எல்லாவற்றையும் துற என்று ஒரு குரு சொல்லக்கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தானாம். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க ‘எலி’ என்று பதில் சொன்னானாம் துறந்தவன். அதற்காக ஒரே ஒரு பூனை வளர் என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியை கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார் ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே என்று பசு மாட்டை தானமாக அளித்தார்கள். மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக நிலத்தைக் கொடுத்தார்கள். நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம்.. குரு மறுபடி சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று.. குரு வினவினார், “எதற்காக அப்பனே இதெல்லாம்?” என்றார். “சுவாமி எல்லாம் ஒரு கோவணத்துக்காக, என்றான் சிஷ்யன்...
பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை.
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
தூங்கும் முன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
கதைகேட்ட
குழந்தைக்கு
கதை முடிந்ததும்
நீதியைச்
சொல்ல ஆரம்பித்தேன்
தூக்க சுவாரஸ்யமோ
போதனையின் அசுவாரஸ்யமோ
உன் கதையை நீயே வைத்துக்கொள் போ
திரும்பிப் படுத்துக்கொண்டது
சொன்னபின்
யாருக்குச் சொந்தம் கதை?
திரும்பவாங்கிப்
புலனுக்குள் பூட்டக்
கதைசொல்லிக்கு
முடியுமோ?
--கலாப்ரியா (வனம் புகுதல்)
==============================
புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது நீயும் வாயேன்.
*******
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன் அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கிவிழுகிறது
அதிக நேரம் ஆகாது நீயும் வாயேன்
- ராபர்ட் ஃப்ராஸ்ட்.. தமிழில் சுஜாதா
============================
கனத்த
படிம ஆடை
அணி அலங்கார
ஒப்பனைகளுடன்
அரங்கேறிய உங்கள்
அடையாளம் தெரியவில்லை
எனக்கு
மேடையின் பின்னே
ஒப்பனை அறையின்
எளிய வாயிலில்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க
- கவிஞர் புவியரசு
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை
- சி. மணி(யின் மொழிபெயர்ப்பு)
&*&*&*&*&*&*&*&
சமவெளியில்
பசுவின் உதடுகளில்
புல்லின் ஈரம்
- சுஜாதா
&*&*&*&*&*&*&*&
குட்டையில் சிறுநீர்
கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்!
- வீ. இராஜசேகரன் சேலம்.
&*&*&*&*&*&&*&*&*&*
பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில் இருக்கும்
கண்ணாடி ஜன்னல்!
- ஜே.பி. அன்பு சிவம், அரசூர்
&*&*&*&*&*&*&*&*&*&
பிக்னிக் மேஜை விரிப்பின்
கறுப்பு சதுரத்துள்
எறும்பு மறைகிறது
- கனடா தேசத்துப் ப்ரெஞ்சு ஹைக்கூ
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
மேற்கண்ட கதை, கவிதை மற்றும் ஹைக்கூ அனைத்தும் சுஜாதாவின் ‘ கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’ தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.
Wednesday, July 29, 2009
Wednesday, July 22, 2009
முனியாண்டி விலாஸ் - 4 (நிறைவு)
முனியாண்டி விலாஸ் - 1
முனியாண்டி விலாஸ் - 2
முனியாண்டி விலாஸ் - 3
முனியாண்டி விலாஸில் இதுவரை..
எல்லாம் புனைவு ஒன்று எழுத ஆரம்பித்தப் பொழுதில் ஆரம்பித்திருந்தது. புனைவில் கடைசி மனிதனாய் ஒருவனை உருவாக்கி அலையவிட்டு, போதாமல் செத்துப்போயிருந்த ஒரு மூலப்பிரதியில் மூன்று கதாபாத்திரங்களை இணைத்திருந்தேன். பெயர்கள் என்னும் எச்சங்கள் மேல் எனக்கு விருப்பம் இல்லாததால் யாருக்கும் எங்கும் பெயர் சூட்டவில்லை. அவன் இவன் என குறிப்பிட்டுச் சொல்ல இரண்டு ஆண் மற்றும் இவள் என்று சுட்டிக்காட்ட ஒரு பெண். அது போதுமானதாயிருந்தது அந்தக்கதைக்கு. முக்கோண காதல் சரித்திரத்தில் ஏற்பட்ட குழப்பமாக காதல் தோல்விக்கு பயந்து அவன் இவனைக் கொல்ல, இவள் இவனை வெடிகுண்டு வீசி அழித்தாள். இவளுக்கு பெயர் சூட்டுவதன் மூலம் மூலப்பிரதியில் பிரித்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஜெனிதாவாக்கினேன். ஆனால் அங்கு அலையும் எல்லா இவள்களும் ஜெனிதாவாகிப்போன கொடுமையால் இனி..........
o0o0o0
மூலப் பிரதியின் முதல் பக்கத்தில் மெல்லியத்தூறலாய் பெய்யத்தொடங்கும் மழை நாற்பது பக்கங்கள் வரை தொடர்ந்திருந்தது. மழையின் அடர்வுகளில் மனிதர்கள் ஒளிந்திருந்தனர். எழுத்துக்கள் மழையின் சாரலை உள்வாங்கி மனிதர்களை ஈரமாக்கியிருந்தது. பொறுமையாய் ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒவ்வொரு எழுத்துக்களையும் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தின் ஏதோவொரு புள்ளியில் என்னை உட்கொண்டு செல்லும் வாயில் கிடைக்கும். அதற்காக ஆழ்ந்திருந்தேன். ஒவ்வொரு பக்கமாக பிரட்டப்பட்டது. இருபத்தி ஐந்தாம் பக்கத்தில் ஆழ்ந்திருந்த போது நான் நனைய ஆரம்பித்தேன்.
அடர்ந்த மழை என்பதை எழுத்துக்களில் படிப்பதை விட அந்த அனுபவத்திற்குள் புகுவது எத்தனை சிரமம் என்பதை உணரத்தொடங்கியும் வீணானது. இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுத்துக்களோடு எழுத்துக்களாக ஓட வேண்டும். வெயில் மெல்ல சூட்டை கிளப்புகின்ற நாற்பதாம் பக்கம் வரை நனைய மறுத்தலை வீணாக்க இயலாது. ஓட்டமும் நடையுமாய் நாற்பதாம் பக்கத்தில் கிடைத்த இரண்டாம் அத்தியாயத்தில் புகுந்து கொண்டேன்.
o0o0o0
1. ஜெனிதாவை தேடுவதற்காக அல்லது அவளை பிரதியிலிருந்து பிரிப்பதற்காக நான் உள் நுழைந்துள்ளேன்.
2. மற்றபடி இவனைக் கொன்ற அவனையோ, ஜெனிதாவால் செத்த இவனையோ உயிர்ப்பிப்பது என்னால் இயலாது
3. அவர்களை உயிர்ப்பிக்க முடியாத காரணம் எனக்கு இனி அவர்கள் தேவையில்லை என்பதாகலாம்.
4. எனக்குத் தேவை ஜெனிதா மாத்திரம் தான் என்பதும் குறிப்பிட வேண்டியது.
5. ஜெனிதாவுக்கான உரையாடல்களுல் என்னுடைய கேள்விகளும் பதில்களும் இருப்பதால் அவளைக் கண்டுபிடிப்பது எளிது.
6. காரணம் எங்களுக்கான மொழி.
7. ஜெனிதாவிற்கான இருப்பிடமாக நான் முனியாண்டி விலாஸை மாத்திரம் தான் காட்டியிருந்தேன்.
8. ஜெனிதாவின் வீடு, பயணம், சுற்றுலா எல்லாமே முனியாண்டி விலாஸ் என்னும் புனைவுக்குள் அடங்கியது.
9. இவன் இங்கு நானாக இருந்திருக்கலாம்.
10. அப்படியென்றால் இவனைக்கொன்ற அவனும் நானாகத்தான் இருக்கமுடியும்.
11. அவன் ஜெனிதா மேல் கொண்ட காதல் என்னுடைய நிறைவேறாத ஆசை.
12. இவனை அவன் கொன்றது என்னுடைய காதல் தோல்விக்கான விளைவு.
13. அவன் ஜெனிதாவினால் சாகடிக்கப்பட்டது என்னை புனிதமாக்கிக்கொள்ள மாத்திரமே.
14. அறுநூற்றி பத்தாம் பக்கத்தில் ஜெனிதாவிற்கு எளிதில் கிட்டும்படி வெடிக்காத உபயோகப்படுத்தும் நிலையில் வெடிகுண்டு கிடைத்தது.
15. ஜெனிதா அதை அறுபது பக்கங்களுக்கு முன்னால் கொண்டு வந்து அவனைக் கொன்றாள்.
16. இவன் பிரதிகளில் தன்னைத் தேடியது தன்னை மாத்திரமல்ல.
17. அவன் கவிதை எழுதக் கற்றுக் கொண்டது ஜெனிதாவால் அல்ல.
18. ஜெனிதா அவர்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்.
19. எல்லோரும் ஜெனிதாவாய் இருப்பதற்கு காரணம் நான் பெண்களை அதிகம் நேசிப்பதாயிருக்கும்.
20. மூலப்பிரதி என்பது நான் எழுத நினைத்த கதையின் கதை.
21. மூலப்பிரதிக்குள் மூவர் நுழைந்தது இயல்பு மீறிய செயல்.
22. ஜெனிதாவை வெளித்தள்ளிவிட்டு நான் என்ன செய்யப்போகிறேன்.
23. ஜெனிதாவை அடுத்த அத்தியாத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியும்.
24. நான் இப்போது மூலப்பிரதியின் மங்கியப்பக்கங்களில் ஜெனிதாவை வெளியே அனுப்ப எத்தனிக்கிறேன்.
25. ஜெனிதா மூலப்பிரதியில் இருந்து வெளியேறிவிட்டாள் அல்லது நான் அவளை வெளியேற்றிவிட்டேன்.
o0o0o0
பிரதிக்குள் மூழ்குதலில் உள்ள சௌகர்யம் நேரங்கழிவது தெரியாது. தேவைப்பட்டால் பூலோகத்தின் வாசல்படியை கண்டுபிடித்துள்ள இடத்தில் நின்று முப்பதாம் அத்தியாயத்திலிருந்து அழைத்துச்சென்ற சைக்கிளில் டீ விற்பவனிடம் டீ வாங்கி குடிக்கலாம். இல்லையென்றால் காதலில் பிரிந்தவனின் வருத்தம் தெரியாமல் பிறிதொரு புதிய காதலியிடம் மண்டியிட்டு இருப்பதை காணலாம். மழைப்பக்கங்களில் நனையலாம். சூரியக்காய்ச்சலில் படுக்கலாம். குழந்தைகளுடன் குழந்தையாய். ரத்தருசி தெரிந்தவனாய். பைத்தியக்காரனாய்.. எப்படியும் இருக்க முடிகிறது. என்னால் பிரதியிலிருந்து வெளிவர முடியவில்லை.
o0o0o0
காற்றுக்கிடைக்காத வனத்தின் நடுவினில் நின்று கொண்டிருந்தேன். அதிகம் பிரதிக்குள் அலைந்து திரிந்ததில் புனைவு உலகம் ஒரு அத்தியாயத்தில் முடிந்ததைப்போலிருக்கிறது. நட்சத்திரங்கள் காற்றுடன் இணைந்து மேலே வந்து விழுந்து சிதற திரும்பிப் பார்த்தேன்.
தேவதை பிரதியின் வெளியில் நின்று கொண்டிருந்தாள். சிறகுகள் பொலிவு பெற்றிருந்தன. அவளைச்சுற்றிலும் நீலம் பூத்த மலர்களை வண்ணத்துப்பூச்சிகள் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தன. அவளுக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு தேவதையை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.
புனைவின் கடைசி மனிதனை ஜெனிதா திருமணம் செய்து கொண்டாளாம். ஜெனிதாவிற்கான தேவதையாக அந்த புதிய தேவதை கிடைத்திருப்பதாகவும் இரண்டு தேவதைகளும் நெருங்கிய தோழிகளாக மாறிய கதையையும் சலிக்காமல் கூறிக்கொண்டிருந்தாள்.
கிளம்பும் முன் சற்றுத்தயங்கி நின்று புனைவின் கடைசி மனிதனுக்கு ஜெனிதா எனது பெயரை வைத்திருப்பதாகக் கூறி விடைபெற்றாள்.
o0o0o0
மூலப்பிரதியை நீங்கள் வாசிக்கும்போது கதையில் ஒட்டாமல் தனித்து அலையும் ஏதோ ஒரு மனிதனை நீங்கள் காண நேர்ந்தால் அது நானாக இருக்கக்கூடுமென்று நம்பவும்.

சக்திவேலுக்கு ஒரு கடிதம்
சக்திவேல், நீங்கள் பிரபல பதிவர் சஞ்சய் காந்திக்கு அளித்த பேட்டியை விரும்பி படித்துக்கொண்டிருந்த பொழுது அதில் வந்த உங்கள் பின்னூட்டதில் இனி நான் எழுதுவதில்லை என்ற பதில் கண்டு மனம் கலங்கினேன்.
நீங்களும் எழுத்துலகை விட்டு சென்றுவிட்டால் இன்னும் பிரபலமாகா புதிய பதிவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வது யார்! இங்கு யாருக்கு இத்தனை தைரியம் இருப்பதாக எண்ணுகிறீர்கள். என்னுடைய தைரியம் உங்களுக்கு கடிதம் எழுதுவதோடு முடிந்திருப்பதை காணும்போது எனக்கே வருத்தமாகத்தான் உள்ளது. என் செய்ய!
இன்னும் தமிழ்மணத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அது உங்களின் பார்வைக்கு கொண்டு வருவதற்காகவும் நீங்கள் மீண்டும் எழுதத்தொடங்கவும் இக்கடிதம்.

1. தமிழ்மண கருவிப்பட்டையில் பரிந்துரையில் ஒருவர் எத்தனை ஓட்டுக்கள் வாங்கினாலும் அதில் இருக்கும் நட்சத்திரங்கள் ஐந்து என்ற அளவிலேயே இருக்கின்றன. என்னதான் பொதுவுடமை தத்துவமாக இதைக் கொண்டாடினாலும் மகுடத்தில் ஏறுகிற பதிவுக்காவது ஒரு சில நட்சத்திரங்களை அதிகம் இணைத்திருக்கலாம். அல்லது கூடவே ஒரு நிலா அல்லது சூரியனையாவது இணைத்திருக்கலாம்.
2. தமிழ்மண கருவிப்பட்டையில் ஓட்டளிக்க அழுத்தப்படும் கைகள் இரண்டுமே வலது கையாக இருக்கிறது. இது இடது கைப் பழக்கம் உள்ளவரிடையே மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. தமிழ்மணத்தின் ஆணாதிக்கத் தன்மை புகுந்து விளையாடுகிறது கருவிப்பட்டையில். அங்கு கட்டை விரலை உயர்த்தி மற்றும் தாழ்த்திக் கொண்டிருக்கும் இரண்டு கைகளுமே ஆண்களுக்கானதாக இருக்கிறது. அதிலும் கோட் சூட் போட்ட கைகளாய் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவும் விரல்களில் மருதாணி, மோதிரம், வளையல் அணிந்த ஏதேனும் பெண்ணின் கையை அங்கு நிறுவ வேண்டும் .
4. அல்லது அங்கு தமிழனின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்த கையை வைக்க வேண்டும்.
மேலும் சில மாற்றங்களை பின்னூட்டத்தில் நண்பர்கள் பகிர்வார்கள் என நம்புவதால் இக்கடித்ததை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். மீண்டும் எழுத வாருங்கள் சக்திவேல்.
டிஸ்கி: பிரபல அல்லது மூத்த பதிவர் வலையுலகை விலகுவதாக அறிவிப்பு வந்தால் மாத்திரம்தான் கடிதம் வருகிறது. புதிய பதிவர்களுக்கு வருவதில்லை என்று அண்ணன் சக்திவேல் அடுத்த பதிவில், நண்பர் செந்தழல் ரவியின் டவுசரை கிழிக்கும் அபாயம் இருந்ததால் நானே சக்திவேலை அழைத்துவிட்டேன்.
இவ்விடுகையை அண்ணன் சக்திவேலுக்கான கடிதமாக எழுதும் நேரத்தில் நான் நெக்குருகி மனம் வருந்திக்கொள்வது ஒன்றுக்காகத்தான். நான் சக்திவேலுக்கு கடிதம் எழுதும் அளவு பிரபலம் ஆகவில்லையே.. அய்யகோ!

Tuesday, July 21, 2009
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, ஆடுதுறை
பெயர் : ஆடியபாதம்
வகுப்பு: 1 அ
சிறப்பு: உயிரெழுத்து, மெய்யெழுத்து முதல் எண்களை எழுதுதல் வரைக் கற்றுக்கொடுத்தவர். யாரையும் அடித்துப் பார்த்தது இல்லை. ஆனால் தவறாது ஆசிரியருக்குரியவராக ஒரு பிரம்பு எப்பொழுதும் மேசையில் இருக்கும். இவர் உறங்கும் சமயங்கள் எங்களுக்கு சற்று பொழுது போகக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
இவரது மகள் வள்ளி டீச்சரிடம் மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றது சிறப்பான ஒன்று.
}{
பெயர்: மாணிக்கம்
வகுப்பு: 2 அ
சிறப்பு: மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிறுசேமிப்பு அட்டையை உருவாக்கியிருந்தார். 105 கட்டங்கள் கொண்ட சீட்டு அது. குறைந்த பட்ச கட்டணம் பத்து பைசா. 100 கட்டங்களுக்குள்ள பணமாக பத்து ரூபாய் கிடைக்கும். சீட்டு தொலைந்து போனால் அதற்கு தனியாக 50 பைசா கொடுத்து சீட்டின் நகல் கொண்டு புது சீட்டு பெற்றுக்கொள்ளலாம். நான் படித்த 5 வருடத்தில் நான்கு முறை இவரிடம் சீட்டு கட்டியதுண்டு. இரண்டு முறை சீட்டு தொலைந்த அனுபவமும் இருக்கிறது.
தண்டனை முறை: வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலின் இடையே மொத்தமான அவரது இங்க் பேனாவை வைத்து விரல்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு மாவாட்டுவது போல பேனாவை அசைப்பார். வலி உயிர் போகும். முதன்முதலில் குச்சியால் அடிக்காமல் வன்முறை அல்லது வலியை வேறு விதத்தில் அறியச்செய்தவர்.
குற்றம்: பள்ளிக்கூட பாடங்களை ஒழுங்காக செய்யாதது முதல் நண்பர்களுடன் விளையாட்டுச் சண்டை இழுப்பது வரையிலான குற்றங்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைத்திருக்கிறது.
}{
பெயர்: தண்டாயுதபாணி
வகுப்பு: 3 அ
சிறப்பு: சிரித்த முகம். எப்பொழுது இவரது நினைவுகள் வந்தாலும் இவரது புன்னகை மாத்திரம்தான் மனதில் பசுமையாய் தங்கியிருக்கிறது. மாணவர்கள் எத்தனை சிரமம் கொடுத்தாலும் மூங்கில் பிரம்பை மேசையில் தட்டுவதை மாத்திரமே பழக்கமாய் கொண்டவர். மாணவர்களை அடிக்காமல் இருந்ததாலேயே மனதில் நெருக்கமாகியவர்.
பள்ளியில் பணி புரிந்த நினைவாய் பிரிவுபசாரத்தில் பள்ளிக்காக இவர் வழங்கிய மணி அடிக்கும் கனமான வெண்கல(?!)த் தட்டு எங்களுக்கு பிடித்தமான ஒன்று. அதற்கு பின்பு தண்டவாள இரும்பு பாளத்தில் டொங்கு டொங்கென்ன்ற சத்தம் தீர்ந்து போய் இனிமையான இசையாக இருந்தது.
}{
பெயர்: கண்ணன்
வகுப்பு: 4 அ
சிறப்பு: இவரும் சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். மாணிக்கம் வாத்தியார் சிறு அளவில் என்றால் இவரது அதை விட சற்றுப் பெரிது. குறைந்த பட்சம் 50 பைசா. ஆஜானுபாகுவான உடலமைப்பு கொண்ட இவரை கண்டு நிறைய்ய பயந்தது உண்டு.
தண்டனை முறை: பள்ளிக்கூடத்தின் கூரையை தாங்கிக்கொண்டிருக்கும் மூங்கில் சாரத்தில் தொங்க விட்டு கோடு போட பயன்படுத்தப்படும் கறுப்பு ரூலர் தடியால் முட்டிக்கு பின் பக்கம் ஆடுகால் சதையில் அடிப்பார். இது பள்ளிக்கூடத்தில் நான் வாங்கிய அதிக பட்ச தண்டனை.
குற்றம்: பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு நாகப்பழம், எலந்த பழம் தேடிச் செல்வது. மற்றவரின் தோட்டத்தில் அனுமதியின்றி புகுந்து பழங்களை பறித்து ஓடியது. பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் வாய்க்காலில் மீன் பிடிக்க சென்றது. வகுப்புகளை முற்றிலுமாய் புறக்கணித்தது. தனியே சுற்றுவதில் இன்பமில்லையென்று துணைக்கு ஜாகிரையும் ரமேஷையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சுற்றியது. வீட்டில் தண்டித்தலில் திருந்தாத ஜென்மமென்று முடிவு செய்ததால் கிடைத்த தண்டனை இது.
o0o
பெயர்: சரஸ்வதி
வகுப்பு: 4 ஆ
சிறப்பு: என்னுடைய இன்னொரு அம்மா.
ஸார், டீச்சர்ன்னாலே அடிப்பாங்கங்கற நினைப்பை அடிக்காம மாத்தினவங்க. வகுப்பு முடியும் அரைமணி நேரம் முன்னாடி மாணவர்களை ஏதும் கதை சொல்ல சொல்லி அதை எல்லோரையும் கேக்க வைப்பாங்க. பெரும்பாலும் தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகளை சிறுவர் மலரில் படிச்சுடறதால அதை அப்படியே ஒப்பிச்சுட்டு போயிருக்கேன். எங்க குழுமத்துல இருந்த ஏழு நண்பர்களை அறுந்த வால்கள்ன்னு பட்டம் வைச்சு கூப்பிட்டிருக்காங்க.
அரசு பணி காரணமா கண்ணன் சார் அதிகமா சுற்றுலா போயிடுறதால ரெண்டு வகுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய சூழல் வந்தது. அது எங்களோட பொற்காலம்.
’ஏண்டா என் உயிரை வாங்குறீங்க!’ பிள்ளைகள் ஏதேனும் அதிகம் சப்தம், சச்சரவு போடும்போது சொல்லும் வார்த்தைகள். படிக்கின்ற அத்தனை பேரையும் ஆசிரியர்கள் பொறுப்பில் வைத்துக்கொள்வதாக நினைக்கும் பெற்றோரிடையே இன்னொரு தாயாக அத்தனை பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக பாடம் சொல்லிக்கொடுத்து வளர்த்தவர்.
பள்ளி முடிந்த பிறகும் தெருவில் படித்த மாணவ, மாணவிகளை கண்டால் நின்று இரண்டு வார்த்தை நலம் விசாரிக்கும் பழக்கம் இன்னும் இவரிடமிருந்து விடுபடவில்லை.
தனிப்பட்ட விதத்தில் என்னை ஒவ்வொரு இடத்திலும் நேர்த்தியாக்க நினைத்தவர். அவர் விருப்பப்பட்ட விதத்தில் நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய எல்லா உயரங்களிலும் இவருடைய ஆசிகளும் இணைந்துதான் வருகிறது. என்னிடம் சின்னச்சின்ன விசயங்களில் உணர்ச்சி வசப்படக்கூடிய பழக்கம் மாத்திரம் இவரால் மாற்ற முடியவில்லை.
நான் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களுள் மிக முக்கியமானவர் சரஸ்வதி டீச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர். குடும்பத்தில் ஒருவனாக நினைத்து பழகியவர்களை அத்தனை சீக்கிரம் என்னால் மறக்க இயலாது. இப்பொழுது வலையுலகம் விரிந்து விட்ட சூழலில் எங்கேனும் இதை அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ வாசித்தால் அவரது ஆசிர்வாதங்களுக்காக இன்னும் ஒரு மாணவன் இருக்கின்றான் என்பதை தெரியப்படுத்தி விடுங்கள்.
}{
பெயர்: நமச்சிவாயம் (தலைமை ஆசிரியர்)
வகுப்பு: 5 அ
சிறப்பு: வீட்டுப் பாடங்களை பள்ளியில் அமர்ந்து உடனுக்குடன் செய்வதில் விருப்பமற்றவர். வீட்டில் சென்று பொறுமையாக அமர்ந்து எழுத வேண்டும் என்ற அறிவுரை எங்களுக்கு எப்பொழுதும் எட்டியதில்லை. தலைமையாசிரியரின் வகுப்பில் படித்ததால் மற்றவர்களுக்கு இல்லாத சில சிறப்புகள் மாணவர்களாய் எங்களுக்கு கிடைத்தது. தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழையலாம். அறையை ஒட்டியுள்ள மாடிப்படியின் அறையின் சாவி எங்களிடம் இருந்தது. எங்களது பொழுது போக்கவும், அலங்காரப்பொருட்கள் சேகரிக்கும் களஞ்சியமாக அது இருந்தது.
தண்டனை: காதை பிடித்து திருகுவது மாத்திரமே. அதிகம் கோபம் கொண்டால் தோப்புக்கரணம் அல்லது முட்டி போட சொல்வது உண்டு.
குற்றம்: பக்கத்து வகுப்புப் பெண்களை கேலி செய்தல், சில்லுக்கோடு எனப்படும் விளையாட்டில் குறுக்கில் புகுந்து கோட்டை அழித்தல் அல்லது சில்லுக்கல்லை தூக்கி ஓடி விடுதல்.
}{
பள்ளிக்கூடத்தில் சமையல் மேற்பார்வையாளராக இருந்தவரின் பெயர் ஞாபகம் வரவில்லை.
எனது நண்பனான கிருஷ்ணனை தினமும் மதியம் பாட்டு பாடச்சொல்லி ரசிப்பார். அதிக முறை கேட்டு ரசித்த பாடல் என்றெல்லாம் இல்லை. ஒரே பாடல்தான் பாட சொல்லி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பார். அது “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே”
}{
நினைவுகள் சேகரித்து வைத்திருப்பதில் என்ன சந்தோசமென்று தெரியவில்லை. இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது.
தொடர்பதிவாக இதை எழுத அழைத்த நண்பர் தமிழ்பிரியனுக்கு என் நன்றிகள்.
எனது வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்தமைக்காக தனியாக இவரை நன்றி கூற நினைத்திருந்தேன். நன்றி கூறுதலையும் இந்த இடுகையில் சேர்த்துக்கொள்கின்றேன். மிக்க நன்றி நண்பா!

Monday, July 20, 2009
அமீரக சந்திப்பு
குறிச்சொல்: கராமா பூங்கா, சந்திப்பு, பதிவர் வட்டம், வடை, பிரபலம், ஆப்பு, ஆப்பரசன், வாசிப்பு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, சிறந்த பதிவு, விருது, மகுடம், அச்சுப்பிரதி, டைரிக்குறிப்புகள், கவிதை, கவுஜ, மரத்தடி, குழுமம், எதிர்வினை, கலாய்த்தல், புத்தகம், விசிறி, புதிய பதிவர்கள், மூத்த பதிவர்கள், அநாகரீகம், தனிமனித சுதந்திரம், மூக்கு, நீ செஞ்சது தப்பு, அதுல எனக்கு கவலையில்ல
ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு. அவ்வப்பொழுது அருகில் இருக்கும் நண்பர்களிடம் உரையாடுவதுடன் சந்திப்பு பற்றிய நினைவுகள் பெரும்பாலும் முடிந்து விடுகிறது. ஞாபகத்தில் ஏற்றிக் கொண்டாட முடியாத அளவிலான பேச்சுக்கள் என்பதாலேயே அதைப்பற்றிய குறிப்புகளை பதிவுகளில் ஏற்றுவதில்லை.
இம்முறையும் வழக்கம் போல அமீரக மெரீனாவான கராமாவில் சந்திப்பு என்று முடிவானதும் நிச்சயம் போய்விட வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்திருந்தது. வலையுலக கலாட்டாக்களை தாண்டியும் நண்பர்களை சந்தித்தலும் உரையாடலின் விருப்பமும் நோக்கத்தின் காரணமாய் இருந்திருக்கும்.
கலந்து கொண்டவர்கள்...
1. ஆசிப் அண்ணாச்சி
2. ஆசாத்
3. அஹமது ஜுபைர்
4. குசும்பன்
5. சுந்தர்ராமன்
6. கலையரசன்
7. நாகா
8. லியோசுரேஷ்
9. கார்த்திக்கேயன்
10. அய்யனார்
11. நான் ஆதவன்
12. கோபிநாத்
13. கணேஷ்
14. செந்தில் வேலன்
15. வினோத் கவுதம்
16. சுல்தான்
17. கீழை ராசா
18. கிளியனூர் இஸ்மத்
19. N. சந்திரசேகர்
20.அப்துல் வாஹீது
21. திருச்சி சையது
22. படகு என்ற தலைப்பில் பதிவெழுதும் பெண்பதிவர்
எனது கவனக்குறைவின் காரணமாய் ஏதும் பெயர்கள் விடுபட்டிருப்பின் மன்னிக்கவும்.
மேலும் விரிவாக சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்களும் எழுதுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் இத்துடன் இந்த பதிவு நிறைவுறுகிறது.
தொடர்புடைய சுட்டிகள்:
சாருகேசி, குசும்பு, நிகழ்வுகளின் நிழல்கள்

Thursday, July 16, 2009
ஆனந்த விகடனில் அண்ணாச்சி!!!!!!!!!
43
comments
Thursday, July 16, 2009
Posted by
சென்ஷி
Labels: பதிவர் சதுரம், பதிவர் சந்திப்பு, வாழ்த்துக்கள்

”டேய், இது எப்ப நடந்ததுடா”
“ரெண்டு ரெண்டர வருசமாச்சுங்க”
“அந்த சமயத்துல ஏண்டா அதை எழுதலை”
“கருத்து எப்ப சொல்றோமுங்கறது முக்கியமில்லை. கருத்தை எப்பவாச்சும் சொல்லிடறோமான்னு பாரு தம்பி”
ஆகவே பெருமக்களே.. நம்ம அண்ணாச்சி தலைமையில இருக்குற கவிமடத்துல ஏத்துன ஒரு கவுஜையொண்ணு விகடன் தலையங்கத்துல வந்திருக்குது.
எப்பவா.. இப்பத்தான் சமீபத்துல 14-02-2007 இதழ் விகடன்ல வந்தது. இதுக்கு விகடனுக்கு வாழ்த்துக்கள் சொல்றதா இல்லை அண்ணாச்சிக்கு ஆறுதல் சொல்றதான்னு ரோசனையில இருக்க்கோம்.
தலையங்கத்துல கவிமடத்து புகழை கவுஜையா நிரூபிச்ச அண்ணாச்சிக்கு இவ்ளோ லேட்டாவாச்சும் வாழ்த்துப்பதிவு போடுறோமுன்னு தெரிஞ்சதும் புல்லரிச்சு போய் கண்ணுல கங்கையை வடிச்சுட்டு இருக்கார் அண்ணாச்சி.
மேலும் தமிழ்மணத்தை தற்போது கதிகலங்க அடிச்சுட்டு இருக்குற சக்திவேலோட புகழை தெரிஞ்சு அவருக்காக அமீரகத்துல சக்திவேல் பேரவை ஆரம்பிச்சதாலயும் அண்ணாச்சியை வாழ்த்திக்கறோம். பேரவையின் ’சக்தி’ அகில உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அதிர்ற அளவு இருக்கும்ன்னு சொல்லிக்க விரும்பறோம்.
வெறுமனே வாழ்த்துக்களோட முடிச்சுக்காம இதுக்காக ட்ரீட் கொடுக்கறதாவும் அண்ணாச்சி சொல்லியிருக்கறதால, வர்ற ஞாயிறு (19-07-2009) அமீரகத்துல பொது விடுமுறை தினத்துல வழக்கமான பதிவர் சந்திப்பு நடை பெறும் கராமா பார்க்ல பதிவு எழுதறங்க, வாசிக்கறவங்க, கொலவெறியில இருக்குறவங்க எல்லோரையும் வரச்சொல்லிக்கறோமுங்க. மேலும் விவரங்களுக்கு இங்கன போங்க
கேமராப்பொட்டி வச்சிருக்குற நல்ல மனுசங்க எல்லோரும் தவறாம கலந்துக்கிட்டு அண்ணாச்சிய விதவிதமா போட்டோ எடுத்து சாம் ஆண்டர்சனுக்கு போட்டியா களத்துல எறக்கிவிட ஆசப்படுறோம்.
இப்பதிவை வாசிக்கும் நண்பர்கள் தவறாமல் திரு. சக்திவேல் அவர்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தங்கள் பொன்னான வாக்குகளை அளித்து அவரை மகுடத்தில் ஏற்றி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
(பின்னிணைப்பு: எனது இடுகையொன்றும் குங்குமத்தில் வந்துள்ளது. அதை உடனே சுட்டிக்காட்டி புகைப்படம் எடுத்து அனுப்பிய பரிசலுக்கும் நண்பர் கே. ரவிசங்கருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! அதைப்பற்றிய இடுகையொன்று விரைவில்..!)

Wednesday, July 15, 2009
சுவாரஸ்யமாய் ஒரு விருது!

செந்தழல் ரவி ஆரம்பித்த சுவாரஸ்ய பதிவருக்கான விருதுத் தொடர் எனக்கும் ராப் அக்கா மூலம் கிடைத்துள்ளது. நன்றி ராப் அக்கா. இதன்மூலம் நானும் சுவாரஸ்யமான(!) பதிவர் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இதுக்கு முன்னே எப்பவாச்சு! அப்ப என்னவாச்சுன்னுல்லாம் கேக்கப்படாது?!
விருதுகள் கிடைக்கும் சந்தோசத்தை விட அதைப் பகிர்வதில் அதிக மகிழ்ச்சி கிடைப்பதில் முதல் காரணம் எனக்கு பிடித்த பதிவர்களிடமிருந்து பெறப்போகும் புதிய இடுகைகளும், அவர்களைக் கவர்ந்த பதிவர் பற்றிய குறிப்புகளும்.
அவ்வகையில் என் மனம் கவர்ந்த பதிவர்களில் சிலரை மாத்திரம்தான் இங்கு தேர்ந்தெடுக்க முடிவது சற்று வருத்தம் தந்தாலும் இவர்கள் மூலமும் சங்கிலித்தொடர் நீளும் என்று நம்புகிறேன்.
1. பாலபாரதி : செல்லமாய் தல. வலையுலகில் எனது முதல் நண்பர், அண்ணன், வழிகாட்டி எல்லாமுமாய் இருப்பவர். இவருக்குப் பிடித்தமான பதிவுகளைப்பற்றிய அறிமுகம் வேண்டியும், பதிவர்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் இவருக்கு இவ்விருதினை அளிக்கின்றேன். இவரது பதிவில் உடனுக்குடன் அத்தனை இடுகைகளையும் படித்து விட்டாலும் விடுபட்டவைகள் என்ற தொகுப்பில் கிடைக்கும் செய்திகளின் நேர்த்திக்கு நான் ரசிகன்.
2. இளவஞ்சி: எந்த விசயமா இருந்தாலும் படிக்குறவன் பொடனியில செல்லமா தட்டி கைப்பிடிச்சு கூட்டிட்டு போவணும்ங்கறா மாதிரி இவரோட பதிவுகள் இரண்டு வரி படித்துவிட்டு பத்தி தாண்டிவிட முடியாத ஒரு வசீகரிப்பு தன்மை கொண்டவை. செல்லமாய் வலையுலக வாத்தி. இப்ப அதிகம் எழுதறதில்லை. வேலைப்பளு அதிகம் அப்படின்னு சொன்னாலும், வாத்தி மறுபடியும் பழைய்ய உற்சாகத்தோட எழுத ஆரம்பிக்கணும். அதுக்கு இந்த விருது ஒரு தொடக்கப்புள்ளியா இருந்தா அதை விட சந்தோசம் வேற எதுவும் கிடையாது எனக்கு. இவரது க.க. தொடர் படித்ததுண்டா!? ரங்கமணிகளாய் ப்ரமோசன் வாங்குவது எப்படி என்று விளக்கிச் சொல்லியிருப்பார். இந்த சமயங்களில்
3. அய்யனார்: இவரது எழுத்துக்களை விமர்சிக்க, ஆராதிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. வன்மமும் குரூரமும் சோகமும் குதூகுலமும் எதுவாயினும் அந்த சூழலை நமக்குள் கொண்டுவந்து நம்மை மிரளச்செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரது குறிப்பிடத்தகுந்த நண்பர்களின் பதிவுகளை நிச்சயம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இன்னுமொரு ரசிகன். இவரது உரையாடலினி இடுகை மீண்டும் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் உண்டு. உங்களை சுவாரஸ்யப்படுத்தும் எழுத்துக்களை எங்களுடன் பகிருங்கள் அய்யனார்.
4. வா. மணிகண்டன்: இலக்கியவாதி. வார்த்தைகளுடன் ரசனையையும் கோர்ப்பதில் வித்தகர். கவிதைப்பித்தர். நல்ல கவிதைகளை தேடித்தேடி படிப்பதும், எழுதுவதுமாக பதிவினை கொண்டு செல்பவர். சமூகக்கட்டுரை எழுதுவதிலும் வித்தகர். இவர் வாசிக்கும் சுவாரஸ்ய பதிவுகளை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைகிறது எனக்கு.
5. கே. ரவிஷங்கர்: கவிதை, கதை, ஹைக்கூ என்ற பலபடி பரிணாமங்கள் கொண்ட பதிவு கொண்டாலும் இவரது விமர்சனங்கள் பலராலும் விரும்பப்படுபவை. கிளிஷேத்தனங்களை கிழித்து விட்டு விமர்சிப்பது எனக்கு பிடித்திருந்தது. விமர்சனங்களில் சுட்டிக்காட்டும் குறிப்புகள் நிச்சயம் எனக்கு உபயோகமாய் இருக்கிறது. ஹைக்கூவிற்கு எழுதிய கட்டுரை போன்று கவிதைக்கும் காட்சிப்பொருள் அமைப்பதற்கும் ஒரு கட்டுரை எழுதினால் பயன் தரும்.
6. சங்கா: புதியவர். மோட்டு வளையை பார்த்து கிடைக்கும் மொக்கைகளை தொகுத்து ஏற்றுபவர். சுவாரஸ்யம் குன்றாமல் கதையையும் அனுபவங்களையும் கோர்த்து தருபவர். இவரது இசை விருப்பப்பாடல்கள் நல்ல தேர்வு. ரெகுலர் கஸ்டமர் என்ற பெயரில் என்னையும் ஜெகனாதனையும் விடாமல் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டிருப்பவர். பல பதிவுகளை தேடித்தேடி படித்து பின்னூட்டும் இனிய நண்பர்.
Wednesday, July 08, 2009
முனியாண்டி விலாஸ் - 3
0O0O0O0
முனியாண்டி விலாஸ் - 1
முனியாண்டி விலாஸ் - 2
0O0O0O0
அவனைப் ‘பற்றிய’ நான்
வார்த்தைகளை கலைத்துப்போட்டு அதை கவிதையாக்கும் திறனை அவன் ’அதற்குள்’ கற்றிருந்தான். வார்த்தை இடைவெளிகளில் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து கொள்வதும் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறியும் முயற்சியும் அந்த அர்த்தத்திற்கு அவளை ஒப்பீடு செய்வதுமாக அவனை அவனது பொழுது கவிஞனாக மாற்றி கொள்ளச்செய்திருந்தது. சொற்களைக் கோர்த்து அதை பூக்கூடைப்போல ஒன்றின் வார்த்தைகளை ஒன்றில் அடுக்கி மிகக்கவனமாக சேகரித்தான். அவனது காதல் தன்மை பிடிவாதத்தை ஒத்திருந்தது. அடம்பிடித்து காரியம் சாதிக்கத்துடிக்கும் குழந்தைத்தன்மை. அவனிடமிருந்து அவளைப்பாதுகாப்பதை விட காதலிடமிருந்து அவனை பிரித்தெடுப்பதுதான் சிரமம் அதிகம் தந்தது எனக்கு.
அவள் மீதான அவனின் மயக்கம் அதிகரித்திருந்தது. சொற்களைக் களவாடுதலில் தேர்ந்திருந்தான். நாயக மயக்கம் கொள்ளும் சமயத்தின் அத்தனைச் சொற்களும் திருடு போயிருந்த விளைவின் முதல் புள்ளியாக மூலப்பிரதியின் நாயகன் மேலிருந்த மயக்கம் நாயகிக்கு நீர்த்திருந்தது. இதனால் எதிர்நாயகனின் கதைத் தன்மையில் அழுத்தமும் அவன் நாயகி மேல் கொண்ட காதலின் உண்மைத்தன்மையும் வெளித்தெரிந்தது. மூலப்பிரதியினை மேற்கோள்களாக கொண்டு வந்திருந்த அத்தனைப் பிரதி விளக்கங்களையும் நான் கிழித்துப்போட இது மாத்திரம் போதுமானதாக இருந்தது.
சுயவிளக்கக் குறிப்புகள் : எனக்கு மூலப்பிரதியின் மேல் யாதொரு கோபமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அதை நேசிக்கும் பிரபல இலக்கியக்கூட்டத்தினரிடையே சொல்ல அச்சமாய் இருந்தது. இப்போதெல்லாம் வாசல் கதவின் மேல் செருப்புக்களை அனாயாசமாய் வீசியெறிந்து செல்வது சிறுவர்களுக்கும் பழகியிருந்தது காரணமாயிருக்கலாம்.
0O0O0O0
”கை கொடு”
மருதாணி பூசியிருந்த விரல்கள் சிவந்த மலர்களின் இதழ்களை ஞாபகப்படுத்தியது. இல்லையென்றால் பூத்து வெடிக்காத மொட்டுக்கள். வலது தோளில் மாட்டியிருந்த கைப்பை மடியில் சரிந்திருந்தது. மார்புகளுக்கு மத்தியிலான புடவையின் மடிப்புகளின் சரிவில் கைப்பையின் கறுப்பு நிற வார் அலட்சியப்படுத்தியது என்னை. வலது கையை இன்னமும் என் முன்னே நீட்டிக்கொண்டிருந்தாள். எனக்கான டீயும் அவளுக்கான பெப்சியும் எங்கள் முன்னால் மெல்லிய புகை விட்டுக் காத்திருந்தன.
மெல்ல நாற்காலியின் முன் நகர்ந்து எனது கையால் மிருதுவாக அவளது கையைப் பற்றினேன். மனதில் எதுவும் எங்கும் உடைந்து நொறுங்காதது ஆச்சரியமாய் இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ்!”
“எதுக்கு?” அவள் இன்னமும் கையை விடவில்லை. நானும் கையை தனித்துக்கொள்ள விரும்பவில்லை. அந்த சமயத்தில் இந்த பகிர்விற்காக ஏங்கித்தவித்தது போல அமைதியாயிருந்தது மனது.
“நீ அன்னிக்கு ஒரு கவிதை சொன்னீல்ல? நேத்து மாமா பயங்கர அப்செட்ல இருந்தாரு. அந்தக்கவிதையை சொன்னேன். அவரோட மூடே மாறிடுச்சு தெரியுமா. பயங்கர ஹேப்பியாகிட்டாரு. உனக்காகத்தான் நான் எழுதினதுன்னு அவர்ட்ட சொன்னதும் எனக்கு நேத்து ட்ரீட் கிடைச்சது”
சற்று இடைவெளியுடன் தொடர்ந்தாள் ”கூடவே முத்தமும்” மெல்ல தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
என் கை கதகதப்பாக இருந்தது. இவளிடமிருந்து விலகாமல் குழந்தையாய் அப்படியே மாறிடவேண்டும் போல இருந்தது. ஆனால் நிஜமாய் அவள்தான் குழந்தையாய் இருந்தாள். அந்த உதட்டோர சிரிப்பு உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையுடையது. அவளது முகத்தை ஆச்சரியம் தீராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கை தனித்து இருந்தது. ஏமாற்றம் காட்டிக்கொள்ளாமல் இருக்க விரல்களை மூடிப்பிரித்து ரேகை தேடினேன். அவளது கை தொட்ட வாசம் நுகர ஆசையாய் இருந்தது.
“எந்தக் கவிதை”
“நேரமாகி பிரிந்து வீடு செல்வோம்.. என் கோபமெல்லாம் இரவு மீதுதான்.. இத்தனை அவசியமென்ன அதற்கு.. இல்லை அவசியம்தானென்ன..”
மெல்ல ராகத்துடன் இழுத்துப்பேசினாள்.
மௌனமாக கண்ணை மூடி பிரார்த்திப்பவன் போல கைகள் கூப்பி “பிரியா என்னை மன்னிக்கட்டும்” என்றேன்.
“யாரது பிரியா?” அவள் கண்கள் வெளிப்படுத்திய பாவனை ஆச்சரியக்குறிக்குரியதாயிருக்கும்.
“அவளுக்காகத்தான் இந்தக் கவிதையை எழுதுனேன்”
அடுத்த வார்த்தை சொல்வதற்குள் அவள் கிளம்பிச் சென்றிருந்தாள். அவள் குடிக்காத பெப்சி காத்திருந்தது. நான் இவளுக்காக ஒரு கவிதை எழுதத் தொடங்கினேன்.
0O0O0O0
இப்படி ஆகுமென்று நான் நினைத்திருக்கவில்லை. இவள் இவன் மேல் கொண்ட காதலை தெரிந்து கொண்ட அவன் இவனை சாகடித்திருந்தான். பிரதிகளுக்குள் நடைபெற்ற கொலையாகினும் சட்டத்தின் முன் காத்திருந்த அவனை இவள் வெடிகுண்டு வீசிக் கொன்றிருந்தாள். மூலப்பிரதியின் ஊடகச்செய்தி வெடிக்காமல் காட்சிப்பொருளாக பத்திரப்படுத்தியிருந்த வெடிகுண்டை இவள் அவனைக்கொல்ல உபயோகப்படுத்தியிருந்தாள். சம்பவ இடங்களின் நிகழ்வுகள் அதிக வருத்தம் தர எனது மௌனம் கூடியது.
தேவதை எனக்குப் பின்னால் நின்றிருந்தாள்.
”அவ இப்ப எங்க?” தேவதையின் குரலில் என்றுமில்லாத தணிவு இருந்தது.
அவளைக்காணவில்லை. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் ஒளிந்திருப்பாளென்று தெரியவில்லை. 120ஆம் பக்கத்தில் முதல் தற்கொலை நிகழ்கிறது. இவளும் அங்கு சென்று தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடும். அவளை எப்படி தனித்துப்பிரிப்பது என்று தெரியவில்லை.
தேவதை உதவிக்கு வந்தாள்.
“அவளுக்கு பேர் இல்லாம இருக்கறதாலதான் இந்த பிரச்சினை எல்லாம். அவளுக்கு ஒரு பேர் வை. அவளைத்தேட வசதியா இருக்கும்”
பெயர்களை யோசிக்க விடாது மனது ஜெனிதாவை நினைத்தது. அவள் ஜெனிதா ஆனாள். ஆனால் குழப்பம் தீராமல் சங்கடங்களுடன் நிறைந்து வழிந்தது.
அந்த மூலப்பிரதியில் இருந்த அத்தனை அவள்களும் மற்றும் இவள்களும் ஜெனிதாவாகியிருந்தனர். பாவாடை சட்டை அணிந்த ஜெனிதா, மொட்டை அடித்த ஜெனிதா, ஜீன்ஸ் அணிந்த ஜெனிதா, கிழிந்த சேலை ஜெனிதா, சோகமாக ஜெனிதா, சிரித்துக்கொண்டு ஜெனிதா, வெடித்துக்கிளம்பும் அழுகையுடன் ஜெனிதா, பல் வெளியில் நீட்டிக்கொண்டு சடைகளில் இலைகள் செருகிய அரக்கியாகவும் ஜெனிதா, ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..
(தொடரும்)...........................

Friday, July 03, 2009
கோபிக்கு பொறந்த நாளு!

கீழே உள்ள சில கேள்விகளுக்கு மாப்பி. கோபி சொன்ன பதில்கள். அதுக்கு கீழ நீல நிறத்துல இருக்குறது அவரு சொல்ல நினைச்சு சொல்லாம விட்ட பதில்கள்.
இன்னிக்கு (03-07-2009)பொறந்த நாளும் அதுவுமா பதிவுலகத்துக்கு அவரைப்பத்தின உண்மைய சொல்லலாமுன்னு யோசிச்சதால இந்த விளைவு இல்லைன்னா இடுகை எப்படி வேண்ணா வச்சுக்குங்க
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன்.
நல்லவேளை தாத்தா வாயில அந்த சமயத்துல வேற ஏதும் வராம (யு மீன் வாந்தி?!) போனதே.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும் கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும்.
டீக்கு அன்னிக்கு காசு கொடுறான்னு என்னைப் பார்த்துச் சொன்னதுக்கு ஓன்னு ஒப்பாரி வச்சதை மாப்பி சொல்லிடுவானோ?!
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்..
என்கிட்ட ஃபிரண்ட் ஷிப் வச்சிருக்குறவங்களையெல்லாம் கோவில் கட்டி கும்பிடத்தோணும். என்கிட்டல்லாம் நட்பாயிருக்காங்களேன்னு!
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)
குளிக்கப் பிடிக்குமான்னு கேள்வி கேட்டிருந்தா தெரிஞ்சுருக்கும் என்னைப் பத்தி..!!!!
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.
ஹார்ட்லதான் கொஞ்சம் ப்ராப்ளம். ஒரு பொண்ணுக்கிட்ட சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன். ரிட்டர்ன் என்ன வரும்ன்னு தான் தெரியலை?
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
அப்படி வரைமுறை எல்லாம் இல்ல
ஆமாம். அய்யனார், நான் ஆதவன், சென்ஷி எந்த படம் வாங்கி வச்சிருந்தாலும் வரைமுறை இல்லாம எடுத்துட்டு போறது வழக்கம்.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது ; எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல
காறித்துப்பும் போது எச்சில் மேல படலைன்னா ’க்க்க்க்காத்த்தூங்கற’ அந்த சத்தம் கூட பிடிக்கும்.
பிடிக்காதது : அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது
எச்சில் மேல பட்டுட்டா பிடிக்காது
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏமாற்றுவதை
ஆனா இப்பல்லாம் எவனுமே ஏமாற மாட்டேங்குறானுங்க.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.
இதுக்குத்தான் சரியா பதில் சொல்லியிருக்கேன். சாத்தான்தான்னு. பேய்ன்னு சொல்லியிருந்தா ஒழுங்கா இருந்திருக்குமோ. அவ பிசாசாச்சே.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்குறவன் நான்.
ஆபிஸ் போனாலும் அதையேத்தான் செய்யறேன்
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
பயணம்
ஆனா எந்த ஸ்டாப்பிங்க்ல அந்த பொண்ணு ஏறும்ன்னுதான் தெரியலை
பொறந்த நாள் வாழ்த்துக்கள்டா மாப்பி!
((புகைப்படத்தை உருவேற்றித்தந்த ஆயில்யனுக்கு கோடானு கோடி நன்றிகள்!!!))
அவனுக்காக ராஜாவின் இசையில ஒரு அதிரடி நட்புப்பாடல்.. பார்த்து மகிழுங்கள்.
....
Subscribe to:
Posts (Atom)