1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
வலைப்பதியணும்னு நினைச்சு புனைப்பெயர் யோசிச்சப்ப நாகேஷ், சார்லி இது ரெண்டுதான் என்னோட முதல் விருப்பமா இருந்த்து. இந்த வலைப்பதிவுல நண்பன் செந்திலையும் பங்கெடுத்துக்க வைக்கணும்ங்கற விருப்பத்துல அவனோட பெயரையும் சேர்த்து சென்ஷின்னு வைச்சேன். இந்த பெயர் மற்றும் குருவின் புகைப்படத்தால் நிறைய்ய நண்பர்கள் கிடைச்சதால இந்தப் பெயரும் பிடிக்கும்.
என்னோட உண்மையான பெயர் பல பழைய பதிவர் நண்பர்களுக்கு தெரியும். என்னோட பெயர் ஷேக் ஜபருல்லாஹ்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
இரண்டு வாரங்களுக்கு முன்பு.. ஹோட்டல் ருவாண்டா திரைப்படம் பார்த்துட்டு இருந்தப்ப. சட்டுன்னு உடையறதும் பின்ன மறுபடி கோர்த்து எடுக்கறதும் எனக்கு வழக்கமாகிடுச்சு.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம். பல சமயங்கள்ல இது எனக்கு கை கொடுத்திருக்குது. கவிதைங்கற பேர்ல முன்னே நோட்ல எதை கிறுக்கிக்கொடுத்தாலும் நல்லாயிருக்குன்னு சொன்ன தோழி ‘கையெழுத்த சொன்னேன்டா’ன்னு கலாய்க்கற அளவுக்கு எழுதி எழுதி கொடுமை செஞ்சிருக்கேன். அப்புறம் சென்னையில வேலையில்லாம இருந்தப்ப ஒரு திரைப்பட நிறுவனத்துக்கு அவங்க கலந்தாலோசிக்கற திரைக்கதை, வசனத்தை தெளிவா புரியறா மாதிரி பேப்பர்ல எழுதி கொடுத்துட்டு இருந்ததுக்கும் கையெழுத்து நல்லாயிருந்ததுதான் காரணம்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
4. பிடித்த மதிய உணவு என்ன?
வீட்டில் சமைத்துக் கொடுக்கும் அசைவ உணவு எல்லாமே.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல!
தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி:
நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?ம். என்னுடைய நட்பு உடனே கிடைக்கும். ஆனால் அதைவிட வெகு சீக்கிரமாவே முறிஞ்சும் போயிடும். என்னோட சுபாவம் அப்படி. அதனால நட்பு கிடைப்பதை பற்றியோ அது இழப்பதை பற்றியோ இப்போதெல்லாம் கவலைப்படுவது இல்லை. பழகி விட்டது அவ்வளவுதான்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கிணறுடன் இணைக்கப்பட்ட மோட்டார் பம்புதான் எனது முதல் சாய்ஸ்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவா யாரா இருந்தாலும் முகத்தை பார்த்துப்பேசித்தான் பழக்கம். முகத்துல எதை பார்ப்பீங்கன்னா மூக்கைதான் பார்ப்பேன்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் எதையும் மனசுல வச்சுக்காம பேசிடறதுதான்.
பிடிக்காத விஷயம் சோம்பேறித்தனம். அதுவும் அதிகமாகி இப்ப அலட்சியப்போக்கா மாறிடுச்சு.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இந்த கேள்வி திருமணம் ஆனவர்களுக்காக. அதனால இதுக்கு நான் பதில் தரப் போறதில்லை. திருமணம் ஆகியிருந்தாலும் தந்திருக்க மாட்டேன்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அதிகம் தனிமை விரும்பியா இருக்கறதால அப்படி யாரும் இல்லாம போறதுக்கு வருந்தலை.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கறுப்பு நிற டீ சர்ட், கிரீம் கலர் பேண்ட்
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
அலுவலகத்தில் இருக்கேன். சில பதிவுகளை, தமிழ்மணத்தைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெளிர் நீலம்
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
14. பிடித்த மணம்?
சந்தனம்
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.
மோனி புவன் அம்மா - 2.
நான் ஆதவன் - 3.
சோம்பேறி - மூவருமே நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்பதுதான்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
1.
ரங்கன் - தன்னம்பிக்கை பதிவுகள்.
பட்டாம்பூச்சி சொல்லித்தந்தது2.
நாணல் -
பல கவிதைகள்3.
ஸ்ரீதர் நாராயணன் - வித்தியாசமான கதைகள். ரொம்பப் பிடித்தது இப்ப சமீபத்தில் சங்கமம் பரிசு பெற்ற
“எரணைக்கல் மோதிரம்”%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
17. பிடித்த விளையாட்டு?
கேரம்
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லாப்படத்தையும் பார்க்கும் வழக்கம் உண்டு. நகைச்சுவைப்படங்கள் ரொம்ப ரசித்துப் பார்ப்பது உண்டு. சில படங்கள் மொக்கையாவே இருக்குன்னு விமர்சனம் படிச்சாலும், பார்த்துட்டு ஆமாம்ய்யா படு மொக்கைன்னு சொல்லத்தான் ரொம்பப் பிடிக்கும்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
20. கடைசியாகப் பார்த்த படம்?
தினமும் ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி டிவிடியில ஏதாவது படம் பார்க்குற பழக்கம் உண்டு. அந்த வகையில இந்த கேள்வி, பதில்ல மொக்கைப்படம் பேரு வந்துடக்கூடாதுன்னு நேத்து பார்த்தது சார்லி சாப்ளினின் “ தி சர்க்கஸ்” மற்றும் “தி கிட்” (The Circus & The Kid). இரண்டு படங்களும் சுவாரஸ்யமானவை.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
21. பிடித்த பருவ காலம் எது?
ஊரில் இருக்கும்போது மே மாதம் தவிர எல்லாமே. அமீரகத்தில் குளிர்காலம்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
அலுவலகத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் “யாமம்”. அறையில் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போதும் மாற்றுவதில்லை. பிடித்தமான பூனையின் படம்தான் எப்போதும் இருக்கும்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தைகள் போடும் எல்லா சத்தமும் பிடிக்கும்.
வாகன இரைச்சல் பிடிக்காது.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தமிழ்நாட்டில் - ஹோசூர்
இந்தியாவில் - டெல்லி
வெளிநாடுகளில் - இப்போதைக்கு ஷார்ஜா
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ம். இருக்கிறது.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அட்வைஸ் செய்யறது.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குடந்தை மகாமகக்குளம்
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே இருந்தால் போதும்ன்னு தான் எப்பவுமே தோணும்.
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ப்ச்ச்ச்ச்ச்ச்...
%$%$%$%$%$%$%$%$%$%$%$%$%$
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
ஒரு வரியில முடிஞ்சுடாத அளவு வாழ பார்ப்போம்.