக தமிழ் பதிவர்கள்

அய்யனாருக்கான ஷ்பெசல் கவுஜ..


நீளவெட்டுக்களில் குமிந்திருக்கும்
வண்ணப்பசையுடைத்து
வெள்ளைக்கிளியுச்சியில்
நெருப்பை சேகரித்து
ஊதலில் அணைத்து
புகைத்திரி நனைத்து
கத்தியை உயர்த்தி
கேக்கை வெட்டிட
வாராயோ அய்யனார் வாராயோ!!!

Sunday, April 12, 2009

குறியீட்டமர்வியல்

19 comments

கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

படம் உதவி : முத்துலெட்சுமி கயல்விழி

Saturday, April 11, 2009

கால்கிலோ காதலும் ஒரு துளி எச்சிலும்

25 comments

விரல்கள் உரசிய பொழுதில்
பற்பசையுடன் சேர்ந்து
கனமேறிப்போயிருந்தது
நெஞ்சம்
ஒருகிலோ அரிசி
கால்கிலோ எடை அதிகரித்தது
இவனது காதலும் சேர்ந்து
நேற்றைய பேப்பரில்
எழுதி வைத்துக்கொண்டிருந்தான்
உதடுகளில் எச்சில் துப்புதல்
முத்தக்குறியீடாம்!

Thursday, April 09, 2009

மூன்று கவிதைகள்

88 comments
1. இரவு பெய்தல்

அந்தரவெளிகளில் வழிந்த
மிச்சத்தில்
வெளிச்சக்குடைகள்
நனையாமல் காத்து நின்றும்
ஜன்னல்களில் உருகி
இன்னும் காத்து நிற்கிறது
தீராமல் இரவு
மூடாத விழிகளுக்காய்

2. மீள்விளைவு

குவாட்டர் பாட்டிலும்
கூட கொஞ்சம் சோடாவும்
இடைவெளி விட்டிருந்த
புகை நாற்றமும்
அறை முழுக்க நட்பின் சியர்ஸ்களும்
அடுத்த ஃபிகருக்கான ரூட்டுக்களும்
எல்லாமே பழகி விட்டது
உன்னுடனான எனது
மூன்றாம்
காதல் தோல்விக்குப்பின் (சாரி தங்கச்சி!)


3. மீரா ஜாஸ்மின்



சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com